Tuesday, 17 July 2007
ஆடிக்கூழ் + கொழுக்கட்டை
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
-நவாலி சோமசுந்தரப்புலவர்
பாடல்: VSK கானா பிரபா ஆகியோரின் பதிவில் இருந்து.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நமக்கெல்லாம் இப்ப ஆடிக்கூழ் படத்தைப் பார்க்கிறதோட சரி ;-)
இப்படி படம் எல்லாம் போட்டு நம்ம வயிற்றெரிச்சலை ஏன் சம்பாதிக்கின்றீர்கள்?
//நமக்கெல்லாம் இப்ப ஆடிக்கூழ் படத்தைப் பார்க்கிறதோட சரி ;-)//
நீ்ங்களே களத்தில இறங்கிக் கூழக் காச்சிறதுதானே ..
கடைசி வாங்கு சரி, சமையலிலும் கடைசிதானா, கொட்டிக்கிறதுக்கெண்டா முதலாவதா வாங்க:ீ
செய்முறை புத்தகம் வச்சிருக்கிற உங்களுக்கு செய்து பக்கிறதிலை என்ன பிரச்சனை கானா பிரபா?
நந்தியா
எனக்கு 2 நாள சாப்பிட்ட சாப்படு செமெக்கேல்லை ;-)
மோதகம் கொழுக்கட்டைப் படங்களைப் பார்த்ததும் இப்ப சாப்பிட வேணும் போல இருக்கு...:-)
பரவாயில்லை. இங்கை தமிழ் உணவகங்களில் வாங்கலாம். :-))
Post a Comment