Sunday, 16 March 2008
Couscous புட்டு அவிக்கலாம் வாங்க
இந்த செய்முறை 2 பேருக்கு போதுமானது.
250 கிராம் Couscous ஐ எடுத்து எடுத்து உங்கள் சுவைக்கேற்ப உப்பை கலந்து பின் மூடக்கூடிய ஒரு பாத்திரத்தில் பரவிவிடுங்கள்.
நன்கு கொதித்த சுடு நீரை பாத்திரத்தில் Couscous இனை மூடி, ஒரு
சென்ரி மீற்றர் உயரத்திற்கு சேருங்கள்.
பாத்திரத்தை இறுக்கமாக மூடி 5 - 6 நிமிடங்கள் வையுங்கள்.
இப்போது Couscous சுடு நீரில் வெந்து நீங்கள் இட்டதை போல் 3 மடங்கிற்கு வந்திருக்கும்.
அவிந்த Couscous இற்கு துருவிய தேங்காய்/ உலர்ந்த தேங்காய் துருவலை கலந்து அப்படியே கறி/ கூட்டு/ பொரியல் போன்றவற்றுடன் உண்ணலாம்.
அல்லது
புட்டு அவிக்கும் குளாயில் குளாய் புட்டு அவிப்பது போல தேங்காய் பூ, அவிந்த Couscous என்பவற்றை படை படையாக இட்டு அவித்து எடுத்தால் குளாய் புட்டு தயாராகிவிடும்.
பின்னர் உங்களுக்கு பிடித்த கறி/ கூட்டு / பொரியலுடன் சாப்பிடலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அட! நாளைக்குச் செஞ்சுபார்த்துட்டுச் சொல்றேன்.
சுலபமா இருக்கே:-)
துளசி அம்மா/ ரீச்சர்
வருகைக்கு நன்றி :)
என்ன செஞ்சு பாத்தேளா? சுவை எப்டி இருக்கு ?
இப்பத்தான் செஞ்சுவச்சுருக்கேன். கொஞ்சம் சப்ன்னு இருக்கு.
கோபால் பகலுணவுக்கு வந்து தின்னு பார்க்கட்டும்:-)
நம்ம வீட்டுலே புட்டுக்கு நெய் சக்கரை சேர்த்துத்தான் சாப்பிடும் வழக்கம். நாட் வித் குழம்பு & கறி.
ரவைப்புட்டு ஒருதரம் செஞ்சேன். அதே மாதிரி தான் இருக்கு.
ஆனா ரவையைவிட ச்சீக்கிரம் வேலை முடிஞ்சது:-)
//இப்பத்தான் செஞ்சுவச்சுருக்கேன். கொஞ்சம் சப்ன்னு இருக்கு.
கோபால் பகலுணவுக்கு வந்து தின்னு பார்க்கட்டும்:-)
நம்ம வீட்டுலே புட்டுக்கு நெய் சக்கரை சேர்த்துத்தான் சாப்பிடும் வழக்கம். நாட் வித் குழம்பு & கறி.
ரவைப்புட்டு ஒருதரம் செஞ்சேன். அதே மாதிரி தான் இருக்கு.
ஆனா ரவையைவிட ச்சீக்கிரம் வேலை முடிஞ்சது:-)//
ம் :( சப் எண்டு தான் இருந்தது. வெறுமா சாப்பிட. தக்காளி குழம்பும், கடலை கறியோடயும் சாப்பிட நல்லா இருக்கு. அரிசி மாவிலை செய்யிற புட்டு சாப்பிட்டுற போல நேய், சக்கரையோட சாப்பிடமுடியாதெண்டு நான் நினைக்கிறன். ஏன் எண்டா அந்த சுவை கிடைக்காது.
oh ipavee samaithu paarkinreen
enakum niraiya samaikkatheriyum
ungkal muraiyaiyum seithu paarkinren
anpudan
rahini
germany
suvaikum samaiyal arai
samithu vidu solukinren
rahini
Post a Comment