Friday, 28 September 2007

Salmonella - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 7

1. உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
3.Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 3

4. Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4

5. Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5

6. Campylobacter: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 6



7. Salmonella - உணவு மூலம் பரவும் நோயாகிகள் -7




படம் பெறப்பட்டது: www.fehd.gov.hk/.../library/salmonella/1.html

அண்மையில் கனடா நாட்டின் உணவு கட்டுப்பாட்டு நிறுவனம் மல்லி தூளில் Salmonella தொற்று/ மாசாக்கம் இருக்கலாம் என அறிவித்துள்ளதுடன், குறிப்பிட்ட மல்லி தூளை உற்பத்தி/ இறக்குமதி செய்யும் நிறுவனம் தொற்று/மாசாகம் அடைந்த தொகுதிகளை சந்தையில் இருந்து மீள பெறுவதாகவும் அறிவித்துள்ளது.



எனவே இந்த பக்றீரியா பற்றி சிறிது பார்ப்போம்.


இந்த பக்றீரியாவின் பெயரானது இதனை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி Salmon என்பவரின் பெயரை கோண்டு உருவாக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் வருடாந்தம் 40, 000 க்கு மேற்பட்டோரும், கனடாவில் 6000- 12000 பேரும் வருடாந்தம் இதன் தாக்கத்துக்கு உள்ளாவதாக அறியப்பட்டுள்ளது.

பல Salmonella வகைகள் இருந்ததலும் கீழே கொடுக்கப்பட்ட இரண்டும் உணவு மூலம் பரவுதலில் முக்கியமானவை.

1. Salmonella serotype Typhimurium
2. Salmonella serotype Enteritidis


எனைய இரண்டுவகை Salmonella க்கள்

Salmonella typhi
Salmonella paratyphi A, B, and C


மனிதரில் நெருப்பு காய்ச்சல் அல்லது தைபோயிட் (typhoid) காய்ச்சலை உருவாக்குபவை. இவை நீரின் மூல பரவுகிறன.


Salmonella பக்றீரியா கோழி,பன்றி பொன்றவற்றின் குடலில் இயற்கையாக காணப்படக்கூடிய ஒரு நுண்ணங்கியாகும். அத்துடன் இந்த பக்ற்ரீரியாக்கள் விலங்குகள் வளர்க்கும் சூழலிலும்
காணப்பட முடியும்.

பொதுவாக Salmonella அதிக அளவில் கோழி இறைச்சி, கோழி முட்டை போன்றவற்றின் மூலமே பரவுவதாக அறியப்பட்டு இருந்தாலும், ஏதாவது வகையில் ஏனைய உணவுகள் தொற்று ஏற்பட்ட கோழி/ மனிதருடன் தொடுகை அடைவதால் ஏனைய உணவு பொருட்களும் இந்த பக்ற்ரீயாவை காவ முடியும். தொற்று ஏற்பட்ட உணவு மூலம் மனிதருக்கும், தொற்று ஏற்பட்ட மனிதரில் இருந்து ஏனைய மனிதர்களுக்கும் பரவ முடியும். எனவே சமையலிடங்களில் தொற்று ஏற்பட்டவர்கள் அனுமதிக்கப்படக்கூடாது.


Salmonella பக்றீரியா தொற்றினால் ஏற்படும் நோய் சல்மொனெலோசிஸ் (Salmonellosis) என அழைக்கப்படும்.

நோய் அரும்பு காலம்: தொற்று ஏற்பட்டு 7- 72 மணி நேரங்கள்

இந்த நோயின் அறி குறிகள்: காய்ச்சல், வயிற்றோட்டம், வயிற்று நோ

நோய் நீடித்திருக்க கூடிய காலம்: 4-7 நாட்கள். பொதுவாக இந்த தொற்று எந்தவிதமான மருந்து சிகிச்சையும் இல்லாது குணமாககூடியது. ஆனால் சிறுவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு தொற்று ஏற்படும் போது அவதானமாக இருக்க வேண்டும். இவர்களால் இந்த தொற்றை எதிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இந்த பக்றீரியா சமிபாட்டு தொகுதி/ உணவு கால்வாயில் இருந்து குருதி சுற்றோட்டத்தொகுதியை அடைந்து உடல் முழுவதும் பரவலடைந்து கட்டுபடுத்த முடியாத நிலையை அடையலாம். எனவே தீவிரமான வயிற்று போக்கு/ குருதியுடன் கூடிய வயிற்றுபோக்கு ஏற்படும் போது நுண்ணுயிர்க்கொல்லி மூலம் சிகிச்சை அளிப்பது அத்தியாவசியமானது.


அதிக அளவில் பாதிக்கப்பட கூடியவர்கள்: சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், நிர்பீடன குறைபாடு/ நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் (உதாரணம்- எயிட்ஸ் நோயளிகள்).



எவ்வாறு மனிதரில் தொற்று ஏற்படுகிறது:

ஏற்கனவே சொன்னது போல தொற்றுதலுக்கு உள்ளான கோழி, பன்றி, மற்றும் ஏனைய விலங்குக்களின் மலத்துடன் தொடுகையுற்ற உணவு பொருட்கள் குறிப்பாக கொழி இறைச்சி, முட்டை, பன்றி இறைச்சி என்பவற்றின் மூலம் பரவ முடியும். தொற்று ஏற்பட்ட உணவுகள் பொதுவாக வேறுபட்ட மணம், நிறம் ஆகியவற்றை கொண்டிருக்காது. பொதுவாக மரக்கறிகளும் விலங்கு கழிவுகள் உரமாக இடப்படும் சந்தர்ப்பங்களில், சரியாக சுத்தம் செய்யாதவிடத்து தொற்றுக்கு காரணமாக அமையலாம்.

தொற்றை தவிர்ப்பதுஎப்படி?

இது உயர் வெப்பதில் இறந்துவிடக்கூடிய பக்றீரியா ஆக இருப்பதால் உணவுகளை நன் கு சமைத்து உண்ணும் போது தொற்று ஏற்படும் சாத்தியம் மிக குறைவாகும்.

இறைச்சி சமைக்கும் போது இறைச்சியின் மைய பகுதி வெப்ப நிலை 72- 85 பாகை செல்சியசிலும் அதிகமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

சமைக்காது உண்ணும் மரக்கறிகைளை நன்கு கழுவி சுத்தம் செய்த பின்னரே உண்ண வேண்டும்.

சமைக்கப்படாத இறைச்சி, சுத்தமாக்க படாத உணவுகளை கையாண்ட பின் சவர்காரம் இட்டு கையலம்பாது சமைத்த உணவுகளை கையாளுவதை தவிர்த்தால்.

தொற்றுக்கு உள்ளானவர்கள் சமையலறையில் நடமாடுவதை, சமையலில் ஈடுபடுவதை தவிர்த்தால்.

முட்டையினை நன்கு சமைத்து உண்ணல். பாதி அவிந்த நிலையில் உண்ணுவதை கர்ப்பிணி பெண்கள், சிறுவர், வயது முதிர்ந்தோர் தவித்தல் நல்லது.
முட்டை உருவாகும் சூலக பகுதியில் இந்த பக்றீரியா தொற்றியிருந்தால் முட்டையின் உட்பகுதியிலியே இந்த பக்றீரியா தொற்றுதல் அடைய கூடியது. இதனால் முட்டையினை வெளிப்புறம் கழுவுவதன் மூலம் மட்டும் இந்த பக்றீரியா நீக்கப்பட மாட்டாது.

உசாத்துணை
http://www.cfsan.fda.gov/~mow/chap1.html
http://www.cdc.gov/ncidod/dbmd/diseaseinfo/salmonellosis_g.htm
http://www.inspection.gc.ca/english/fssa/concen/cause/salmonellae.shtml
http://www.hc-sc.gc.ca/iyh-vsv/food-aliment/salmonella_e.html

0 comments: