Sunday, 11 March 2007

கண்ணகி சிம்மவாகினியாகும் கதை

கண்ணகி சிலப்பத்கார நாயகி அதற்கப்பால் வணக்கத்துகுரிய தெய்வமாகவும் மாற்றம் பெற்றவள். கண்ணகி வழிபாடு எப்படி எங்கு தொடங்கியது என்பதை பற்றியெல்லாம் ஆராயும் எண்ணம் எனக்கு இல்லை. தமிழகத்தில் கண்ணகி வழிபாடு இருக்கிறதா? நான் சந்தித்த தமிழக நண்பர்களிடம் கேட்ட போது இல்லை என்றார்கள்.
ஈழத்தில் கண்ணகி வழிபாடு இருக்கிறதா என்றால் இருக்கிறது. சிங்களவர்களும் பத்தினி தெய்யோ என்பது கண்ணகியை என கேள்விபட்டேன் ஆனால் சரியாக அதுவும் தெரியாது கிழக்கு மாகாணத்தில் இருப்பதாக சொன்னார்கள் அதை பற்றி எனக்கு சரியாக தெரியாது.
யாழ்ப்பாணத்தில் கண்ணகிக்கு கோயில் உண்டா என கேட்டால் பலரும் இல்லை என்பார்கள். என்வயதொத்தவர்களில் பலருக்கு தெரியாத போது இனி வரும் சந்ததிக்கு தெரிய வருமா என்பதை சொல்ல முடியவில்லை. ஏன் எனில் பெண் தெய்வங்களும் அம்மன் எனும் பொதுமைக்குள் அடக்கப்பட்டு விட்டதும்; பாரம் பரிய பூசகர்களிடம் இருந்து, ஆகம விதிக்கு உட்படாத கோயில்கள் ஆகம விதியோடு மாற்றியமைக்கப்படுவதும், பட்டதும் காரணம்.

எனக்கு தெரிந்த கோயில்களை பட்டியல் இடுகிறேன்.

1. பன்றிதலைச்சி மட்டுவில் சாவகச்சேரி- கண்ணகை அம்மன் என்பதாக சொல்லபட்டாலும் ஆகம விதிக்கமைய கோயில் அமைக்கப்பட்டு, பார்வதி, பரமேஸ்வரனாகிவிட்ட ஆலயம். பங்குனி திங்கள் சிறப்பானது. பல ஊர்களிலும் இருந்து மக்கள் பொங்க வருவார்கள். சிலம்பு தாங்கிய கண்ணகி சிலை இருந்ததா/ இல்லையா ஞாபகம் இல்லை.

2. மண்டுவில் கண்ணகை அம்மன், மீசாலை சாவகச்சேரி (சோலையம்மன்)
கோயிலை சுத்தி சோலை/ காடு இருக்கு.

ஆகம விதிக்கமைய கோயில், பூசைகள் நடக்கும் ஆலயம். வருடாந்தம் மகோற்சவம் நடக்கும். ஆனால மூலஸ்தானதில் இருந்த சிற்பங்கள் சிலம்பு தாங்கிய பெண் தெய்வ சிலைகள். யுத்ததால் சேதமான பின் மீளமைக்கப்படும் ஆலயத்தில் கண்ணகி சிங்க வாகனம், சூலாயுததுடன் காட்சி தரும் சிலைகள் அமைக்கப்படுகிறன.


3. சுட்டிபுரம் கண்ணகை அம்மன்- கோயில் ஆகம விதிக்கமைய அமைக்கப்படா விட்டாலும் பூசைகள் ஆகம விதிக்கமைய

4. கச்சாய கண்ணகை அம்மன்- கோயில் ஆகம விதிக்கமைய இல்லை-பூசை ஆகம விதிகமைய
5. விடத்தற்பளை கண்ணகை அம்மன்- பூசை பரம்பரை பூசகர்.


வன்னியில் பூனகரியில் ஒரு கண்ணகை அம்மன் ஆலயம் உண்டு என்பது தெரியும். அதை விட மேலதிகமாக எனக்கு தெரியாது.

அடுதது வன்னியர் கோயில் எனும் ஒரு கோயிலை பற்றியும் சொல்ல வேண்டும்.

இது சாவகச்சேரியில் இருந்து கச்சாயூடாக கிளாலி செல்லும் வீதியில் விடத்தற்பளையில் இருக்கிறது.

