Monday, 20 August 2007

கண்டேன் டி சே ஐ........

விடுமுறையில் இரண்டு வாரகாலம் ரொறான்ரோ போய் இருந்தேன். அப்போது டி.சே. தமிழன், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்து விடுமுறையில் வந்திருந்த சுந்தரவடிவேல் ஆகிய இருவரையும் டி.சே தமிழனோடு வந்த அவரது நண்பரையும் சந்தித்தேன்.(படத்தில் டிசெ மற்றும் சுந்தரவடிவேல்)

ரோறான்ரோ போவதற்கு முன் டி.சே ஐ தொடர்பு கொண்டு அவரது தொலைபேசி இலக்கத்தை வாங்கி இருந்தேன். அங்கு போனதன் பின் எனது உறவினர் வீட்டில் இருந்து அழைத்தால் அது குரல் மடலில் செய்தியை பதிவு செய்து சில நிமிடங்களில் டி.சே யிடம் இருந்து அழைப்ப்பு வந்தது. முதல் உரையாடலிலேயே பல நாட்கள் உரையாடியதை போல சகஜமாக நிறையவே கதைத்தார். அப்போ சுந்தரவடிவேலும் ரொறான்ரோவில் நிற்பதாகவும், அவருடனும் கதைத்து சந்திப்புக்கு ஒழுங்கு செய்வதாகவும் சொன்னார். சரி என சொல்லு உரையாடலை முடித்துகொண்டோம். பின்னர் நான் தங்கிய வீட்டு தொலைபேசி இலக்கத்தை தொலைத்துவிட்டு ஒரு வழியாக எனது கையடக்க தொலைபேசி இலக்கத்தை பெற்று எப்போ சந்திப்பது, எத்தனை மணிக்கு என்னை கூட்டி செல்ல வருவது என்ற விபரங்களை கூறினார்.

அதன் படி 10 ஆம் திகதி தமிழரின் நேரம் தவறாத பண்பை சரியாக கடைப்பிடித்து சரியாக சொன்ன நேரத்துக்கு சரியாக அவரது நண்பர் சகிதம் வந்து சேர்ந்தார். இருவரில் யார் டிசே என்ற குழப்பத்தை போக்க அவரே தான் தான் டிசெ, மற்றையது தனது நண்பர் என அறிமுகம் செய்துகொண்டார்.

அங்கிருந்து ரோறான்ரோ நகரின் மைய பகுதியில் உள்ள சுந்தரவடிவேலின் வீட்டில் போய் அவரையும் அழைத்துகொண்டு நகர பகுதியில் நடைபெற்ற கிறீஸ் நாட்டினரின் கொண்டாட்டம் ஒன்றிற்கு போனோம்.

டிசே யுடன் போகும் இடங்களில் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் காட்சிகளுக்கு பஞ்சமா என்ன.
இரவு நேர காட்சிகளில் எனது கமரா ஒளிப்படங்களை சீராக படம் பிடிக்காததால், விடியோவாக சுட்டு கொண்டேன்.

Belly Dance

இதில் பாவிக்கப்பட்ட இசை நமது தவில் கச்சேரிகளில் கேட்கும் இசை போல இருந்தது.

2 பெண்களுடன் 6 ஆண்கள் விளையாடிய கைப்பந்தாட்டம்

பிறேசில் நாட்டு உணவுச்சாலை ஒன்று
டிசே, நான் மற்றும் சுந்தரவடிவேல்

சுந்தரவடிவேல் அவர்களை சந்தித்த போது அவரது தோற்றம், வயது பற்றி வைத்திருந்த கற்பனையிலும் இளமையாக தெரிந்தார்.

சந்திப்பின் போது டி.சேயின் கவிதை புத்தகம் ஒன்றை பெற்றுவராலாம் என்றால் முடியவில்லை. மறுபடியும் டி.சே ஐ சந்திக்க முடியவில்லை. அதனால் கவிதை புத்தகம் பற்றி விமர்சனம் எழுதும் எண்ணம் நிறைவேறவில்லை.

டிசே அடிக்கடி சொல்லி கவலைப்பட்ட விடயம் பொதுவாக கவிதை எழுதும் ஆண்களுக்கு நிறைய ரசிகைகள் இருப்பார்களாம் ஆனால் தனக்கு ரசிகைகள் இல்லையாம் என்று. இதை தீர்க்க என்ன செய்யலாம்? வலைபதியும் பெண் பதிவர்களுக்கு சமர்ப்பணம்.
டிசேயின் கைத்தொலைபேசிக்கு அடிக்கடி அழைத்து தொல்லை கொடுத்தவர்கள் பற்றி சொல்லாதிருப்பதே இன்னும் அதிக ரசிகைகள் கிடைக்க என்பங்குக்கு நான் செய்ய கூடிய உதவி.

15 comments:

பாவனா said...

டி.ஜேயின் சுந்தரக் கவிதையில் ஞான் சொப்பனம் கண்டேன், ஞான் அவரோட fan கேட்டோ

said...

இதான் 'புகை' படமா வி ஜெ :)

டிசே புகைப்படம் போட்டாதான ரசிகைகள் கிடைப்பாங்க..

said...

என்னவோ போங்க!!
முகம் பார்க்காமல் "கண்டேன் டி சே ஐ..." ரசிக்கமுடியவில்லை. :-)

said...

டிஜே... சரியான சின்ன பசங்கள் மாதிரி இருக்கிறாரு. இந்த சின்ன வயதிலை எம்மா பெரிய விசயங்கள் எல்லாம் தெரிஞ்சு வைச்சுருக்காரு... டிஜேக்கு எனது வாழ்த்துக்கள்

மயிலாப்பூரு மான்குட்டி said...

சுந்தரமூர்த்தி வேறே சுந்தரவடிவேலரு வேறே. எங்கே போனாலும் குழப்பம் பண்ணிடுறாங்க. அவரா இவரு இவரா அவருன்னு எவர்ரா எவருன்னு இவனுங்க ஆளுக்காளு கேக்குறதவெச்சு எந்த கவுறா சுவரான்னும் பாத்துக்காம கட்டிக்கலாம் முட்டிக்கலாமுன்னு படுதுங்க சாமி

இன்னாப்பா டிசே போட்டோ கெடக்கலயா? தேடுங்க கெடைக்கும்

said...

//சுந்தரமூர்த்தி வேறே சுந்தரவடிவேலரு வேறே. எங்கே போனாலும் குழப்பம் பண்ணிடுறாங்க. அவரா இவரு இவரா அவருன்னு எவர்ரா எவருன்னு இவனுங்க ஆளுக்காளு கேக்குறதவெச்சு எந்த கவுறா சுவரான்னும் பாத்துக்காம கட்டிக்கலாம் முட்டிக்கலாமுன்னு படுதுங்க சாமி//

ம் ம் , தப்பு தான் சுட்டி காட்டினதுக்கு நன்னி. இப்ப தாங்கவனிச்சன் நானும் ......

சுந்தரவடிவேல், சுந்தரமூர்த்தி இரண்டு பேரும் மன்னியுங்க.அவருடைய வலைப்பதிவுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.

Anonymous said...

சந்திரன்ஜி ஃபஸ்டு போட்டோவுல பொகையா ஹிகுற ரெண்டு ஹிப்போ நடுவுல ஸ்பெக்ஸ் போட்டு காட்வாக்றதுதான் டிசேஜியா சுந்தரவடிவேல்ஜியா

DJ said...

சந்திரன், இரண்டாவது முறை சந்திப்பதாகவும், அப்போது தொகுப்புக் கொண்டுதருவதாகவும் கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமற்போனதற்கு மன்னிக்கவும். சில நாட்களாய் உடல் சுகவீனத்தோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தேன்; இன்னுந்தான்.
.....
'கண்டேன் டிசே' என்ற தலைப்புக்குப்பதிலாய் 'கண்டேன் பெலி டான்ஸர்'களை என்று தலைப்புப் போடுவதுதான் பொருத்தமாயிருக்கும். ஆனால் நள்ளிரவு ஒரு மணியளவில் ரோட்டில் தங்கள் ஊரிலிருப்பதுபோல உரத்த குரலெடுத்துப் பாடிக்கொண்டு வந்த இருவரின் 'குதூகலம்' பற்றியும், அந்தக்கொடுமையைக் கேட்டுக் கொண்டுவந்த மற்ற இருவரின் சோகத்தைப் பற்றியும் பதிவு செய்யாததைக் கண்டிக்கின்றேன் :-).

DJ said...

/டிசேயின் கைத்தொலைபேசிக்கு அடிக்கடி அழைத்து தொல்லை கொடுத்தவர்கள் பற்றி சொல்லாதிருப்பதே இன்னும் அதிக ரசிகைகள் கிடைக்க என்பங்குக்கு நான் செய்ய கூடிய உதவி/
இப்படிச் சொன்னதற்கு ந்னறியாய், 'அடுத்த நாள் கனடா கந்தசாமி கோயில் தேர்த்திருவிழாவிற்கு வாங்கோ; சந்திப்போம்' என்று அந்த நள்ளிரவில் உங்களுக்கு வந்த text message பற்றி நான் ஒன்றும் வாய் திறக்கமாட்டேன் :-).

said...

//கண்டேன் டி சே ஐ//
அடக் கஷ்ட காலமே! :)

said...

/அடக் கஷ்ட காலமே! :)/

காலமே மட்டுமா? முழுநாளுமேதான். அதுவும் டபுள் ட்ரபுள். சுந்தரவடிவேலரும் கூட வந்தாராமே.
எதுக்கைய்யா ஊருக்கு வர்ற இளவட்டங்கள பிரேசில் பெல்லி டான்சு காட்டி கெடுத்து புள்ளியாக்குறீங்க. உட்டுடுங்க பாவம் பொழச்சுபோகட்டும்.
:))

said...

(முதல் மரியாதை படப் பாணியில்)எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்

நீங்கள் கந்தசுவாமி கோயில் திருவிழாவுக்கோ , அல்லது பெல்லி டான்ஸை குறிவச்சோ போனீங்கள்?

said...

//பாவனா said...
டி.ஜேயின் சுந்தரக் கவிதையில் ஞான் சொப்பனம் கண்டேன், ஞான் அவரோட fan கேட்டோ //

ஆராதிகையாய் மாத்ரம் இருன்னால் மதி !
பின்னே எனிக்கும் மலையளம் அறியும்.
ஞான் இன்னே சினேஹிக்குன்னு

said...

//இதான் 'புகை' படமா வி ஜெ :)

டிசே புகைப்படம் போட்டாதான ரசிகைகள் கிடைப்பாங்க.. //

அய்யனார் (ஐயனார்) ம் படமெடுத்த பின்னாடி புகை போட்டோமில்ல :)

டி சே கவிதை புத்தகதிலையே படம் போடலையாம் எண்டு சொன்ன ஞாபகம்

பின்ன எப்பிடி ரசிகைகள் கிடைப்பாங்க...

//என்னவோ போங்க!!
முகம் பார்க்காமல் "கண்டேன் டி சே ஐ..." ரசிக்கமுடியவில்லை. :-)//

வடுவூர் குமார்
டி.சே அனுமதிக்காமல் முகம் தெரிய படம் போட முடியாதே :(


//டிஜே... சரியான சின்ன பசங்கள் மாதிரி இருக்கிறாரு. இந்த சின்ன வயதிலை எம்மா பெரிய விசயங்கள் எல்லாம் தெரிஞ்சு வைச்சுருக்காரு... டிஜேக்கு எனது வாழ்த்துக்கள் //

சின்ன குட்டி

கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது தானே. வயது சின்னன் (உருவம் இல்லை) எண்டா என்ன. அதுக்காக 16 வயது எண்டு நினைச்சுபோடதைங்கோ ஆனா கலியாணம் கட்டுற வயது தான்... அவருக்கு :)

//Anonymous said...
சந்திரன்ஜி ஃபஸ்டு போட்டோவுல பொகையா ஹிகுற ரெண்டு ஹிப்போ நடுவுல ஸ்பெக்ஸ் போட்டு காட்வாக்றதுதான் டிசேஜியா சுந்தரவடிவேல்ஜியா //

நக்கல்....

said...

//ஆனால் நள்ளிரவு ஒரு மணியளவில் ரோட்டில் தங்கள் ஊரிலிருப்பதுபோல உரத்த குரலெடுத்துப் பாடிக்கொண்டு வந்த இருவரின் 'குதூகலம்' பற்றியும், அந்தக்கொடுமையைக் கேட்டுக் கொண்டுவந்த மற்ற இருவரின் சோகத்தைப் பற்றியும் பதிவு செய்யாததைக் கண்டிக்கின்றேன் :-).//

:)

//நீங்கள் கந்தசுவாமி கோயில் திருவிழாவுக்கோ , அல்லது பெல்லி டான்ஸை குறிவச்சோ போனீங்கள்? //

இரண்டுமே எதிர்பாராமல் அமைந்த நிகழ்வுகள்.....

நான் போனது விடுமுறையில்........... :)