Saturday, 26 May 2007

படம், பாட்டு, கண்ணொளி.... ஒரு புதிர்

கலவை

வழமை போல சில படங்களின் இயல்பை சிதைத்து வைத்துள்ளேன்.


பாடல்கள்: இந்த பாடல்கள் அனைத்திலும் உள்ள ஒற்றுமை பரத் அனைத்து படங்களிலும் கதாநாயகன் என்பது.
புதிர் கேள்வி என்னவென்றால்

இணைத்துள்ள பாடல்களில் இரண்டின் காட்சியமைப்பில் ஒரு ஒற்றுமை இருக்கும். அவை எந்த பாடல்கள்? என்ன ஒற்றுமை ?Powered by eSnips.com

கண்ணொளி:
இங்குள்ள இடைநிலைப்பாடசாலையில் தரம் 6, 7 , 8 ஐ சேர்ந்த மாணவர்களின் இசை நிகழ்வில், தரம் 8 ஐ சேர்ந்த மாணவர்கள் வழங்கிய ஒரு இசைகோப்பு.
Movieமீண்டும் ஒரு சிறிய இடைவெளியின் பின் சந்திப்போம்.................

Friday, 25 May 2007

Yersinia enterocolitica

உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3

Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4


Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5

Yersinia உணவு மூலம் குறிப்பாக பன்றி இறைச்சி மூலம் அதிக அளவில் பரம்பலடையக்கூடிய ஒரு நோயாக்கியாகும். தற்போதைய நிலையில் அதிக முக்கியத்துவமற்ற ஒரு நோயாக்கியாக காணப்படும் போதும் இதன் இயல்புகள் காரணமாக எதிர்காலத்தில் முக்கியமான ஒரு நோயாக்கியக மாற்றமடையக்கூடியதாகும்.


பொதுவாக இடைவெப்ப வலய/ குளிர் நாடுகளான, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளிலேயே இந்த நோயாக்கி பொதுவாக பரவலடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் சிறப்பாக இந்த நோயாக்கி, வட ஐரோப்பிய நாடுகளான, நோர்வே, சுவீடன், டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளில் முக்கியமான ஒரு நோயாக்கியாக அறியப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணமாக அவர்களது பாரம்பரிய உணவு பழக்கத்தில் பன்றி இறைச்சியை சரியாக சமைத்து உண்ணமை என அறியப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இதன் நோய்த்தாக்கம் காரணமாக ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 96368 பேர் வருடாந்தம் பாதிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டாலும், வைத்திய குறிப்புக்களின் பிரகாரம், வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறுபவர்கள் வருடாந்தம் 2536 பேராகும். கனடாவில் 1 இலட்சம் பெர்களில் ஒருவர் வருடாந்தம் பாதிக்கப்படுவதாக கனடாவின் சுகாதார அமைப்பின் இணையத்தளம் சொல்கிறது.

இந்த பக்ரீரியாவை பற்றிய சிறிய வரலாற்று குறிப்பு

Yersinia எனும் சாதி (Genus) மனிதருக்கு நோயை ஏற்படுத்தக்கூடிய 3 இனங்களை (Species) ஐ கொண்டது. இதன் சாதிப்பெயரானாது (Genus)
பிளேக் எனும் கொள்ளை நோயின் (Plague) நோயாக்கி எது என அறிவதற்கு பாடுபட்டு அந்த நோயாக்கியை கண்டுபிடித்த Alexendre Yersin எனும் மருத்துவரை கௌரவிக்க வைக்கப்பட்டதாகும்.

1. Yersinia pestis

இது பிளேக் (Plague) நொய்க்கு காரணமான நோயாக்கியாகும். இது உணவு மூலம் பரவுவதில்லை.
2. Yersinia entrocolitica
3. Yersinia pseudotuberculosisஇவை இரண்டும் உணவு மூலம் பரவும் நோயாக்கிகளாகும்.

இவை வளர உகந்த நிபந்தனைகள்

வெப்பநிலை: 0-44 பகை டிகிரி செல்சியஸ், மிக உகந்த வெப்பநிலை- 28-29
அமில/ காரத்தன்மை (pH) : 4.2-10.0, மிக உகந்த அளவு - 7.2-7.4


சூழலில் தப்பிவாழும் இயல்பு

நீரில்: 64 கிழமைகள் வெப்பநிலை 4 பாகை டிகிரி செல்சியஸ் ஆக இருந்தால்
மண்: உலரும் மண்ணில் 10 நாட்கள்
பன்றி கழிவு: 73 நாட்கள்
கரட் சுத்தம் செய்து, கழுவும் இயந்திரபகுதியில் - 2 மாதங்களுக்கு மேலாக

காவிகளாக தொழிற்படும் விலங்குகள்

பன்றி, எலி, மான், நாய், பூனை, ஓநாய்......

ஏற்றுமதி செய்யப்படும் பன்றி, மற்றும் எனைய இறைச்சிவகை மூலமும், ஏற்கனவே பரம்பலடையாத/ இந்த நோயாக்கி காணப்படாத நாடுகளிற்கு இந்த நோயாக்கி பரம்பலடைய முடியும் என ஜப்பானில் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிகளில் செய்யப்பட்ட ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது.இதுவரை மனிதனில் நோய்த்தாக்கம் ஏற்பட்ட சந்தர்பங்களில் இந்த நோயாக்கி பரவ காரணமாக இருந்த உணவுகள்

பன்றி இறைச்சி, பால், சொக்கிலேட் சுவையூட்டப்பட்ட பால், சீவப்பட்ட கரட், குளோரினூட்டப்படாத குடி நீர்

உணவு மூலம் மட்டுமல்லாது
நேரடியாக விலங்குகளில் இருந்து மனிதருக்கும்,
மனிதரில் இருந்து மனிதருக்கும்
குருதி மாற்றீட்டுக்காக பயன்படுத்தப்பட்ட குருதி மூலமும் பரம்பலடைந்தது அறியப்பட்டுள்ளது.நோயின் வெளிப்பட்டுகள்


1- வயிற்று உபாதைகள்: Gastroentrocolitis, abdominal pain,

2. நிர்பீடன குறைபாடு உள்ளவர்களில்/ நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களில் sepsis, bacteremia போன்ற நோய்கள் ஏற்பட முடியும்


நோய் அரும்பு காலம்: 3- 7 நாட்கள்
நோய் நீடித்திருக்கும் நாட்கள்: 2- 3 கிழமைகள்

பொதுவான அறிகுறிகள்


காய்ச்சல், வயிறோட்டத்துடன் கூடிய வயிற்று உபாதை
வயிற்றின் வலதுபக்க கீழ் பகுதியில்ல் ஏற்படும் நோ சில நேரம் குடல் வளரி அழற்சியை (Appedicitis) போலியாக பிரதிபலிக்ககூடும்.

நீட்ட கால பக்க விளைவுகளாக சில பேரில்

Reactive arthritis, erythema nodosom, rash போன்றவை ஏற்படகூடும்.


மருத்துவம்

பொதுவாக எந்தவித நுண்ணுயிர் கொல்லிகளும் () உள்ளெடுக்கமலே குணமாக கூடியது.

ஆனால் வயதானவர்கள், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் (நீரிழிவு,புற்று நோய் போன்ற வற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு) நுண்ணுயிர் கொல்லிமூலம் குணமாக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.


நோய் ஏற்படுவதை தவிர்க்க

இறைச்சிகளை முழுமையாக சமைத்தல்
சமைத்த உணவையும், சமைக்காத உணவையும் ஒருங்கே கையாழுவதை தவிர்த்தல்

Escherichia coli O157: H7

உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் 1: அறிமுகம்

Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3 ( Food-borne pathogen):Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4

Escherichia coli O157: H7 (E. coli O157:H7) எனும் உணவு மூலம் பரவும் நோயாக்கி பக்ரீரியா பிரதானமாக மாட்டிறைச்சியுடன் பரவுவக்கூடியதாகும். E. coli O157:H7 சாதாரணமாக மாடு, ஆடு, செம்மறி ஆடு, மான் என்பவற்றின் குடல் பகுதியில் அந்த விலங்குகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் வாழும் ஒரு பக்ரீரியா ஆகும். ஆனால் இது உணவு மூலம் மனிதனின் குடல்/ சமிபாட்டு தொகுதியை அடையும் போது மனிதரில் நோயை ஏற்படுத்துகிறது.ஒளிப்படம் பெறப்பட்டது: http://anthropik.com/wp-uploads/e-coli.jpgஇந்த பக்ரீரியா ஏற்படுத்தும் நோய்களாக

இதன் தாக்கத்தால் வருடாந்தம் 73 000 பேர் ஐக்கியா அமெரிக்க நாடுகளில் மட்டும் பாதிக்கப்படுகிறனர். அவர்களில் 61 இறப்பை சந்திக்கிறனர்.

1. குருதியுடன் கூடிய வயிற்று போக்கு.

E. coli O157:H7 உணவுடன் சென்றடைந்து 3- 4 நாட்களில் நோய் ஏற்படுகிறது. குருதியுடானான வயிற்று போக்கு, வயிற்று குழப்பம் என்பவற்றை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் குருதி போக்கற்ற வயிற்று போக்கோ அல்லது எந்த அறிகுறிகளுமோ தோன்றாமல் இருக்க கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. சிறிதளவு காய்ச்சல் ஏற்படலாம். நொய் ஏற்பட்டு 5- 10 நாட்களில் பொதுவாக குணமாகிவிடும்.

2. Hemolytic uremic syndrome (HUS)

சில வளர்ந்தவர்கள், மற்றும் 5 வயதுக்கு குறைந்த சிறுவர்கள், முதியவர்கள் ஆகியோரில் குருதி கலங்கள் சிதைவு, சிறு நீரகங்கள் செயலிழப்பு என்பன ஏற்படுகிறது. பொதுவாக வயிற்று போக்கு ஏற்படுபவர்களில் 8% ஆனோர் இப்படியான தீவிர நோய் தாக்கதுக்கு உள்ளாகிறார்கள்.

