Saturday, 7 June 2008

கார கோதுமை தோசை :))

கார கோதுமை தோசை




தேவையான பொருட்கள்

1 கப் - முழு கோதுமை மா/ ஆட்டா மா
1 கப் - சாதாரண கொதுமை மா
3- செத்தால் மிளகாய்/ காய்ந்த மிளகாய்
1- வெங்காயம் (பெரியது)
1/2 தே கரண்டி நற் சீரகம்
சுவைகேற்ப - உப்பு
1 கப்- தேங்காய் பூ
2 மே கரண்டி- மாஜரீர்ன்/ பட்டர்
தேவைகேற்ப -நீர்
2 மே கரண்டி-எண்ணேய்
2 கடுகு சீரகம், கறி வேப்பிலை - தாளிக்க



மின் அரைப்பான் (கிரைண்டர்) இல் காய்ந்த மிளகாய், வெங்காயம், சீரகம் என்பவற்றை போட்டு பொடியாக்கவும்.
அதனுடன் தேங்காய் பூவையும் சேர்த்து அரைக்கவும்.
கடுகு சீரகம், கறிவேப்பிலை யை தாளித்து அதனுடனுடன் அரைத்த கலவையை கலக்கவும் மென் சூட்டில் 1 நிமிடம் கிளறி சேர்க்கவும்.



முழு கோதுமை மா, சாதாரண கோதுமை மா மாஜரீன்/ பட்டர், உப்பு ஆகியவற்றை நன்றாக கலக்க்கவும்.
மா கலவையுடன் அரைத்த கூட்டை சேர்த்து நன்கு கலக்கவும்
கலவைக்கு தோசை மா பதம் வரும் வரை நீர் சேர்த்து கரைக்கவும். கரைக்கும் போது கோதுமை மா கட்டி படாமல் பார்த்து கொள்ளவும்.

15 நிமிடம் மா கலவையை மூடி வைக்கவும்

அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல்லை சூடக்கி இடையிடையே எண்ணை பூசி தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

2 comments:

Anonymous said...

பார்க்கவே பசிகுதோ..:) முயற்சி செய்து பார்த்து, முடிவுகள் அறிவிக்கப்படும்

said...

முடிவு எப்ப தெரியும்?

ஆளுக்கு சேதாரமில்லாட்டி சரி :)