Friday 8 July 2011

தேசிகாய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்

1. இறாத்தல் (lb) மெக்சிக்கன் தேசிக்காய்/ எலுமிச்சம் காய்
(ஊரில் உள்ள தேசிக்காய்களிலும் சிறிது, கனடாவில் Key lime என்ற பெயரில் ஒரு இறத்தல் பைகளில் கிடைக்கும், இது கிடைக்காவிட்டால் பெரிய தேசிகாயை பாவிக்கலாம்)



Key lime image from : http://pintsizebaker.com/key-lime-pie

2 . மேசை உப்பு - 1 1 /2 கப்

3 . மஞ்சள் போடி - 3 மேசை கரண்டி

4 . 600 மில்லி லிட்டர்/ 1 லிட்டர் கொள்ளளவு உள்ள வாய் அகன்ற, இறுக்கமான மூடி உடைய கண்ணாடி போத்தல் (pasta souse போத்தல் பொருத்தமாக இருக்கும்)

5 . பேக்கிங் தட்டு (Baking tray) , மெழுகு கடதாசி (Parchment paper)

6 . 20 சாதாரண/பெரிய தேசிகாய் ( இது 3 கிழமைகளின் பின் தான் தேவைப்படும் )


செய்முறை

1. மெக்சிக்கன் தேசிகாய்களை குளிர் நீரில் 2 முறை கழுவி உலர விடவும் ( ஒரு துளி நீரும் தேசிக்காய்களின் மேல் இருக்க கூடாது.

2. உப்பையும் மஞ்சள் பொடியையும் ஒரு பத்திரத்தில் இட்டு நன்கு கலக்கவும்.

3. தேசிகாய்களை நான்காக பிளக்கவும், பிளக்கும் போது கவனம் தேவை, நன்கு துண்டுகளும் தனியே வரக்கூடாது , அடிப்பகுதியில் நான்கு துண்டுகளும் இணைந்து இருக்க வேண்டும்.

4. உப்பு-மஞ்சள் கலவையை நான்காக பிளந்து வைத்த தேசிக்கய்களுக்குள் நிரப்பவும்/ அடையவும். உப்பு-மஞ்சள் கலவை தேசிக்காய்களின் அடிப்பகுதி வரை செல்ல வேண்டும்.

5. உப்பு-மஞ்சள் கலவை நிரப்பிய தேசிகாய்களை போத்தலினுள், (உப்பு-மஞ்சள் கலவை வெளியே கொட்டுப்படதபடி) கவனமாக நிரப்பவும்.

6. நிரப்பிய போத்தலை இறுக்கமாக மூடி 3 கிழமைகள் வைக்கவும். மூன்று கிழமைகளில் தேசிக்காய் நிறம் மாறி, வெளியே தேசிகாய் சாறு, கசிந்து வந்திருக்கும்.

7. 3 கிழமைகளின் பின் தேசிக்கய்களை போத்தலில் இருந்து கைபடாமல், கரண்டி முலம் ஒவ்வொன்றாக எடுத்து மெழுகு கடதாசி விரித்த பேக்கிங் தட்டில் பரப்பவும். போத்தலில் இருக்கும் சாறை இறுக்கமாக மூடி வைக்கவும்.

8. oven ஐ 76 பகை செல்சியசில் (170 F ) இற்கு சூடாக்கவும்.

9. தட்டில் பரப்பிய தேசிகாய்களை சூடாக்கிய oven 5 மணி நேரம் உலர வைக்கவும், பின் வெளியே எடுத்து பின் தேசிகாயின் நான்கு பிளந்த பகுதிகளையும் பிரித்து மேலும் ஒரு 6 - 8 மணி நேரம் உலரவைக்கவும்.


10 . 20 பெரிய தேசிகாய்களை கடையில் சென்று வாங்கவும்.

10 . தேசிக்காய் காய்ந்த பின் நான்கு துண்டுகளையும் தனியே பிரிக்கவும், (கையால் நான்கு துண்டுகளையும் உடைக்க துண்டுகள் உடையும் சத்தம் கேட்க வேண்டும் இல்லை என்றால் மேலும் 1 - 2 மணிநேரம் உலர வைக்கவும்).



11 . உடைத்த துண்டுகளை முன்னர் தேசிகாய் ஊற வைத்த (சாறு இருக்கும்) போத்தலினுள் போட்டு நிரப்பவும்


12 . 20 தேசிகாய்களையும் சாறு பிழிந்து காய்ந்த தேசிக்காய் போட்ட போத்தலினுள் விட்டு போத்தலை இறுக்கமாக மூடி மேலும் ஒரு கிழமை வைக்கவும்.




13 . இப்போ ஊறு காய் தயார்.



இந்த ஊறு காயை அறை வெப்பநிலையில் ஒரு வருடம் வரை வைத்துருக்கலாம். குளிருட்ட தேவையில்லை.



குறிப்பு:
1. ஊறுகாய் உலர/ கைய விடும் போது தொடர்ச்சியாக 10 மணி நேரம் வைக்க வேண்டியதில்லை. ஒருநாள் 5 மணி நேரம்,மறுநாள் 5 - 7 மணிநேரம் வைக்கலாம். ஆட்கள் யாரும் இல்லாத நேரம் oven ஐ பாவிக்க கூடாது என்பார்கள். oven ஐ நிப்பாட்டிய பின் மறுநாள் சூடாக்கும் வரை தேசிக்காய்களை oven உள்ளேயே வைத்திருக்கலாம்.

2 . ஊரில் சூரிய ஒளியில் உலர வைப்பார்கள், நான் இருப்பது தொடர் மாடி குடியிருப்பு, பல்கனி இல்லை. அதனால் தான் oven இல் உலர வைத்தேன். சூரிய ஒளியில் உலர வைக்க வசதியிருப்பவர்கள் சூரிய ஒளியில் உலர வைக்கலாம். ஆனால் சூரிய ஒளியில் உலர குறைந்தது 5 - 6 நாட்கள் எடுக்கும் என நினைக்கிறேன்.

2 comments:

said...

nalla samaiyal pathivu ....
vaalththukkal...



can you come my said?

Anonymous said...

அருமை :)))