3. நீண்ட கால தாக்கங்கள்


E. coli O157:H7 நோய் தாக்கம் ஏற்பட்ட ஒரு சிலரில் நீண்ட கால பக்க விளைவுகளாக அவயவங்கள் செயல் இழப்பு (paralysis), சிறு நீரக செயல் இழப்பு (persistent kidney failure), உயர் குருதி அழுத்தம் என்பவை சொல்லப்படுகிறன.
எவ்வாறு E. coli O157:H7 பரவலடைகிறது

இது பொதுவாக மாட்டின் குடல் பகுதியில் காணப்படுவதால்
முறையாக சமைக்கப்படாத hamburger, அரைத்த இறைச்சி என்பவற்றுடன் பரவ முடியும்.

அடுத்து, முளை அரும்புகள் (sprouts), லெற்றியுஸ் (lettuce), கீரை (spinach), சலாமி (salami), பாஸ்ரராக்கம் செய்யப்படாத பால் (unpasteurized milk), பழச் சாறு (juice)
மற்றும் மல கழிவுகள் தொற்றுதலடைந்த குடி நீர்/ நீச்சல் குளம்.

இவற்றுக்கு மேலதிகமாக தோற்று ஏற்பட்ட மனிதர்களில் இருந்து சரியான சுகாதார பழக்கவழக்கம் இன்மையால் இலகுவில் பரவலடைய முடியும்.
எவ்வாறு தொற்று ஏற்படாமல் தவிர்ப்பது


1. வீடுகளில் hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சியையோ சமைக்கும் போது இறைச்சி முழுமையக நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் விவசாய துறை (FDA) அரைத்த இறைச்சி, hamburger என்பவற்றை சமைக்கும் போது அவற்றின் வெப்ப நிலை 71.1 பாகை டிகிரி செல்சியஸ் (160 டிகிரி பரனைட்) வெப்ப நிலையை அடையும் வரை நன்கு சமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது.
மேலும் சமைக்கப்பட்ட இறைச்சி, hamburger என்பவற்றை 40 - 140 பாகை பரனைட் வெப்ப நிலையில் 3- 4 மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்க கூடாது எனவும் அறிவுறுதுகிறது.

2. உணவகங்களில் சரியாக சமைக்கப்படாத hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சி வழங்கப்பட்டால் அவற்றை சரியான முறையில் சமைத்து தருமாறு கேட்பதுடன், புதிதாக பண், சாப்பாடு பாத்திரம் என்பவற்றை கேட்பது முக்கியமானது.

3. சமைத்த உணவுகளை சமைக்காத இறைச்சி, hamburger என்பவற்றுடன் கலந்து வைப்பது, அல்லது இரண்டு வகை உணவுகளையும் ஒரே பாத்திரங்களில் சரியாக சுத்தம் செய்யாத பாத்திரங்களில் வைப்பது, கைகளை சரியாக சுத்தம் செய்யமை என்பன தவிர்க்கப்பட வேண்டும்

4. பால், பழச்சாறு, அப்பிள் சிடர் என்பவை பாஸ்ரராக்கம் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.

5. குளோரின் பரிகரிப்பு அல்லது வேறு வகை தொற்று நீக்கம் செய்யப்பட்ட நீரை மட்டும் அருந்த வேண்டும்.

6. சமைக்காது உண்ணும் மரக்கறி, இலை வகை, பழ வகைகளை ஓடும் நீரில் நன்கு கழுவிய பின் உண்ணுதல்.

7. நீச்சல் குளத்து நீரை அருந்துவதை தவிர்த்தல்.


8. நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டவர்கள் கைகளை சவர்காரம் கொண்டு சரியாக சுத்தம் செய்தல், நோய் ஏற்பட்டவர்கள் பொதுவான நீச்சல் தடாகங்களில் நீந்துவதை தவிர்த்தல்.என்ன நண்பர்களே இனி கவனமாக இருப்பீர்களா?

Listeria monocytogenes


உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் அறிமுகம் -1


Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கிகள் - 3படம் பெறப்பட்டது : http://wishart.biology.ualberta.ca/BacMap/includes/species/Listeria_monocytogenes.png

Listeria monocytogenes ஆனது உணவு பொருட்களோடு மனிதனை அடைந்து மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியா (Bacteria) ஆகும். இது 2 பாகை டிகிரி செல்சியசில் இருந்து 45 பாகை டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடிய பக்ரீரியா ஆக இருந்த போதும், இது வளர்வதற்கு மிகவும் உவப்பன வெப்பநிலை 30-37 பாகை டிகிரி செல்சியஸ் ஆகும். Listeria monocytogenes மனிதனில் ஏற்படுத்தும் நோயை (லிஸ்ரிரியோசிஸ்) listeriosis என அழைப்பர்.
இது பிரதானமாக


1. நிர்பீடன குறைபாடு உள்ளவர்கள் (immunocompromised): உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்
2. பிறந்த குழந்தைகள்
3. வயது வந்தோர்
4. கர்ப்பிணி பெண்கள்

ஆகிய மக்கள் குழுமத்தை அதிகம் தாக்குவதனால் இதை opportunistic pathogen என அழைப்பர். இது பொதுவாக சுக தேகிகளை பாதிப்பதில்லை.


இதனால் ஏற்படும் நோயின் விளைவுகளாக

1. மூளைகாய்ச்சல் ? / மூளை அழற்சி (meningitis): மூளை, முண்ணான் மென்சவ்வுகளில் (membrane) ஏற்படும் அழற்சி (inflammation).
2. Septicaemia : குருதியில் அதிக அளவில் பக்ரீரியா காணப்படல்/ பெருக்கம்/ குருதி நஞ்சாக்கம்
3. கருச்சிதைவு (abortion)

ஆகியவை குறிப்பிடப்படுகிறன.உலக அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள்80 ஆண்டுகளுக்கு முன்னர் Listeria monocytogenes ஆய்வுகூட விலங்குகளில் Septicaemia நோயை ஏற்படுத்துவதாக அறியப்பட்டது. 1929 ஆம் ஆண்டில் மனிதனில் முதன் முதலாக இதன் நோய்த்தாக்கம் அறியப்பட்டாலும் மிக நீண்ட காலமாக மனிதனில் இதன் தாக்கம் இருப்பதாக அறியப்பட்டிருக்கவில்லை.

1981 ஆம் ஆண்டில் முதலாவாது மிகவும் அதிக அளவிலான நோய்த்தாக்கம் கனடாவில் அறியப்பட்டது. இதன் போது 41 மக்கள் பாதிக்கப்பட்டார்கள், அவர்களில் 34 பேர் கர்ப்பிணி பெண்களாவர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் முட்டை கோசு (கோவா/cabbage) மூலம் பரவியது அறியப்பட்டது. பின்னர் 1985 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எட்டு மாத காலப்பகுதியில் மெக்சிக்கன் வகை சீஸ் (Mexican style cheese) ஐ உட்கொண்ட 142 பேர் பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் முன்றில் ஒரு பங்கினர் நோய் காரணமாக உயிர் இழந்தனார். 1987- 1989 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இங்கிலாந்தில் pâté (spreadable paste made from meat) எனும் உணவை உட்கொண்ட 350 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். பிரான்ஸ் நாட்டில் 1992 ஆம் ஆண்டில் பன்றி இறைச்சியில் (Pork tongue in aspic) செய்யப்பட்ட உணவை உட்கொண்ட 279 பேர் பாதிக்கப்பட்டனர்.

இவற்றை விட இன்னும் பல நாடுகளில் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் இதன் நோய்த்தாக்கம் சரியானமுறையில் மருத்துவ பதிவேடுகளில் குறிப்பிட படாமை, ஆங்காங்கு சிதறலாக நடை பெறும் ஓரிரு சம்பவங்கள் போதுமான கவனத்தை பெறாமை போன்ற காரணங்களால் இதன் தாக்கம் குறைவாக மதிப்பிடப்படுவதாகவும் இருக்க முடியும்.
Listeria monocytogenes தாக்கம் தற்போது அதிகரித்து செல்வதற்கான காரணங்கள்இது சூழலின் அனைத்து பகுதிகளிலும் அதாவது மண், நீர், கழிவுகள், மனித விலங்கு கழிவுகள் ஆகியவற்றில் காணப்படுகிறது. அத்துடன் மண்ணில் இது அழுகலடையும் அல்லது பிரிந்தழியும் (decaying) தாவர கழிவுகளில் வாழக்கூடியது. மேலும் பாதமான சூழ்நிலைகளிலும் (அதிகரித்த உப்பு செறிவு, அமில தன்மை, குளிரூட்டப்பட்ட இடங்கள்) வாழக்கூடியதாக இருப்பதால் உணவு தயாரிக்கும் இடங்களில் இருந்து இதை அப்புறப்படுத்துவது மிக கடினமானது.

1. உணவு பொருட்களில் இயற்கையாக அவற்றை பழுதடைய (Spoilage) செய்யும் நுண்ணங்கிகள் குறிப்பாக பக்ரீரியாக்கள் காணப்படுகிறன. இவற்றுடன் Listeria monocytogenes போட்டி போட்டு உணவில் பெருகும் வல்லமை அற்றது. ஆனால் தற்போதைய உணவு பாதுகாப்பு முறைகளால் உணவை பழுதடைய செய்யும் நுண்ணங்கிகள் (Food spoilage microorganisms) உணவு பொருட்களில் இருந்து அகற்றப்படுகிறன அல்லது எண்ணிக்கையில் குறைக்கப்படுகிறன. இதனால் Listeria monocytogenes உடன் போட்டிக்கு நுண்ணங்கிகள் இல்லாது போவதால் இலகுவில் உணவுப்பொருட்களில் பெருகி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

2. தற்போதைய அதிகரித்த சுகாதார வசதிகளால், வயது வந்தோர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரித்து செல்கிறது. வயது வந்தோர் Listeria monocytogenes இன் தாக்கத்துக்கு இலகுவில் உள்ளாக கூடியவர்கள்.

