Tuesday 25 December 2007

Clostridium botulinum - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் -9

1. உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
3.Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 3

4. Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4

5. Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5

6. Campylobacter: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 6


7. Salmonella - உணவு மூலம் பரவும் நோயாகிகள் -7


8. மாட்டு பைத்திய நோய் உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் -8


Clostridium botulinum - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் -9

இதுவரை நாம் பார்த்த பக்றீரியா மூலம் பரவும் நோய்களும் சரி, இறுதியில் பார்த்த மாட்டு பைத்திய நோயும் சரி நோயை ஏற்படுத்துவதற்கு குறிப்பிட்ட பக்றீரியாவோ அல்லது பிரயோன் எனும் புரதமோ உடலினுள் உணவின் மூலம் உள்ளெடுக்கப்பட்டு உடல் பகுதிகளில் பல்கி பெருகி நோய் ஏற்பட காரணமாக அமைகிறன.

ஆனால் இவற்றிற்கு எல்லாம் வித்தியாசமாக

Clostridium botulinum எனும் பக்றீரியா உடலினுள் உணவு மூலம் சென்று பெருக்கமடைந்து நோய் ஏற்படுத்துவதிலும் பார்க்க, உணவு உள்ளெடுக்கப்பட முதலே உணவில் பெருக்கமடைந்து உணவில் போற்ருலினம் எனும் நச்சு பதார்ததை ( botulinum toxin) சுரக்கிறது. குறிப்பிட்ட நச்சு பொருள் ஒரு நரம்பு தொகுதியை தாக்கும் நச்சு பொருளாகும் (nerve poison அல்லது neurotoxin). இது உணவு மூலம் உடலை சென்றடைந்து நரம்பு தொகுதியை பாதிப்பதால் பக்கவாதம் (paralysis ) ஏற்பட காரணமாகிறது. இதனால் ஏற்படும் நோய் பொற்றுலிசம் (Botulism) என அழைக்கப்படுகிறது.



பொதுவாக இதன் தாக்கம் அல்லது பாதிப்பு அருமையாகவே அறியப்பட்டாலும், இதனால் ஏற்படும் பாதிப்பு ஏற்காவே கூறிய பக்றீரியா நோய்களை விட ஆபத்தானது.


நோய் அரும்பு காலம்:

உணவு மூலம் நஞ்சு உள்ளெடுக்கப்பட்டு நோய்க்கான அறிகுறி தெரிவதற்கு 12-36 மணித்தியாலங்கள் வரை செல்ல முடியும்.

நோய்க்கான அறிகுறிகள்:
vomiting - வாந்தி
nausea,
fatigue,
dizziness,
headache - தலைவலி
double vision - இரட்டை பார்வை/ பார்வை குழப்பம்
dryness in the throat and nose - தொண்டை மற்றும் மூக்கு உலர்ச்சி
respiratory failure - சுவாசதொகுதி செயல் இழப்பு
paralysis - பக்க வாதம்
death- சில நேரம் இறப்பு

இதன் பாதிப்போடு தொடர்புடைய உணவுகள்

இந்த பக்றீரியாவின் இயல்புகளை பார்த்தோம் என்றால்
இது காற்று இன்றிய அதாவது சுவாசத்துக்கு தேவையான ஒட்சிசன் குறைந்த, அமிலத்தன்மை குறைந்த ஊடகங்களில் இலகுவில் வளரும் தன்மை உடையது. அத்துடன் இயற்கை சூழலில் எங்கும் பரந்து காணப்பட கூடியது. இது spores எனும் அமைபை தோற்றுவித்து தகாத காலத்தை கழிக்க கூடியது. spores வெப்பத்தை தாங்க கூடியவை. எனவே சரியாக சமைக்கப்படாத உணவுகளில் spores இலகுவில் சாதாரணமான பக்றீரியாவாக மாற்றம் அடைந்து வளர்ச்சி அடைய கூடியது.

1. சரியான முறையில் தயாரிக்கப்படாத அமில தன்மை குறைந்த தகரத்தில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் -
உதாரணம்: சோளம், பீன்ஸ், காளான், spaghetti sauce, salmon
2. சரியாக சேமிக்கப்படாத அமில தன்மை குறைந்த பழச்சாறுகள்
உதாரணம்: கரட் சாறு
3. ham, sausage, lobster, and smoked and salted fish

இதை தவிர்ப்பது எவ்வாறு?

1. தகரத்தில் அடைக்கப்பட்ட உணவாயின், குறிப்பிட்ட தகர பொதியமைப்பில் வெடிப்பு, ஒழுக்கு, துரு, அமைப்பில் மாற்றம் என்பன உள்ளதா என அவதானித்து அவற்றை உணவுக்கு பயன் படுத்துவதை தவிர்த்தல்.

2. குறிப்பிட்ட நச்சு பொருள் வெப்பத்தில் அழிவடைய கூடியது. எனவே தகரத்தில் அடைத்த உணவு பொருட்களை குறைந்தது 10 நிமிடங்கள் 80 பாகை செல்சியசுக்கு மேல் சமைத்தல்
3. வீட்டில் தயாரிக்கும் அமில தன்மை குறைந்த உணவுகளை தகரத்தில் அடைக்கும் அல்லது எண்ணேயில் பாதுகாக்கும் போது எப்போதும் குளிரூட்டியில் வைத்திருத்தல், மற்றும் எண்ணேயில் சேமிக்கு உணவை 10 நாட்களுக்குள் பயன் படுத்தல் அவசியம்.


இவற்றை விட


குழந்தைகளில் Clostridium botulinum உணவு மூலம் உள்ளெடுக்கப்பட்டால் குடல் பகுதியில் பெருகி நச்சு பொருளை சுரப்பதால் infantile botulism எனும் நோயை ஏற்படுத்தக்கூடியது.

அத்துடன்

காயங்களில் ஏனைய பக்றீரியாக்களுடன் வளர்ந்து, நச்சு பொருளை சுரக்க கூடியது. குறிப்பிட்ட நச்சு பொருள் குருதி மூலம் உடலினுள் கடத்தப்பட்டு ஏற்படும் நோயை Wound botulism என்பர்.

0 comments: