Saturday, 8 September 2007

வல் மோரின் முருகன் கோவில்

வல் மோரின்,கியுபெக், கனடா.
17/08/2007


10 comments:

said...

மர்மப் பட லொகேசன் மாதிரி இருக்கு

said...

குறிஞ்சிக்கடவுளுக்கு ஏற்ற இடம். :-)

சிவபெருமானுக்கு அருவுருவமான இலிங்க உருவையே வைத்திருப்பார்கள். இங்கே இலிங்க உருவமும் இருக்கிறது. தெய்வ வடிவும் இருக்கிறது.

said...

இது ஆரம்ப நிலைபோல் உள்ளது.
ஆனால் இதுவே ஆலயத்துக்குச் சிறந்த இடம்

said...

குறிஞ்சிக்கடவுளுக்கு ஏற்ற இடம். :-)//

உண்மையாகவே ! தான்

said...

அருமையான இடம். பழந்தமிழ் இலக்கியத்தில் சொன்னது போன்ற இடம். கோயில். அறியத் தந்தமைக்கு நன்றி.

Anonymous said...

this temple was started by an indian pilot who became a sage. there is an Ashram at the bottom of the hill. That Ashram is run by mostly white people. This temple and area is kind of used by camping area by those White people. the festival is conducted according to southern(south indian srilankan) culture... Ther(car) festival is very famous..

said...

//மர்மப் பட லொகேசன் மாதிரி இருக்கு //


கானா பிரபா

ஏன் அப்பிடி இருக்கு? எனக்கேன்னவோ ஊரிலை இருந்த மாதிரி சூழ வர மரங்களும் இயற்கையும்... அத்துடன் ஊர் கோவில்களில் போங்குவது போலவே மூன்று கல்லு வைத்து விறகில் அடுபெரித்து பொங்கி படையலிடும் இடங்கள், எங்களூரில் உள்ள சோலையம்மன் எனும் கண்ணகி அம்மன் கோவிலை நினைவு படுத்தியது.

அங்கும் இப்படி தான் கோயிலை சூழ உள்ள இயற்கை வனத்தில் ஓரிடத்தில் பொங்கல் இடும் வசதி இருக்கும்.குமரன்

//குறிஞ்சிக்கடவுளுக்கு ஏற்ற இடம். :-)

சிவபெருமானுக்கு அருவுருவமான இலிங்க உருவையே வைத்திருப்பார்கள். இங்கே இலிங்க உருவமும் இருக்கிறது. தெய்வ வடிவும் இருக்கிறது.//

உங்கள் வருகைக்கு நன்றி. அங்கு போன போது ஆச்சரியமாக தான் இருந்தது.
//இது ஆரம்ப நிலைபோல் உள்ளது.
ஆனால் இதுவே ஆலயத்துக்குச் சிறந்த இடம் //


யோகன் அண்ணா

உண்மையில் ஆரம்ப நிலையில் உள்ள கோயில் அல்ல.

தேர் திருவிழா நடைபெறுகிறது. தேர் முட்டியில் தேரும் இருக்கும் படம் போட்டிருக்கிறேனே?

மலை முகடில் இருப்பதால் அதிக விஸ்திரணம் இல்லை. அது கூட அழகு தான் கோயிலுக்கு.

மற்றும் படி மாரியம்மன் கோயிலை மீள அமைக்க இருக்கிறார்கள்.

said...

//குறிஞ்சிக்கடவுளுக்கு ஏற்ற இடம். :-)//

உண்மையாகவே ! தான் //

மாயா நன்றி.

ஜி.ராகவன்

நன்றி. இயற்கையுடன் இணைந்த இடம் எனக்கும் மிக பிடித்திருந்தது.//this temple was started by an indian pilot who became a sage. there is an Ashram at the bottom of the hill. That Ashram is run by mostly white people. This temple and area is kind of used by camping area by those White people. the festival is conducted according to southern(south indian srilankan) culture... Ther(car) festival is very famous.. //

அனனி வாங்கோ வணக்கம் ;)

ஆம் நீங்கள் சொன்ன வரலாற்றை கேள்விபட்டேன். அங்குள்ள ஆச்சிரமத்துக்கும் போய் இருந்தேன்.

ஆனால் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த பின் தான் கோயில் விழாக்கள் விமரிசையாக நடப்பதாக கேள்விப்பட்டேன்.


Ther =(car)?? தேருக்கு சரியான ஒரு ஆங்கில சொல் இருக்கிறதே

Anonymous said...

from my understanding this temple was not meant to be used as our regular temples..
the style of the temple is like Hare Rama Hare Krishna type...the ashram is also like that too..
since lot of srilankan tamils go to the temple, the management let them do the festivals like we wanted but the chariot and everything was there even before tamils started going...when tamils try to take over temple then they will be kicked out..

said...

//from my understanding this temple was not meant to be used as our regular temples..
the style of the temple is like Hare Rama Hare Krishna type...//

மீண்டும் வணக்கம் அனனி
;)

ஒரே ஒரு முறை அதுகும் 2-3 மணித்தியாலங்கள் இருந்ததை வைத்துகொண்டு நான் எதையும் வரையறுக்க முடியாது.
ஆனால் என் அவதானிப்பில் ஹரே கிருஸ்ணா அமைப்பில் வழிப்பாட்டையும் கோயில் அமைப்பையும் காண முடியவில்லை. ஆச்சிரமம் அந்த முறையில் இருக்கலாம்! .


ஆனால் கோயில் அமைப்பு அனைத்து புலம் பெயர் தமிழர்களுடைய கோயில்களையும் போல மூடிய கட்டிடத்துக்குள் தென்னிந்திய கட்டிட கலையுடன் கூடிய மூலஸ்தானம், மற்றும் பரிவார மூர்த்திகளுடைய கோயில்கள், ஏன் வெளியில் இருக்குக் கோயில்களை பார்த்தாலே தெரியும் கட்டிட அமைப்பு தென்னிந்திய பாணி என்பது.

நாளாந்த பூசை கூட எமது கோயில்களில் நடப்பது போல தான் இருந்தது.

விழாக்களின் புகைப்படங்களையும் பார்த்தேன் அவை கூட எமது ஊர் கோயில் பூசை மாதிரி தான் இருந்தது.மற்றும்படி ஆச்சிரமத்தில் வழிபாடு எப்படி இருக்கும் என எனக்கு தெரியாது.

ஆனால் நீங்கள் சொன்னது போல கோடைகாலத்தில் முகாமிடும் வசதி, யோகாசனம், மூலிகை ஒத்தடம் (மசாச்) போன்றவையும்,

அந்த ஆச்சிரமத்தை அமைத்த

முதல்வர் பெயர்

சுவாமி சிவானந்தா

அடுத்தவர்

சுவாமி விஸ்ணு தேவாநந்தா

இப்போது இருப்பவர்
சுவாமி மகா தேவாநந்தா

என்பதும், ஆச்சிரமத்தில் வெள்ளை இன மக்களை அதிகம் என்பதும் அங்கிருந்த சில மணி நேரத்திலேயே புரிந்து/ தெரிந்து கொண்டேன்.

//when tamils try to take over temple then they will be kicked out..//

இது தேவையற்ற ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்ட அவசியமற்ற கூற்று !.

(சில நேரம் கியுபெக், மொன்ரியால் தமிழர்களின் மன நிலையில் உங்கள் கூற்றுக்கு அர்த்தம் இருக்குமோ என்னவோ)