Sunday, 9 September 2007

கானா பிரபாவுக்கு colourful ஆகா

கானா பிரபா எப்பாவோ என்னுடைய பதிவை பார்த்து இது எப்படி சாத்தியம்..... என்ன பாயாசம் பச்சை பச்சையா இருக்கு எண்டு கேட்டிருந்தார். அப்போ சொல்லியிருந்தேன் பச்சை மட்டுமில்லை இன்னும் நிறைய நிறத்திலை இருக்கேண்டு.

அதுக்கு தான் இந்த பதிவு.







தேவையான பொருட்கள்

1. சவ்வரிசி - 100 கிராம்
(பச்சை, சிவப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட கலவையாக தாய்லாந்து/ சீன கடைகளில் தேடி வாங்கிகொள்ளவும்)
2. சீனி/சர்க்கரை- சுவைக்கு ஏற்ப
3. பால் 1 லீற்றர்
4. திராட்சை வற்றல் - உங்கள் சுவை, விருப்பத்துக்கேற்ப அளவு
5. முந்திரிகை மருப்பு - உங்கள் சுவை விருப்பத்திற்கேற்ப அளவு
6. ஏலக்காய் 2-3
6. நெய்/ பட்டர்- 2 மேசைகரண்டி


செய்முறை

1. வாணலி/ தாய்ச்சி யில் சவ்வரிசியை மிதமான சூட்டில் வறுத்து எடுத்து கொள்ளவும்
2. வாணலியில் நேய்/ பட்டரை இட்டு உருகி கொதிக்க ஆரம்பித்ததும் திராட்சை வற்றல் முந்திரிகை பருப்பு எற்பவற்றை போட்டு பொரித்து எடுக்கவும். அத்துடன் ஏலக்காயையும் பொடித்து போட்டு வைத்து கொள்ளவும்.

3. அளவானா பாத்திரத்தில் பாலை இட்டு நன்கு கொதிக்க விடவும்
4. வறுத்து வைத்த சவ்வரிசியை கலந்து சவ்வரிசி அவிந்து நல்ல பெரிய உருண்டைகளாக (ஒளியை ஊடுபுகவிடும் நிலை வரை)வரும் வரை சமைக்கவும்

5. சுவைக்கேற்ப சீனி/ வெல்லம்/ சர்க்கரை சேர்த்து, நெய்யில் பொரித்து வைத்த திராட்சை வற்றல், முந்திரி பருப்பு, ஏலக்காய் என்பவற்றை இட்டு கலக்கிய பின் முடி அடுப்பை அணைத்துவிடவும்.

6.மென்சூடன நிலைக்கு வந்ததும் அளவான பத்திரத்தில் விட்டு குடிக்கவும்.

2 comments:

said...

என்ர பெயரை வச்செல்லாம் தலைப்பு வந்திட்டுது இனிக் கவனமா இருக்கவேணும் ;)

Anonymous said...

een vera oru veelaiyum illaiyoo?