Sunday, 28 September 2008

முட்டையில்லா வனிலா மைலோ கேக்





Egg less Vanilla-Milo Marble Cake

தேவையான பொருட்கள்

பொதுப்பாவனை கோதுமை மா ----- 1 கப் (250 மில்லி லீட்டர்)
ரவை ---- 1 கப்
300 மில்லி லீட்டர் கட்டி பால் ----- 1
சீனி ---- 1 கப்
பட்டர் ---- 250 கிராம்
மென் சூடான நீர் ---- 150 மில்லி லீட்டர்
மைலோ ---- 2 மேசைக்கரண்டி
வனிலா ---- 1 தே-கரண்டி

பேக்கிங் பவுடர் ---- 1 1/2 தேகரண்டி


செய்முறை

- பொதுப்பாவனை கோதுமை மா, ரவை, பேக்கிங் பவுடர் மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து 3- 4 முறை அரிதட்டில் போட்டு அரித்து எடுத்து வைக்கவும்

- கட்டி பால் தகரத்தை திறந்து வாய் அகன்ற, கொத்தன் பாத்திரத்தில் இடவும்
- தகரத்தில் ஒட்டியிருக்கும் பாலை மென் சுடு நீர் கொண்டு கழுவி அதனையும் பாத்திரத்தில் விடவும்
- கலவையை 10-15 நிமிடம் நடுத்தரமான வேகத்தில் அடிக்கவும்






- பட்டர், சீனி இரண்டையும் இன்னொரு பாத்திரத்தில் இட்டு 15 நிமிடம் நன்கு அடிக்கவும்.


- பதம் சரியா என்பதை இரண்டு விரல்களுக்கிடையே பட்டர்- சீனி கலவையை உரோஞ்சி பார்க்கும் போது சீனி துகள்கள் இல்லாதிருக்க வேண்டும் அல்லது மிக குறைவாக இருக்க வேண்டும்



- நன்கு அடித்த பட்டர்-சீனி கலவையினுள், அடித்து வைத்திருக்கும் கட்டிபால் கலவையை சேர்த்து ஒரு 3-5 நிமிடம் அடிக்கவும்.


- அடித்த கலவையுடன், அரித்து வைத்த கோதுமை மா-ரவை-பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்து 2 நிமிடம் அடிக்கவும்


- கலவையை இரண்டாக பிரித்து ஒரு பகுதியுடன் வனிலாவை சேர்த்து 1 நிமிடம் அடிக்கவும்


- மிகுதி பகுதிக்கு மைலோவை சேர்த்து அடிக்கவும்






- பட்டர் தடவிய கேக் தட்டில் முதலில் வனிலா சேர்த்து அடித்த கலவையை கொட்டி பரவவும்


- அதன் மீது மைலோ சேர்த்து அடித்த கலவையை கொட்டி பரவவும்


- பரவிய கலவை மீது முள்ளு கரண்டி யை உட் செலுத்தி ஒழுங்கற்ற விதத்தில் மெதுவாக ஒரு பக்கம் இருந்து மறுபக்கம் வரை மெல்லிதாக கலக்கவும்


- மீண்டும் மேற்பரப்பை மட்டப்படுத்தவும்





- 180 பாகை செல்சியசில் சூடாக்கிய இல் 25- 30 நிமிடம் சுட்டு எடுக்கவும்




Wednesday, 24 September 2008

ஊதாப்பூ

அசினிபோனி பூங்கா, வின்னிப்பெக், மனிரோபா.

பூச்சியும் பூவும்

அசினிபோனி பூங்கா, வின்னிபெக் மனிரோபா,

Thursday, 7 August 2008

ஐசூர்யா எனும் திருட்டு வலைப்பதிவர்

இதுவரை ஐ சூர்யா எனும் வலைப்பதிவர் தனது வலைப்பதிவில் அனைத்து தமிழ் ஊடகங்களிலும் வரும் செய்திகளை எந்தவித பாகுபாடும் இன்றி தனது சொந்த செய்தி போல் வெளியிட்டு வந்தார். இப்போது வலைபதிவில் எழுதுபவற்றையும் அட்சரம் பிசகாமல் திருடி தனது வலைப்பதிவில் இட்டு தனது வலைப்பதிவுக்கு விளம்பரம் தேடும் நிலையில் வந்துள்ளார். இது 3 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் என் வலைப்பதிவில் இட்டது. அதையே தலைப்பு முதல் கொண்டு எந்த வசனத்தையும் மாற்றாது இன்று அவர் தனது வலைப்பதிவில் திருடி வெளியிட்டது.












வலைப்பதிவில் அவர் நீக்கிவிட்டதால் அவரது வலைப்பதிவின் கணனி திரை பிரதியை இணைத்துள்ளேன்.

Monday, 4 August 2008

Folklorama, Tamil Pavilion 2008

கனடாவில் உள்ள மனிரோபா மனிலத்தில் வருடாந்தம் Folklorama எனும் ஒரு அரங்காடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து இப்போது 39 ஆண்டுகள் ஆகிவிட்டன. Winnipeg Folkloramaகொண்டாட்டமே உலகில் நடைபெறும் இந்த வகையை சேர்ந்ததவற்றில் மிகப்பெரியது என யுனெஸ்கோ அமைப்பின் ஆலோசகராக இருக்கும் International Council of Organiztion for folklore festival அமைப்பு கூறியுள்ளது. இந்த நிகழ்வை வின்னிபெக் பாரம்பரிய கலை கழகம் (Winnipeg Folk Arts Council நடாத்துகிறது. ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை வருடாந்தம் நடைபெறும் கலாச்சார நிகழ்வுகளில் மொத்தமாக 44 வெவ்வேறு வகை இனக்குழுமத்தை சேர்ந்த மக்கள் தமக்கென அமைக்கப்பட்ட தனியான அரங்கத்தில் நடத்துவார்கள். அதிக எண்ணிக்கையான இனகுழுமங்களின் அரங்காடல் நிகழ்வுகள் இருப்பதால் முதல் வாரத்தில் 22 இனக்குழுமங்களின் அரங்காடல் நிகழ்வுகளும், மிகுதி 22 குழுமங்களின் அரங்காடல் நிகழ்வுகள் இரண்டாவது வாரத்திலும் நடைபெறுகிறது.

Tamil Pavilion 2008
Folklorama,
Winnipeg, Manitoba, Canada
August 3-9



தமிழ் அரங்கம் 2008


இந்த பாரம்பரிய அரங்காடல் நிகழ்வுகளில் தமிழ் கலாச்சார நிகழ்வுகளை உள்ளடக்கிய அரங்காடல் நிகழ்வு முதல் வாரத்தில் அதாவது ஆகஸ்ட் 3- 9 ஆம் திகதி வரை வருடாந்தம் நடைபெறுவது வழக்கமாகும். தமிழ் அரங்காடல் நிகழ்வு இந்த வருடத்துடன் தனது 11 ஆவது வருடத்தை நிறைவு செய்கிறது.

தமிழ் அரங்கம் பிரதானமாக 2 பகுதிகளை கொண்டது.

1. தமிழ் மக்களின் கலாச்சார பின்னணியை எடுத்துக்கூறும் கண்காட்சி

இப்பகுதியில் தமிழ் மொழியின் தொன்மை, மக்களின் வாழ்கை அமைப்பு, வரலாறு இசை போன்ற விடயங்களை பற்றிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்

2. அரங்க நிகழ்வுகள்

பரத நாட்டியம், கிராமிய நடனம், தபேலா, மிருந்தங்கம், பாடல் போன்ற அரங்க நிகழ்வுகளை வின்னிபெக் தமிழ் இளையவர்கள் ஆர்வத்துடன் வழங்குவார்கள்

மேலதிகமாக
தமிழ் மக்களின் உணவுகள், சிற்றூண்டி வகை பொன்றவைக்கான சிறிய விற்பனை அங்காடிகளும் இருக்கும்

முதல் நாழ் நிகழ்வின் காணொளி காட்சிகள் சில