Tuesday 21 August 2007

கனடா கந்தசாமி கோயில் தேர்- தூக்குக் காவடிகள்

கனடா கந்தசாமி கோயில், ஸ்காபுரோ, ஒன்ராரியோ, கனடா. 11/08/07










காவடிகள்









தூக்குக்காவடிகள்.















நான்கு வாகனங்களில் தூக்கு காவடி கட்டி இருந்தார்கள். சிலதில் 2 பேரும் சிலதில் ஒருவரும் காவடி எடுத்திருந்தார்கள். ஊரில் உழவு இயந்திரங்களில் கட்டப்படும் தூக்குகாவடி இங்கு பிக்கப் வாகனங்களுக்கு மாறி இருந்தது.


யோகன் அண்ணா தூக்குகாவடி எடுப்பது கொஞ்சம் அதீதம்/ அதிகம் என்ற பொருள் பட மாயாவின் பதிவில் சொல்லி இருந்தார். எனக்கும் பார்க்கும் போது அவர்களுக்கு வலிக்காதா? வலியை எப்படி தாங்குகிறார்கள் என்றெல்லாம் யோசித்ததுண்டு/ யோசிப்பதுண்டு. நம்பிக்கை தானே வாழ்க்கை. எம்மால் பிரச்சனையை தீர்க்க முடியாது எனகருதும் நேரங்களில் கடவுள் நம்பிக்கை தான் மனதை ஆற்ற உதவுகிறது. வேண்டுதல்கள் பலவகைப்படலாம்; புலம் பெயரும் முயற்சி தடக்காதிருக்க, உறவுகள் நலமோடிருக்க, நோய் தீர, கைது செய்யப்பட்டவர் விடுதலையை எதிர் நோக்கி என பல.

ஊரிலும் பலர் தூக்கு காவடி எடுப்பது வழக்கம்.அதில் 3 பேருடைய நேர்த்திகடனுக்கடனுக்கான காரணங்களை அறிந்திருந்தமையால் அவர்கள் இருந்த நிலையில் அவர்களின் நம்பிக்கை சரி என்றே பட்டது.

1980 களின் இறுதி என நினைக்கிறேன் ஒருவர் மன்னார் பகுதில்/ எல்லது வேறெங்கோ சரியாக ஞாபகம் இல்லை. துப்பாக்கிசூட்டால் உடல் பகுதிகள் சல்லடையிடப்பட்டு உயிர் தப்புவதே அரிது என சொல்லப்பட்ட நிலையில் இருந்தார். உயிர் பிழைத்த பின் அயலில் உள்ள பிள்ளையார் கோயில் தேருக்கு தூக்குகாவடி எடுத்தார்.

மற்றவர்கள் இருவர், சகோதரர்கள் கைது செய்யப்பட்டு சிறை இருந்து வெளியே வந்த போது நம்மூர் கண்ணகி அம்மனுக்கு அண்ணன் துலாவில் தொங்க, தம்பி அவரது பழுவில் தூங்கிய படி காவடி எடுத்தார்கள். அவர்களது வேண்டுகைகள் நிறைவேறியது கடவுளால் என்பது அவர்களது நம்பிக்கை. அதை யாரும் குறைகூறவோ, பகுத்தறிவு கொண்டு எள்ளல் செய்யவோ முடியாதென்பதே எனது கருத்து.

5 comments:

said...

//யோகன் அண்ணா தூக்குகாவடி எடுப்பது கொஞ்சம் அதீதம்/ அதிகம் என்ற பொருள் பட மாயாவின் பதிவில் சொல்லி இருந்தார்.//

அதை நானும் ஆமேதித்திருந்தேன் இங்கு நான் ஒன்றை நான் சோல்கிறேன் நான் ஆமேதித்திருந்தது கோழும்பில் நடைபெற்றதயே ! ஏனெனில் கோழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 4க்கும் மேற்பட்ட தூக்குக்காவடிகள் முறிந்து விழுந்தன இவ்வாறு தக்க பாதுகாப்பு இல்லாமல் இவ்வாறானதோரு நேர்த்திக்கடன் தேவையா ?

மற்றும்படி நான் இவ்வாறானதொரு கடவுள் நம்பிக்கையை மறுப்பவனில்லை

Anonymous said...

முருகனைக் காணப் போய்க் கண்ட பெடியளோட கண்ட இடத்துக்கும் திரியாதையும் காணும்

said...

மாயா எழுதும் போதே யோசித்தேன். நான் எழுதும் விதம் யோகன் அண்ணாவையோ அல்லது உங்களையோ சுட்டுவதாக அமைந்துவிடலாம் என்று. அப்படியே நடந்துவிட்டது.

நிச்சயமாக அவ்வாறு கருதி சொல்ல வில்லை.
உங்களை பாதித்திருந்தால் வருந்துகிறேன்.

பொதுவாக நேர்த்திகடங்கள் பற்றி கடவுள் மறுப்பாளர்கள் மூட நம்பிக்கை என்று சொல்லுவார்கள்.

அதையொட்டியே சொல்லி இருந்தேன்.

உண்மையில் நான் கூட தூக்குகாவடி அதீதம் என்று எண்ணாவிட்டாலும், இவ்வாறு ஒருவர் தன்னை வருத்துதல் தேவையா என எண்ணுவது உண்டு. ஆனால் அவ்வாறு செய்வ்வோர் இப்படியான வலியிலும் கூடிய்ய வலியை தாங்கியிருப்பார்கள், அதுவே இப்படியான ஒரு வேண்டுகைக்கு அவர்களை தூண்டியிருக்கும் என்பது எனக்கு தெரிந்த 3 பேரின் நேர்த்திகள் சொல்லும் சேதி.

said...

அரோகரா.....

said...

//At August 21, 2007 10:50 PM, கண்காணிப்புக் குழு said…

முருகனைக் காணப் போய்க் கண்ட பெடியளோட கண்ட இடத்துக்கும் திரியாதையும் காணும்//


அண்ணை நீங்கள் எந்த நாட்டு கண்காணிப்பு குழு..............