இந்த நிகழ்வு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது/ அதை எப்படி இங்குள்ள ஊடகங்கள் செய்தியாக்குகிறன என்பதை பற்றி எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மாநில அரசும் , கனேடிய மத்திய அரசும் இதற்கு எவ்விதத்தில் செயற்படப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
இது சம்பந்தமாக நடந்த அறிமுக கூட்டம் ஒன்றில் மாணவர் தலைவர் ஒருவரால் சொல்லப்பட்ட செய்தி ஒன்று எனக்கு ஒரு உண்மையை தெளிவாக்கியது. எல்லா ஊரிலும் அரசியல் வாதிகள் தமது வாக்கில் தான் குறியாக இருப்பார்கள் என்பது. இங்குள்ள மாநில கல்வி அமைச்சரை சந்தித்த போது கல்வி அமைச்சர் கூறினாராம், கனேடிய மாணவர்களுக்கு கட்டண குறைப்பை பற்றி பரிசீலிக்கலாம். ஆனால் சர்வதேச மாணவர்கள் தமது கவனத்துக்கு உரியவர்கள் அல்ல என்பதாக. மாணவ தலைவர் கூறியது உண்மையானால் அரசியல்வாதிகளின் நோக்கம் எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
வின்னிபெக் இல் உள்ள மாநில பாராளுமன்றின் முன் இரண்டு பலகலை கழக மாணவர்கள் ஒன்றுகூடி இருந்தனார். அங்கு கூடி இருந்த மாணவர் எண்ணிக்கை எனக்கு ஏமாற்றத்தை தந்தது. பல்கலைகழக வகுப்புக்களும் நடந்தன. பெரும் எண்ணிக்கையானோர் வகுப்பில் தான் இருந்திருப்பார்கள் என எண்ணுகிறேன்.
மிகக்குளிரான வெளிச்சூழல் குறைவான மாணவர் பங்களிப்புக்கு ஒரு காரணமாக இருக்க முடியும். அல்லது அனைத்து நிகழ்வுகளுமே இப்படி குறைவான மாணவர் பங்களிப்புடன் தான் நடைபெறுமா?? அதை இங்கு நெடு நாட்களாக இருப்பவர்கள், அறிந்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.
இங்கு மாணவர் போராட்டத்தை அடுத்து நியு பவுண்லாந்து மாநிலம் கட்டணத்தை ஏற்கனவே குறைத்ததாகவும் அறிய முடிந்தது.
எனக்கு ஏன் எண்ணிக்கை ஏமாற்றத்தை கொடுத்தது என்றால், எனது ஒப்பிடுகை ஈழத்து நிகழ்வுகளொடான ஒப்பீடாகவே இருந்தது.
ஈழத்தில் இருக்கும் காலத்தில் பல்வேறுவகையான மாணவர் நிகழ்வுகளை பார்த்திருக்கிறேன். ஒவ்வோரு நிகழ்வும் மிகவும் உணர்வு பூர்வமாக, பல்லாயிரக்கணக்கான மாணவர்களால் ஒருங்கிணைவாக நடாத்தப்படும். போராட்டம்/ பகிஸ்கரிப்பாக இருந்தால் ஒருமித்து மாணவர் சமூகமே அந்நிகழ்வில் இறங்கி இருக்கும். அண்மையில் கூட வடமராட்சி மாணவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து 2 வாரமாக யாழ்குடா நாடு தழுவிய பொராட்டம் பகிஸ்கரிப்பு போராட்டம் நடாத்தப்பட்டு வருவதாக தமிழ்நெட் செய்தி தெரிவிக்கிறது. அந்த போராட்டம் யாராலும் கண்டுகொள்ளப்படாமலே போய்கொண்டு இருக்கிறது.
அதே போன்றே நான் ஈழத்தில் இருந்த காலப்பகுதியில் பொங்குதமிழ் நடாத்துவதில் முன்னின்று உழைத்த யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றிய செயலாளர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட போது பல்கலைகழக மாணவர் பகிஸ்கரிப்பை ஆரம்பித்தனர். அன்று இருந்த அரசு உடனடியாக பல்கலைகழகத்தை மூடி மாணவர்கள் பலகலைகழகத்துக்குள் நுளைய தடை வித்தித்தது. இதன் மூலம் மாணவர்களின் போராட்டத்தை தோற்கடிக்க முனைந்தது.
கடந்த வருடம் கூட துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற ஊர்வலம் இராணுவத்தால் அடாவடியாக அடக்கப்பட்டது.
அண்மையிலும் யாழ் பல்கலைகழக மாணவர் தலைவர் ஒருவர் கைதுசெய்யப்ப்பட்டார். யாழ் பல்கலைகலைகழகம் இன்று வரை மூடப்பட்டே உள்ளது.
மாணவர் போராட்டங்கள் பல கோரிக்கைகளை வைத்து ஈழத்தில் ஆயினும் சரி தென் இலங்கையில் ஆயினும் சரி நடாத்தப்பட்டாலும் அவற்றிற்கான விளைவுகள் எதுவுமே கிடைத்ததாக அறியவில்லை.
2 comments:
விளைவுகள் எதுவுமே கிடைத்ததாக அறியவில்லை
பின்னால் எடுக்கப்போகும் விழைவுகளை தள்ளிப்போட உதவியிருக்கும் அல்லவா?
கனேடிய மாணவர்களுக்கு உண்டான குறைப்பு என்று கூறியது எனக்கு சரி என்று தான் தோனுகிறது.அந்தந்த தேசத்தில் அந்த குடிமக்களுக்கு தான் முதல் மரியாதை.
கனடாவில் பல்கழை கழகங்கள் எப்படி இயங்குகின்றன என்று தெளிவாக தெரியாத பட்சத்தில் என்னால் கருத்து சொல்லமுடியாது.
//விளைவுகள் எதுவுமே கிடைத்ததாக அறியவில்லை//
நீங்கள் சொல்வது சரிதான், நான் சொல்ல வந்த விடயத்தை சரியான முறையில் சொல்ல வில்லை என்றே தோன்றுகிறது. உண்மையில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் சில நல்ல விளைவுகளை ஏற்படுத்தி இருந்தன.
ஆனால் தற்போதைய மாணவர் எதிர்ப்புக்கள் எதுவும் சரியாக கவனிக்கப்பட வில்லை என்பதோடு, அவர்கள் மீண்டும் மீண்டும் அதே பிரச்சனைகளை ஈழத்தில் எதிர் கொள்கிறார்கள்.
Post a Comment