3. தற்போது உணவு பொருட்கள் பெரும் நிறுவனங்களில் தயாரிக்கப்படுவதுடன், திடீர் உணவு வகைகளை தயாரிப்பதற்காக மிகப்பெரிய சமையலிடங்கள் பயன்படுத்தப்படுகிறன. இதன் போது துப்பரவு பேணுவதில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக இதன் தொற்று உணவில் இலகுவில் ஏற்பட முடியும்.

4. தற்போது மக்கள் அதிக அளவில் குளிரூட்டியை (Refrigerator) பாவித்து வருகிறார்கள். Listeria monocytogenes குளிரூட்டல் நிபந்தனைகளில் வாழ்ந்து பெருகக்கூடியது. தற்செயலாக குளிரூட்டியில் ஒரு முறை தொற்று ஏற்பட்டால், அது தொடர்ச்சியாக குளிரூட்டியில் நிலைத்திருந்து அடுத்து அங்கு பேணப்படும் உணவுகளில் தொற்றை ஏற்படுத்தி அதை உண்ணுவோரை பாதிக்க முடியும்.

5. உலக அளவில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வரும் இயற்கை உணவுகள், மற்றும் அதிக உணவு பாதுகாப்பு செயன்முறைகளுக்கு உட்படாத உணவு வகைகள்.

6. தற்போதைய நவீன கணினி வலைப்பின்னல் உலகின் மூலை முடுக்குகளில் நடைபெறும் இதன் தாக்கம் பற்றிய தரவுகளை ஒன்றிணைக்க உதவி செய்கிறது. இதனால் முன்னர் கணிப்புக்கு வராத சம்பவங்கள் அனைத்தும் தற்போது கணிப்பில் சேர்த்துகொள்ளப்படுகிறது.
Listeria monocytogenes இன் தொற்றும் நோய் உருவாக்கமும்அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வருடாந்தம் மில்லியன் மக்களில் 2- 14 பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

மனிதரில் உணவு உள்ளேடுக்கப்படும் போது தொற்று ஏற்பட்ட உணவின் மூலம் இது குடல் பகுதியை அடைகிறது. குடல் பகுதியில் இருக்கும் Peyer's patches ஐ அடைந்து பெருக்கமடைவதுடன், குருதி (Blood), நிண நீர் (Lymph) மூலம், ஈரல் (Liver) , சதையி (Spleen) போன்றவற்றை அடைந்து அங்கு பெருக்கமடைகிறது. ஆனால் மைய நரம்பு தொகுதியை எப்படி சென்றடைகிறது என்பது இதுவரை தெளிவாக அறியப்படவில்லை.

இது ஒரு கலத்தினுள் பெருக்கமடையும் நோயாக்கி (Intracellular pathogen). ஒரு கலத்தினுள் உள் நுளைந்து அங்கு பெருக்கமடைந்து, பின்னர் ஜெட் போன்ற ஒரு அசைவின் மூலம் பெறும் உந்து சக்தியால் அடுத்த கலத்தை துளைத்து உள் நுளைகிறது. இதனால் சாதாரணமான நுண்ணுயிர் கொல்லிகளினால் (antibiotic) இதனை கட்டுபடுத்த முடிவதில்லை.
படம் பெறப்படது:http://mcb.berkeley.edu/labs/portnoy/Listeria%20Cycle%20(original).gif

Listeria monocytogenes பிரதானமாக மைய நரம்பு தொகுதி (Central nervous system - CNS) பகுதியிலேயே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் இதன் பாதிப்புக்கு உட்பட்ட 20 - 30% மக்கள் இறப்பை சந்திக்கிறனர்.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள் அவர்களின் கர்ப்ப காலத்தில் எந்த நேரமும் நோய் தாக்கத்துக்கு உட்பட முடியும் ஆயினும் கர்ப்ப காலத்தின் மூன்றாம் ( இறுதி 3 மாதகாலம்) பகுதியிலேயே இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் தொற்று கர்ப்பிணி பெண்ணில் எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது இருக்க முடியும், அல்லது

குளிருடன் சேர்ந்த காய்ச்சல் (Flu-like syndrome with chills)
தலையிடி
தசை, மூட்டு நோக்கள்
வயிற்று உபாதைகள்

என்பவற்றையும்

கருப்பையில் ஏற்படும் தொற்று

கருச்சிதைவை,
இறந்த குழந்தை பிறப்பை
அல்லது நோய் தாக்கத்துக்கு உட்பட்ட குழந்தைப் பிறப்பையும்

விளைவாக தரமுடியும்.


பிறந்த குழந்தையில்படம் பெறப்பட்டது: www.leighday.co.uk/cat.asp?cat=997

பிறந்து சில நாட்கள் ஆன குழந்தையில்


இந்த தொற்று தாயில் இருந்து ஏற்பட்டதாக இருக்கும்
பிரதானமாக
Sepsis
மற்றும்
Granulomatosis infantiseptica எனும் அறிகுறிக்குரிய இயல்புகளாக உடல் முழுமையும் பரவலடைந்த pyogranulomatous microabscesses உடன் அதிகரித்த இறப்பும் காணப்படும்.

பிறந்து பல நாட்கள்/ வாரங்கள் ஆன குழந்தையில்

மூளைகாய்ச்சல் / மூளை அழற்சி (meningitis)யை ஏற்படுத்துவ்தாக அறியப்பட்டுள்ளது.


வயது வந்தவர்களில்

பிரதானமாக நிர்பீடன தொகுதி பாதிக்கபட்ட முதியவர்கள், எயிட்ஸ் நோயாளிகள், நிர்பீடன தொகுதியை கட்டுப்படுத்தும் மருந்துகளை உள்ளெடுக்கும் புற்று நோயளிகளை இலகுவில் தாக்குகிறது.
50-70% சந்தர்ப்பங்களில் மைய நரம்பு தொகுதியை தாக்குகிறது.


நோய் அறிகுறி இரண்டு பகுதிகளை கொண்டது

முதல் பகுதியில்

தலைவலி, வாந்தி, பார்வை குறைபாடு, தலைச்சுற்று போன்றவையும்,

இரண்டாம் பகுதியில்
மைய நரம்பு தாக்கத்தால் உடல் அவையவங்கள் செயற்பாடுஇழத்தல், இறப்பையும் ஏற்படுத்துகிறது.இதனை கட்டுபடுத்த உலக நாடுகளில் உள்ள கட்டுபாடுகள்.

பொதுவாக Listeria monocytogenes காணப்படும் உணவுகளாக சூடக்கப்படத/ பாஸ்ரராக்கம் (Pasteurization) செய்யப்படாத பால், புகையூட்டப்பட்ட மீன், பன்றி இறைச்சி சொசெச், உப்பிடப்பட்ட காளான், ஹொட் டொக்ஸ், சிக்கின் நகட்ஸ், அரைத்த இறைச்சி, சீஸ், மரக்கறி சலாட் என்பவற்றை குறிப்பிடலாம்.

உலகின் பல அபிவிருத்தி அடைந்த நாடுகள் Listeria monocytogenes முற்றாக இல்லாத உணவுகளை சந்தை படுத்த வேண்டும் என்பதையே விரும்புகிறன. பொதுவாக 25 கிராம் உணவில் எந்த ஒரு Listeria monocytogenes காணப்படாத இடத்து அந்த உணவு பாதுகாப்பானதாக அங்கிகரிக்கப்படுகிறது.

மக்கள் நன்கு சூடாக்கிய பாலை அருந்துவதும், இறைச்சியை முழுமையாக சமைத்து உண்பதும், மரக்கறிகளை முழுமையாக, நன்றாக கழுவிய பின் பாவிப்பதும் அத்தியாவசியமானது என அறிவுறுத்தப்படுகிறது. அத்துடன் சமைத்த உணவை சமைக்கத உணவுடன் தொடர்புறுமாறோ அல்லது கைகளை சுத்தம் செய்யாது மாறி மாறி உணவுகளை கையாழுவதோ தவிர்க்கப்பட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
குறிப்பு: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் பதிவின் தொடர்ச்சிக்காக இப்பதிவு மீள்பதிவு செய்யப்படுகிறது.

Thursday, 24 May 2007

மொட்டும் மலரும் - 5Sunday, 20 May 2007

மலர் - 3Saturday, 19 May 2007

ஒரு புதிர்.....

இது ஒரு சினிமா புதிர். எமது பள்ளிகூடத்தில் நடந்த ஒரு வினாடி வினா போட்டியில் இப்படியான ஒரு புதிரை கேட்டிருந்தார்கள்.
என்ன வென்றால் படம் இயக்கும் போது/ திரை பட காட்சிகள் எடுக்கும் போது காட்சிகளில் சிறிய தவறுகள், பொதுவான பார்வைக்கு தெரியாத ஆனால் நுண்ணிய தவறுகள் இடம் பெறும். அவ்வாறன காட்சி ஒன்றை காண்பித்து அந்த காட்சியை எடுக்கும் போது என்ன தவறு நடந்தது என சொல்ல வேண்டும்.

இப்போ மொழி படத்தின் குறிப்பிட்ட காட்சியின் ஒரு பகுதி கீழே உள்ளது. அங்கு இடம்பெற்ற அந்த நுண்ணிய தவறு என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

Friday, 18 May 2007

சுடச் சுட கீரை புட்டு சாப்பிடலாம்.....

மதியுடைய கீரை வாங்கலையோ பதிவை பாத்த போது இத போட வேணும் எண்டு நினைச்சது. பிறகு அத மறந்து போய் விட்டிட்டன். இப்ப சயந்தன் சோமி யோட கூட்டு பதிவு மீளவும் அத ஞாபகப்படுத்தினதாலை இப்ப உங்களை சாப்பிட கூப்பிடுறன்.தேவையான பொருட்கள்

1. நீராவியில் அவித்து அரித்த கோதுமை மா/ ஆட்டா மா 250 கிராம்
2. கீரை 250- 350 கிராம் - கீரை (spinach) கிடைக்காட்டி, மீகுளிரூட்டின கீரை (frozen spinach)
3. வெங்காயம் - பெரிய வெங்காயம் பாதி/ சிறிய சிவப்பு வெங்காயம் 4
4. பச்சை மிளகாய் - 1, காரம் சாப்பிட கூடிய ஆக்கள் 2 போடலாம்
5. உடன் திருவிய தேங்காய் பூ/ காய்ஞ்ச தேங்காய் பூ
6. அளவுக்கு உப்பு
7. நீர்

செய்முறை

1. கீரையை பொடி பொடியா வெட்டி கொள்ளவும். மீகுளிரூட்டின கீரை எண்டால் அதை எடுத்து குளிர் நீங்க சிறிது நெரம் வைக்கவும். பொதுவா மீகுளிரூட்டின கீரை வெட்டியபடி இருக்கும்.

2. வெங்காயம், மிளாகாய் என்பவற்றை சிறிது சிறிதாக அரிந்து கொள்ளவும்.
3. வாய் அகன்ற பாத்திரத்தில் வெட்டிய கீரை, வெங்காயம் என்பவற்றை போட்டு அளவுக்கு உப்பையும் தூவி கோள்ளவும்

4. கோதுமை மாவை சிறிது சிறிதாக தூவி கலக்கவும், பொதுவாக கீரை, வெங்காயம் என்பவற்றில் இருக்கும் நீர் தன்மை மா புட்டு பததுக்கு வர போதும், மா நங்கு கீரையுடன் சேரவில்லை எனில் சிறிது நீர் தூவி கலக்கலாம். ஆனால் மிகையாக நீர் தூவ கூடாது. இதை மற்ற புட்டுகள் கொத்தி பெரிய மா கட்டிகளை சிறிதாக்குவது போல செய்ய முடியாது. அதானால் கவனமாக சிறிய சிறிய கட்டிகளாக வருமாறு குழைத்து எடுக்க வேண்டும்.

5. நீத்து பெட்டி/ புட்டு குழாயில் போட்டு அவித்து எடுக்கவும்.

6. இறக்கிடயதும் சுடச்சுட உடன் துருவிய தேங்காய் பூவை கலந்து சாப்பிடவும்.காய்ந்த தேங்காய் பூ தான் கிடைக்கும் என்றால் புட்டு அவிக்க முதல் குழைத்த மாவுடன் கலந்து அவிக்கலாம். அல்லது காய்ந்த தேங்காய் பூவுக்கு சிறிது நீர் கலந்து 10/15 செக்கன் மைக்கிரோ வெவில் சூடக்கி எடுத்து அவித்த புட்டில் கலந்து சாப்பிடலாம்.

நான் அவித்த புட்டுக்கு கீரை போதுமான் அளவில் கலக்கவில்லை. குளுருட்டிலை போதுமான அளவு இருக்கும் எண்டு நினைச்சு போனா கொஞம் தான் இருந்திச்சு :(

Thursday, 17 May 2007

இயல்பை சிதைத்தல் - 2

Wednesday, 16 May 2007

"பச்சை நிறமே பச்சை நிறமே"

அலைபாயுதே படம் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும், அப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே இதமானவை. அதிலும் பச்சை நிறமே பச்சை நிறமே பாடல், அதன் காட்சியமைப்பு, பாடல் வரிகள் அனைத்தும் மனதுக்கு பிடித்தவையாக இருக்கிறன. வெண்பனி போர்த்திருந்த சுற்று சூழல் , மீண்டும் பச்சை, மஞ்சள், சிவப்பு என பல வண்ணக் கோலங் காட்டும் இந்த வசந்த காலத்தில் இப்பாடல்.......

மலர் - 2
Sunday, 13 May 2007

"மஞ்சள் மகத்துவம்"

மஞ்சள் (Turmeric - Cucuma longa) பாரம்பரியமாக உணவு வாசனை/சுவையூட்டி, நிறமூட்டி, மூலிகை என பல தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆயுள் வேத/ சித்த மருத்துவ மூலிகையாக பல காலமாக பயன்படுத்தப்பட்டுவந்தாலும் அதன் பயன்கள் அறிவியல் ரீதியாக ஆய்வுகள் மூலம் அண்மைக்காலமாக நிரூபிக்கப்பட்டுவந்துள்ளன. இதன் ஒருகட்டத்தில் அமெரிக்க நிறுவனங்கள் மஞ்சளுக்கு காப்புரிமை பெற்ற சம்பவமும் அறிந்ததே.

உணவு சுவையூட்டி, அழகு சாதன பயன்பாடு என்பவற்றுக்கு அப்பால் அதன் உடல் நலன் சார் பங்களிப்பை பற்றி பார்த்தோமானால்.

1. புற்று நொய் எதிர்ப்பு (Anti-cancer)
2. நுண்ணுயிர் கொல்லி (Anti-microbial)
3. அழற்சியை எதிர்த்தல் (Anti-inflamatory)
4. ஒட்சியேற்ற எதிரி (Anti-oxidant)மஞ்சளில் இருக்கும் முக்கிய இரசயான சேர்வைகள்

1. Turmerin
2. Essential oils
3. Curcumanoids
a. Phenolic compounds
c. Curcumin- (diferuloylmethane)இந்த இரசாயன சேர்வைகளில், Curcumin- (diferuloylmethane) புற்று நோய் எதிர்ப்பில் முக்கிய பங்களிப்பை செய்கிறது.


Curcumin- (diferuloylmethane) இன் புற்று நோய் எதிர்ப்பு செயன்முறை

1. புற்று நோய் கலங்கள் பெருக்கமடைவதை தடுத்தல்
2. புற்று நோய் விருத்தியின் படி I, II, ஆகியவற்றின் நொதிய (Enzyme) செயற்பாட்டை கட்டுபடுத்தல்
3. புற்று நோய்கலங்கள் ஏனைய இடங்களில் சென்று இணைவதை தடுத்தல்
4. ஒட்சியேற்ற எதிரியாக செயற்படல்

சமிபாட்டு தொகுதியில் புற்று நோய் ஏற்படுவதில் COX-2 எனும் நொதியம் செயற்படுவதாக அறியப்பட்டுள்ளது. Curcumin- (diferuloylmethane) இதன் செயற்பாட்டை தடுப்பதாக அறியப்பட்டுள்ளது.

எலிகளில் செய்யப்பட்ட ஆய்வில்
மரபணுக்களுக்கு நச்சுதன்மையான காரணிகளை நிரோதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

மனிதரில் புற்று நோய்க்கு எதிராக 1.6 கிராம் Curcumin- (diferuloylmethane) ஒரு நாளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என சொல்லப்பட்டாலும் மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். ஏன் எனில் அண்மையில் செய்யப்பட்ட சில ஆய்வுகளில் Curcumin-(diferuloylmethane) புற்று நோய்க்கு வழங்கப்படும் ஏனைய மருந்துகளின் செயற்பாட்டை பாதிப்பது அறியப்பட்டுள்ளது.

புற்று நோய் எதிர்ப்புக்கு மேலதிகமாக இதய நோய்களில் இருந்து காப்பதிலும், கொலஸ்திரோலின் பாதகமான விளைவுகளை குறைப்பதிலும் பங்காற்றுவதாகவும் அறியப்பட்டுள்ளது.முக்கியமாக ஓட்சியேற்ற எதிரியாக செயற்படும் இதன் இயல்பு LDL கொலஸ்திரோல் ஒட்சியேற்றத்தை தடுப்பதன் மூலமே கொலஸ்திரோலின் பதிப்பை தடுப்பதாக சொல்லப்படுகிறது.

இயல்பை சிதைத்தல் - 1

ஒளிப்படத்தை திருத்தம் செய்வதாய் எண்ணி அப்படியும் இப்படியும் நிறத்தை மாற்றி ஒரு முறை விளையாடி பார்த்தேன். அதன் விளைவு இரண்டாவது, மூன்றாவது படங்கள். இலவசமாய் மென்பொருள் கிடைத்தால் என்ன தான் செய்ய தோன்றாது :).

Saturday, 12 May 2007

மொட்டும் மலரும் - 4Tuesday, 8 May 2007

மொட்டும் மலரும் - 3

சினேகிதி நீங்க சொன்ன பூ இதா? மேல உள்ள மொட்டோட பூ இதான்

Monday, 7 May 2007

மொட்டும் மலரும் - 2
Sunday, 6 May 2007

விடை பெறும் நேரம்...

வணக்கம்

ஒரு வாரமாக எனது நட்சத்திர வார பதிவுகளை வாசித்து கருத்துக்களை பகிர்ந்த, பகிராத அனைவருக்கும் நன்றி. ஒரு வாரகாலம் நட்சத்திர பதிவராக தெரிவு செய்து ஊக்கப்படுத்திய தமிழ்மண நிர்வாகத்துக்கு நன்றி.

ஒரு வாரமாக எழுதிய பதிவுகள் எவ்வளவுக்கு அனைவரையும் கவர்ந்தது என தெரியவில்லை. எழுதியவற்றில் ஏதாவது ஒரு பதிவாவது உங்களுக்கு பிரயொசனமான தகவலை கொடுத்ததாகவோ அல்லது சுவாரசியமாகவோ இருந்திருக்குமாக இருந்திருக்குமானால் எனக்கு மகிழ்ச்சியே.


விடை பெற முன்னர் சில பாடல்கள். இந்த பாடல்கள் எந்த நோக்கமும் அற்று எழுமாற்றாக தெரிவு செய்யப்பட்டவை.

Powered by eSnips.comஇது நட்சத்திர வாரத்தில் இருந்து விடைபெறும் நேரம்.
மீண்டும் என்னை தெரிவு செய்தமைக்கு தமிழ்மணத்துக்கும், ஊக்கம் தந்த வலைப்பதிவர்களுக்கும் நன்றி கூறி வரும் வார நட்சத்திரத்தை வரவேற்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

Saturday, 5 May 2007

உள்ளி நாத்தம் தாங்கலை.....

உள்ளி, வெங்காயம், லீக்ஸ் (leeks)போன்ற மரக்கறிகளிள் சாதாரண மரக்கறி வகைகளிலும் பார்க்க உடல் நலனுக்கு நன்மை பயக்க கூடியவை என சொல்லப்படுகிறன. உள்ளி, வெங்காயத்தின் வாசனை நீடித்து இருப்பதால் அதை விரும்பாதவர்கள் பலர்.


உள்ளி, வெங்காயம் போன்ற வற்றில் இருக்கும் கந்தத்தை கொண்ட சேதன (Organosulfur) சேர்வைகள் உடல் நலனுக்கு உகந்தவை என சொல்லப்படுகிறன.

முக்கியமான பயன்களாக

1. புற்று நோயை எதிர்த்தல்

இத்தாலி, மற்றும் சுவிஸ்லாந்து நாடுகளில் வெங்காயம், உள்ளி உண்பவர்கள், உண்ணாதவர்கள், உண்பவர்களின் உள்ளி, வெங்காயம் உண்ணும் அளவு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளில் வாய் (mouth), களம் (esophagus) குதம் (colon) மார்பகம் (breast), சூலகம் (ovary) சிறுநீரகம் (Kidneys)போன்ற வற்றில் புற்று நோய் ஏற்படும் சாத்தியம் வெங்காயம், உள்ளி போன்றவற்றை உண்பவர்களில் குறைவு என அறியப்பட்டுள்ளது.

2. இதய நோய்களை குறைத்தல்

மனிதரில் இதய சம்பந்தமான நோய்களை குறைப்பதில் உள்ளியின் பங்களிப்பு குறித்த ஆய்வுகள் முதலில் 1926 இலேயே ஆரம்பிக்கப்பட்டாலும், 1960 ஆம் ஆண்டுகளிலிருந்து அதிகளவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்ளி உண்பதன் மூலம், குருதியில் கொலஸ்திரோல் அளவு, மற்றும் கொழுப்பின் அளவு குறைவடையும் என அறியப்பட்டுள்ளது.

விலங்குகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில்
உள்ளி, வெங்காயம் என்பன உயர் குருதி அழுத்தத்தை குறைத்தல், குருதி கொலஸ்திரோல் அளவை குறைத்தல், விரைவில் குருதி உறைதலை தடுத்தல், குருதியில் வெல்ல அளவு உயர்தலை குறைத்தல் ஆகிய நன்மையான விளைவுகள் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

3. உணவு மூலம் பரவும் நோயாக்கிகளை கொல்லும்/ வளர்ச்சியை தடுக்கும் இயல்பு பற்றி செய்யப்பட்ட ஆய்வுகளிலும், குறிப்பிடத்தக்க சாதகமான விளைவுகள் பெறப்பட்டுள்ளன.

வெங்காயம், உள்ளி மணம் பிடிக்காதவர்களும் இனி இவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

Friday, 4 May 2007

"கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது"

"கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது" இது பழமொழி. அதுவே அறிவியல் ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய புது மொழியானாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எமது சமையலில் கடுகுக்கு முக்கிய இடம் இருக்கும் அதன் வாசனைக்காக. ஆனால் அறிவியலில் அதன் பயன் உணவு பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.


முன்னைய ஒரு பதிவில் சுட்டியது போல வட அமெரிக்கா குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகிய வற்றில் இறைச்சியை மாசுபடுத்த (contamination)கூடிய மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கியாக Escherichia coli O157: H7 விளங்குகிறது. எவ்வாறு இறைச்சி, மற்றும் பதனிடப்பட்ட இறைச்சி உணவுகள் (Processed meat products : sausage) போன்ற வற்றில் இந்த நுண்ணங்கியை வளராது கட்டுப்படுத்துவது என்பது சம்பந்தமாக பல ஆராய்சிகள் நடைபெற்று வருகிறன. சில ஆய்வுகளில் கடுகு மா/ பொடியை மாட்டிறைச்சியின் மீது தூவி இந்த நுண்ணங்கியை கட்டுப்படுத்த செய்யப்பட்ட ஆய்வுகள் சாதகமான பலனை கொடுத்துள்ளன.

கடுகில் காணப்படும் நுண்ணங்கி எதிர்ப்பு இயல்புக்கும் அதன் வாசனைக்கும் allyl isothiocyanate (AIT) எனும் இலகுவில் ஆவியாக கூடிய ஒரு இரசாயன பதார்த்தமே முக்கிய காரணம் என அறியப்பட்டுள்ளது. பின்னர் கடுகில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட allyl isothiocyanate (AIT) இரசாயனத்தை இறைச்சி, sausage ஆகியவற்றில் பிரயோகித்து செய்யப்பட்ட ஆய்வுகளிலும்; allyl isothiocyanate ஆனது Escherichia coli O157: H7 நுண்ணங்கியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதுடன், அதை கொல்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், கடுகை அல்லது பிரித்தெடுக்கப்பட்ட allyl isothiocyanate உணவு/ இறைச்சியில் பாவிப்பதில் உள்ள ஒரு பிரச்சனை அதன் கார இயல்பும், கடுமையான மணமுமாகும். பொதுவாக இவற்றுக்கு பழக்கப்படாத ஐரோப்பியர்கள், மற்றும் அமெரிக்கர்களால் இது அதிகம் விரும்பப் படுவதில்லை.


கடுகில் இருக்கும் இந்த allyl isothiocyanate நுண்ணுயிர் கொல்லியாக (antimicrobial) மட்டும் அல்லாது மனிதரில் புற்று நோய் எதிர்ப்பிலும் (anticarcinogens) பயன் பட கூடியது என அறியப்படுள்ளது.

கடுகு மட்டுமல்லாமல் மற்றைய வாசனை பொருட்களான கராம்பு (Clove) இருக்கும் eugenol , கறுவா/ பட்டை (Cinnamon) இல் இருக்கும் CINNAMALDEHYD ஆகிய இரசாயன பதார்த்தஙளும் பல்வேறு உணவு மூலம் பரவி நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கிகளை கொல்லும் திறன் வாய்ந்தவை என அறியப்பட்டுள்ளது.

என்ன " கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது" எனும் பழ மொழி அறிவியலிலும் உண்மை தானே.

Thursday, 3 May 2007

ஆசிரியர்கள், பட்டம் சூட்டல், இன்ன பிற...

ஆசிரியர்கள், பட்டம் சூட்டல், அவர்கள் என்மீது செலுத்திய செல்வாக்கு"எழுத்தறிவித்தவன் இறைவன் " இப்படி சொல்லுவார்கள். ஆனால் பள்ளி பருவத்தில் அப்படி தோன்றுவதில்லை.எல்லா ஆசிரியர்களாலும் மாணவர்களின் விருப்பத்திற்குரிய ஆசிரியராக முடிவதில்லை. ஒரு சில ஆசிரியர்கள் கடமைக்கு வந்துவிட்டோம் என கற்பித்தாலும் அவர்களை வைத்து ஆசிரிய பணியை குறைத்து மதிப்பிட முடியாது.
எமது பள்ளிகூடத்தை பொறுத்தவரை ஆண்டு 6 (தரம் 5) இல் ஒரு வகுப்பசிரியரும், கணிதம், விஞ்ஞானம் (அறிவியல்), தமிழ், சமயம் ... என 8 (இப்போது 10) பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் ஆண்டு 11 (தரம் 10/ க. பொ.த சா/த) வரையும் அவர்கள் தான் எமக்கு ஆசிரியர்கள். சொல்ல போனால் பெற்றாருக்கு அடுத்து எம்முடன் நீண்டகாலம் தொடர்ந்து எம் வளர்ச்சியை கண்டு வருபவர்கள் அவர்களாக தான் இருப்பர். (இது எமது பாடசாலையில் இருந்த முறை. வேறு பாடசாலைகளிலும் அவ்வாறா இருந்தது என்பதை மற்றவர்கள் கூறினால் தான் தெரியும்.)

கற்பிக்க வருபவர்களுக்கு பட்டம் சூட்டுவதும், பட்டப்பெயர் கொண்டே அந்த ஆசிரியர்கள் இல்லாத நேரம் அவர்களை மாணவர்கள் அழைப்பது வழக்கம்.

சுகாதாரம் கற்பிக்க வந்த ஆசிரியர் அல்லூட்ட குறைபாடுகள் பாடத்தை தாண்டி அடுத்த பாடத்துக்கு போகாத அவரது அல்லூட்டத்தால் அவரை அல்லூட்டம் என அழைத்ததும்

கணிதம் கற்பித்த ஆசிரியை குதிரை வேகத்தில் கணிதம் கற்பித்தல் குதிரை என பட்டம் வைத்து அழைத்ததும், பாலர் பிரிவில் கற்று கொண்டிருந்த அவரது மகன் வரும் போதெல்லாம் அவனையும் குதிரை என்றே அழைத்து அவனை வெறுப்பேற்றியதும்

ஒரு கதை.


ஆங்கிலம் கற்பித்த ஆசிரியருக்கு வைத்த பெயர் சவாரி: ஆங்கிலம் என்பதே வேம்பாக கசக்கும் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு, ஆங்கிலம் அவர்களுக்கு இரண்டாம் மொழி என்பதை உணராது அவரது கற்பித்தல் இருந்தது. சொல்ல போனால் எமக்கு ஆங்கிலம் மீதிருந்த ஆர்வமின்மையை மேலும் அதிகரிக்க வைத்த பெருமை அப்பெருமகனாரையே சாரும்.


கோயிலில் நெல்லிகாய் பிடுங்க போய், அந்த கோயிலின் நிர்வாகியாக இருந்த ஆசிரியர் திரத்த தறிகெட்டு ஓடிய என் நண்பர்கள் அவருக்கு வைத்த பெயர் நெல்லிகாய்.

