1. உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
3.Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 3
4. Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4
5. Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5
6. Campylobacter: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 6
7. Salmonella - உணவு மூலம் பரவும் நோயாகிகள் -7
8. மாட்டு பைத்திய நோய் உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் -8
Clostridium botulinum - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் -9
இதுவரை நாம் பார்த்த பக்றீரியா மூலம் பரவும் நோய்களும் சரி, இறுதியில் பார்த்த மாட்டு பைத்திய நோயும் சரி நோயை ஏற்படுத்துவதற்கு குறிப்பிட்ட பக்றீரியாவோ அல்லது பிரயோன் எனும் புரதமோ உடலினுள் உணவின் மூலம் உள்ளெடுக்கப்பட்டு உடல் பகுதிகளில் பல்கி பெருகி நோய் ஏற்பட காரணமாக அமைகிறன.
ஆனால் இவற்றிற்கு எல்லாம் வித்தியாசமாக
Clostridium botulinum எனும் பக்றீரியா உடலினுள் உணவு மூலம் சென்று பெருக்கமடைந்து நோய் ஏற்படுத்துவதிலும் பார்க்க, உணவு உள்ளெடுக்கப்பட முதலே உணவில் பெருக்கமடைந்து உணவில் போற்ருலினம் எனும் நச்சு பதார்ததை ( botulinum toxin) சுரக்கிறது. குறிப்பிட்ட நச்சு பொருள் ஒரு நரம்பு தொகுதியை தாக்கும் நச்சு பொருளாகும் (nerve poison அல்லது neurotoxin). இது உணவு மூலம் உடலை சென்றடைந்து நரம்பு தொகுதியை பாதிப்பதால் பக்கவாதம் (paralysis ) ஏற்பட காரணமாகிறது. இதனால் ஏற்படும் நோய் பொற்றுலிசம் (Botulism) என அழைக்கப்படுகிறது.
பொதுவாக இதன் தாக்கம் அல்லது பாதிப்பு அருமையாகவே அறியப்பட்டாலும், இதனால் ஏற்படும் பாதிப்பு ஏற்காவே கூறிய பக்றீரியா நோய்களை விட ஆபத்தானது.
நோய் அரும்பு காலம்:
உணவு மூலம் நஞ்சு உள்ளெடுக்கப்பட்டு நோய்க்கான அறிகுறி தெரிவதற்கு 12-36 மணித்தியாலங்கள் வரை செல்ல முடியும்.
நோய்க்கான அறிகுறிகள்:
vomiting - வாந்தி
nausea,
fatigue,
dizziness,
headache - தலைவலி
double vision - இரட்டை பார்வை/ பார்வை குழப்பம்
dryness in the throat and nose - தொண்டை மற்றும் மூக்கு உலர்ச்சி
respiratory failure - சுவாசதொகுதி செயல் இழப்பு
paralysis - பக்க வாதம்
death- சில நேரம் இறப்பு
இதன் பாதிப்போடு தொடர்புடைய உணவுகள்
இந்த பக்றீரியாவின் இயல்புகளை பார்த்தோம் என்றால்
இது காற்று இன்றிய அதாவது சுவாசத்துக்கு தேவையான ஒட்சிசன் குறைந்த, அமிலத்தன்மை குறைந்த ஊடகங்களில் இலகுவில் வளரும் தன்மை உடையது. அத்துடன் இயற்கை சூழலில் எங்கும் பரந்து காணப்பட கூடியது. இது spores எனும் அமைபை தோற்றுவித்து தகாத காலத்தை கழிக்க கூடியது. spores வெப்பத்தை தாங்க கூடியவை. எனவே சரியாக சமைக்கப்படாத உணவுகளில் spores இலகுவில் சாதாரணமான பக்றீரியாவாக மாற்றம் அடைந்து வளர்ச்சி அடைய கூடியது.
1. சரியான முறையில் தயாரிக்கப்படாத அமில தன்மை குறைந்த தகரத்தில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் -
உதாரணம்: சோளம், பீன்ஸ், காளான், spaghetti sauce, salmon
2. சரியாக சேமிக்கப்படாத அமில தன்மை குறைந்த பழச்சாறுகள்
உதாரணம்: கரட் சாறு
3. ham, sausage, lobster, and smoked and salted fish
இதை தவிர்ப்பது எவ்வாறு?
1. தகரத்தில் அடைக்கப்பட்ட உணவாயின், குறிப்பிட்ட தகர பொதியமைப்பில் வெடிப்பு, ஒழுக்கு, துரு, அமைப்பில் மாற்றம் என்பன உள்ளதா என அவதானித்து அவற்றை உணவுக்கு பயன் படுத்துவதை தவிர்த்தல்.
2. குறிப்பிட்ட நச்சு பொருள் வெப்பத்தில் அழிவடைய கூடியது. எனவே தகரத்தில் அடைத்த உணவு பொருட்களை குறைந்தது 10 நிமிடங்கள் 80 பாகை செல்சியசுக்கு மேல் சமைத்தல்
3. வீட்டில் தயாரிக்கும் அமில தன்மை குறைந்த உணவுகளை தகரத்தில் அடைக்கும் அல்லது எண்ணேயில் பாதுகாக்கும் போது எப்போதும் குளிரூட்டியில் வைத்திருத்தல், மற்றும் எண்ணேயில் சேமிக்கு உணவை 10 நாட்களுக்குள் பயன் படுத்தல் அவசியம்.
இவற்றை விட
குழந்தைகளில் Clostridium botulinum உணவு மூலம் உள்ளெடுக்கப்பட்டால் குடல் பகுதியில் பெருகி நச்சு பொருளை சுரப்பதால் infantile botulism எனும் நோயை ஏற்படுத்தக்கூடியது.
அத்துடன்
காயங்களில் ஏனைய பக்றீரியாக்களுடன் வளர்ந்து, நச்சு பொருளை சுரக்க கூடியது. குறிப்பிட்ட நச்சு பொருள் குருதி மூலம் உடலினுள் கடத்தப்பட்டு ஏற்படும் நோயை Wound botulism என்பர்.
Tuesday, 25 December 2007
Monday, 24 December 2007
மாட்டு பைத்திய நோய்- உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 8
1. உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
3.Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 3
4. Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4
5. Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5
6. Campylobacter: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 6
7. Salmonella - உணவு மூலம் பரவும் நோயாகிகள் -7
மாட்டு பைத்திய நோய் உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் -8
மாட்டு பைத்திய நோய்? (Mad cow disease) என பொதுவாக அறியப்பட்ட நோயால் ஐக்கிய இராச்சியத்தின் மாட்டு இறைச்சி (beef) உற்பத்தி 1990 களில் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். இதனால் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டன. அதன்பிற்பாடு வட அமெரிக்க நாடுகளான கனடா, ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இதன் தாக்கம் அறியப்பட்டதுடன் மாட்டு இறைச்சி உற்பத்தியாளர்களுக்கு அதிக நட்டத்தையும் ஏற்படுத்தியது.
தற்போது இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அண்மையில் மீண்டும் கனடாவில் இதன் தாக்கம் 13 வயதான பசு மாடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் உட்பட மேலும் பல நாடுகள் கனடாவின் மாட்டு இறைச்சியை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்ட மாடு கனடாவில் மாடுகளுக்கு வழங்கும் தீவனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் வருவதற்கு முன்னர் பிறந்தது என சொல்லப்படுகிறது. (தீவனத்துக்கும் இந்த நோய்க்கும் என்ன தொடர்பு என நினைப்போர் தொடர்ந்து படியுங்கள்).
மாட்டு பைத்திய நோய் (Mad Cow Disease)
பொதுவாக மாட்டுப்பைத்திய நோய் என அழைக்கப்பட்டாலும் இதனை விஞ்ஞானத்தில் BSE (bovine spongiform encephalopathy) என்ற பெயரிலேயே அழைப்பர். இது மாடுகளின் மைய நரம்பு தொகுதியான மூளை, முண்ணான் போன்றவற்றை பட்டிப்படியாக பாதிக்கும் (neurological disorder) ஒரு நோயாகும். இந்த நொயை ஏற்படுத்துவது முன்னர் உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் என்ற பகுதிகளில் சொல்லப்பட்ட நோயாக்கிகள் போல உயிருள்ள ஒரு அங்கி (பக்றீரியா) அல்லாது இயல்பான அமைப்பில் இருந்து மாறுபட்ட பிரயோன் எனும் புரதம் ஆகும் (modified form prion protein).
இது எப்படி மாடுகளுக்கு பரவியிருக்க முடியும்?
எப்படி பரவியிருக்க முடியும் என்பதற்கான பதில் இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை. ஆனால் பொதுவாக தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட பரவல் மூலமாக
1. நோய் ஏற்பட்ட மாட்டின் எலும்பு மற்றும் இறைச்சியை கொண்ட மாட்டு தீவனங்கள் பயன்படுத்தப்பட்டமை
2. செம்மறி ஆட்டில் அறியப்பட்ட பிரயோன் நோய் பதிப்புக்கு உட்பட்ட(scrapie-infected) ஆடுகளில் இருந்து பெறப்பட்ட எலும்பு மற்றும் இறைச்சி தீவனத்தை மாட்டுக்கு பயன்படுத்தியமை
ஆகியன சொல்லப்படுகிறன.
இதற்கு மேலதிகமாக இன்னும் ஒரு கருத்து நிலவுகிறது. இந்த நோயானது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாட்டு தீவனங்கள், உயிருள்ள விலங்கள் மூலம் பரவியிருக்கலாம் என்பதே.
அதிலும் இதைப்பற்றி ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்ட பேராசிரியர் ஒருவர் சொல்லியிருப்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு வழக்கமாக மனித உடல்களும் விலங்கு உடல்களும் ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் அவ்வாறு விசப்பட்டவற்றில் CJD எனும் நோய் தாக்கத்துக்குட்பட்ட மனித உடல்களும் விலங்கு உடல்களும் இருக்கலாம் என்றும், பின்னர் விலங்கு தீவனத்துக்காக எலும்பு சேகரிப்போர் அவற்றை சேகரித்து விலங்கு உணவு தயாரிப்புக்கு கொடுத்திருக்கலாம் என்றும் அந்த உணவு இறுதியில் ஐக்கிய இராச்சியத்தை அடைந்து நோய்க்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்.
எது எப்படியிருந்தாலும் எலும்பு மற்றும் இறைச்சியை கொண்ட விலங்கு தீவனங்கள் இந்நோய் பரம்பலுக்கு முக்கிய காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.
நோயாக்கி
இந்த நோய் ஏற்படுத்தும் பிரயோன் (prion protein)புரதம் பற்றி அதிகம் அறியப்படவிட்டாலும் சாதாரண பிரயோன் புரத்தின் அமைப்பில் ஏற்பட்ட அமைப்பு மாற்றமே முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.
இந்த புரதத்தின் அமைப்பில் ஏற்படும் அசாதாரண மாற்றம் காரணமாக
1. புரத்தை சமிபாடைய செய்யும் அல்லது நீர்பகுப்பு (Protein hydrolysis) நொதியங்கள் (enzymes) இலகுவில் இதைனை பிரிந்தழிய செய்வதில்லை
2. இதன் அமைப்பு காரணமாக அமில, காரங்களாலும் இலகுவில் இதனை அழிக்க முடிவதில்ல்லை
3. அசாதரணமான வெப்பத் தாங்கு திறன் காரணமாக இதனை சமைப்பதன் மூலம் அழிக்க முடியாது. அதே போல தகரத்தில் இறைச்சி அடைக்கும் செயல் முறை மூலமும் அழிக்க முடியாது. எனவே ஏனைய உயிருள்ள நுண்ணங்கி நோய்களை போல சமைத்து உண்ணுதல் என்பது இந்த நோயை கட்டுப்படுத்த உதவாது.
நோய் அரும்பு காலம்
இதன் நோய் அரும்பு காலம் 1-2 வருடங்களாகும். அதாவது நோய்க்காரணியான பிரயோன் புரத தொற்று ஏற்பட்டு அதன் அறிகுறிகள் தெரிய குறைந்தது 1-2 வருடங்களோ அல்லது அதற்கு மேலோ செல்லலாம்.
இதனால் மனிதனில் ஏற்படும்பாதிப்பு?
மனிதரில் Creutzfeldt-Jakob disease (CJD) எனும் பிரயோன் நோய் மூளையை பாதிப்பது அறியப்பட்டுள்ளது. இது ஒரு கடத்தப்படக்கூடிய மூளையை கடற்பஞ்சு (Sponge) போல மாற்றக்கூடிய ( spongy degeneration of the brain ) ஒரு நோய் ( Transmissible Spongiform Encephalopathy) ஆகும். இதனால் மூளை தனது செயற்பாட்டை படிப்படியாக இழக்கும்.

பட மூலம்: http://www.health.qld.gov.au
இதே போன்று ஐக்கிய இராச்சியத்தில் மாட்டு பைத்திய நோய் அறியப்பட்ட பிற்பாடு vCJD எனும் நோய்த்தாக்கம் அதிக அளவில் அறியப்பட்டது. இது மனிதரில் பரவ காரணம் மாட்டு பைத்திய நோய்க்கு(BSE) காரணமான பிரயோனாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் இன்னும் பூரணமாக நிருபிக்கப்படவில்லை.vCJD தாக்கத்தால் கிட்டத்தட்ட 165 பேருக்கு மேல் மாட்டுபைத்திய நோய் அறியப்பட்ட பின் இறந்திருக்கிறார்கள்.

Sunday, 23 December 2007
இது எப்பிடி இருக்கு...
பொதுவாகவே கனடா குளிரான நாடு என சொல்லப்பட்டாலும், கனடாவில் நான் இருக்கும் பிரதேசம் மிகவும் குளிர் அதிகமான பிரதேசம். சில நேரங்களில் வெப்பநிலை காற்றின் தாக்கத்தால் -45 பாகை டிகிரி செல்சியஸ் வரை உணரப்படுவதுண்டு.
பொதுவாக நவம்பர் மாதத்தில் பனி பொழிவு ஆரம்பித்தால் அடுத்த வருடம் மார்ச் மாதம் இறுதி/ ஏப்பிரல் மாத ஆரம்பம் வரை வரை பனி உருகுவதில்லை.
இந்த வாருடம் சில படங்க்கள் எடுத்திருந்தேன். பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

Sunday, 16 December 2007
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

படம் பெறப்பட்டது : http://seen.evgenidinev.com
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு ஓ
என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் - உன்னிடத்தில்
கொண்டுவர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லியனுப்பு ஓ
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கோள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு ஓ ஓ
(..........!)
யாரோ உன் காதலில் வாழ்வது
யாரோ உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ
ஏனோ என் இரவுகள் நீள்வது
ஏனோ ஒரு பகல் என சுடுவது
ஏனோ என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரமில்லையா?
இலையை போல் என் இதயம்
தவறி விழுதே.....
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு ஓ ஓ
பூக்கள் உதிரும் சாலை வழியே நடந்து செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கோள்கிறேன்
ennai thedi kathal... |
விஜய் ரீவி யில் ஒளிபரப்பாகும் காதலிக்க நேரமில்லை எனும் தொடர் நாடகத்தின் தொடக்க இசை.
பாடியவர்: ?
பாடலை எழுதியவர்: ?
காதலிக்க நேரமில்லை நாடகத்தில் திரைப்படங்கள் போலவே இடையிடையே பாடல்களையும் இணைத்து வருகிறார்கள்.
அவ்வாறு இடம் பெற்ற மேலும் ஒரு பாடல் காணொளியாக கீழே......
பிற்குறிப்பு: இதை பாத்திட்டு கானா பிரபா இவரும் "மாட்டிட்டார்" எண்டு விபரீதமா கற்பனை பண்ணி தனது உடம்பை கெடுத்துகொள்ள வேண்டாம் எண்டு அன்பாக கேட்டு கொள்கிறேன் :).
Tuesday, 11 December 2007
கணினிக்கு மரண சடங்கு.....
பழைய mainframe computer க்கு Jazz இசையுடன் ஒரு மரணசடங்கை நடாத்தி முடித்திருக்கிறார்கள். இந்த நிகழ்வை நேரில் பார்த்ததில்லை.
Subscribe to:
Posts (Atom)