Monday, 24 December 2007

மாட்டு பைத்திய நோய்- உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 8

1. உணவு மூலம் பரவும் நோயாக்கிகள்- 1 : அறிமுகம்
3.Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 3

4. Escherichia coli O:157: H7 - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 4

5. Yersinia enterocolitica - உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 5

6. Campylobacter: உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் - 6


7. Salmonella - உணவு மூலம் பரவும் நோயாகிகள் -7
மாட்டு பைத்திய நோய் உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் -8


மாட்டு பைத்திய நோய்? (Mad cow disease) என பொதுவாக அறியப்பட்ட நோயால் ஐக்கிய இராச்சியத்தின் மாட்டு இறைச்சி (beef) உற்பத்தி 1990 களில் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். இதனால் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டன. அதன்பிற்பாடு வட அமெரிக்க நாடுகளான கனடா, ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இதன் தாக்கம் அறியப்பட்டதுடன் மாட்டு இறைச்சி உற்பத்தியாளர்களுக்கு அதிக நட்டத்தையும் ஏற்படுத்தியது.

தற்போது இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அண்மையில் மீண்டும் கனடாவில் இதன் தாக்கம் 13 வயதான பசு மாடு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் உட்பட மேலும் பல நாடுகள் கனடாவின் மாட்டு இறைச்சியை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்ட மாடு கனடாவில் மாடுகளுக்கு வழங்கும் தீவனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் வருவதற்கு முன்னர் பிறந்தது என சொல்லப்படுகிறது. (தீவனத்துக்கும் இந்த நோய்க்கும் என்ன தொடர்பு என நினைப்போர் தொடர்ந்து படியுங்கள்).மாட்டு பைத்திய நோய் (Mad Cow Disease)

பொதுவாக மாட்டுப்பைத்திய நோய் என அழைக்கப்பட்டாலும் இதனை விஞ்ஞானத்தில் BSE (bovine spongiform encephalopathy) என்ற பெயரிலேயே அழைப்பர். இது மாடுகளின் மைய நரம்பு தொகுதியான மூளை, முண்ணான் போன்றவற்றை பட்டிப்படியாக பாதிக்கும் (neurological disorder) ஒரு நோயாகும். இந்த நொயை ஏற்படுத்துவது முன்னர் உணவு மூலம் பரவும் நோயாக்கிகள் என்ற பகுதிகளில் சொல்லப்பட்ட நோயாக்கிகள் போல உயிருள்ள ஒரு அங்கி (பக்றீரியா) அல்லாது இயல்பான அமைப்பில் இருந்து மாறுபட்ட பிரயோன் எனும் புரதம் ஆகும் (modified form prion protein).

இது எப்படி மாடுகளுக்கு பரவியிருக்க முடியும்?

எப்படி பரவியிருக்க முடியும் என்பதற்கான பதில் இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை. ஆனால் பொதுவாக தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட பரவல் மூலமாக

1. நோய் ஏற்பட்ட மாட்டின் எலும்பு மற்றும் இறைச்சியை கொண்ட மாட்டு தீவனங்கள் பயன்படுத்தப்பட்டமை
2. செம்மறி ஆட்டில் அறியப்பட்ட பிரயோன் நோய் பதிப்புக்கு உட்பட்ட(scrapie-infected) ஆடுகளில் இருந்து பெறப்பட்ட எலும்பு மற்றும் இறைச்சி தீவனத்தை மாட்டுக்கு பயன்படுத்தியமை

ஆகியன சொல்லப்படுகிறன.

இதற்கு மேலதிகமாக இன்னும் ஒரு கருத்து நிலவுகிறது. இந்த நோயானது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மாட்டு தீவனங்கள், உயிருள்ள விலங்கள் மூலம் பரவியிருக்கலாம் என்பதே.

அதிலும் இதைப்பற்றி ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்ட பேராசிரியர் ஒருவர் சொல்லியிருப்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு வழக்கமாக மனித உடல்களும் விலங்கு உடல்களும் ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் அவ்வாறு விசப்பட்டவற்றில் CJD எனும் நோய் தாக்கத்துக்குட்பட்ட மனித உடல்களும் விலங்கு உடல்களும் இருக்கலாம் என்றும், பின்னர் விலங்கு தீவனத்துக்காக எலும்பு சேகரிப்போர் அவற்றை சேகரித்து விலங்கு உணவு தயாரிப்புக்கு கொடுத்திருக்கலாம் என்றும் அந்த உணவு இறுதியில் ஐக்கிய இராச்சியத்தை அடைந்து நோய்க்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகிறார்.

எது எப்படியிருந்தாலும் எலும்பு மற்றும் இறைச்சியை கொண்ட விலங்கு தீவனங்கள் இந்நோய் பரம்பலுக்கு முக்கிய காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.


நோயாக்கி


இந்த நோய் ஏற்படுத்தும் பிரயோன் (prion protein)புரதம் பற்றி அதிகம் அறியப்படவிட்டாலும் சாதாரண பிரயோன் புரத்தின் அமைப்பில் ஏற்பட்ட அமைப்பு மாற்றமே முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

இந்த புரதத்தின் அமைப்பில் ஏற்படும் அசாதாரண மாற்றம் காரணமாக
1. புரத்தை சமிபாடைய செய்யும் அல்லது நீர்பகுப்பு (Protein hydrolysis) நொதியங்கள் (enzymes) இலகுவில் இதைனை பிரிந்தழிய செய்வதில்லை
2. இதன் அமைப்பு காரணமாக அமில, காரங்களாலும் இலகுவில் இதனை அழிக்க முடிவதில்ல்லை
3. அசாதரணமான வெப்பத் தாங்கு திறன் காரணமாக இதனை சமைப்பதன் மூலம் அழிக்க முடியாது. அதே போல தகரத்தில் இறைச்சி அடைக்கும் செயல் முறை மூலமும் அழிக்க முடியாது. எனவே ஏனைய உயிருள்ள நுண்ணங்கி நோய்களை போல சமைத்து உண்ணுதல் என்பது இந்த நோயை கட்டுப்படுத்த உதவாது.நோய் அரும்பு காலம்

இதன் நோய் அரும்பு காலம் 1-2 வருடங்களாகும். அதாவது நோய்க்காரணியான பிரயோன் புரத தொற்று ஏற்பட்டு அதன் அறிகுறிகள் தெரிய குறைந்தது 1-2 வருடங்களோ அல்லது அதற்கு மேலோ செல்லலாம்.


இதனால் மனிதனில் ஏற்படும்பாதிப்பு?

மனிதரில் Creutzfeldt-Jakob disease (CJD) எனும் பிரயோன் நோய் மூளையை பாதிப்பது அறியப்பட்டுள்ளது. இது ஒரு கடத்தப்படக்கூடிய மூளையை கடற்பஞ்சு (Sponge) போல மாற்றக்கூடிய ( spongy degeneration of the brain ) ஒரு நோய் ( Transmissible Spongiform Encephalopathy) ஆகும். இதனால் மூளை தனது செயற்பாட்டை படிப்படியாக இழக்கும்.
பட மூலம்: http://www.health.qld.gov.au
இதே போன்று ஐக்கிய இராச்சியத்தில் மாட்டு பைத்திய நோய் அறியப்பட்ட பிற்பாடு vCJD எனும் நோய்த்தாக்கம் அதிக அளவில் அறியப்பட்டது. இது மனிதரில் பரவ காரணம் மாட்டு பைத்திய நோய்க்கு(BSE) காரணமான பிரயோனாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் இன்னும் பூரணமாக நிருபிக்கப்படவில்லை.vCJD தாக்கத்தால் கிட்டத்தட்ட 165 பேருக்கு மேல் மாட்டுபைத்திய நோய் அறியப்பட்ட பின் இறந்திருக்கிறார்கள்.

0 comments: