Friday, 13 July 2007

Campylobacter: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 6

உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3

Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4


Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5

Campylobacter - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் -6






Campylobacter உணவு மூலம் பரம்பலடையும் ஒரு முக்கிய நோயாக்கியாகும். உலகில் Campylobacter ஏற்படும் நோயில் 75-95% ஆன நோய் பரம்பலுக்கு உணவே பிரதான காரணியாக அறியப்பட்டுள்ளது. பிரதான நோயை காவும் உணவு பொருளாக கோழி இறைச்சி விளங்குகிறது, இதன் மூலம் 50-70% நோய் பரம்பலடையவதாக அறியப்பட்டுள்ளது.
கோழி இறைச்சிக்கு அடுத்த படியாக சூடாக்கப்படாத பால், குளோரின் ஊட்டப்படாத நீர் போன்றனவும் முக்கிய காரணிகளாக இருந்துள்ளன.




படம் பெறப்பட்ட மூலம்: http://res2.agr.ca/lethbridge/emia/SEMproj/campSEM_e.htm


இப் பக்ரீரியா ஆனது 11 இனங்களை உள்ளடக்கியிருந்தாலும்

1. Campylobacter jejuni
2. Campylobacter coli

ஆகிய இரண்டு இனங்களுமே மனிதனுக்கு நோய் ஏற்படுத்த வல்லவை ஆகும்.மனிதனில் இந்த பக்ரீரியாகளால் ஏற்படுத்தப்படும் நோய்களில் 80-90 % Campylobacter jejuni இனாலும், 10-2-% Campylobacter coli இனாலும் ஏற்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

கணக்கீட்டு அடிப்படையில் வருடாந்தம்

1. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் - 2453926
2. ஐக்கிய இராச்சியத்தில் - 277000
3. அவுஸ்திரேலியாவில் - 337655
பேர் பாதிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் மருத்துவ சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை மேலே சொன்ன எண்ணிக்கையிலும் குறைவாகும். அத்துடன் இதன் நோய்த்தக்கம் ஆங்காங்கு ஓரிருவருக்கு ஏற்பட்டாலும், மருத்துவ சிகிச்சை இன்றியே குணமடைய கூடியதாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை அறிவது சிரமம் ஆகும்.

இந்த இரண்டு பக்ரிரீயாக்களும் வளர உகந்த சூழலாக
37-45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்த போதும் குளிரூட்டியில் உயிர்வாழக்கூடியவை.
அமில கார இயல்பு 4.9 (pH)
ஆகியவற்றை சொல்ல முடியும்.





இதனால் ஏற்படும் பாதிப்புக்கள்

1. வயிற்று போக்கு: தொடக்கத்தில் நீர்த்தன்மையான வயிற்று போக்கு ஒரு நாளுக்கு 8 க்கு மேற்பட்ட தடவைகள் ஏற்படமுடியும். நாட்கள் செல்ல குருதியினுடனான வயிற்று போக்காக மாற்றமடையும்.

2. பொதுவாக நீர்த்தன்மையான வயிற்று போக்கு ஒருவாரம் வரை நீடிக்க கூடும். பொதுவாக நுண்ணூயிர்கொல்லி மருந்துகளை பாவிக்காமலே நோயாளி குணமாகிவிடுவார்.

3. பொதுவாக இப் பக்ரீரியாவால் கடுமையான பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை. ஆனால் அருமையாக
Gullain-Barre syndrom,
Meningitis
endocarditis,
septic arthritis
osteomylitis
neonatal sepsis

3. அண்மைய ஆய்வுகளில் இருந்து நீண்ட கால பக்க விளைவுகளாக உயர் அழுத்தம், சிறுநீரக செயற்பாடு பாதிக்கப்படல் ஆகியவை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.



இதன் நோயரும்பு காலம் 1-3 நாட்கள் ஆகும்.


நோய் பரம்புவதை தடுக்கும் முறைகள்

1. கோழி, மற்றும் இறைச்சிவகைகளை நன்கு சமைத்து உண்ணல்
2. சமைக்கப்படாத இறைச்சிவகைகளை சமைத்த உணவுடன் தொடுக்கையுற வைத்தல், அல்லது இரண்டையும் ஒரே நேரம் கையாழுதல்
3. சூடாக்கப்படாத/ பாஸ்ரராக்கம் செய்யப்படாத பாலை அருந்துவதை தவிர்த்தல்
4. குளோரினேற்றப்படாத நீர் அருந்துவதை தவிர்த்தல்.

0 comments: