ஜீலை 1 ஆம் திகதி கனடா தினம் கனடாவுக்கு. பிரித்தானியாவின் வட அமெரிக்க மானிலங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து கனடா எனும் கூட்டமைப்பை உருவாக்கிய முதல் ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக 1868 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி கனடா ஆளுனர் Lord Monck அவர்களால் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆயினும் முதலில் கனடா தினம் எனும் பெயர் வழங்கப்படவில்லை. இத்தினம் பல் வேறு பெயர் மாற்றங்கள், மற்றும் தடங்கல்களை தாண்டி பொது விடுமுறையாகவும், கனடா தினம் எனும் தற்போதைய பெயரையும் பெற்று கனடாவில் வாழும் பல்வேறு சமூக குழுக்களும் தங்களுக்கிடையே ஒரு ஒன்று கூடல் தினமாக கொண்டாடும் நிலையை தற்போது பெற்றுள்ளது.
மனிரோபா மானில தமிழ் கலாச்சார அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ் மக்களது ஒன்று கூடல் நிகழ்வு வின்னிபெக் நகரில் உள்ள St Vital பூங்காவில் காலை 11.00 மணி முதல் 3.30 மணிவரை சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.
இன்றைய நிகழ்வில் பங்கு கொண்டவர்களில் ஈழ தமிழ் மக்கள் பெரும் பான்மையினராக இருந்தாலும் இந்தியா, சிங்கபூர், மலேசியா, மொரீசியஸ் என பல நாடுகளையும் சேர்ந்த தமிழ் மக்கள் கலந்து சிறப்பித்தமை முக்கியமானது.
மொரிசியஸ் தமிழ் மக்கள் தமிழ் மொழியை பேசாத போதும் தமிழர் எனும் அடையாளத்துடன் கலந்து கொண்டமையை குறிப்பிட்டே ஆக வேண்டும்.
மனிரோபா மானில ஈழ தமிழ் இளம் சந்ததியில் பெரும் எண்ணிக்கையானோர் தமிழ் பேச்சை புரிந்து கொள்ள கூடியவர்களாக இருந்த போதும், தமிழை பேச முடியாதவர்களாகவே உள்ளனர். ஆனால் இன்றைய நிகழ்வை ஒழுங்கு செய்து முன்னின்று நடத்தியவர்கள் கனடாவில் பிறந்து வளர்ந்த இளம் சந்ததியினரே. அவர்களது தலைமையிலேயே அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றன. எதிர் காலத்தில் மொரிசியஸ் தமிழ் மக்களை போல கனடா வாழ் தமிழரும் தமிழ் பேசாத, ஆனால் தமிழர் எனும் அடையாளத்துடன் தான் இருப்பார்கள் என நினைக்கிறேன்.
பங்குபற்றிய இளையோர்
சுடச்சுட உணவு தயாரிப்பு (BBQ)
மதிய உணவுக்கு குழுமி நிற்கும் மக்கள்
தமிழ் மக்களது நிகழ்வுக்கு பின் அதே இடத்தில் ஒன்று கூடியிருக்கும் பாக்கிஸ்தானியர்கள்
1 comments:
25 வருடத்தில் தமிழர்கள் தமிழர் என்னும் அடையாளத்துடன் மட்டும் தமிழை மறந்தவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.வினிப்பெக்கில் தமிழரின் செறிவு குறைவாக இருப்பதால் தற்சமயமே தமிழைப் பேசமுடியாநிலைக்குக் சென்றுள்ளார்கள்.ரொறன்ரோவில் இன்னும் சிறிது காலத்தின் பின்னர் இதேநிலை காணப்படும்.
Post a Comment