10 ஆம் ஆண்டில் புதிதாக சமூக கல்வி கற்பிக்க வந்த வழுக்கை தலை வாத்தியாரின் கற்பித்தல் பிடிக்காமல், வந்த முதல் நாளில் உலகத்தில் இருக்கும் மலைகள் பற்றிய பாடத்தில் அவர் சொன்ன காப்பந்தெரியன் மலை தொடருக்கும் அவரது மொட்டைதலையில் ஓடிய குருதி குழாய் முனைப்புக்கும்/ மண்டை ஓட்டு தவாளிப்பு அடையளத்துக்கும் தொடர்பு படுத்தி (இதை தான் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறதெண்டு சொல்லுவார்கள் :) அவருக்கு காபன்தேரியன் என பெயரும் சூட்டினோம். அந்த ஆசிரியர் எமக்கு வேண்டாம் என பாடசாலை நிர்வாகத்திடமும், வகுப்பாசிரியரிடமும் சொல்லி அவரை பாடத்தில் இருந்து தூக்கி, முன்னர் இருந்த ஆசிரியரை சமூக கல்வி பாடத்துக்கு மாற்றுவித்தோம். மற்றிய பின்னும் அந்த மாற்றத்தை ஏற்காது தொடர்ந்தும் வகுப்புக்கு வந்து எமக்கு தொந்தரவு தந்தார். அவரை மற்றிய பின் புதிய நேர அட்டவணையில் சமூக கல்வி இருந்த நேரம் வேறு பாடம் வந்து விட்டாலும் பழைய நேர அட்டவணையே தன்னிடம் உள்ளதெனவும், புதிய நேர அட்டவணை தனக்கு கிடைக்கவில்லை எனவும் சொல்லி புதிய நேர அட்டவணைப்படி கற்பிக்க வந்த ஆசிரியர் கற்பிப்பதை அனுமதிக்க மறுத்துவிட்டார். இதை அறிந்த துணையதிபர் அவரிடம் வந்து புதிய நேர அட்டவணையை கருத்தில் எடுக்க கூறிய போது தனக்கு புதிய நேர சூசி கிடைக்க வில்லை என விதண்டாவாதம் செய்தார். துணையதிபர் போன பின் (இச்சம்பவம் நடந்தது மாசி மாதம்) இப்ப மாசி மாதம் தானே அதால அவருக்கு பனி பிடிச்சிட்டு எண்டு ஒரு சொல்லு சொல்லிவைத்தார். நூணலும் தன் வாயால் கெடும் என்பார்கள். அவர் சொன்ன வாக்கியதை, தொடர்ந்து வகுப்புக்கு அவரை வராது செய்யும் ஆயுதம் ஆக்கி கொண்டது எமது வகுப்பு. அவர் சொன்னது, சொல்லாதது எல்லம் வைத்து, நேர அட்டவணை படி பாடம் கற்பிக்க விடாமல் எமது கல்வியை குழப்புகிறார் என ஒரு கடிதம் எமது வகுப்பு மாணவர்களது கையொப்பத்துடன் பாடசாலை அதிபருக்கு போனது. அடுத்த வாரம் ஆசிரியர் பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இடம் மாறறம் செய்யப்பட்டதில் எமது வகுப்பினருக்கு ஒரே புழுகம்.

எமது வகுப்பு மாணவர்களால் சூட்டப்பட்ட பட்ட பெயர்கள் தன் மேலே சொன்னவை. ஆனால் சில ஆசிரியர்களது பட்ட பெயர்கள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவதும் நடக்கும்.

நாம் கற்பதற்கு 20 வருடத்துக்கும் முன் இருந்தே பௌதீகவியல் கற்பிக்கும் ஆசிரியை ஐ காகம் என அழைக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. அதே போல துணையதிபரை "பாம்" என அழைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது.


எவ்வளவு தான் ஆசிரியர்களை நக்கல்/ பட்ட பெயர் சூட்டி அழைத்தாலும் அவர்கள் ஒவ்வொரு மாணவரின் வளர்ச்சியிலும், அவர்கள் அடையும் அடைவுகளுக்கு முக்கிய காரண கர்த்தாக்கள்.

ஆனால் நாம் பாடசாலையில் கற்ற போது எந்த ஒரு ஆசிரியரும் நானறிந்த வரையில் மாணவர்களை ஆசிரிய தொழிலுக்கு வாருங்கள் என கூறியது கிடையாது. பொடியளே ஒழுங்கா படிச்சு, கம்பசுக்கு போய் ஏதும் ஒழுங்கான வேலைக்கு போக பாருங்கோ இந்த வாத்தி வேலைக்கு மட்டும் வந்திடாதங்கோ என சொல்லிய ஆசிரியர்களே அதிகம்.


ஆரம்பத்தில் உயர் தர பாடத்தெரிவின் போது நான் வர்த்தக துறையை தெரிவு செய்வதா, அல்லது உயிரியல் துறையை தெரிவதா என குழம்பி வர்த்தக துறை எனும் முடிவுக்கு வந்திருந்தேன். வர்ததக துறை வகுப்புகளுக்கும் போக தொடங்கிவிட்டேன். ஆனால் எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் பலருக்கும் அது ஏற்புடையதாக இருக்கவில்லை. அதே பாடசாலையில் கற்பித்த எனது அப்பாவிடம் எல்லாருமாக செர்ந்து என்னை உயிரியல் துறைக்கு மாற்றி விடுமாறு கொடுத்த ஆலோசனை/ நச்சரிப்பு தாங்காமல் அது வரை எனது சுதந்திரம் என விட்டிருந்த அப்பாவும் எல்லா ஆசிரியர்களும் சொல்லுகிறார்கள், நீங்கள் (அப்பா நீங்கள் என தான் சுட்டுவது வழக்கம்) உயிரியல் கற்க கூடிய மாணவன், வீணாக வர்த்தகம் கற்க வேண்டாம் என சொல்லுகிறார்கள் எனவே உயிரியலை மாறி படியுங்கள் உங்களால் அப்பாடத்தை சிறப்பாக கற்க முடியாவிட்டால் இரண்டாம் தடவை வர்த்தகத்தை படியுங்கள் என சொன்னார். ஆனால் கட்டாயமல்ல யோசித்து முடிவெடுங்கள் எனவும் சொன்னார். சரி என்னதான் நடக்கிறது பார்ப்போம் என உயிரியலை கற்க முடிவெடுத்து அதையே படித்தேன்.


எல்லா ஆசிரியர்களும் வர்த்தக துறையை தெரிவு செய்ய வேண்டாம் (எமக்கு 9, 10, 11 ஆம் ஆண்டுகளில் வர்த்தகம் கற்பித்த ஆசிரியர் உட்பட) என கூறியதன் காரணம் வர்த்தம் கற்றால் ஈழத்தை பொறுத்தவரை பொதுவாக செய்ய கூடிய வேலை ஆசிரியர் வேலை மட்டும். ஆசிரியர் பணிக்கு தமது மாணவர்கள் வருவதை விரும்பாத ஆசிரியர்கள் அதை விட வேறு எதை சொல்லுவார்கள்.

இரண்டு வருட காலம் தற்காலிகமாக ஆசிரியராக கற்பித்த அனுபவத்தில் இருந்து எனக்கு ஆசிரியர் பணி மீது ஏற்பட்ட ஈர்ப்பு, அதில் கிடைத்த ஆத்ம திருப்தி எனது தற்பொதைய கற்றலை முடித்த பின் தேடி பெற போகிற வேலையில் கிடைக்குமா தெரியவில்லை.

மொட்டு - 1

உயிர் பயத்தோடு கழிந்த ஒரு பாடசாலை நாள்

நினைவு மீட்டல் அல்லது நனவிடைதோய்தல் என்பது தவிர்க்க முடியாதது. அதிலும் சில நினைவுகள் மறக்க முயன்றாலும் அடிக்கடி ஞாபகம் வந்து கொண்டே இருக்கும். சில மகிழ்வானவை ஆனால் வருத்ததை, ஒரு வித அச்சத்தை, எமது உயிருயிருக்கு எந்த நிமிடத்திலும் அச்சுறுத்தல் வரலாம் என எண்ண வைத்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் வந்து ஞாபமூட்டி கொண்டே இருக்கும்.

இந்த சம்பவமும் அப்படியானது தான். 1987-1990 க்கு இடைப்பட்ட இந்திய இராணுவ காலம். இந்திய விமானங்கள் ஒபரேசன் பூமாலை எனும் நடவடிக்கையில் விமான மூலம் உணவு பொதி போட்டதும், இந்திய இராணுவம் அமைதி காக்க ????? வந்து இறங்கிய உடனடியான பொழுதுகளில் ஒவ்வொரு கிராம பிரசைகள் குழுவும் அப்பகுதிக்கு பொறுப்பாக வந்த இராணுவ அதிகாரிக்கு நிறைகுடம் வைத்து மாலையிட்டு வரவேற்ற நிகழ்வும் நடைபெற்றதாக ஞாபகம். பின்னர் எல்லாமே பொய்த்து போய் மோதல் ஆரம்பித்த பின் ஆங்காங்கே ரோந்து என வரும் இராணுவத்துக்கும் கரந்தடி பாணியில் இருந்த புலிகளுக்கும் இடையில் மோதல் நடப்பதும் வழக்கம். மோதல் முடிவில் புலிகள் தப்பி போய் இருப்பார்கள் ஆனால் அப்பகுதியால் போய் வரும் இளைஞர்கள் அடி வாங்குவது சாதாரணமானது.

இப்படியாக ஒரு நாள் எமது பாடசாலையை அண்மித்த பகுதியில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் மோதல் வெடித்திருந்தது. சாதகமற்ற சந்தர்ப்பங்களில் புலிகள் அப்பகுதியை விட்டு விலகி செல்வது சாதாரணமான நிகழ்வு. அன்றும் அவர்கள் விலகி சென்று விட்டார்கள். ஆனால் அவர்கள் விலகி சென்ற பின்னும் இராணுவம் வேட்டுக்கள் தீர்ப்பதையோ இலகு ரக மோட்டார்கள் மூலம் தாக்குவதையோ 2-3 மணி நேரங்களுக்கு நிறுத்த வில்லை. மோதல் ஆரம்பித்தது எமது பாடசாலை அருகாமை ஆகையால் துப்பாக்கி சன்னங்கள் எமது வகுப்பு கூரைகளிலும், மோட்டார்கள் எமது பாடசாலை மைதானத்தினுள்ளும் சரமாரியாக விழ தொடங்கி இருந்தன. எமது பாடசாலை அமைப்பு மையத்தில் விளையாட்டு மைதானமும், அதை சூழ கட்டிடக்களுமாக இருந்தது.
அப்போது கணித பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியை எதுவும் செய்ய முடியாத நிலையில் எல்லா மாணவர்களையும் மேசை/ வாங்கின் கீழ் படுக்க சொல்லி விட்டு தானும் நிலத்தில் விழுந்து படுத்து கொண்டார். ஓட்டு கூரை வகுப்புக்களில் இருப்பது பாதுகாப்பற்றது அத்துடன் எமது வகுப்புக்களுக்கு முழுமையாக மூடி சுவர்கள் இல்லை; அரை சுவர் கொண்ட வகுப்பறைகள். அப்போது பாதுகாப்பு தேட வேறு எந்த மார்கமும் இல்லை. கிட்ட தட்ட அரை மணிநேரம் படிக்கும் மேசை/ வாங்குகள் தான் எமக்கு கவசங்கள்.

அப்போது மோட்டார் வீச்சு/ துப்பாக்கி குண்டில் இருந்து ஓரளவு பாதுகாப்பானது என கருதுவது நாலு பக்கங்களும் மூடி கட்டப்பட்ட மாடி கட்டிடங்களின் தரை தளங்கள்.
இடையிடையே மோட்டார் வீச்சில் ஓய்வு கிடைக்கும் இடைவெளிக்களை அவதானத்தின் மூலம் தெரிந்து கொண்ட ஆசிரியர்கள் மாணவர்களை அப்படியான மாடி கட்டடங்களுக்கு அழைத்து சென்று பாதுகாப்பு தேடுவதில் ஈடுபட்டனர். அவ்வாறு தனது வகுப்பு மாணவர்களின் நிலையறிய சென்ற அதே பாடசாலையில் கற்பித்த எனது தந்தை காலில் சிறு காயத்துகுள்ளகி இருந்தார். காயம் பட்ட உடனடியாக அவரால் உணர முடியவில்லை, தன் வகுப்பு மாணவர்களை பாதுகாப்பான மாடி கட்டிடத்துக்கு அழைத்து செல்லும் போது செருப்பில் நீர் போல ஏதோ தேங்கிய உணர்வை கொடுத்த போது தான் அவரால் அவரது காலில் காயம் பட்டதையே உணர முடிந்திருக்கிறது. ஆனால் அந்த காயம் பெரிதாக ஏற்படாதது ஒரு வகையில் மகிழ்ச்சி தான்.

இராணுவம் பாடசாலையுள் நுளைந்து சுடுவார்களோ என்றும் அப்போது எமக்கு பயமாக இருந்தது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் பாடசாலைக்கு வெளியில் நின்று 2- 3 மணி நேரமாக தீர்த்த துப்பாக்கி வேட்டுக்களும், மோட்டார்களும் எமது பாடசாலையையே அதிர வைத்தன. 10- 11 வயதே ஆன எங்களுக்கு அருகிலான துப்பாக்கி வேட்டுக்களும், மைதானதில் விழுந்து வெடித்து புகை கிழப்பிய மோட்டார்களும் எவ்வாறான அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அன்று இராணுவம் பாவித்த மோட்டார்கள் இறப்பர் மோட்டார்கள் தான் என்றும் அவை பாரிய சத்ததை தான் தரும், அதிக சேதம் தராது என்பதையும் பின்னர் சொல்லி கேள்விப்பட்டோம்.

Wednesday, 2 May 2007

ஆக்காண்டி ஆக்காண்டி......

"ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்" இப்படி தொடங்கும் ஒரு பாடலின் சில வரிகள் மட்டும் முதல் முதலாக எமது "பள்ளிகூடத்தில்" நடித்த நாடகத்தில் பயன் படுத்தும் போது தற்செயலாக தெரிய வந்தது. அப்போதும் முழுமையான பாடலை கேட்கவோ அல்லது அதன் வரிகளை அறியும் ஆர்வமோ அதிகம் இருக்கவில்லை. அப்போதைய நாட்டு நடப்புடன் சம்பந்தப்பட்டதாக அதாவது அப்போது நடந்த பண்டாரவளை பிந்துனுவேவா சிறை கைதிகளின் படுகொலையை சுட்டுவதாக அமைந்த குறியீட்டு நாடகத்தில் திரை விலகும் போது இந்த பாடலை பயன்படுத்தியிருந்தோம்.


அதன் பிற்பாடு ஒரு சந்தர்பத்தில் இப்பாடலின் முதல் வரிகள் ஞாபகம் வந்து நான் உச்சரித்த போது என்னுடன் இருந்த நண்பன் அப்பாடலின் மேலும் சில வரிகளை பாடி காட்டினான்
அந்த வரிகளில்


" நான் அழுத கண்ணீரும் என் குஞ்சழுத கண்ணீரும் வாய்க்கால் வழியோடி வழிபோக்கர் கால் நனைக்க"
எனும் வசனமும் சேர்ந்து வந்தது.

அண்மையில் புலரும் வேளை இறுவட்டில் இப்பாடலை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்த போது அதில் நான் மேலே சொன்ன வரிகளை காணவில்லை.http://www.esnips.com/displayimage.php?pid=33979630

பாடியவர்கள்: ஞான ஆனந்தன் (சங்கீத் வர்மன், பிரகீத் வர்மன், டிலீப்குமார்)சரி கூகுல் தேடலில் தட்டுபடுகிறதா என தேடிய போது

இப்பாடலை இயற்றியவர் சண்முகம் சிவலிங்கம் எனும் ஈழத்து கவிஞர் என்றும் அவர் மட்டகளப்பை சேர்ந்தவர் எனும் தகவலோடுசசி??


சந்திரவதனா

இரா முருகன்

ஆகியோருடைய பதிவுகளில் பாடலில் வரிவடிவத்தை பெற முடிந்தது. ஆனால் அந்த மூன்று வரிவடிவத்திலும் நான் கேட்ட வசனம் இல்லை.

சண்முகம் சிவலிங்கம் அவர்கள் எந்த வருடத்தில், எச்சூழ்நிலையில் இப்பாடலை இயற்றினார் என தெரியவில்லை. ஆனால் ஈழத்தின் போர்க்கால வாழ்நிலையை இப்பாடலுன் பொருத்தி பார்க்க முடியும்
.
அப்பால் தமிழில் ஒரு கட்டுரையில் இப்பாடல் மட்டகளப்பில் வழங்கும் நாட்டார் பாடல் என்றும் அதை அடியொற்றியே சண்முகம் சிவலிங்கம் அவர்கள் இக்கவிதையை எழுதியதாகவும் ஒரு குறிப்பு கிடைத்தது.

சரி என இணையத்தில் சந்தித்த நண்பர்களிடம் விசாரித்த போது, ஒரு நண்பர் தமிழக கவிஞார் அறிவுமதி எழுதி, சின்னபொண்ணு என்பவர் பாடியதாக அன்னை தமிழ் இறுவட்டில் இடம்பெற்ற ஆக்காண்டி என தொடங்கும் வேறொரு வடிவத்தை எனக்கு தந்திருந்தார். அப்பாடலை கீழே இணைத்துள்ளேன்.
http://www.esnips.com/displayimage.php?pid=33979630

இவை இரண்டையும் விட தமிழ்.நெட் இணையத்தின் முன்றாவது ஒரு வடிவமும் கிடைத்தது. அதன் வரிவடிவை கீழே இணைத்துள்ளேன்.


ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைச்சாய்?

ஆறு போன இடமெல்லாம்
புற் படுக்கை முட்டை வைச்சேன்.

முட்டையெல்லாம் குஞ்சானா,
முழு வுலகும் குருவிச்சத்தம்.

குருவிச்சத்தம் கேக்கத்தானே
குழி பறிச்சு முட்டை வைச்சேன்.
சத்தம் மட்டும் போட்டு விட்டா,
உன் பிறப்பு முற்றா குமா?

சத்தம் போடத் தெரியா விட்டால்
பின்னே என்ன கருங் குருகு?

கூட்டை வேடன் கலைக்குறானா?
குருவி பிடிச்சுத் தின்னுறானா?

ஐயோ ஐயோ என்ன செய்வேன்!!
ஆகாதய்யா இவ் வேடர் கூட்டம்!!
வாயைக் கொஞ்சம் பொத்திக்கொண்டு
பாழ் வயிற்றைக் குருவி பார்க்கலாமே?

ஓஹோ! நீரும் (கொல்) வேடர்தாமோ?
எம் அலறல் கேட்டும் தின்போர்தாமோ?

ஐயோ குருவி! (முழுப்)பொய்யோ சொல்வாய்?
வையம் காணும் கவிமெய்யை அறிவாய்.

இல்லை இல்லை! கொல் வேடர் நீரே.
என் குஞ்சு இரண்டு கொன்றோன் நீயே.

கொஞ்ச வந்தேன்; கொல்வோன் என்றாய்
(கொல்)நஞ்சும் (நல்)நெஞ்சும் கிஞ்சித்து மறியாய்.

நீயே வேடன்! நின் நினைவோ கொல்லல்.
நாயே போடா! குறுநரி நினைவோனே!

ஓஹோ அறிவேன் உன் குலத்தழிவு
ஓரோர் நினைவும் உலகொவ்வா நிலையுலவு.

