
முதன் முதலாய் கோயிலுக்கு போனது கடல் தீர்த்ததுக்கு.அதுக்கு பிறகு ஒரு நாளும் கடல் தீர்த்ததுக்கோ, அல்லது திருவிழாக்களுக்கோ போனதில்லை. ஈழத்தில் சைக்கிள் தான் பிரதான போக்குவரத்து சாதனம். அது எங்களுக்கும் விதி விலக்கல்ல. அந்த நேரம் தான் இந்திய ஆமி வந்து இருந்த நேரம், சண்டை ஏதும் தோடங்கேல்லை. நானும் சின்ன பொடியன். அக்காவும், அக்கவுடைய சினேகிதிகள், சகோதரர்கள் என ஒரு பட்டாளமே போச்சுது நானும் அவையோட சேர்ந்து போய் வந்தன்.
அதுக்கு பிறகு இந்திய இராணுவந்த்துடனான சண்டை தொடங்கி, இராணுவம் வெளியேறும் மட்டும் கோயிலுக்கு போனதில்லை.
இந்திய இராணுவம் போன பிறகு யாழ்குடா நாடு முழுக்க முழுக்க புலிகளின் கட்டுபாட்டுக்குள் வந்த பின் பல முறை போய் இருக்கிறேன்.
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அப்பப்போ நடக்கும் விமான குண்டு வீச்சு, ஹெலி மூலமான தாக்குதல் என்பவற்றை தவிர்த்து எந்த நேரத்திலையும், எங்கையும் போய் வரலாம் எண்டு இருந்தது.
92/ 93 ஆண்டுகளிலை, ரீயுசனிலை படிச்ச பொடியள் கொன்ச பேரச்சேந்து சைக்கிளிலை மார்கழி ஞாயிறு க்கு வெளிக்கிடுவம். காலமை 6.30 /7 மணிக்கு எல்லாருமா செந்து வெளிக்கிட்டமெண்டா கண்டி வீதி (ஏ9) , கொடிகாமம் பருத்திதுறை வீதி வழியே பயணம் இருக்கும் ( பயண பாதையை வரைபடதிலை பச்சை கோட்டாலை போட்டு காட்டி இருக்கிறன். படத்திலை அழுத்தி பெரிசாக்கலாம்).

(வரைபடம்: www.eelamweb.com இணையம்)
வழிலை சுட்டிபுரம் (சிட்டிபுரம்) அம்மன் கோயிலிலை நிண்டு கும்பிடுவம். அப்பிடியே பொன முள்ளி வெளி வரும், அதாலை தான் உப்பாறு பாயிறது.
காத்து எதிர் காத்தா இருக்கும். சைக்கிள் உழக்கிறது கஸ்டம். வெளிமுடிய கோயில் கோபுரம் தெரியும். எப்பிடியும் ஒரு எழேமுக்கால்/ எட்டு மணிக்கு கோயிலுக்கு போய் செந்திடுவம்.
கொயிலடிக்கு போனா முதல் போறது வல்லிபுர கோயிலுக்கு பின் பக்கமா உள்ள பிள்ளையார் கோயிலுக்கு. அங்க உள்ள கேணிலை குளிச்சு போட்டு பிள்ளையார கும்பிட்டு, அங்க வாற பிள்ளையளையும் கும்பிட்டு கொண்டு வல்லிபுர கோயிலுக்கு போவம்.
அங்க போய் ஆழுக்கொரு அரிச்சனை ரிக்கற் எடுத்து அரிச்சனைனை எவ்வளவு கெதியா முடிக்கேலுமோ முடிச்சு கொண்டு கடற்கரைக்கு போறதிலை தான் எங்கட தவனம் இருக்கும். அரிச்சனை முடிச்சு, கச்சான் வாங்கி கொண்டு, கடற்கரைக்கு போவம்.

கடற்கரை கோயில்லை இருந்து 3 கிமீ இருக்கும். கோயில்லை இருந்து சைக்கிளிலை போகேலாது,நடை தான். நடக்கிறதிலையும் ஒரு சுகமிருக்கும். கடற்கரையை அடையிறதுக்கிடையிலை எப்பிடியும் இரெண்டு மூண்டு மண் புட்டியளை ஏறி கடக்க வேண்டி இருக்கும். ஒவ்வொண்டும் சரியான உயரமானவை (பனையளவு உயரம் வருமோ??)
யார் அந்த புட்டியளை முதல் ஏறிகடகிறது எண்டதிலை போட்டி வரும். எனக்கும் ஓட்டத்துக்கும் வெகுதூரம் எண்டதாலை நான் தான் கடைசியாளா இருப்பன். கடந்தா வாறது வங்க க்டல்.
கொண்டு போன கச்சானை எடுத்து கொறிச்சு போட்டு, கடறரையிலை ஓடி திரியிற நண்டை திரத்துறது, பிடிக்க போறது. ஆனா ஒரு நண்டும் ஆப்பிடாது.
பொற ஆக்கள் ஒருதருக்கும் நீச்சல் தெரியாது, ஆருக்குமேதும் நடந்தா கூப்பிட்ட குரலுக்கு வாறதுக்கு ஆக்களும் இல்லை. குடிமனையும் இல்லை. எல்லாரும் அரையளவு தழுமட்டும் தான் இறங்கி அடிக்கிற அலையிலை குளியல் போடுவம். ஒருதரும் குளிக்க எண்டு உடுப்பெல்லம் கொண்டு போறதிலை. போட்டு கோண்டு போன உடுப்புகளோட அப்பிடியே தான் குளியல். திரும்பி கோயிலுக்கு 3கிமீ நடக்கிறதுக்கிடையிலை எல்லா உடுப்பும் கடல் காத்துக்கு கய்ந்திடும், பிரச்சனை இல்லை.

கொயிலடிக்கு திரும்ப 1/2 மணி ஆகும். அந்த நேரங்களிலை எப்பிடியும் மடங்களிலை பொங்கிற ஆக்கள் அன்னதானம் குடுக்கிற ஆக்கள் எண்டு கன பேர் இருப்பினம். அதிலை சாப்பிட்டு சைக்கிளை எடுத்து பிடிச்சா அடுத்து போய் நிக்கிறது வெளிச்ச வீட்டா அல்லது பருத்தி துறை துறைமுகமா இருக்கும். வெளிச்ச வீட்டிலை ஒரு முறை ஏறி பாத்திருகிறம்.ஏறும் போது எந்த சிக்கலும் இருக்காது , ஆனா இறங்கும் போது தான் பயமா இருக்கும்.
அப்ப சில வீடுகளிலை எள்ளுபாகு/ புண்ணாகோ? செய்து சுட்டச்சுட செய்து வாசலிலை வச்சிருப்பினம். எனக்கு நல்ல விருப்பமான ஒரு சிற்றுண்டி. அதை வேண்டி சாப்பிட்டு கொண்டு பருத்திதுறை யாழ்ப்பாணம் வீதியால வீட்ட திரும்புவம்.வழிலை 1 ம் கட்டை எண்டு நினைக்கிறன் ஒரு பூங்கா இருந்தது அதோட ஒரு சின்ன வாசிக சாலையும் இருந்தது. அந்த பூங்கவிலை போய் கொன்ச நேரம் இருப்பம், சிலர் ஏதும் புத்தகம் வாசிப்பாங்கள். அங்கயிருந்து வெளிக்கிட எப்பிடியும் 4.30 / 5 மணியாவது ஆகும். அதுக்கு பிறகு தான் வீட்டை வெளிக்கிடுவம் பயணம் பருத்திதுறை-சாவச்சேரி வீதியாலை கனகம் புளியடி புத்தூர் சந்தி போய் வீட்ட போக இரவு 7 மணியாகும்.
மிக மிக இனிமையான நாட்கள். பல முறை இவ்வாறு போய் இருக்கிறம் எத்தனை முறை போனாலும் எங்கடை பயண பாதையும், செய்யிற வேலையளும் ஒண்டு தான். எத்தனை முறை சென்றாலும், சலிக்காத பயணங்கள் அவை.
எனறைக்கு யாழ்குடா நாடு இலங்கை அரச கட்டுபாட்டுக்குள் வந்ததோ அன்றைக்கு துலைந்தது எங்கட சந்தோசங்களும், சுததிரமான பயணங்களும்.
41 comments:
பொருத்தமான படங்களுடன் அருமையான பதிவு தந்தமைக்கு நன்றிகள்
\\பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில்\\ kelvipatta maathiri iruke..enga iruku intha kovil?? virivaana pinoodam aaruthalaka elutukiren... athukendoru pathivu poodalum aachariyapadathango.
