Saturday 31 March 2007

நானே நானா இல்லை கிறுக்கா - Wierd





ஆளாளுக்கு போட்டி போட்டு நானா நீயா கிறுக்கன்/ கிறுக்கி, லூஸ் எண்டு எழுதி இப்ப கொஞ்சம் ஓய்ஞ்சிட்டாங்க போல கிடக்கு. என்னையும் உந்த விளையாட்டுக்கு கானா பிரபா வாத்தியாரும், மலைநாடானும் கூப்பிட்டு இருந்திச்சினம். கானா பிரபா வாத்தியார் கொஞ்சம் கூட போய் 1000 சொல்லிலை :))))) காட்டுரை எழுத சொல்லி இருந்தார். சரி நானும் என்னோட வித்தியாசமான நடவடிக்கையள சொல்லுறன். அதை கிறுக்கெண்டு சொன்னா கிறுக்கன், லூசு தனாமான காரியங்கள் எண்டா லூசன் எப்பிடியும் சொல்லலாம்.....



கோபம் வரும் எப்ப வரும் ஏன் வருமெண்டு தெரியா.... ஊரிலை சுடுதண்ணி குடிச்ச மாதிரி எண்டு சொல்லுவினம்.... அப்பிடி வரும். இப்ப அதை குறைக்க வேணும் எண்டு நினைச்சு, கோபத்தை அடக்கி கொண்டு வாறன்... அதோட இப்ப ஆக்களோட கதைக்கிறதெல்லாம் தொலைபேசிலை தானே தொலைபேசி உரையாடல் அப்பிடி கோபம் வர செய்ய தக்க மாதிரி இருக்காது தானே.
கோபம் வந்தா பேசுறதுக்கெண்டு தனியா விசேசமான சொல்லுகள் எல்லாம் தேவையில்லை நான் கதைக்கிற விதமே காட்டி குடுக்கும் அத. ஆனா கோபம கதைச்சு அடுத்த சில நிமிசத்தில்லையே ஏனடா அப்பிடி செய்தன் எண்டு வருத்தம் வரும்... ஆனா கிறுக்கு குணம் விடாது கொஞ்ச நேரத்துக்க போய் சமாதானம் ஆக.

சின்ன வயதிலை என்னோட கோபத்தாலை ஒரு கோழி குஞ்சு உயிர் பலியாகி இருக்கு. ஊரிலை வீடுகளிலை கோழி வளக்கிறதும்,அடைகட்டி குஞ்சு வளக்கிறதும் வழக்கம்.எனக்கு பொரிச்ச 2- 3 நாள் கொழி குஞ்செண்டா கொள்ளை விருப்பம்.
பள்ளிகூடத்தாலை வந்து கொழிகுஞ்சுகளுக்கு தீன் போட்டு மேய திறந்து விடுறதும், இடைக்கிடை அதுகளை காகம், வல்லூறு பருந்து/ பிராந்து பிடிக்காம கவனிக்கிறதும் நான் தான். ஒரு நாள் அப்பிடி திறந்து விட்டிடு இருக்க வல்லூறு குஞ்ச பிடிக்க வந்து விழுந்திச்சு , ஆனா கோழி கலைச்சு போட்டுது. முதல் முறை தோத்த வல்லூறு அடுத்த முறை விழ முதல் குஞ்சுகளை கரப்புக்க அடிக்க வேணும் எண்டிட்டு கரப்புக்க தீன போட்டு கூப்பிட்ட தாய் கோழி வராம அடம்பிடிச்சு கொண்டு நிண்டிச்சு எனக்கு சரியான கோபம் வந்திட்டு... பக்கத்திலை கிடந்த பாளை ஒண்டால எடுத்து அடிக்க விசுக்கினா தாய் கோழிலை படாம சின்ன குஞ்சிலை பட்டு துடிக்க தொடங்கீட்டு உடன கோபம் போய் அந்த குஞ்ச தூக்கி வச்சு தடவினது தான் ஆனா அது சில நிமிசத்திலை செத்து போச்சு... :(

ஆனா என்னை புதுசா சந்திக்கிற ஆக்கள், எங்கயும் போற இடங்களிலை என்னை கண்டாக்கள் சாந்த சொரூபி எண்டும் , கோபமே வராத ஆள் எண்டும் கணக்கு போடுவினம்.... :) அவையே ஒரு கொஞ்ச நாள் பழகிச்சினம் எண்டால் தலைகீழ சொல்லுவினம்...:)


வேலையோ படிப்போ ... படிக்க வேணும் , அந்த வேலையா செய்து முடிக்க வேணும் எண்டு கொஞ்ச நாளா யோசிப்பான் ஆன ஒண்டுமே செய்யம சும்மா நேரத்தை போக்காட்டி கொண்டு திரிவன். எனகே ஒரு பயம் வரும் இத நேரத்துக்கு செய்து முடிக்க மாட்டன் எண்டு.. .... பிறகு இரவு பகல் எண்டு சாப்பாட்டையும் கவனிக்காம அந்த வேலைய செய்து முடிச்சு போட்டு தான் அடுத்த அலுவல் நடக்கும்.... அப்பிடியான நேரங்களிலை நான் இருக்கிற அறை தான் உலகமா இருக்கும்.
ஊரிலை சோதினைக்கு படிக்கிறதெண்டா பிலத்து கத்தி கத்தி தான் படிப்பன்.... சுத்தி இருக்கிற வீட்டு காரர் எல்லாருக்கும் நான் எப்ப படிக்கிறன் எத்தினை மணிக்கு நித்திரைக்கு போறன் எண்டது தெரியும். அப்பிடி என்னோட கத்தல் இருக்கும்...
சோதினைக்கு போக முதல் படிப்பிச்ச முழுதையும் ஒருக்கா வாசிச்சு முடிக்காட்டி திருப்தியே வராது....
உதாரணத்துக்கு ஒரு 10 (120 பக்கம் கொண்ட) கொப்பியளிலை விஞ்ஞான குறிப்புக்கள் இருந்தா, அத்தனையையும் சோதினைக்கு முன் இருக்கும் 1 அல்லது 2 நாளுக்க வாசிச்சு முடிக்க பாப்பன். வாசிச்சு முடிச்சு தான் சோதினைக்கு போறது. க .பொ .த சாதாரண தரம் முடிக்கும் மட்டும் எனக்கு பழைய சோதினை வினா தாள் களை வாச்சு கொண்டு அதுக்கேத்த மாதிர் தயார் பண்ணுற பழக்கமே இருக்கேல்லை. அதிலை நம்பிக்கையும் இருக்கேல்லை. பிறகு உயர் தர வகுப்புக்கு வந்தா பிறகு தான் கொஞ்சம் கொஞ்சம் பழைய பரீட்சை வினா தாளுகளை செய்து பாத்தது. ஆன அப்பிடி படிக்கிறதிலை எனக்கு திருப்தியே வாறேல்லை.

அதோட படிச்சு கொண்டிருக்கிற போது சோம்பல் முறிக்கிற குணம் இருக்கு .. அப்பிடி முறிக்கேக்க வித்தியாசமா ஒரு சத்தம் போடுவன் றூமிலை நிண்டு படிச்ச நேரம் அடுத்தடுத்த றூமிலை இருக்கிற போடியள் நக்கல் அடிப்பாங்க.. ஆன அந்த குணம் இன்னும் விட்டு போகேல்லை...

கதைபுத்தகம் வாசிக்கிறது மனதுக்குள்ள தான் அதை சத்தம் போட்டு வாசிக்க மாட்டன். ஒரு கதைபுத்தகம் வாசிக்க தொடங்கினா அத முடிக்கும் மட்டும் வேற வேலை ஓடாது. பொழுது போக்குக்கு கதை வாசிக்கிற எண்டுறதை விட அப்ப கதை வாசிக்கிறது தான் வேலை மாதிரி இருக்கும் :). செய்ய வேண்டிய வேலையள் எல்லாம் பொழுது போக்கு மாதிரி இருக்கும்.



நுள்ளு பிறாண்டி கிள்ளுபிறாண்டி கொக்காரை என்ன பூ

என்னடை இருந்த இன்னொரு குணம் நுள்ளுறது.... சின்ன பொடியனா இருக்கேக்க எங்கட ஆச்சி (அம்மம்மா), பெரியம்மா மார் எல்லாரும் என்னட்டை நுள்ளு வாங்கி இருக்கினம். அவையிடை வயது போய் சுருங்கின தோல் தொழ தொழ எண்டு இருக்கும். அத பிடிச்சு நுள்ளி போட்டு ஒரே ஓட்டமா ஒடிடுவன். வளந்த பொடியனா வந்த பிறகும் பெரியம்மா மார் கண்டா அந்த கதையை சொல்லி சொல்லி சிரிப்பினம். வளந்தா பிறகு அவைக்கு நுள்ளுறேல்லை ஆனா என்னொட சினேகிதர் மார் எல்லாம் அத தாங்க வேண்டி இருந்திச்சு. வகுப்பிலை நான் சரியான சாது, அப்பாவி ஆன இடையிலை பக்கதிலை இருக்கிறவருக்கு நுள்ளிபோட்டு இல்லை கூச்சம் காட்டி போட்டு இருந்திடுவன்.. அவை நெளிவினம் ஒண்டும் செய்ய ஏலா வத்தியார் நிப்பர் வகுப்பிலை...

ஏதாவது ஒரு பொருள் வாங்க வேணும் எண்டு நினைச்சா அதை வாங்கியே ஆக வேணும் விலை எண்டதை பற்றி யோசினை வராது. வாங்க வேணும் எண்ட பொருளை சுப்ப மாக்கட்டிலை கண்டா உடனை எடுத்து கூடையுக்க போட்டிடுவன். அதின் விலையை, அல்லது என்ன பிறாண்ட் எண்டதை எல்லாம் கவனிக்கிற இல்லை. ஆன பெரும் பாலும் அதே பொருள் வேற மலிவான பிறாண்ட் பக்கத்திலை இருக்கும் ஆனா அதை கவனிக்க யோசினை வராது. வாங்கி வீட்ட கொண்டு வந்தா பிறகு தான் யோசினை வரும் மலிவா வேற இடத்தை இருக்குமோ இல்லை அதே சுப்ப மாக்கட்டிலை இருக்குமோ எண்டு. அண்மையிலையும் உப்பிடி தான் கணனி வாங்கின்னான். எல்லாரும் கொஞ்சம் பொறு சேல் போடுவங்கள் எண்டிச்சினம், அண்ணனோட நண்பர் சொன்னார் தான் கணனி விற்பனை தான் செய்யிறன் ஒரு விலைப்பட்டியல் ஈ மெயில்லை அனுப்பிறன் அதுக்க பிடிச்சத தெரிவு செய்ய சொல்லி. சொல்லி இரண்டு மூண்டு நாளா அவர் பதில் போடேல்ல்லை. நான் போய் வாங்கி போட்டன். வெண்டி அடுத்த நாள் அவர் லிஸ்ட் அனுப்பினார்.. மலிஞ்ச விலையளிலை :(.

உடுப்பு வாங்கிறது... வீட்டிலை எனக்கு அக்கா , அண்ணா ஆக்கள் தான் உடுப்புகளை வாங்கி தாறது அந்த உடுப்புகளை போட்டு கொண்டு போன எல்லாரும் நல்ல செலக்ஷன் எண்டு சொல்லுவினம். ஊரிலை எனக்கு நான் உடுப்பு வாஙக போன எதை எடுக்கிற எதை விடுற எண்டு தெரியாம முழுசி போட்டு திரும்பி வந்திடுவன். ஆனா என்னோட நண்பர்கள் உடுப்பு வாங்கணும் எண்டா கூட்டி போய் தெரிவு செய்து குடுப்பன்.. அதை அவை போடும் போது மற்ற ஆக்களும் அதை நல்லா இருக்கெண்டு பாராட்டுவினம்.
புலம் பெயர்ந்தா பிறகு அண்ணா, அக்கா வேண்டி தாற விளையாட்டு கிடையாது தானே :( அதாலை உடுப்பெடுக்கிற போன என்னத்தை எடுக்கிற எண்டு தெரியாம பல கடையள் ஏறி இறங்கி ஒண்டும் வாங்காமலே கன நாள் திரும்பி வந்திருக்கிறன்.

