Saturday 5 May 2007

உள்ளி நாத்தம் தாங்கலை.....

உள்ளி, வெங்காயம், லீக்ஸ் (leeks)போன்ற மரக்கறிகளிள் சாதாரண மரக்கறி வகைகளிலும் பார்க்க உடல் நலனுக்கு நன்மை பயக்க கூடியவை என சொல்லப்படுகிறன. உள்ளி, வெங்காயத்தின் வாசனை நீடித்து இருப்பதால் அதை விரும்பாதவர்கள் பலர்.






உள்ளி, வெங்காயம் போன்ற வற்றில் இருக்கும் கந்தத்தை கொண்ட சேதன (Organosulfur) சேர்வைகள் உடல் நலனுக்கு உகந்தவை என சொல்லப்படுகிறன.

முக்கியமான பயன்களாக

1. புற்று நோயை எதிர்த்தல்

இத்தாலி, மற்றும் சுவிஸ்லாந்து நாடுகளில் வெங்காயம், உள்ளி உண்பவர்கள், உண்ணாதவர்கள், உண்பவர்களின் உள்ளி, வெங்காயம் உண்ணும் அளவு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளில் வாய் (mouth), களம் (esophagus) குதம் (colon) மார்பகம் (breast), சூலகம் (ovary) சிறுநீரகம் (Kidneys)போன்ற வற்றில் புற்று நோய் ஏற்படும் சாத்தியம் வெங்காயம், உள்ளி போன்றவற்றை உண்பவர்களில் குறைவு என அறியப்பட்டுள்ளது.

2. இதய நோய்களை குறைத்தல்

மனிதரில் இதய சம்பந்தமான நோய்களை குறைப்பதில் உள்ளியின் பங்களிப்பு குறித்த ஆய்வுகள் முதலில் 1926 இலேயே ஆரம்பிக்கப்பட்டாலும், 1960 ஆம் ஆண்டுகளிலிருந்து அதிகளவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்ளி உண்பதன் மூலம், குருதியில் கொலஸ்திரோல் அளவு, மற்றும் கொழுப்பின் அளவு குறைவடையும் என அறியப்பட்டுள்ளது.

விலங்குகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில்
உள்ளி, வெங்காயம் என்பன உயர் குருதி அழுத்தத்தை குறைத்தல், குருதி கொலஸ்திரோல் அளவை குறைத்தல், விரைவில் குருதி உறைதலை தடுத்தல், குருதியில் வெல்ல அளவு உயர்தலை குறைத்தல் ஆகிய நன்மையான விளைவுகள் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

3. உணவு மூலம் பரவும் நோயாக்கிகளை கொல்லும்/ வளர்ச்சியை தடுக்கும் இயல்பு பற்றி செய்யப்பட்ட ஆய்வுகளிலும், குறிப்பிடத்தக்க சாதகமான விளைவுகள் பெறப்பட்டுள்ளன.

வெங்காயம், உள்ளி மணம் பிடிக்காதவர்களும் இனி இவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

7 comments:

said...

இன்னும் விரிவாக வெங்காயத்தின், உள்ளியின் மருத்துவ குணங்களை விரித்துச் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

said...

//இன்னும் விரிவாக வெங்காயத்தின், உள்ளியின் மருத்துவ குணங்களை விரித்துச் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். //

நன்றி உங்கள் கருத்துக்கு.

அதிகமா எழுத வாசிக்கிறவங்களின் ஆர்வம் போயிடுமோ எண்டு ஒரு யோசினை.

வேறொரு பதிவில் விரிவாக எழுத முயற்சிக்கிறென்.

said...

அப்ப எனக்கு வருத்தம் வராது:-) நான் வெங்காயம் உள்ளி பச்சையாவே சாப்பிடுவன்.

said...

அப்ப எனக்கு வருத்தம் வராது:-) நான் வெங்காயம் உள்ளி பச்சையாவே சாப்பிடுவன்

்்்்்்்்்
பக்கத்தில் இருக்கும்போதே நினைத்தேன். வாசனை தாங்க முடியலை?
ம்ம் எனக்கும் உள்ளி ரொம்ப பிடிக்கும்.
விளக்கத்திற்கு நன்றி விஐ

said...

நான் உள்ளி சாப்பிடமாட்டன், வருத்தம் வந்தால் பரவலாயில்லை, புழுத்த நாத்தம்.

எங்கட ஊரிலை பச்சை கலர் வெங்காயம் இல்லை

said...

பக்கத்தில் இருக்கும்போதே நினைத்தேன். வாசனை தாங்க முடியலை?
ம்ம் எனக்கும் உள்ளி ரொம்ப பிடிக்கும்.
விளக்கத்திற்கு நன்றி விஐ

இந்த லொள்ளுக்கொன்றும் குறைச்சலில்லை நான் நேற்று சாப்பிடேல்லயாக்கும்..போங்கோ நான் உங்களோட டூ

said...

//அப்ப எனக்கு வருத்தம் வராது:-) நான் வெங்காயம் உள்ளி பச்சையாவே சாப்பிடுவன். //

அப்ப நீண்ட ஆயுளோட இருப்பீங்க

மொழி படத்திலை நகைச்சுவை பாத்தீங்களா? உள்ளியால கூட சில விசயத்தை மாத்தமுடியாதென்பாங்க :)