//பொருத்தமான படங்களுடன் அருமையான பதிவு தந்தமைக்கு நன்றிகள் //
நன்றி கானா பிரபா
//kelvipatta maathiri iruke..enga iruku intha kovil?? virivaana pinoodam aaruthalaka elutukiren... athukendoru pathivu poodalum aachariyapadathango.
//
பொன்னலையிலை தான் இருக்கு :),
எழுதுங்க சினேகிதி
Nakalaa? ponaalaai enga iruku?
நல்லதொரு பதிவு...கால இடவெளி இருந்தாலும் செயற்பாடுகள் ஒரே மாதிரி தான் நல்லதொரு நினைவு மீட்டல்
Nakalaa? ponaalaai enga iruku?
பொன்னாலை வரதாஜப் பெருமாள் இருக்கிற இடத்தில தான்.
வலந்தலையில் (காரைநகர்) பிறந்த நான் வரும் வழியில் போன முதல் கோவில் அது. இப்பவும் கூகுள் ஏர்த்தில கும்பிடுறனான்.
//Nakalaa? ponaalaai enga iruku//
துரையப்பாவை சுட்ட இடம்..
பிறகு..துரையப்பா ஆரெண்டு கேட்க கூடாது
//\\பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில்\\ kelvipatta maathiri iruke..enga iruku intha kovil?? //
சிநேகிதி!
உந்தக் கேள்விக்குப் சரியான பதில் சொல்லக் கூடிய ஆள், மதி அக்காதான்:)
அருமையான நினைவு மீட்டல்
சந்திரன்!
திவ்வியமான பதிவு!
பொன்னாலை வரதராஜரை வட்டுக்கோட்டை போகும் வழியில்; நேவிக்காரன் இறக்கிச் சோதிக்கும் போது
கோபுரத்தைப் பார்த்துக் கும்பிட்டேன். யாராவது படம் இருந்தால் போடுங்கள்.
வல்லிபுரக் கோவில் இரு தடவை சென்றுள்ளேன். எல்லாம் 84 க்கு முதல் தான்.
niir utha vida ezuthamalee irunthirukkalaam
நல்ல பதிவு திரு.சந்திரன். வல்லிபுரத்தெம்மானே என்று ஆழ்வார் பாசுரங்களில் படித்திருக்கிறேன். அந்த வல்லிபுரம் இந்தத் திருக்கோவில் தானா என்று தெரியவில்லை.
நீங்கள் எழுதியுள்ளதில் சில சொற்கள் புரியவில்லை. தமிழகத் தமிழில் அவற்றிற்கு விளக்கம் சொல்லுங்கள்.
வெளிக்கிடுவம் என்றால் கிளம்புவோம் என்று புரிந்து கொண்டேன். சரியா?
எங்கட தவனம் - எங்கள் கவனம், நோக்கம் - சரியா?
கச்சன் வாங்கிக்கொண்டு என்றால் என்ன?
கச்சானை என்றால் என்ன?
வெளிச்ச வீடு என்றால் கலங்கரை விளக்கத்தைச் சொல்கிறீர்களா?
அருமையான நினைவு மீட்டல்
வணக்கம்.
உங்களுடைய பதிவின் வார்ப்புருவில் காணப்படும் கீழுள்ள மீயுரையில்
## .isipost {
text-align: justify;
padding: 2px;
* text-align: justify; *
என்பதை நீக்கிவிட்டால் அனைத்து உலாவிகளிலும்
உங்களது பதிவை படிக்க முடியும்.
மலைநாடான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சினேகிதி வலிகாமத்திலை, காரைநகருக்கு போகும் வழியில் இருக்கிறது என நினைக்கிறேன். சுழிபுரத்தில் இருந்திருக்கிறேன். சுழிபுரத்துக்கு கிட்ட தான். ஆனால் போக சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
//Chandra said...
அருமையான நினைவு மீட்டல் //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//சந்திரன்!
திவ்வியமான பதிவு!
பொன்னாலை வரதராஜரை வட்டுக்கோட்டை போகும் வழியில்; நேவிக்காரன் இறக்கிச் சோதிக்கும் போது
கோபுரத்தைப் பார்த்துக் கும்பிட்டேன். யாராவது படம் இருந்தால் போடுங்கள்.
வல்லிபுரக் கோவில் இரு தடவை சென்றுள்ளேன். எல்லாம் 84 க்கு முதல் தான்.
//
யோகன் பரிஸ், உங்கள் வருகைக்கும்,ஊக்குவிப்புக்கும், நினைவு மீட்டலுக்கும் நன்றி.
//Chandravathanaa said...
அருமையான நினைவு மீட்டல் //
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
//வாசன் said...
வணக்கம்.
உங்களுடைய பதிவின் வார்ப்புருவில் காணப்படும் கீழுள்ள மீயுரையில்
## .isipost {
text-align: justify;
padding: 2px;
* text-align: justify; *
என்பதை நீக்கிவிட்டால் அனைத்து உலாவிகளிலும்
உங்களது பதிவை படிக்க முடியும்.
February 14, //
வாசன் வணக்கம், வாருங்கள்.
உங்கள் ஆலோசனைக்கு நன்றி. கவனத்தில் எடுக்கிறேன்.
//குமரன் (Kumaran) said...
நல்ல பதிவு திரு.சந்திரன். வல்லிபுரத்தெம்மானே என்று ஆழ்வார் பாசுரங்களில் படித்திருக்கிறேன். அந்த வல்லிபுரம் இந்தத் திருக்கோவில் தானா என்று தெரியவில்லை.
நீங்கள் எழுதியுள்ளதில் சில சொற்கள் புரியவில்லை. தமிழகத் தமிழில் அவற்றிற்கு விளக்கம் சொல்லுங்கள்.
வெளிக்கிடுவம் என்றால் கிளம்புவோம் என்று புரிந்து கொண்டேன். சரியா?
எங்கட தவனம் - எங்கள் கவனம், நோக்கம் - சரியா?
கச்சன் வாங்கிக்கொண்டு என்றால் என்ன?
கச்சானை என்றால் என்ன?
வெளிச்ச வீடு என்றால் கலங்கரை விளக்கத்தைச் சொல்கிறீர்களா? //
குமரன் வாருங்கள். உங்களை கண்டதில் மகிழ்ச்சி. வருக்கைக்கு நன்றி.
எமக்கு பாட சாலைகளில் தேவாரங்கள், திருவாசகங்கள் என்பன கற்பிக்கப்பட்டது போல ஆழ்வார்களின் பாசுரங்கள் கற்பிக்கபடுவதில்லை.
அப்பரும், சம்பந்தரும் ஈழத்து திருதலங்களை போற்றிப்பாடியது போல், ஆழ்வார்களும் பாடியிருக்க முடியும். ஆனால் உங்கள் மூலமாக தான் முதன் முதல் இந்த விடயத்தை கேள்விப்படுகிறேன்.
//வெளிக்கிடுவம் என்றால் கிளம்புவோம் என்று புரிந்து கொண்டேன். சரியா?//
சரி
//எங்கட தவனம் - எங்கள் கவனம், நோக்கம் - சரியா?//
சரி
//கச்சன் வாங்கிக்கொண்டு என்றால் என்ன?
//
எழுத்து பிழை, கச்சான் என்று வர வேண்டும்.
கச்சான் என்றால் நிலக்கடலை (Groundnut)
கச்சானை என்றால் என்ன?
மேலே சொன்னது தான்.
நிறையப்பேர் எனக்கு வழி சொல்லியிருக்கிறீங்கிள் நன்றி.அப்பிடியே கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போனால் இன்னும் சந்தோசம் :-)
நானொரு கோயிலுக்குப் போனான் கைதடி வாய்பேசமாதமாட்டாத கண்தெரியாத பிள்ளைகளின்ர பள்ளிக்கூடத்துக்குக் கிட்ட என்று நினைக்கிறன்.இந்தப்பெயரைப் பார்த்தவுடன் ஞாபகம் வந்தமாதிரி இருந்திச்சு.விட்டா நான் பொன்னாலைக்கோயிலடில என்ன மரம் நிக்குதெண்டெல்லாம் கேப்பன்.பிறகு சின்னப்பிள்ளை தனமாயிடும்.
ஒரு நாள் நாட்டுக்குச்செல்லும்போது எப்பிடியாவது அந்தக் கோயிலுக்குப்போகணும்.வழி சொன்னாக்களுக்கும் சேர்த்துக் கும்புடுவன்.
யோகன் பாரிஸ்(Johan-Paris) said…
//பொன்னாலை வரதராஜரை வட்டுக்கோட்டை போகும் வழியில்; நேவிக்காரன் இறக்கிச் சோதிக்கும் போது//
அந்த மனுசனையும் இறக்கிச் சோதிக்கிறாங்களோ?
அதுசரி, அவரென்னத்துக்கு பஸ்ஸில உலாத்த வெளிக்கிட்டவர்?
;-)
//At February 14, 2007 5:05 AM, மலைநாடான் said…
//\\பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில்\\ kelvipatta maathiri iruke..enga iruku intha kovil?? //
சிநேகிதி!
உந்தக் கேள்விக்குப் சரியான பதில் சொல்லக் கூடிய ஆள், மதி அக்காதான்:)//
சுத்தம் ;-)))
கச்சான் - நிலக்கடலை
இங்கு சிங்கையில் சரளமாக உபயோகப்படுத்தும் வார்த்தை.
படங்கள் அருமை. கோவிலின் முன் நான் நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
//வடுவூர் குமார் said...
கச்சான் - நிலக்கடலை
இங்கு சிங்கையில் சரளமாக உபயோகப்படுத்தும் வார்த்தை.
படங்கள் அருமை. கோவிலின் முன் நான் நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. //
வணக்கம் வடுவூர் குமார். உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி.
//அந்த மனுசனையும் இறக்கிச் சோதிக்கிறாங்களோ?
அதுசரி, அவரென்னத்துக்கு பஸ்ஸில உலாத்த வெளிக்கிட்டவர்?
;-) //
:))
//பிறகு..துரையப்பா ஆரெண்டு கேட்க கூடாது//
ஓ..உந்தக் கேள்வி பிறந்த இம் இங்கையோ? சின்னக்குட்டி! சிநேகிதி உந்தக்கேள்வியை போற வா இடமெல்லாம் கேட்டுக்கொண்டு திரியிறாவாம். உதுக்கு கண்டிப்பா பதில் சொல்லவேணும்.
துரையப்பா ஆரெண்டா, துரையப்பாதான்.:)
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said…
//பொன்னாலை வரதராஜரை வட்டுக்கோட்டை போகும் வழியில்; நேவிக்காரன் இறக்கிச் சோதிக்கும் போது//
யோகன்!
உங்களுக்கு எத்தினதரம் சொன்னான். பின்னூட்டம் எழுதேக்க அக்கம் பக்கம் பாத்து, நின்று நிதானிச்சு எழுதுங்கோ என்டு. இப்ப பாத்தியளே, பொன்னாலை வரதராசாரும் செக்கிங்கில நிற்கிறார்:)
Malainaadan???????????
u tooooooooooooooo?
awwwwwwwwwwwwwwwww :-((((
//At February 15, 2007 7:16 PM, சிநேகிதி said…
u tooooooooooooooo?
awwwwwwwwwwwwwwwww :-((((//
இன்ச சினேகிதிய ஆர் அழப்பண்ணுறது , ஆ ஆ
நீங்க அழதங்கோ நான் பபாக்கு பல்லிமுட்டை இனிப்பு வாங்கி தரலாம்
உவை எல்லாருக்கும் குழந்தைபிள்ளையோட சேட்டை
அருமையான பதிவு, 2 வருடங்களுக்கு முன்னர் ஈழத்திற்கு சென்ற போதும் நான் கோவிலுக்கு சென்றிருந்தேன். :) நன்றி
//தூயா said...
அருமையான பதிவு, 2 வருடங்களுக்கு முன்னர் ஈழத்திற்கு சென்ற போதும் நான் கோவிலுக்கு சென்றிருந்தேன். :) நன்ற//
தூயா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//கடற்கரை 3 கிமீ நடை தான்.//
புலோலில இருந்து கோயிலுக்கு பொடிநடையாத்தான் போவம். ஒவ்வொரு தீத்ததிற்கும் கடற்கரைக்கு போறஎண்டா சந்தோசமா இருக்கும்.
பறுவத்திலண்டு வாறதால தீத்தம் முடிஞ்சு திரும்பி வரேக்கை நல்ல நிலவு வெளிச்சமா இருக்கும்.சந்திரன் உதிக்கேக்கை கடற்கரையைப் பாக்கவும் ஒரு வடிவாயிருக்கும்.
