Thursday, 7 August 2008

ஐசூர்யா எனும் திருட்டு வலைப்பதிவர்

இதுவரை ஐ சூர்யா எனும் வலைப்பதிவர் தனது வலைப்பதிவில் அனைத்து தமிழ் ஊடகங்களிலும் வரும் செய்திகளை எந்தவித பாகுபாடும் இன்றி தனது சொந்த செய்தி போல் வெளியிட்டு வந்தார். இப்போது வலைபதிவில் எழுதுபவற்றையும் அட்சரம் பிசகாமல் திருடி தனது வலைப்பதிவில் இட்டு தனது வலைப்பதிவுக்கு விளம்பரம் தேடும் நிலையில் வந்துள்ளார். இது 3 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் என் வலைப்பதிவில் இட்டது. அதையே தலைப்பு முதல் கொண்டு எந்த வசனத்தையும் மாற்றாது இன்று அவர் தனது வலைப்பதிவில் திருடி வெளியிட்டது.












வலைப்பதிவில் அவர் நீக்கிவிட்டதால் அவரது வலைப்பதிவின் கணனி திரை பிரதியை இணைத்துள்ளேன்.

7 comments:

ஜெகதீசன் said...

நீங்கள் தந்திருக்கும் லின்க் error page போகிறதே? ஒரு வேளை பதிவை டெலிட் செய்துவிட்டாரா?

ஜெகதீசன் said...

நன்றி..
பதிவை நீக்கியதற்கு பதில் அவர் உங்களிடம் வருத்தம் தெரிவித்திருக்கலாம், அல்லது அவரது பதிவில் உங்கள் பதிவில் இருந்து எடுத்தது என லிங்க் தந்திருக்கலாம்..

Anonymous said...

இந்த செய்திகளை அனைத்தையும் யாழ் களத்திலும் அப்படியே தன் வலைப்பூ விளம்பரப்படுத்தப்போடுகின்றார்.

Unknown said...

இங்கேயுமா?

http://rishanshareef.blogspot.com/2008/07/blog-post.html

இங்கே பாருங்கள் நண்பரே :(

Indian said...

அவரோட பதிவின் தலைப்புல 'Think different' அப்படின்னு போட்டிருக்கு. அதுதான் இப்படி பன்றாரு போலிருக்கு.

வி. ஜெ. சந்திரன் said...

ஜெகதீசன், நன்றி.
அனனி அன்பரே அது தான் நடந்தது.

ரிஷான் ஷெரிப் உங்களது பதிவை பார்த்தேன். சிலருக்கு இதுவே வெலையாய் போச்சுது.

இந்தியன் ம் அவர் வித்தியாசமாக தான் செய்கிறார்.

ஐ சூர்யாவின் வலைபதிவில் பல இடத்து செய்திகளையும் செய்தி மூலத்தை குறிப்பிடாமல் தனது சொந்த செய்தி போல் இடுவது வழக்கம். அதை நெடு நாளகவே அறிந்து வைத்திருந்தாலும் எதையும் குறிப்பிட்டதிலை.

Anonymous said...

:o