போ போ மூடா! உயிர்கொல் வேடா!
குருகும் புள்ளுமே உலகினி லுயர்வு
புவியே சுழல்வது புட்கட்குத் தாமே!
துயர்பட்டாலும் குருகே உயர்ந்தோன்.

முறையோ குருவி முறைதலை மறத்தல்
குருகும் அருகும் அர்த்தமில் கருத்தில்
பெருகிட வேண்டில் (வாழ்) வழிதனிற் கூர்க்க.
வரும் வளமும் பலமும் குருவிகள் வசமே.
கவி உட்பொருள்தனை உணர்க;
வெறும் கறைப்புலம்பலை ஒழிக்க.
வருவேன்குருவி, வணக்கமும் வாழ்த்தும்.

ஆனால் இப்போதும் விடை கிடைக்காத கேள்வி என்னிடம் இருப்பது நான் கேட்ட வரிவடிவத்துடனு இப்படியான பாடல் ஒன்று உண்டா என்பதே?

பனை

பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே இயற்கையாக வளர்ந்து மனிதனுக்கு வேண்டிய பல பயன்களை கொடுக்கும் ஒரு இயற்கை வளம். இலங்கை, மற்றும் இந்தியாவில் காணப்படும் பனை மர இனத்தை Borassus flabellifer L. என்றும், ஆபிரிக்காவில் காணப்படும் பனை இனத்தை Borassus aenthipoum Mart. என்றும் அழைப்பார்.


படம்: மானிப்பாய் இந்து இணைய தளம்

உலக அளவில் அண்ணளவாக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இந்தியா: 60 மில்லியன்
மேற்கு ஆபிரிக்கா - 50 மில்லியன்
இலங்கை - 11.1 மில்லியன்
இந்தோனெசியா - 10 மில்லியன்
மடகஸ்கார் - 10 மில்லியன்
மியன்மார் - 2.3 மில்லியன்
கம்பூச்சியா - 2 மில்லியன்
தாய்லாந்து - 2 மில்லியன்

இலங்கையை எடுத்து கொண்டால் 10.5 மில்லியன் பனை மரங்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய 4 மாவட்டங்களிலும் பரம்பி இருக்க மிகுதி 0.6 மில்லியன் மரங்கள் மட்டுமே ஏனைய இடங்களில் காணப்படுகிறது.பனையின் பயன்கள்

1. பனை ஓலை


குருத்து ஓலையில் இருந்தே அதிகமான பயன் தரும் பொருட்கள் செய்யப்படுகிறன்.
கைவினைப்பொருட்களான: பூக்கள், பூச்சாடிகள், போன்றவை
நாளாந்த பாவனைப்பொருட்களான: பெட்டி, சுளகு, பாய், கடகம், திருகணை, நித்துபெட்டி, இடியப்ப தட்டு என பல பொருட்கள் செய்ய உதவுகிறது.

முற்றிய ஓலை மாட்டுக்கு உணவாக பயன்படுத்த படுவதுடன், வீடு வெய, வெலிகள் அடைக்க, தோட்ட நிலத்துக்கு, தென்னைக்கு பசளையாக பயன்படுத்தப்படுகிறது.

2. நார்

பனம் ஓலை/ இலை யில் இருக்கும் தண்டு/ மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நார் நீண்ட நாள் பாவனைக்குரிய தூரிகைகள் (Brush), துடைப்பங்கள் செய்யவும், கயிறு திரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

3. மரம்/ தண்டுகட்டுமான பணிகளுக்கு குறிப்பாக வீட்டு கூரைகளுக்கு சிலாகை, தீரந்தி, வளை, என்பவை தயாரிக்க பயன்படுத்த படுகிறது.

4. பூந்துணர் சாறு/ பதநீர் (Infloresence sap)

மதுவத்தால் (Yeast) நொதித்தல் அடையாத பூந்துணர் சாறு
பதநீராக அருந்தவும், பன்ஞ்சீனி, பனங்கட்டி, பனம் பாணி, பனங்கற்கண்டு செய்யவும் பயன்படுத்தபடுகிறது. பதநீரை கருப்பணி என பேச்சு வழக்கில் அழைப்பது வழக்கம். பதநீர் காலங்களில் பச்சரிசி, பயறு என்பனவும், பதநீரும் கொண்டு கருப்பணி கஞ்சி தயாரிப்பதும் வழக்கம். பொதுவாக பத நீர் இறக்க சுண்ணாப்பிடுவார்கள். சுண்ணாம்பு மதுவங்களின் நொதித்தல் செயற்பாட்டை கட்டுப்படுத்தும். சுண்ணாம்பு பதநீரின் சுவையை மற்றிவிட கூடியது. யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்ட ஆய்வில் நாவல் பட்டையையும் நொதித்தல் செயற்பாட்டை கட்டுபடுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.

பதநீரில் வெல்லம் 12-13% ம், அமினோ அமிலங்கள், விற்றமின் பி, கனியுப்புக்கள் ஆகியவை நிறைய இருப்பதாக சொல்லப்படுகிறது. ஊரில் சின்னமுத்து, அம்மை நோய் வந்தவர்கள் உடன் கள்ளு குடித்தால் நோய் தாக்கம் குறையும் என்று சொல்லுவார்கள்.

மதுவத்தால் நொதித்தல் (Fermentation) அடைந்த பின் கள்ளு என அழைக்கப்படுவதுடன், இது சாரயாம் வடிக்கவும் பயன் படுகிறது.


5. நுங்கு

முற்றாத பனங்காயை நுங்கு என அழைப்போம். நுங்கு மிகவும் சுவையான ஒரு பானம். ஆனால் அதனை நாம் தொழில் முயற்சியில் பயன்படுத்துவது இல்லை. 2 மில்லியன் பனைமரங்களே இருக்கும்தாய்லாந்தில் இருந்து நுங்கு தகரத்தில் அடைக்கப்பட்டு உலகம் எங்கும் ஏற்றுமதியாக அதிக பனைமர வளத்தை கோண்ட இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருந்து எந்த முயற்சியும் எடுக்கப்படாமை கொசுறு செய்தி.

6. பனம் பழம்

பனம் பழத்தில் இருந்து பெறப்படும் பழ கூழ் (Fruit pulp) பழபாகு (ஜாம்), பனாட்டு, குளிர் பானம் என்பன செய்ய பயன்படுத்த படுகிறது. அதை விட சுவையான சிற்றுண்டியான பனங்காய் பணியாரம் ஈழத்தில் பிரபலம். அதை வைத்து காதல்கடிதம் படத்தில் ஒரு பாடலும் வருக்றது. போர் காலத்தில் பனம் பழம் கொண்டு உடுப்பு தோய்த்தவர்கள் பலர். பனம் பழத்தின் வாசதில் மாடு உடைகளை சாப்பிட்டதாக கூட சொல்லுவார்கள். அதை விட பனம் பழம் தீயில் வாட்டி சாப்பிடுபவர்களும் உண்டு.

7. பனம் கிழங்கு


பனங்கிழங்கை அவிக்காது எடுக்கப்படும் ஒடியலில் இருந்து ஒடியல் மா எடுப்பார்கள். ஒடியல் மாவில் இருந்து ஒடியல் பிட்டு, ஒடியல் கூழ்1 (ஒடியல் கூழ் 2)ஆகிய உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவை ஈழத்தில் மிகவும் பிரபலாமான உணவுகள்.

பனங்கிழங்கை அவித்து காய வைத்து வரும் புளுக்கொடியல், புளுக்கொடியல் மா சிற்றுண்டியாக பயன் படுத்தப்படுகிறது.

பனம் பொருடகள் சம்பந்தமான ஆராய்ச்சிகள் மிக குறைவாகவே நடைபெறுகிறன. அப்படி செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கப்பேற்றாலும் இன்னும் ஆராய்ச்சிகள் தேவையாக உள்ளது.

பெரும்பாலான ஆய்வுகள் அதிகம் பயன்படுத்தப்படாத பழ கூழ் பற்றியே நடைபெற்றுள்ளன.


பழகூழ் (Fruit pulp)1. கரோட்டினோயிட் (Carotenoids)

எனும் மஞ்சள் நிறபொருளை கொண்டிருக்கிறது. பனம் பழத்தில் 2-253 மில்லிகிராம் கரோட்டினொயிட் 100கிராம் பழத்தில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இது விற்றமின் எ யிற்கான ஒரு மூலமாகும்

2. பெக்ரின்
இது உணவு உற்பத்தியில் உணவு பொருகளை உறுதியாக்க/
கூழ் நிலையில் பேண உதவும்.

3. Flabelliferin

இதுவெ பனம் பழத்தில் காணப்படும் கசப்பு, காறல் சுவைக்கு காரணமான பதார்த்தமாகும். இதனை பழ கூழில் இருந்து பிரித்தெடுப்பதன் மூலம், பழ கூழை வேறு உணவு பொருட்கள், ஜாம் போன்றவற்றில் நிரப்பியாக பயன் படுத்த முடியும்.

அத்துடன் இந்த Flabelliferin எனும் பதார்த்தம் நுண்ணங்கிகளை கொல்லும் இயல்பும் கொண்டது.

இலங்கையில் எலிகளில் செய்த ஆராய்சியில் Flabelliferin குருதியில் வெல்ல அளவை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையில் நீரிழிவு நோயளிகளுக்கு 6 கிராம் பனாட்டை கொடுத்து சோதனை செய்த போது அவர்களின் குருதியில் இருக்கும் வெல்ல அளவில் குறைவு ஏற்பட்டதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணாம் பனாட்டில் இருக்கும் Flabelliferin ஆக இருக்க முடியும்.

இலங்கையில் பனை அபிவிருத்தி சபை பழகூழில் இருந்து பற்பசை செய்து மாதிரிகளை சந்தைக்கு விட்டிருந்தது.கேட்காமலே பயன் தரும் பனையை நாம் இன்னும் சிறப்பாக பயன் படுத்தி பொருளாதார பயன் பெற முடியும். ஆனால் அதற்கு நிறைய ஆய்வுகள் தேவை.