வலைப்பதிவிலை நிறைய பேர் நல்ல சுவாரசியமா எழுதீனம். சிலரோடை எழுத்தை வாசிக்கேக்க, அவை எழுதின கதையோ/ கவிதையோ என்னை அறியாமலே உணர்வுகளை கிளறி விட்டிடும். சொந்த அனுபவங்களையும் நிறைய பேர் எழுதீனம். அதுகளை அப்பப வசிச்சு பொட்டு நானும் ஏதும் எழுதி பாப்பம் எண்டு இருப்பன். ஆனா ஒண்டுமே எழுத வராது. பள்ளிகூடம் பொற நேரம் சைக்கிள் ஓடேக்கையோ இல்லை எங்கையன் தொடருந்துகளிலை போகேக்கயோ பழைய நினைப்புகள் எல்லாம் ஒண்டொண்டா வந்து போகும். அப்ப நினைப்பன் இதுக்கள் எல்லத்தையும் எழுதினா எவ்வளவு நல்லா இருக்கும் எண்டு. ஆனா வீட்டை வந்து எழுதோணும் எண்டு வெளிக்கிட்டா ஒண்டுமே வராது. உப்பிடி கனதடவை எழுதொண்டுமெண்டு பேப்பரும் பேனையோடையும் மணித்தியால கணக்கா இருந்திருக்கிறன். ஆனா கடைசியா பத்த இரண்டு வரிகூட பேப்பரிலை எழுதுபட்டிருக்காது. நேரம் வீணா போனது தான் மிச்சமா இருக்கும்.
உங்கள் ஆருக்கும் இப்பிடி அனுபவம் இருக்கோ?
ஆனாலும் இனி எதாவது எழுத வேணும் எண்டு முடிவெடுத்திருக்கிறன். முடியுமோ?? எனக்கு தெரியேல்லை.
Sunday, 4 February 2007
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
உன்னால் முடியும் தம்பி தம்பி!
வாழ்த்துக்கள், வாருங்கள்.
நன்றி மலைநாடான். நீங்கள் முடியும் எண்டு சொல்லுறியள், ஆனா எழுதொணும் எண்டு இருந்தா ஒண்டும் எழுத வரதாம் :(
சந்திரா!
நானே! இந்த ஆறுமாதம் ஏதேதோ எல்லாம் எழுதிறன்!!ஏன் உம்மாம் முடியாது
இந்த கணனித் தொழில் நுட்பம் உமக்குப் பிடிபட்டிட்டுது; இப்போ நீங்கள் முக்கால் தூரம் நீந்திவிட்டீர்கள்;மிகுதி தானே!!
உங்களுக்குக் காதல் அனுபவம் உண்டா?? தோல்வியானால்;;;எழுதுங்க ..அந்த எழுத்துக்கு வெற்றியே!!
வீட்டில் சின்ன சின்ன பொய் சொல்லியிருப்பீங்களே! அதை எழுதுங்க? அப்பா அம்மா கண்டு பிடித்து பூசை போட்டதும் எழுதினால் படிக்க சுவாரசியமாக இருக்கும்.
தொடங்குங்க!
யோகன் பாரிஸ்
யோகன் அண்ணை நிறைய யோசினையள் எடுத்து விட்டிருக்கிறியள், அடிக்கடி உப்பிடி சொன்னொயள் எண்டா ஏதும் எழுதலாம்
எனக்கும் அடிக்கடி நிறைய ஞாபகம் வரும் ஆனால் எழுத நினைக்கும்போது வராது.கனவில கூட ஏதோ ஏதோ ஞாபகங்கள் வரும் பிறகு எழுத நினைச்சா ஞாபகங்கள் எல்லாம் எங்கோயோ ஓடி ஒளஞ்சிடும். நான் நட்சத்திரங்களைப் பற்றி எழுதினான் அது உண்மையா எனக்கு கனவில வந்நதது மூழிப்வு வந்தபோது பக்கத்தில கிடந்த அஜன்டாவில கிறுக்கி வைச்சிட்டு விடிய எழும்பி எழுதினான்.நீங்களும் நான் சொன்னத கேட்டுச் சிரிக்காம முயுற்சி செய்து பாருங்க பஸ்லயே ஒரு பேப்பர்ல குறிப்புகளை எழுதி வைச்சிட்டு பிறகு கற்பனை கலந்து எழுதலாம்.
\\உங்களுக்குக் காதல் அனுபவம் உண்டா?? தோல்வியானால்;;;எழுதுங்க ..அந்த எழுத்துக்கு வெற்றியே!!\\ :-)
\\வீட்டில் சின்ன சின்ன பொய் சொல்லியிருப்பீங்களே! அதை எழுதுங்க? அப்பா அம்மா கண்டு பிடித்து பூசை போட்டதும்\\ :-)
Post a Comment