2005, மார்கழில போய்ப் பாத்தனான் கோயிலை, நல்ல நினைவு மீட்டல் பதிவு
நன்றி
//செல்லி said...
//கடற்கரை 3 கிமீ நடை தான்.//
புலோலில இருந்து கோயிலுக்கு பொடிநடையாத்தான் போவம். ஒவ்வொரு தீத்ததிற்கும் கடற்கரைக்கு போறஎண்டா சந்தோசமா இருக்கும்.
பறுவத்திலண்டு வாறதால தீத்தம் முடிஞ்சு திரும்பி வரேக்கை நல்ல நிலவு வெளிச்சமா இருக்கும்.சந்திரன் உதிக்கேக்கை கடற்கரையைப் பாக்கவும் ஒரு வடிவாயிருக்கும்.
2005, மார்கழில போய்ப் பாத்தனான் கோயிலை, நல்ல நினைவு மீட்டல் பதிவு
நன்றி //
செல்லி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
நானும் 2005 தான் கடைசியா போன்னான்ன் ஆனா ஆடி/ ஆவணி மாததிலை.
80 களில் நாங்கள் மானிப்பாயில் இருந்து சைக்கிள்களில் நண்பர்களுடன் வல்லிபுரகோயில் தீர்த்தத்திற்கு வருவோம் இன்று அந்த நண்பர்கள் பலர் உயிருடன் இல்லை இந்த பதிவுடன் அந்த நண்பர்களையும் நினைவுகூர வைத்ததற்கு நன்றிகள் அன்னுடன் சாத்து
\\புலோலில இருந்து கோயிலுக்கு பொடிநடையாத்தான் போவம். ஒவ்வொரு தீத்ததிற்கும் கடற்கரைக்கு போறஎண்டா சந்தோசமா இருக்கும்\\
Puloliya??? hmm :-)
//80 களில் நாங்கள் மானிப்பாயில் இருந்து சைக்கிள்களில் நண்பர்களுடன் வல்லிபுரகோயில் தீர்த்தத்திற்கு வருவோம் இன்று அந்த நண்பர்கள் பலர் உயிருடன் இல்லை இந்த பதிவுடன் அந்த நண்பர்களையும் நினைவுகூர வைத்ததற்கு நன்றிகள் அன்னுடன் சாத்து//
வருகைக்கு கருத்துக்கும் நன்றி சாத்திரியாரே.
நல்ல பதிவு சந்திரன் அண்ணை,
யாழ்ப்பாணத்தில மறக்க முடியாத இடங்களில வல்லிபுரக்கோயிலும் ஒண்டு..
நாங்கள் நகரப்பகுதியில இருந்ததால அங்க போறது ஒரு பெரிய பிரயாணம்,,
பள்ளிக்கூடத்தாலயும் ரியூட்டறியாலயும் சுற்றுலா போற ஒவ்வொரு தரமும் அங்க கட்டாயம் போவம்...
ஒரு பழகின நிகழ்ச்சினிரல் போல, நிலாவரை,சன்னிதி,வல்லிபுரம்,பருத்திதுறை..போயிற்று வருவம்...
மற்றது உங்கட பெயர கொஞ்ச நாளைக்குமுதல் தமிழ்மணத்தில கண்டன்,ஆனா உங்கட double initial ஐ பாத்திட்டு விட்டிட்டன்,,அதாவது ஒரு ஈழத்து பதிவராக இருக்கலாம் என நினைக்கவில்லை..
:)
வணக்கம் படியாதவன், வருகைக்கும், கருத்துக்கும். அப்ப சுற்றுலவும் போய் இருக்கிறம். ஆனால் சைக்கிளிலை போற சந்தோசம் கிடைக்காது.
//மற்றது உங்கட பெயர கொஞ்ச நாளைக்குமுதல் தமிழ்மணத்தில கண்டன்,ஆனா உங்கட double initial ஐ பாத்திட்டு விட்டிட்டன்,,அதாவது ஒரு ஈழத்து பதிவராக இருக்கலாம் என நினைக்கவில்லை..
:) //
இது தானே தப்பெண்டுறது.
நானும் இக்கோவிலுக்கு சென்றுள்ளேன்...:) அருமையான நினைவூட்டல்..
Amiable brief and this enter helped me alot in my college assignement. Thanks you seeking your information.
Post a Comment