Tuesday, July 31, 2007

மனிதர்களை அழகாக .......?.... போட்டிக்கு

மனிதர்களை அழகாக புகைப்படம் எடுத்தல்? அல்லது மனித உணர்ச்சிகளை அழகாக புகைப்படம் எடுத்தல்?
Sunday, July 29, 2007

மலர் - 5
Thursday, July 19, 2007

ஊரோடு ஒத்தோடு.... புகைப்பட போட்டிக்கு
Tuesday, July 17, 2007

ஆடிக்கூழ் + கொழுக்கட்டை

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

-நவாலி சோமசுந்தரப்புலவர்
பாடல்: VSK கானா பிரபா ஆகியோரின் பதிவில் இருந்து.

Saturday, July 14, 2007

கோடைகால சுற்றுலா செல்பவர்களுக்கு

ஏற்கனவே வட அமெரிக்க நாடுகளான கனடா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவில் உணவு மூலம் பரம்ப்பலடைந்து நோயை ஏற்படுத்தும் Escherichia coli O:157: H7 பற்றி எழுதியிருந்தேன்.

இது பொதுவாக சரியாக சமைக்கபடாத இறைச்சி, பால், நீச்சல் தடாகம், உணவை சுத்தமாக கையாளாமை போன்றன முக்கிய காரணங்களாகும்.

அண்மையில் கனடாவில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்ட கீரைமூலம் இந்த நோயாக்கி பரவியமை அறியப்பட்டுள்ளது.

கோடைகால விடுமுறை, மற்றும் வார இறுதியில் சுற்றுலா செல்பவர்கள் இந்த விடயத்தில் மிகவும் கவனாமாகா இருக்க வேண்டும்.

அண்மையில் கனடா தினத்துக்கு கனடாவின் ஸ்காபுரோ பகுதியில் நடைபெற்ற ஈழத்து மாணவர்களது ஒன்றுகூடலில் கலந்து கொண்டவர்களில் சிலர் Escherichia coli O:157: H7 பாதிப்புக்கு உட்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமை சிபிசி இணையம் மூலம் அறிய முடிந்தது. பாதிக்கப்பட்டவ்ர்களில் ஒருவர் கடுமையான சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த நோய்க்கு காரணமான உணவு எது என இதுவரை கண்டறியப்படவில்லை.

கோடையில் சுற்றுலா செல்பவர்கள் உணவு விடயத்தில் மிக கவனமாக இருத்தல் அத்தியாவசியமானது.

Friday, July 13, 2007

Campylobacter: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 6

உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3

Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4


Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5

Campylobacter - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் -6


Campylobacter உணவு மூலம் பரம்பலடையும் ஒரு முக்கிய நோயாக்கியாகும். உலகில் Campylobacter ஏற்படும் நோயில் 75-95% ஆன நோய் பரம்பலுக்கு உணவே பிரதான காரணியாக அறியப்பட்டுள்ளது. பிரதான நோயை காவும் உணவு பொருளாக கோழி இறைச்சி விளங்குகிறது, இதன் மூலம் 50-70% நோய் பரம்பலடையவதாக அறியப்பட்டுள்ளது.
கோழி இறைச்சிக்கு அடுத்த படியாக சூடாக்கப்படாத பால், குளோரின் ஊட்டப்படாத நீர் போன்றனவும் முக்கிய காரணிகளாக இருந்துள்ளன.
படம் பெறப்பட்ட மூலம்: http://res2.agr.ca/lethbridge/emia/SEMproj/campSEM_e.htm


இப் பக்ரீரியா ஆனது 11 இனங்களை உள்ளடக்கியிருந்தாலும்

1. Campylobacter jejuni
2. Campylobacter coli

ஆகிய இரண்டு இனங்களுமே மனிதனுக்கு நோய் ஏற்படுத்த வல்லவை ஆகும்.மனிதனில் இந்த பக்ரீரியாகளால் ஏற்படுத்தப்படும் நோய்களில் 80-90 % Campylobacter jejuni இனாலும், 10-2-% Campylobacter coli இனாலும் ஏற்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

கணக்கீட்டு அடிப்படையில் வருடாந்தம்

1. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் - 2453926
2. ஐக்கிய இராச்சியத்தில் - 277000
3. அவுஸ்திரேலியாவில் - 337655
பேர் பாதிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும் மருத்துவ சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை மேலே சொன்ன எண்ணிக்கையிலும் குறைவாகும். அத்துடன் இதன் நோய்த்தக்கம் ஆங்காங்கு ஓரிருவருக்கு ஏற்பட்டாலும், மருத்துவ சிகிச்சை இன்றியே குணமடைய கூடியதாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை அறிவது சிரமம் ஆகும்.

இந்த இரண்டு பக்ரிரீயாக்களும் வளர உகந்த சூழலாக
37-45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்த போதும் குளிரூட்டியில் உயிர்வாழக்கூடியவை.
அமில கார இயல்பு 4.9 (pH)
ஆகியவற்றை சொல்ல முடியும்.

