Saturday 15 August 2009

வனாந்தர குழந்தைகள் ? / அநாதரவான குழந்தைகள்? ? Feral children

இன்றைக்கு The Learning Channel இல் Wild Child: The Story of Feral Children எண்ட நிகழ்ச்சியை பாத்தன். அதிலை 2 நாய்களாலை வளர்க்கப்பட்ட குழந்தைகளை பற்றியும், பேற்றோரால் தனிமைபடுத்தப்பட்ட நிலையில் வளர்ந்த குழந்தை ஒன்று பற்றியும் விவரித்து இருந்தார்கள். Wild children/ feral children க்கு என்ன தமிழ் மொழி பெயர்ப்பை கொடுப்பது? காட்டு குழந்தைகள் என்பதா? வனாந்தர குழந்தைகள் என்பதா? நான் வனாந்தர குழந்தைகள் என்று சொல்லலாம் என நினைக்கிறென்.

முதலில் Wild childeren/ feral children எண்டதுக்கு விளக்கம் என்ன என்று பார்த்தால் "மிகக்குறைந்த மனித தொடர்புடன், அல்லது முற்றாக மனித தொடர்பே இல்லாமல் வளர்ந்த சிறுவர்கள் என பொருள் கொள்ளலாம். அவர்கள் விலங்குகளால் வளர்கப்பட்டோ அல்லது தாமாக காட்டில்/ தாம் வாழ்ந்த சூழலில் ஏதோ ஒரு விததில் தப்பி வாழந்தோ அல்லது பெற்றோரால்/ உறவினர்களால் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஏனைய மனிதர்களுடன் தொடர்பாடல் அற்று வளர்க்கப்பட்டவர்களாக இருக்கலாம்".










நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த போது சிறுவயதில் வாசித்த ஒரு கதை ஞாபகம் வந்தது. கதையின் தலைப்போ எழுதியவரின் பெயரோ ஞாபகத்தில் இல்லை. அந்த கதை 1983 ஜூலை கலவரத்தில் வன்னி பகுதிக்கு இடம்பெயர்ந்த இரட்டை ஆண் குழந்தைகளை பற்றியது. இடப்பெயர்வில் ஒரு பையன் காட்டில் தவறி விடுகிறான், அவன் ஒரு மான் கூட்டத்துடன் வளர்கிறான். மற்றைய குழந்தை பெற்றோருடன்?? ?? வளர்ந்து பெரியவனாகிறன். ஒரு கட்டத்தில் பெற்றோருடன் வளர்ந்த பையன் மான்களுடன் உலாவும் மனிதனை கண்டு பிடித்து பார்த்த போது அந்த மனிதனின் கழுத்தில் இருக்கும் புலி நக சங்கிலியை கொண்டு அவன் தனது சகோதரன் என அடையாளம் காண்பதாக்க கதை செல்லும். உங்களில் யாருக்கேனும் இந்த கதை வாசித்த ஞாபகம் உண்டா.

நிகழ்ச்சியை பார்ந்து முடித்த பின் கூகுளில் தேடிய போது FeralChildren எனும் இணையப்பக்கம் இப்படியான குழந்தைகள் பற்றிய பல தகவல்களை ஒருங்கிணைத்து தருகிறது. இதுவரை 100 க்கு மேலான ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் இருப்பதாக மேற்படி இணைய தளங்கமும், விக்கிபீடியாவும் சொல்கிறன. விக்கிபீடியா பேலும் (legends) புராண கதைகளில் வரும் வனாந்தர குழந்தைகள்/ விலங்குகளால் வளர்க்கப்பட்ட மனிதர்கள் மிக திறமைசாலிகளாக சித்தரிக்கப்படுவதை சுட்டிகாட்டுகிறது. அதில் ஓநாய்களால் வளர்க்கப்பட்டதாக கூறப்படும் ரோமானிய குழந்தைகள் பற்றி கூறும் விக்கிபீடியா எனோ இலங்கை சிங்களவர்களின் முதாதை என சொல்லும் வியஜனின் தந்தை சிங்கபாகு சிங்கத்துக்கும் மனிதருக்கும் பிறந்ததாக சொல்லும் கதையை தவறவிட்டு விட்டது.

விலங்குகளால் வளர்க்கப்பட்ட புராண மாந்தர்கள் சிறப்பானவர்களாக சித்தரிக்கப்பட்டாலும், நிஜ வாழ்வில் அப்படி இருப்பதில்லை. சிறுவயதில், குறிப்பாக மொழி அறிமுகம், மனித பழக்க வழக்கங்களை அறியும் வயதிற்கு முன் விலங்குகளால் வளர்க்கப்படும் போது அவர்கள் எந்த விலங்குகளுடன் வளர்கிறார்களோ அந்த விலங்குகளின் பழக்க வழக்கங்களை கைக்கொள்வதுடன், விலங்குகளின் ஒலியையே ஏற்படுத்த பழகிக்கொள்கிறார்கள்.

மிக அண்மைய சம்பவமாக ரஸ்யாவில் Natasha Mikhailova எனும் குழந்தை தந்தையாலும், தத்தா பாட்டியாலும் வீட்டு செல்ல பிராணி போல் நாய்களுடனும், பூனைகளுடனும் 3 ஆண்டுகள் வளர்க்கப்பட்டதால், பேசுவதை விடுத்து நாய் போல் குரைப்பதையும் அவை போன்றே உண்பது, நீர் குடிப்பதையும் செய்வது கண்டறியப்பட்டது. குழந்தை மீட்க்கப்பட்ட போது அதற்கு வயது 5 ஆகும்.

இதே போல பெற்றோரால் தனிமைபடுத்தப்பட்ட ஐக்கிய அமெரிக்க நாட்டு அண்மைய சம்பவங்கள் Rios Children, Caged children of Ohio.

2005 ஆம் ஆண்டு கென்யாவில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தையை வளர்ப்பு நாய் ஒன்று கண்டெடுத்து வந்தது பற்றிய செய்தி இது.


1998 ஆம் ஆண்டில் ரஸ்யாவில் 4 வயதில் பெற்றோரால் கைவிடப்பட்டு, தெரு நாய்களுடன் வாழப்பழகிய சிறுவன் பற்றிய செய்தியும் முக்கியமானது. பிச்சை எடுத்த உணவை நாய்களுக்கு கொடுத்து நாய்களின் நம்பிக்கையை பெற்றவனானதோடு, மொஸ்கோ குளிர்காலத்து -30 டிகிரி செல்சியய் குளிரில் இருந்தும் நாய்களால் பாதுக்கக்கப்பட்ட செய்தி ஆச்சரியமானது. பொலிசார் சிறுவனை மீட்க முயன்ற போது நாய்கள் அவனை பொலிசாரிடம் இருந்து காப்பாற்றியதாம். பின்னர் பொலிசார் நாய்களுக்கு வேறொரு இடத்தில் உணவு வைத்து நாய்களை சிறுவனிடம் இருந்து பிரித்த பிற்பாடே அவனை மீட்டனராம். இப்போது அவன் பள்ளிகூடம் போகிறானம்.

1991 ஆண்டில் மீட்கப்பட்ட 8 வயதுடைய Oxana Malaya எனும் பெண்குழந்தை பெற்றோரால் கைவிடப்பட்டு, நாய்களுடன் மீட்கப்படும் வரை வளர்ந்த குழந்தையாகும். 23 வயதான நிலையில் இன்றும் ஒக் சான மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் காப்பகத்திலேயே வாழ்கிறாள்.






Annapurna Sahu எனும் பெண் இந்தியாவில் 25 ஆண்டுகள் பெற்றோரால் தனிமை படுத்த பட்ட செய்தி மட்டுமல்லாது ஓநாய்களால் வளர்க்கப்பட்ட பல இந்திய சிறுவர்கள் பற்றிய கதையையும் இந்த பட்டியலில் காணலாம். இவற்றில் சில போலியான கட்டுக்கதைகள் என பின்னர் நிருபிக்கப்பட்டுள்ன. குறிப்பாக அமலா, கமலா பற்றிய கதை.

கமலஹசனின் ஆளவந்தான் படத்தில் வரும் இரட்டையர்களில் ஒருவரும் இவ்வாறு தனிமைபடுத்தப்பட்ட கதாபாத்திரம் பற்றி பேசுகிறது.

ஆபிரிக்காவில் குரங்குகளார் வளர்க்கப்பட்ட பல குழந்தைகள் பற்றிய செய்திகள் உள்ளன. அவற்றில் ஒன்று John Ssebunya அவனை பற்றி பிபிசி ஒரு விவரண படத்தையும் எடுத்துள்ளது.

இலங்கையில் திஸ்ஸ எனும் சிறுவன் குரங்குகளால் வளர்க்கப்பட்ட செய்தியும் உள்ளது.




மேலும் இப்படியான குழந்தைகள் பற்றி அறிய


படங்கள்: கூகுள் தேடலில் பெறப்பட்டவை

3 comments:

said...

//உங்களில் யாருக்கேனும் இந்த கதை வாசித்த ஞாபகம் உண்டா.//

அந்த சிறுவர் நவீனத்தின் பெயர் "காட்டில் ஒரு வாரம்", ஒரு வார விடுமுறையை பாலைக்காட்டு பக்கத்தில் கழிக்கவந்து தன் சகோதரனை காட்டில் சந்தித்த கதை. எழுதியது யார் என்று நினைவில் இல்லை. நூல் வெளியீடு மானி. மகளிர் கல்லூரியில் இடம்பெற்றதாக நினைக்கிறேன். பதிவு நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

said...

நன்றி துர்க்கா-தீபன்

said...

இது பற்றி ஒரு விவரணப்படம் நானும் பார்த்திருக்கிறேன் பெயர் ஞாபகமில்ல.

நல்ல பதிவு.