கடந்த வார இறுதியில் நான் இருக்கும் நகரில் இருந்து 40 கிலோ மீற்றர் தூரம் உள்ள நகரத்தில் நடந்தது. கடந்த சனிக்கிழமை எனது நண்பர் சேதமடைந்த கோதுமை மா ஆலையையும் அது சாந்த இடங்களையும் பார்வையிட்டு வரலாம் என அழைத்த போது என்னால் செல்ல முடியாமல் போய்விட்டது. சின்னகுட்டியர் இணைத்த வீடியோவையும், இந்த படங்களையும் பார்க்கும் போது தான் சேதங்களையும், இதன் தாக்கத்தையும் நேரில் அவதானிக்கும் சந்தர்பத்தை தவறவிட்டு விட்டேன் என்பது புரிகிறது.
படங்கள் மின் மடல் மூலம் கிடைத்தவை
3 comments:
வணக்கம் விஜே... பங்களாதேஸ், இலங்கையிலும் உந்த மாதிரியான விளையாட்டுகள் நடக்கிறது தான் அந்த காலத்து பெரிசுகள் முகில் கூட்டம் ஒருமாதிரி தூரத்தில் கருக்கட்டுறதை பாத்தே சூறாவெளி வீசபோகுது சொல்லுங்கள்..
சந்திரன்!
இதைத் தான் ஊரில் காரானை என்பதா? கடல் நீரை உறுஞ்சி வேறு இடத்தில் கொட்டு மென்பாங்களே!
ஆனாலும் அமெரிக்கா,கனடா பயங்கரமானதே!
சின்னகுட்டியர் கடந்த வருடமா? அதற்கு முன்பா தெரியவில்லை கொழும்பு கடலில் ஏற்பட்ட இப்படி ஒரு காட்சியை இணையத்தில் காணகிடைத்தது.
யோகன் அண்ணா இங்கு அதாவது மனிரோபாவில் இப்படி அடிக்க்கடி நிகழ்கிறதாம். ஆனால் எனக்கு இப்பொது தான் தெரியும்.
ஊரில் மழையுடன் மீன் விழும் என சொல்லுவார்கள். அப்படியான கதைகளை கேள்விபட்டுள்ளீர்களா?
Post a Comment