மொழி படம் பார்த்தேன். வலைப்பதிவில் பலரும் எழுதியதை போல படம் நன்றாகவே இருந்தது. அதை விட மேலதிகமாக நான் என் பங்குக்கு விமர்சனம் எழுத விரும்பவில்லை. (விமர்சனம் செய்ய தெரியா எண்டே சொல்லலாம்)
படத்திலை ஒரு நகைச்சுவை காட்சி வரும்.
பிரகாஸ்ராஸ், பிரித்வி இருவரும் புதிதா போன அப்பாட்மெண்ட் இன் செயலாளர் பச்சிலேர்சுக்கு வீடு வாடைக்கு கொடுப்பதில்லை என்பதாக. அதன் பின்னணியில்
பிரகாஸ்ராஜ்: பிரித்விய கல்யாணம் செய்ய சொல்லி, பிரித்விகிட்ட அம்மா பார்க்கிற பொண்ண கல்யாணம் செய்ய சொல்லுவார்
பிரித்தவிராஜ: கல்யாணம் தானா அமையணும், பொண்ண பாத்த உடன தெரியணும், அவகூட வாழணும் என்பதாக
பிரகாஸ்ராஜ்: அதெப்பிடிடா தெரியும்
பிரித்த்விராஜ்: நடக்கணும், கமேடி புக்கில சொன்ன மாதிரி தலைக்கு மேல பல்ப் எரியணும், மணி அடிக்கணும் என்பார்
பிரகாஸ்ராஜ்: அப்பிடி பல்ப் எரியணும் எண்டா நீ எலக்ரீசியனாவோ இல்லை சேர்சிலை மணி அடிக்கிறவனாவோ இருக்கணும் எண்டு.
அதே மாதிரி எங்கட பள்ளி காலத்திலையும் ஒரு நண்பி தனக்கு வரும் கணவனை பற்றிய எதிர்பார்ப்பை சொன்னார்.
தனது கணவன் தன்னை விட மேலான ஒரு இடத்தில் (ஸ்டேடஸ்), நல்ல சிவப்பா இருக்க வேணும் என்பதாக. அதை வைத்து எமது வகுப்பில் ஒரு நகைச்சுவையே உருவாக்கி இருந்தார்கள். பின்னர் அந்த நகைச்சுவை பள்ளி படிப்பு முடித்து வெளியேறும் போது எமக்கு கொடுக்கப்பட்ட பிரியாவிடை மலரிலும் ஒரு காட்டூனாக இடம்பெற்றது.
அந்த காட்டூனை கீழே இணைத்துள்ளேன்.
அந்த தோழி தனக்கு பிடித்த ஒருவரை மணம் முடித்து இப்போ மகிழ்வாக இருக்கிறார். ஆனால் அவர் பள்ளி பருவத்தில் சொன்ன நிபந்தனைகளை அவரது தெரிவு நிறைவு செய்ததா என்பது தெரியவில்லை.
Sunday, 25 March 2007
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
Hello!
Thank,s for you work and have a good week
எல்லாரும் மொழி படத்தை இப்பிடிப் பாராட்டுறீங்கள்...நானின்னும் பார்க்கேல்ல :-(((
சேர்ச்ல வேலை செய்யிறவருக்கும் மணியடிக்கிறதுக்கும் என்ன தொடர்பு ?
கார்ட்டுன் நல்லாயிருக்கு.
Where did you get the movie from?
Got any sources in Winnipeg? :-)
Bobby
from Lethbridge, AB
vbgbobby@hotmail.com
//Where did you get the movie from?
Got any sources in Winnipeg? :-)
Bobby//
இல்லை இணையத்தில் இருந்து தரவிறக்கிகொண்டேன். :)
கவனம், இணையத்தில் பிரகாஷ்ராஜ் உலாவினால் உமக்கு ஆப்பு தான்.
டேவிட் சந்தோஸ் தொடர்ந்து வி.ஜே. செல்லி, என் பதிவுகளைப் படித்துக் கருத்தளிப்பதற்கு நிச்சயம் கடமைப்பட்டிருக்கிறோம்.
//கவனம், இணையத்தில் பிரகாஷ்ராஜ் உலாவினால் உமக்கு ஆப்பு தான்.//
ஆகா மனிசரை பயப்பிடுத்திறாங்கப்பா :(
//டேவிட் சந்தோஸ் தொடர்ந்து வி.ஜே. செல்லி, என் பதிவுகளைப் படித்துக் கருத்தளிப்பதற்கு நிச்சயம் கடமைப்பட்டிருக்கிறோம்.//
அவாரோட புளொக்குக்கு போனா போர்த்துகெய மொழி படிச்சு தான் அதை படிக்கணும்
செல்லி சொன்ன மாதிரி ஒரு ஆங்கில கவிதை எழுதி இருக்கார். நல்லா இருக்கு. அதிலை போய் நன்றி தெரிவிச்சிட்டு வந்தன். :)
//சேர்ச்ல வேலை செய்யிறவருக்கும் மணியடிக்கிறதுக்கும் என்ன தொடர்பு ?//
சேர்ச்சிலை மணி அடிக்கிறவரா இருந்தா தானே காதலிய கண்டோடனம் மணி அடிக்கும்....
untha cartoon ai engkayoo paththa gnapakam, niingka engka padichchaniyal- Sri
Post a Comment