சினேகிதி ஆம்பரலங்காய் அணிஞ்சில் பழம் மற்றும் குதியன் பதிவில் குறிப்பிட்ட எக்சோரா பூச் செடி, மற்றும் கனகாம்பரம், மயிர்கொன்றை பூச் செடி ஆகியவற்றை San Antonio இல் உள்ள River walk, Almo இன் பின் உள்ள பூங்கா பகுதியில் காணமுடிந்தது. சினேகிதியின் பதிவை வாசித்து எக் சோரா என்றால் என்ன என கேட்டவர்கள்/ யோசித்தவர்களுக்காக
Lakes of Woods, Kenora, ON, Canada கெனொர, ஒன்ராறியோ, கனடாவில் உள்ள ஏரிக்கரையோரத்து அந்திப்பொழுது. படத்தை மெருகூட்டினேனா? அசிங்கப்படுத்தினேனா? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
Our lady of Lourdes church, Cook's creek, Manitoba, Canada 22/06/08
மனிரோபா மானிலத்தில் இருக்கும் கூக்ஸ் கிறீக் எனும் இடத்தில் உக்கிரேனிய சமூகத்தவர்களால் அமைக்கப்பட்ட தேவாலயம். இது பொதுவாக யாத்திரை தலமாகவும் விளங்கிவருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பொதுவாக பல இடத்திலிருந்தும் இங்கு யாத்திரையாக வந்து மக்கள் கூடுவார்கள். மனிரோபா மானிலத்தின் தலைநகரான வின்னிபெக்கில் கூட இப்படி பெரிய தேவாலயங்களை காண முடியாது.
இரவு நேர காட்சிகளை எனது கமராவால் சரியாக படம் பிடிக்க முடியாவிட்டாலும், அங்கு போன ஞாபகத்துக்கெண்டு எடுத்த சில படங்கள். (படங்களை பெரித்தாக்க படங்களில் அழுத்தவும்)