எனக்கெண்டு சில இலக்குகள் விருப்பங்கள் இருக்கும் பொதுவா அதை யாருக்கும் சொல்ல மாட்டன். குடும்பத்தினருக்கு ஒரு மேலோட்டமான தகவல் தான் சொல்லுவன். பல சந்தர்பங்களில் என் குடுபத்தினருக்கே நான் இதை தான் குறிப்பா செய்ய போறன் எண்டு தெரியாம இருக்கும். சில பேர் எண்டா தாங்கள் இப்பிடி வர வேணும் அப்பிடி செய்வம், அத அடைய இப்பிடி செய்து கொண்டு இருக்கிறம் எண்டு சொல்லுவினம். என்னட்டை அப்பிடி வாடிக்கை கிடையாது. எதை செய்ய வேணும், அல்லது அடைய வேணும் எண்டு நினைக்கிறனோ அதை என்னொட பாட்டிலை செய்து கொண்டிருப்பன். சில நேரம் ஆருக்கும் தெரிஞ்சா நாவுறு படுத்தி காரியத்தை கெடுத்து போடுங்கள் எண்டு நினைக்கிறதும் உண்டு. அதை ஊரிலை சனம் வாயிலை போட்டிட்டும் எண்டு சொல்லுறது உண்டு. அதோட நான் நினைச்சதை சொல்லி அது கிடைக்காம போக சுத்தி இருக்கிறாக்கள் கவலைப்படாத, எண்டு அனுதாப வார்த்தைகள் சொல்லி இருக்கிற கவலையை இன்னும் கூட்டி போடுவினம் எண்டும் பயம் அல்லது முன்னெச்சரிக்கை எண்டும் சொல்லலாம். நான் நினைச்சதை செய்து முடிச்சு/ அடைஞ்சா பிறகு எல்லாரொடையும் பகிர்ந்து கொள்ளுவன். அப்ப மற்றவை ஆச்சரிய படுறதை பாக்கிறதிலையும் ஒரு சந்தோசம் வரும் :). அதே நேரம் என்னுடைய இந்த குணத்தால பல நண்பர்கள் என்னொட சண்டை/ மனஸ்தாப பட்டிருக்கிறார்கள். நான் நசுக்கிடம காரியங்கள் செய்யிறனான் எண்டு.



பயம்...


சின்னனிலை இரவிலை வெளில போறதெண்டா பயம்... அது கொஞ்சம் வளந்தா பிறகு குறைஞ்சிட்டு. ஆனா முதலே சொல்லி இருக்கிறன் விமான சத்தம் ஏற்படுத்தும் ஒரு பய உணர்வு. அதற்கு அடுத்ததாக கொஞ்சம் வளர்ந்திருக்கிற புற்தரை, ஆட்களால் பயன்படுத்தப்படாத புற்தரை. சில நேரங்களில் தெருவோர நடைபாதையின் அருகில் உள்ள புல் தரையில் கால் வைக்க வேண்டி வந்தாலும் அதில் நடக்க பொதுவாக மனம் ஒப்பாது. ஊரிலை ஆள் அரவமற்ற பகுதிகள் தெருவோரங்களில் மிதி வெடி எச்சரிக்கை குறிப்புக்களை பார்த்து பார்த்து அதை அப்பகுதிகளை தவித்து பழகி, அதனால் ஏற்பட்ட பய உணர்வு இன்றும்.. மனதில் இருக்கிறது.



இன்னும் கனக்க சொல்லாம் ஆனா கானா பிரபா வாத்தியாரோட 1000 சொல்லு கணக்கை :)))) விட கூடி போம் இதோட நிப்பாட்டுறன் :))).


என்ன நான் கிறுக்கனோ?

8 comments:

said...

பாவம் கோழிக்குஞ்ஞ....அப்பா நீங்கள் சாந்தசொரூபி .இல்லையோ??சிலபேர் விஜே கதைச்சா வெளில சத்தமே கேக்காதாம் என்று சொல்லினம் பாவம் அவைக்கு உண்மை தெரியேல்ல:-)))

சத்தம் போட்டுப்படிக்கிற பழக்கம் பிரபாண்ணாக்கும் இருக்கு கேட்டுப்பாருங்கோ ஆளை:-))))

சுருங்கின தோலை தொட்டுப்பார்க்கிற நுள்ளிப்பார்க்கிற பழக்கம் எனக்கும் இருக்கு..ஷ்ரேயா இதைப்பற்றி எழுதியிருந்தவா என்று நினைக்கிற

said...

ம்ம் நீரும் வியேட் சங்க உறுப்பினராகிட்டீர் வாழ்த்துக்கள். கோழிக்குஞ்சைக் கொலை செய்த குற்றத்திற்காக இ.பி.கோ 315 செக்-ஷனின் படி தமிழ்க்கடையில் 100 ஊசிப்போன சிக்கன் றோல்ஸ் சாப்பிடவேணும் என்று தண்டனை அளிக்கிறேன்.

சினேகிதி

நான் கத்திப்படிக்கும் ரகசியத்தைச் சொன்ன ஆள் ஆரெண்டு தெரியும், இருக்கட்டும் கவனிக்கிறேன்.

said...

//சிலபேர் விஜே கதைச்சா வெளில சத்தமே கேக்காதாம் என்று சொல்லினம் பாவம் அவைக்கு உண்மை தெரியேல்ல//

அதுகும் உண்மை தான் சினேகிதி... :))


//சத்தம் போட்டுப்படிக்கிற பழக்கம் பிரபாண்ணாக்கும் இருக்கு கேட்டுப்பாருங்கோ ஆளை//

கூட்டாளியா நமக்கு :))

//கோழிக்குஞ்சைக் கொலை செய்த குற்றத்திற்காக இ.பி.கோ 315 செக்-ஷனின் படி தமிழ்க்கடையில் 100 ஊசிப்போன சிக்கன் றோல்ஸ் சாப்பிடவேணும் என்று தண்டனை அளிக்கிறேன்.//

ஆகா (*!*)

said...

oh prabanna pls kedupodatheenga....athu solavendi vanthathuku oru kathai iruku so pls kekavendam.

said...

கோபம் வரும் எப்ப வரும் ஏன் வருமெண்டு தெரியா.... ஊரிலை //சுடுதண்ணி குடிச்ச மாதிரி எண்டு சொல்லுவினம்.... அப்பிடி வரும். இப்ப அதை குறைக்க வேணும் எண்டு நினைச்சு, கோபத்தை அடக்கி கொண்டு வாறன்... அதோட இப்ப ஆக்களோட கதைக்கிறதெல்லாம் தொலைபேசிலை தானே தொலைபேசி உரையாடல் அப்பிடி கோபம் வர செய்ய தக்க மாதிரி இருக்காது தானே//

உங்களுக்கு தெரி்ஞ்ச ஒரு இளைஞன் ஒருமுறை கதைக்கக்கை சொன்னவர் நீங்கள் எதுக்கும் கோபிக்க மாட்டியள் என்று... நீங்கள் சொல்றதை பார்த்தால் வேற மாதிரி கிடக்கு

said...

ம்...ம்.. கிட்டமுட்டஎங்களோடைதான் நிக்கிறியள்.

said...

//ம்...ம்.. கிட்டமுட்டஎங்களோடைதான் நிக்கிறியள்.//

வருகைக்கு நன்றி.

:)

said...

//உங்களுக்கு தெரி்ஞ்ச ஒரு இளைஞன் ஒருமுறை கதைக்கக்கை சொன்னவர் நீங்கள் எதுக்கும் கோபிக்க மாட்டியள் என்று//

ஓம் நீங்க் சொல்லுறது ஒரு வகையிலை சரி ஏன் எண்டா புதுசா பழகிற ஆக்களோட கோபம் வரத்தக்க மாதிரியான உரையாடல்கள் ஏற்பட சாத்தியமில்லை.
அதான் சொல்லி இருக்கிறனே புதுசா பழகிற ஆக்களுக்கு நான் அமைதியான ஆளா தான் தெரிவன் எண்டு.