இதனால் ஏற்படும் பாதிப்புக்கள்

1. வயிற்று போக்கு: தொடக்கத்தில் நீர்த்தன்மையான வயிற்று போக்கு ஒரு நாளுக்கு 8 க்கு மேற்பட்ட தடவைகள் ஏற்படமுடியும். நாட்கள் செல்ல குருதியினுடனான வயிற்று போக்காக மாற்றமடையும்.

2. பொதுவாக நீர்த்தன்மையான வயிற்று போக்கு ஒருவாரம் வரை நீடிக்க கூடும். பொதுவாக நுண்ணூயிர்கொல்லி மருந்துகளை பாவிக்காமலே நோயாளி குணமாகிவிடுவார்.

3. பொதுவாக இப் பக்ரீரியாவால் கடுமையான பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை. ஆனால் அருமையாக
Gullain-Barre syndrom,
Meningitis
endocarditis,
septic arthritis
osteomylitis
neonatal sepsis

3. அண்மைய ஆய்வுகளில் இருந்து நீண்ட கால பக்க விளைவுகளாக உயர் அழுத்தம், சிறுநீரக செயற்பாடு பாதிக்கப்படல் ஆகியவை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.இதன் நோயரும்பு காலம் 1-3 நாட்கள் ஆகும்.


நோய் பரம்புவதை தடுக்கும் முறைகள்

1. கோழி, மற்றும் இறைச்சிவகைகளை நன்கு சமைத்து உண்ணல்
2. சமைக்கப்படாத இறைச்சிவகைகளை சமைத்த உணவுடன் தொடுக்கையுற வைத்தல், அல்லது இரண்டையும் ஒரே நேரம் கையாழுதல்
3. சூடாக்கப்படாத/ பாஸ்ரராக்கம் செய்யப்படாத பாலை அருந்துவதை தவிர்த்தல்
4. குளோரினேற்றப்படாத நீர் அருந்துவதை தவிர்த்தல்.

Tuesday, July 10, 2007

சிறை - 2

Monday, July 9, 2007

சிறை - 1

Wednesday, July 4, 2007

இயல்பை சிதைத்தல் 3புத்தன் சிந்திய குருதி

Sunday, July 1, 2007

கனடா தினம் ஜீலை 1

ஜீலை 1 ஆம் திகதி கனடா தினம் கனடாவுக்கு. பிரித்தானியாவின் வட அமெரிக்க மானிலங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து கனடா எனும் கூட்டமைப்பை உருவாக்கிய முதல் ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக 1868 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி கனடா ஆளுனர் Lord Monck அவர்களால் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆயினும் முதலில் கனடா தினம் எனும் பெயர் வழங்கப்படவில்லை. இத்தினம் பல் வேறு பெயர் மாற்றங்கள், மற்றும் தடங்கல்களை தாண்டி பொது விடுமுறையாகவும், கனடா தினம் எனும் தற்போதைய பெயரையும் பெற்று கனடாவில் வாழும் பல்வேறு சமூக குழுக்களும் தங்களுக்கிடையே ஒரு ஒன்று கூடல் தினமாக கொண்டாடும் நிலையை தற்போது பெற்றுள்ளது.

மனிரோபா மானில தமிழ் கலாச்சார அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ் மக்களது ஒன்று கூடல் நிகழ்வு வின்னிபெக் நகரில் உள்ள St Vital பூங்காவில் காலை 11.00 மணி முதல் 3.30 மணிவரை சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.

இன்றைய நிகழ்வில் பங்கு கொண்டவர்களில் ஈழ தமிழ் மக்கள் பெரும் பான்மையினராக இருந்தாலும் இந்தியா, சிங்கபூர், மலேசியா, மொரீசியஸ் என பல நாடுகளையும் சேர்ந்த தமிழ் மக்கள் கலந்து சிறப்பித்தமை முக்கியமானது.

மொரிசியஸ் தமிழ் மக்கள் தமிழ் மொழியை பேசாத போதும் தமிழர் எனும் அடையாளத்துடன் கலந்து கொண்டமையை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

மனிரோபா மானில ஈழ தமிழ் இளம் சந்ததியில் பெரும் எண்ணிக்கையானோர் தமிழ் பேச்சை புரிந்து கொள்ள கூடியவர்களாக இருந்த போதும், தமிழை பேச முடியாதவர்களாகவே உள்ளனர். ஆனால் இன்றைய நிகழ்வை ஒழுங்கு செய்து முன்னின்று நடத்தியவர்கள் கனடாவில் பிறந்து வளர்ந்த இளம் சந்ததியினரே. அவர்களது தலைமையிலேயே அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றன. எதிர் காலத்தில் மொரிசியஸ் தமிழ் மக்களை போல கனடா வாழ் தமிழரும் தமிழ் பேசாத, ஆனால் தமிழர் எனும் அடையாளத்துடன் தான் இருப்பார்கள் என நினைக்கிறேன்.
பங்குபற்றிய இளையோர்சுடச்சுட உணவு தயாரிப்பு (BBQ)
மதிய உணவுக்கு குழுமி நிற்கும் மக்கள்

தமிழ் மக்களது நிகழ்வுக்கு பின் அதே இடத்தில் ஒன்று கூடியிருக்கும் பாக்கிஸ்தானியர்கள்