Friday 25 May 2007

Yersinia enterocolitica

உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3

Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4


Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5

Yersinia உணவு மூலம் குறிப்பாக பன்றி இறைச்சி மூலம் அதிக அளவில் பரம்பலடையக்கூடிய ஒரு நோயாக்கியாகும். தற்போதைய நிலையில் அதிக முக்கியத்துவமற்ற ஒரு நோயாக்கியாக காணப்படும் போதும் இதன் இயல்புகள் காரணமாக எதிர்காலத்தில் முக்கியமான ஒரு நோயாக்கியக மாற்றமடையக்கூடியதாகும்.


பொதுவாக இடைவெப்ப வலய/ குளிர் நாடுகளான, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளிலேயே இந்த நோயாக்கி பொதுவாக பரவலடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் சிறப்பாக இந்த நோயாக்கி, வட ஐரோப்பிய நாடுகளான, நோர்வே, சுவீடன், டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளில் முக்கியமான ஒரு நோயாக்கியாக அறியப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணமாக அவர்களது பாரம்பரிய உணவு பழக்கத்தில் பன்றி இறைச்சியை சரியாக சமைத்து உண்ணமை என அறியப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இதன் நோய்த்தாக்கம் காரணமாக ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 96368 பேர் வருடாந்தம் பாதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டாலும், வைத்திய குறிப்புக்களின் பிரகாரம், வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறுபவர்கள் வருடாந்தம் 2536 பேராகும். கனடாவில் 1 இலட்சம் பெர்களில் ஒருவர் வருடாந்தம் பாதிக்கப்படுவதாக கனடாவின் சுகாதார அமைப்பின் இணையத்தளம் சொல்கிறது.

இந்த பக்ரீரியாவை பற்றிய சிறிய வரலாற்று குறிப்பு

Yersinia எனும் சாதி (Genus) மனிதருக்கு நோயை ஏற்படுத்தக்கூடிய 3 இனங்களை (Species) ஐ கொண்டது. இதன் சாதிப்பெயரானாது (Genus)
பிளேக் எனும் கொள்ளை நோயின் (Plague) நோயாக்கி எது என அறிவதற்கு பாடுபட்டு அந்த நோயாக்கியை கண்டுபிடித்த Alexendre Yersin எனும் மருத்துவரை கௌரவிக்க வைக்கப்பட்டதாகும்.

1. Yersinia pestis

இது பிளேக் (Plague) நொய்க்கு காரணமான நோயாக்கியாகும். இது உணவு மூலம் பரவுவதில்லை.




2. Yersinia entrocolitica
3. Yersinia pseudotuberculosis



இவை இரண்டும் உணவு மூலம் பரவும் நோயாக்கிகளாகும்.

இவை வளர உகந்த நிபந்தனைகள்

வெப்பநிலை: 0-44 பகை டிகிரி செல்சியஸ், மிக உகந்த வெப்பநிலை- 28-29
அமில/ காரத்தன்மை (pH) : 4.2-10.0, மிக உகந்த அளவு - 7.2-7.4


சூழலில் தப்பிவாழும் இயல்பு

நீரில்: 64 கிழமைகள் வெப்பநிலை 4 பாகை டிகிரி செல்சியஸ் ஆக இருந்தால்
மண்: உலரும் மண்ணில் 10 நாட்கள்
பன்றி கழிவு: 73 நாட்கள்
கரட் சுத்தம் செய்து, கழுவும் இயந்திரபகுதியில் - 2 மாதங்களுக்கு மேலாக

காவிகளாக தொழிற்படும் விலங்குகள்

பன்றி, எலி, மான், நாய், பூனை, ஓநாய்......

ஏற்றுமதி செய்யப்படும் பன்றி, மற்றும் எனைய இறைச்சிவகை மூலமும், ஏற்கனவே பரம்பலடையாத/ இந்த நோயாக்கி காணப்படாத நாடுகளிற்கு இந்த நோயாக்கி பரம்பலடைய முடியும் என ஜப்பானில் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிகளில் செய்யப்பட்ட ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது.



இதுவரை மனிதனில் நோய்த்தாக்கம் ஏற்பட்ட சந்தர்பங்களில் இந்த நோயாக்கி பரவ காரணமாக இருந்த உணவுகள்

பன்றி இறைச்சி, பால், சொக்கிலேட் சுவையூட்டப்பட்ட பால், சீவப்பட்ட கரட், குளோரினூட்டப்படாத குடி நீர்

உணவு மூலம் மட்டுமல்லாது
நேரடியாக விலங்குகளில் இருந்து மனிதருக்கும்,
மனிதரில் இருந்து மனிதருக்கும்
குருதி மாற்றீட்டுக்காக பயன்படுத்தப்பட்ட குருதி மூலமும் பரம்பலடைந்தது அறியப்பட்டுள்ளது.



நோயின் வெளிப்பட்டுகள்


1- வயிற்று உபாதைகள்: Gastroentrocolitis, abdominal pain,

2. நிர்பீடன குறைபாடு உள்ளவர்களில்/ நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களில் sepsis, bacteremia போன்ற நோய்கள் ஏற்பட முடியும்


நோய் அரும்பு காலம்: 3- 7 நாட்கள்
நோய் நீடித்திருக்கும் நாட்கள்: 2- 3 கிழமைகள்

பொதுவான அறிகுறிகள்


காய்ச்சல், வயிறோட்டத்துடன் கூடிய வயிற்று உபாதை
வயிற்றின் வலதுபக்க கீழ் பகுதியில்ல் ஏற்படும் நோ சில நேரம் குடல் வளரி அழற்சியை (Appedicitis) போலியாக பிரதிபலிக்ககூடும்.

நீட்ட கால பக்க விளைவுகளாக சில பேரில்

Reactive arthritis, erythema nodosom, rash போன்றவை ஏற்படகூடும்.


மருத்துவம்

பொதுவாக எந்தவித நுண்ணுயிர் கொல்லிகளும் () உள்ளெடுக்கமலே குணமாக கூடியது.

ஆனால் வயதானவர்கள், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் (நீரிழிவு,புற்று நோய் போன்ற வற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு) நுண்ணுயிர் கொல்லிமூலம் குணமாக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.


நோய் ஏற்படுவதை தவிர்க்க

இறைச்சிகளை முழுமையாக சமைத்தல்
சமைத்த உணவையும், சமைக்காத உணவையும் ஒருங்கே கையாழுவதை தவிர்த்தல்

0 comments: