Sunday, 16 December 2007

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு



படம் பெறப்பட்டது : http://seen.evgenidinev.com


என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு ஓ

என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் - உன்னிடத்தில்
கொண்டுவர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லியனுப்பு ஓ

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கோள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு ஓ ஓ

(..........!)

யாரோ உன் காதலில் வாழ்வது
யாரோ உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ
ஏனோ என் இரவுகள் நீள்வது
ஏனோ ஒரு பகல் என சுடுவது
ஏனோ என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரமில்லையா?
இலையை போல் என் இதயம்
தவறி விழுதே.....


என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு ஓ ஓ

பூக்கள் உதிரும் சாலை வழியே நடந்து செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கோள்கிறேன்






ennai thedi
kathal...




விஜய் ரீவி யில் ஒளிபரப்பாகும் காதலிக்க நேரமில்லை எனும் தொடர் நாடகத்தின் தொடக்க இசை.

பாடியவர்: ?
பாடலை எழுதியவர்: ?


காதலிக்க நேரமில்லை நாடகத்தில் திரைப்படங்கள் போலவே இடையிடையே பாடல்களையும் இணைத்து வருகிறார்கள்.

அவ்வாறு இடம் பெற்ற மேலும் ஒரு பாடல் காணொளியாக கீழே......









பிற்குறிப்பு: இதை பாத்திட்டு கானா பிரபா இவரும் "மாட்டிட்டார்" எண்டு விபரீதமா கற்பனை பண்ணி தனது உடம்பை கெடுத்துகொள்ள வேண்டாம் எண்டு அன்பாக கேட்டு கொள்கிறேன் :).

4 comments:

said...

நீங்க மாட்டிட்டீங்கன்னு கரிபானாவிலேயே பாத்துட்டேனே:))

Anonymous said...

சுந்தர், எங்களுக்குத் தெரியாமல் எப்போது கரீபானாவிற்குப் போயிருந்தீர்கள்... :-).

said...

இதுக்கெல்லாம் கற்பனை தேவையில்லை, நீங்களே போட்டுடைச்சிட்டீங்க. வாழ்த்துக்கள் ;)

said...

//கரிபானாவிலேயே//

எங்க இருக்கு உந்த இடம் (*!*)

டிசே எனக்கும் தெரியலை. எங்க இருக்கு உந்த இடம்??

பிரபா என்னத்தை போட்டு உடைக்கிற :)