Sunday 16 August 2009
Saturday 15 August 2009
வனாந்தர குழந்தைகள் ? / அநாதரவான குழந்தைகள்? ? Feral children
நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த போது சிறுவயதில் வாசித்த ஒரு கதை ஞாபகம் வந்தது. கதையின் தலைப்போ எழுதியவரின் பெயரோ ஞாபகத்தில் இல்லை. அந்த கதை 1983 ஜூலை கலவரத்தில் வன்னி பகுதிக்கு இடம்பெயர்ந்த இரட்டை ஆண் குழந்தைகளை பற்றியது. இடப்பெயர்வில் ஒரு பையன் காட்டில் தவறி விடுகிறான், அவன் ஒரு மான் கூட்டத்துடன் வளர்கிறான். மற்றைய குழந்தை பெற்றோருடன்?? ?? வளர்ந்து பெரியவனாகிறன். ஒரு கட்டத்தில் பெற்றோருடன் வளர்ந்த பையன் மான்களுடன் உலாவும் மனிதனை கண்டு பிடித்து பார்த்த போது அந்த மனிதனின் கழுத்தில் இருக்கும் புலி நக சங்கிலியை கொண்டு அவன் தனது சகோதரன் என அடையாளம் காண்பதாக்க கதை செல்லும். உங்களில் யாருக்கேனும் இந்த கதை வாசித்த ஞாபகம் உண்டா.
2005 ஆம் ஆண்டு கென்யாவில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தையை வளர்ப்பு நாய் ஒன்று கண்டெடுத்து வந்தது பற்றிய செய்தி இது.
படங்கள்: கூகுள் தேடலில் பெறப்பட்டவை
Wednesday 12 August 2009
Folklorama 2009
Mission |
Celebrating diversity and promoting cultural understanding. VisionFolklorama promotes the ethno-cultural diversity of Manitoba through entertainment, public celebrations of culture and education. Folklorama provides the opportunity for ethno-cultural communities to promote and celebrate their intangible culture. We will understand and respond to the expectations of our members, stakeholders and the public and will be leaders in the festival community, the special events industry and the tourism industry of Manitoba. We will respect and recognize the contributions of our staff and volunteers and will create an environment that inspires fun, innovation and a sense of belonging. ValuesOur basic foundation values, the values upon which all we do is based:
இங்கு கிட்டதட்ட 300 வரையான தமிழ் மக்களே இருந்தாலும், பத்திரிகையாளர்களாலும், பார்வையாளர்களாலும் சிறந்ததொரு அரங்காடல் நிகழ்வாக தமிழ் அரங்கம் விததுரைக்கப்பட்டு வந்துள்ளதை அறிய முடிந்தது. கடந்த 11 வருடங்களாக எந்த இடையூறும் இல்லாது நடைபெற்று வந்த தமிழ் அரங்கம் இந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட அவல நிகழ்வுகளால் இடை நிறுத்தப்பட்ட்டுவீட்டது. அடுத்த வருடம் மீண்டும் மனிரொபா தமிழ் கலாச்சார கழகம் தமிழ் அரங்கத்தை இக்கொண்டாட்டத்தில் இணைத்துக் கொள்ளும் என நம்புகிறேன். கடந்த வருடம் தமிழ் அரங்கத்தை பற்றி இட்ட பதிவு இது. இக்கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டுள்ள கலாச்சார அரங்கங்கள் பட்டியலிட்டால் இந்த பதிவு மிக நீளமாகும். உதாரணமாக சில மிகுதியை இங்கே காணலாம் |