வீதியொரம் இருந்தாலும், மிகுதி மூன்று பக்கமும் பற்றைகளால் சூழப்பட்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஒரு குளம்.
கடவுளுக்குரிய உருவமோ சிலைகளோ இல்லை.
தகரத்தால் கூரையிடப்பட்ட பந்தல்கள். நான்கு பக்கமும் திறந்தவை.
வன்னியர் அப்பந்தல்களுக்கு வெளியே மூன்று பக்கமும் கிடுகு வேலியால் சூழப்பட்டு, கூரையற்று மழை வெயில் காய்ந்தபடி இருந்தார். வருடத்தில் ஒரு முறை பொங்கல் படையல் அதை தொடர்ந்து எட்டம் மடை மட்டுமே அவருக்கான பூசை
அண்மையில் (2005) போன போது பார்தால் கூரையற்று இருந்தாருக்கு சிறு சிமேந்து கட்டிடம், ஓட்டு கூரை என ஆலய வடிவம் பெற்றது மட்டுமல்ல கோயில் வாசலி திரையில் வள்ளி தெய்வானை சமேதராக முருகன் காட்சி தந்தார்.
இன்னும் பத்து வருடங்களில் ஆகம விதிக்கமைய கோயில் அமைக்கப்பட்டலாம். வன்னியரோட பெயர் சிறி சுப்பிரமணியர் ஆகலாம்.

இதை எழுதியது எனக்கு தெரிந்த ஒரு இரு பத்தாண்டு காலதுக்குள்ளே கண்ணகி என்று சிறுவயதில் சொல்லப்பட்ட ஆலயங்கள் துர்க்கை/ பார்வதியாக மாறுவதும், வன்னியர் சுப்பிரமணியர் ஆவதும் நடக்கிறதென்றால். இதே போல எவ்வளவு மாறியிருக்கும் என்பதை எண்ணி பார்ப்பதற்கே.

8 comments:

said...

ஒன்டு கூடக் கேள்விப்பட்ட கோயிலா இல்லை...சோலைக் கோயில் நல்லாயிருக்கு.

said...

தென் தமிழீழத்தில் இன்னும் சிறப்புடன் கண்ணகி வழிபாடு நிலவி வருகின்றது. பதிவுக்கு நன்றிகள்.

said...

சினேகிதி வருகைக்கு நன்றி. நீங்க எப்பவோ பன்றி தலைச்சி கோயில்ல நடக்கிற சம்பவம் பற்றி கதை எழுதின ஞாபகமா இருக்கு... அப்பிடி இல்லை எண்டா குறை நினைக்கதங்கோ

//தென் தமிழீழத்தில் இன்னும் சிறப்புடன் கண்ணகி வழிபாடு நிலவி வருகின்றது. பதிவுக்கு நன்றிகள். //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கானா பிரபா.

அப்பிடி தான் நானும் கேள்விபட்டிருக்கன்.

said...

இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சீர்காழி கோவிந்தராஜன் வந்து இசைக் கச்சேரி நடத்தினவர்.அப்போது அவர் இந்தக் கோயிலைப் பற்றி
"சுட்டிபுரம் வாழுகின்ற சுந்தரியே கண்ணகியே
கட்டியுந்தன் கால் பிடித்தேன்
அருணைக் கண்ணால்ப் பாருமம்மா!"
என்று பாடி அனைவரின் பாராட்டையும் அங்கு பெற்றிருந்தார்.
பகிர்ந்தமைக்கு நன்றி

said...
This comment has been removed by the author.
said...

சேல்லி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சுட்டி புரத்து திருவிழாவை பற்றி கேள்வி பட்டது மட்டும் தான். சிகரங்கள், சின்ன மேளம், மேள சமா பாட்டு கோஸ்டி எண்டு. எங்கட காலத்திலை அதுகள் எல்லாம் இல்லை

படத்திலை இருக்கிறது சுட்டிபுரம் இல்லை. அது மண்டுவில் அம்மன் கோயில். ஆனா இரண்டு கோயிலை சுற்றியும் சோலை இருக்கு அதாலை நீங்க குழம்பினதிலை ஆச்சரியம் இல்லை.

said...

இது தவிர நவாலியில் களையொடை அம்மன் கோயில் என்று ஒரு கோயில் உண்டு. மதுரையை எரித்த கண்ணகி இங்கே வந்து தான் நீரருந்தி தன் தாகம் தீர்த்ததாய் கூறுவர். அந்த கிணறு (அளவில் சிறியது ) இன்றும் உண்டு. எவ்வளாவு இறைத்தாலும் நிர் வற்றாதது இந்த கிணறு.

said...

//இது தவிர நவாலியில் களையொடை அம்மன் கோயில் என்று ஒரு கோயில் உண்டு. மதுரையை எரித்த கண்ணகி இங்கே வந்து தான் நீரருந்தி தன் தாகம் தீர்த்ததாய் கூறுவர். அந்த கிணறு (அளவில் சிறியது ) இன்றும் உண்டு. எவ்வளாவு இறைத்தாலும் நிர் வற்றாதது இந்த கிணறு.//

இதை விடவும் வேறு கோயில்களும் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் ஊர், பெயர்கள் சரியாக தெரியவில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.