Showing posts with label புகைப்படம். Show all posts
Showing posts with label புகைப்படம். Show all posts

Sunday, 16 August 2009

River walk






River walk, San Antonio, TX.

Mission San Jose










San Antinio, TX

Thursday, 23 July 2009

எக்சோரவும், கனகாம்பரமும், மயிர்கொன்றையும்

சினேகிதி ஆம்பரலங்காய் அணிஞ்சில் பழம் மற்றும் குதியன் பதிவில் குறிப்பிட்ட எக்சோரா பூச் செடி, மற்றும் கனகாம்பரம், மயிர்கொன்றை பூச் செடி ஆகியவற்றை San Antonio இல் உள்ள River walk, Almo இன் பின் உள்ள பூங்கா பகுதியில் காணமுடிந்தது. சினேகிதியின் பதிவை வாசித்து எக் சோரா என்றால் என்ன என கேட்டவர்கள்/ யோசித்தவர்களுக்காக





எக்சோரா/ X-Rose/ X-Rosa???
Alamo, San Antonio, TX.



எக்சோரா
River walk area, San Ant0nio, TX.





கனகாம்பரம்
Alamo, San Antonio, TX.


மயிர்க்கொன்றை
River walk area, San antonio, TX.

Sunday, 19 July 2009

நாகதாளி

















Prickly pears (Opuntia)
17/07/09
San Antonio, TX, USA.

Saturday, 4 July 2009

இறம்புட்டான்

Tuesday, 16 June 2009

அரும்பு

Thursday, 11 June 2009

மீள்வருகை

Wednesday, 10 June 2009

அந்திவானம்







































English Bay/ Sunset beach
, Vancouver, BC, Canada.

Wednesday, 24 September 2008

ஊதாப்பூ

அசினிபோனி பூங்கா, வின்னிப்பெக், மனிரோபா.

பூச்சியும் பூவும்

அசினிபோனி பூங்கா, வின்னிபெக் மனிரோபா,

Sunday, 27 July 2008

Prairie dog

ஏன் அணில், எலி போன்றவற்றின் வகுப்பை சேர்ந்த அணிலுக்கு மிக அண்மைய இனமான இந்த விலங்குகளுக்கு பிரயரி நாய் என பெயர் வைத்தார்கள் தெரியவில்லை??? இவை கத்துவது நாயின் குரல் போல இருப்பதால் பிரயரி நாய் என பெயர் வைத்தார்களாம்.
விக்கிபீடிய சொல்வது போல் இவை முத்தமிடும் காட்சியை காண முடிந்தாலும் புகைப்படக்கருவியை தயாராய் வைத்திருக்காமையால் அதை புகைப்படமாக்க முடியவுல்லை :(( .

கதிர்காமத்தில் குரங்குகள் பழங்களுக்கும் உணவுக்கும் அங்கு போபவர்களை துரத்துவதும், கொடுத்தால் வெகு அருகில் வந்து வாங்கி உண்பது போலவே பிரயரி நாய் எனப்படும் அணில்களும் விலங்கு காட்சியகத்துக்கு செல்பவர்கள் உணவு கொடுத்து பழக்கியதால் போபவர்களுடன் வெகு நட்பு பாராட்டி கையில் உணவு வாங்கி உண்பதையும் புகைப்படக்கருவிக்கு அழகாக "போஸ்" கொடுப்பதையும் காணலாம்.

Assiniboine Park Zoo, Winnipeg, Manitoba
27/07/08









Tuesday, 22 July 2008

பட விளையாட்டு

12/07/08
Kenora, ON, Canada

இது சும்மா விளையாடி பார்த்தது.









Posted by Picasa








சுட்ட கத்தரிக்காய்ச் சம்பல்

சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல்

தேவையான பொருட்கள்

ஒன்று/ இரண்டு பேருக்கு

4 - மேசைக்கரண்டி தயிர்

1 - பெரிய கத்தரிக்காய்







* சுட்ட சம்பலின் நிறம் வெளிர்ப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால் வேள்ளை கத்தரிக்காய் தான் நன்றாக இருக்கும்.

* வெள்ளை கிடைக்கவில்லை என்றால் ஊதா கத்தரிக்காய் பாவிக்கலாம். நீண்ட கத்தரிக்காயை தான் பெரிய கத்தரிக்காய் என சொல்லியுள்ளேன்.





நீண்ட கத்தரிக்காய் கிடைக்கவில்லையென்றால் சிறிய வெள்ளை/ ஊதா கத்தரிக்காயும் பாவிக்கலாம். நான் சிறிய கத்தரிக்காயை தான் பாவித்து செய்தேன்.

5-6 - சிறிய வெங்காயம்
2 - பச்சை மிளகாய்
1/2- தே. கரண்டி மிளகு
சுவைக்கு- உப்பு
அலுமினியத் தாள்


செய்முறை


1. போறணை/ Oven ஐ 230 பாகை செல்சியல்லில் சூடாக்கவும்

2. கத்தரிக்காய் மூழை நீக்கி அலுமினியத தாளினால் முழுமையாக மூடி சுற்றவும். சுற்றியபின் முள்ளுகரண்டி (Fork) மூலம் இரண்டு மூன்று இடங்களில் குற்றி தூளை செய்யவும் (இது நீராவி வெளியேற உதவும்)





3. கத்தரிக்காயை சூடான Oven இல் 25- 30 நிமிடம் சுடவும்



4. கத்தரிக்காய் சுடும் நேரத்தில் வெங்காயம், பச்சை மிளகாயை மிகச்சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்



5. 25-30 நிமிடங்களின் பின் கத்தரிக்காயை வெளியே எடுத்து சிறிது குளிர்ந்ததும் அலுமினியம் தாளை அகற்றவும்.




( கீழே உள்ள படத்தில் உள்ளது போல் தோல் சுருங்கி வரும். நான் வெள்ளை நிற பெரிய கத்தரிக்காய் இங்கு கிடைக்காதாதால் ஊதா நிற சிறிய கத்தரிக்காயை பாவித்தேன். இப்படி கபில நிறமாக வருவதை விரும்பாதவர்கள் வெள்ளை கத்தரிக்காயை பாவிக்கலாம்.)






6. மேலும் கையால் தோலை உரிக்கக்கூடிய சூடு வரும் வரை குளிர விட்டு தோலை உரித்து கொள்ளவும்

7. சிறிய கத்தரிக்காய் என்றால் 4 ஆக, பெரிது என்றால் 8 ஆக பிளந்து சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.

8. அரிந்த கத்தரிக்காயுடன், அரிந்து வைத்த வெங்காயம், மிளகாய், உப்பு, மிளகுத்தூள் என்பனவற்றை சேர்த்து கலக்கவும்





9 இறுதியில் தயிரை சேர்த்து நன்கு கலந்தால் சுவையான சுட்ட கத்தரிக்காய்ச் சம்பல் தயார்

இதனை சோற்றுடன் உண்ணல்லாம்.






குறிப்பு.

1. ஊரில் தயிரிற்கு பதிலாக இதற்கு தேங்காய்ப்பால் (முதற்பால்) சேர்த்து செய்வார்கள்
2. தயிரிற்குபதிலாக sour cream உம் பாவிக்க முடியும்



நீங்களும் தயிரிற்கு பதிலாக தேங்காய்ப்பால்/ sour cream பாவித்து செய்து பார்த்து எது சுவையானதோ அதை தொடருங்கள்.


3. கத்தரிகாய் சுடுவதற்கு தேவையான நேரம், கத்தரிக்காயின் பருமன், Oven இன் வகை என்பவற்றுக்கு ஏற்ப மாறுபடும். 20 நிமிடத்தின் பின் வெளியே எடுத்து திறந்து பார்த்து படத்தில் காட்டியுள்ளது போல் தோல் சுருங்கி வந்திருந்தால் வெளியே எடுக்கலாம். இல்லாது விடின் மீண்டும் மூடி 5- 10 நிமிடம் சுடவும்.






Sunday, 20 July 2008

அந்தி வானம்

Lakes of Woods, Kenora, ON, Canada
கெனொர, ஒன்ராறியோ, கனடாவில் உள்ள ஏரிக்கரையோரத்து அந்திப்பொழுது. படத்தை மெருகூட்டினேனா? அசிங்கப்படுத்தினேனா? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.