Wednesday, 27 June 2007
ஆடிக்கூழ்
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
-நவாலி சோமசுந்தரப்புலவர்
பாடல்: VSK கானா பிரபா ஆகியோரின் பதிவில் இருந்து.
பிற்குறிப்பு:
1. இது பாட்டுடனான மீள் பதிவு
2. வீட்டுக்கு போய் கொழுகட்டையுடைய படமும் சேர்த்து விடுகிறேன் :)
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
ஹி..ஹி பாசிப்பருப்பு பாயசம் தானே இது.(எனக்கு ஒரு கப் பார்சல்)
சந்திரன்!
சந்திரன் கூழ் போலுமிருக்கிறது.
இதே வேளை ஆடிக்கூழ் போலும்
இருக்கிறது.( தேங்காய் சொட்டு).
என்னவாயிருந்தாலும், தின்பண்டம் தானே வாயூறுது.
தேங்கயாச் சில்லுசில்லா அறுத்துப் போட்டிருக்கீங்க. திராச்சைப் பழம் ஜலஜலன்னு மெதக்குது. வெல்லம் போட்டு பழுப்பா இருக்குது. அப்ப பருப்புப் பாயாசந்தான். சரியா?
dal makkani
இதை நான் கொரியாவில மூனுவாட்டி சாப்பிட்டிருக்கேன். ஓணான் தலை பாயா. பச்சை ஓணான் தலை பாயா கொஞ்சம் விலைஜாஸ்தி.
கொரியாக்காறிக்கிட்ட நட்பு வச்சா இதெல்லாம் சகஜமப்பா!
புள்ளிராஜா
இதை நான் கொரியாவில மூனுவாட்டி சாப்பிட்டிருக்கேன். ஓணான் தலை பாயா. பச்சை ஓணான் தலை பாயா கொஞ்சம் விலைஜாஸ்தி.
கொரியாக்காறிக்கிட்ட நட்பு வச்சா இதெல்லாம் சகஜமப்பா!
புள்ளிராஜா
//இதை நான் கொரியாவில மூனுவாட்டி சாப்பிட்டிருக்கேன். ஓணான் தலை பாயா. பச்சை ஓணான் தலை பாயா கொஞ்சம் விலைஜாஸ்தி.
கொரியாக்காறிக்கிட்ட நட்பு வச்சா இதெல்லாம் சகஜமப்பா!
புள்ளிராஜா//
வாங்கோ.....
கோரியாவிலை சாப்பிட்டிருக்கீங்களா?
ஆனா இப்ப ஒட்டகத்தொட வாசனை வருதே உங்ககிட்ட இருந்து......
நிறைய நாடுங்க சுத்தியிருப்பீங்க போல..
வவ்வால், யோகன் அண்ணா, ஜி.ராகவன், உண்மை
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வவ்வால். ஜி. ராகவன், உண்மை..
பாசிப்பயறு பாயாசம் போல தோற்ற மயக்கம் தந்திருக்கிறது.
அது தமிழ் மாத படி ஆடி மாதம் 1 ஆம் திகதி ஆடி பிறப்பு என்று சொல்லி ஒரு கூழ் காய்ச்சுவார்கள். அது தான் இது.
ராகவன் நீங்கள் சொன்ன அனைத்து பொருட்களுக்கும் மேலதிகமாக இதற்கு
வறுத்து கோது நீக்கிய உழுந்தும், அரிசியும் சேர்த்து இடித்து அந்த மாவையும் கலப்பார்கள்.
வெல்லம் எனும் போது பனை வெல்லம் தான் பயன்படுத்தப்படும்.
திராட்சை வற்றல் சேர்க்கவில்லை. அதில் தெரிவது பயறு/ பாசிபருப்பு
செய் முறையை எழுதி சேர்த்துவிடுகிறேன்.
யோகன் அண்ணா நீங்கள் சரியாக சொல்லியுள்ளீர்கள்.
ஆடி பிறப்பு பற்றி ஒரு பாடல் இருக்கிறது.
ஆடி பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம், ஆனந்தம் தோழர்களே
கூடி பனங்கட்டி (பனை வெல்லம்) கூழும் குடிக்கலாம்...
கொழுக்கட்டை தின்னலாம் தொழர்களெ
பாட்டு சரியா ஞாபகம் இல்லை.....
யாராவது சொல்லுங்கோ
ஆடிப்பிறப்பு கூழ்ப் பாடல்- பிரபா ; யாழ் சமையல் என்னும் பதிவில் போட்டுள்ளார்.
Post a Comment