Sunday, 11 March 2007

உப்பு தூள் மாங்காய்

உப்பு தூள் மாங்காய் யாருக்காவது வாய் ஊறுதா?

பள்ளிப்பருவத்திலை எத்தினை பேர் களவாய் மாங்காய் ஆய்ஞ்சு, உப்பு தூளோட சாப்பிடிருக்கிறியள்? அந்த நேரம் எந்த மாங்காய திண்டாலும் ருசியா தான் இருக்கும். ஆனா மாங்காய சாப்பிட சேலம், பச்ச தின்னி மாங்காய்கள் தான் திறம்.
அதிலையும் மாங்காய கத்தியால வெட்டாம மரத்திலை குத்தி திண்டா அதிலை ஒரு சுவை இருக்கு.

கானா பிரபா நல்ல ஒரு பதிவே போட்டிருந்தவர்.
அப்பிடி எல்லாம் அதிகமா எழுதேல்லை நான் இப்ப சும்மா படங்காட்ட தான் வெளிக்கிட்டனான். அதுக்கு உப்பையும் தூளையும் இழுத்தன் வேற ஒண்டுமில்லை.

அண்டைக்கு இலுப்பங்காய மாங்காய் எண்டு அடையாள படுத்தின்னியள். இண்டைக்கு இதிலை போட்டிருக்கிற மாங்காயளிடை பேருகளை சொல்லுங்கோ ;)

கடைசியா இருக்கிறத மா எண்டு சொல்லி போடதங்கோ :)



























28 comments:

said...

1 - விலா(ளா)ட்டு மாங்காய்
5 - கிளிச்சொண்டு
6 - பி(ப)லாப்பழம்

said...

மாம்பழத்தை விட மாங்காய் தான் உருசி அதிகம்.... அதிலும் கள்ள மாங்காய்... பாடசாலை தோறும் சண்டில்களில் வைத்து ஒன்று 3 ரூபாய் என்று மாங்காய் வாங்கி சாப்பிட்ட ஞாபகத்தை கிளறிவிட்டீர்கள்

said...

1. மல்கோவா
2. கிளிமூக்கு மாங்காய்
3. பலாப்பழம்
4. வாழைப்பழம்

said...

3- கறுத்தக்கொழும்பு?
4- அம்பலவி?

said...

oops confused above...
3-கறுத்தக்கொழும்பான்
4- செம்பாடு (?)
5- சேலம் (என்றும் நாங்கள் சொல்வதுண்டு)

said...

1.விலாட்
2,3.கறுத்தகொழும்பான் (மூண்டாவது பாண்டி மாதிரியும் கிடக்கு.)
4.பச்சத்தண்ணி
5.சேலம்(ஒரு தேங்காயும்)
6.90 மோட்டச்சைக்கிள்

said...
This comment has been removed by the author.
said...

//4. வாழைப்பழம் //

நாமக்கல் சிபி வருகைக்கு நன்றி.
எங்கயாவது வாழைப்பழம் போட்டிருக்கிறனோ? :))

நீங்க முதலாவதை மல்கோவா எண்டு சொல்லி இருக்கிறியள். எனக்கு மல்கோவா எப்பிடி இருக்கும் எண்டு தெரியா.

நாங்க வேற பெயர் சொல்லுறனாங்கள்.


மிச்ச ஆக்களின் பதில்களை பற்றி பிறகு சொல்கிறேன்.

Anonymous said...

ஆகா கள்ள மாங்காய் புடுங்கி களவாய் உப்பு தூள் வீட்டை எடுத்து போய் அது காத்துக்கு கண்ணுக்கை போக அப்படியே தூள் பட்ட கையாலை கண்ணை துடைக்க ஐய்யோ என்ன பழைய அனுபவங்கள் எல்லாத்தையும் ஞாபகப்படுத்திவிட்டீர்களே!
1. விளாட்
2)கருத்தகொழும்பான்
3)கருத்த கொழும்பான்
4)புளிமாங்காய்
5)மால்கோவா (இப்படி தான் நாமும் அழைப்போம்)
6)பாலாப்பழம்

said...

நானுந்தான் பாக்கிறன் ஆராவது யாழ்ப்பாண்த்துக் கறுத்தக் கொழும்பான் படம் போடுகினமோ எண்டு. ம்ஹும்...
ஒருத்தரிட்டையும் இல்லைப்போல.
கிளிச் சொண்டு, நல்ல வடிவாயிருக்கு. பள்ளிக்கூட ஞாபகமெல்லாம் வருகுது; வாயூறுது.
பகிர்ந்தமைக்கு நன்றி.

said...

//90 மோட்டச்சைக்கிள்//
வசந்தன். அதில ஒரேயொரு மோட்டர் சைக்கிள் தானே நிற்கிறது.

said...

செல்லி,

கறுத்தக்கொழும்பானைப் பார்க்க இதோ

http://kanapraba.blogspot.com/2006/11/blog-post.html

said...

1) விளாட்
2) கறுத்தக் கொழும்பான்??? (சற்று வெளிறலா இருக்கு)
3) வெள்ளைக் கொழும்பான்
4) அம்பலவி
5) கிளிச் சொண்டு; சேலம்
ஒரு தேங்காய்; கொஞ்சப் பலாக்காய்

Anonymous said...

நாங்கள் வாய்க்கால் குந்திலதான் குத்தி பிக்கிறனாங்கள்.
உப்பும் மிளகாய்த்தூளும் மாங்காயுமென்டு இப்பிடி வாய்யூற வச்சிட்டியல்.

said...

என்ன நான் மட்டும்தான் பிழையா பிழையாச் சொல்லயிருக்கிறனோ?? வி.ஜே விடையைச் சொன்னாத்தானே பாஸோ பெயிலோ என்று தெரியும்.

said...

சினேகிதி, அருண்மொழி,
டிசே, வசந்தன், அனனி அன்பர் 1, செல்லி, சயந்தன், யோகன் பரிஸ், அனனி அன்பர்2 அனைவரது வருகைக்கும் மாங்காய்களை அடையாளப்படுத்தியதற்கும் நன்றி.

அனனி அன்பர் 2 எங்கட ஊரிலை வாய்கால் இருந்த தானே குத்த.

said...
This comment has been removed by the author.
said...

சரி எல்லாரும் ஆவலோட எதிர்பார்த்த விடை இதோ
1. விலாட்டு
2.அம்பலவி (கிளிசொண்டன்எண்டும் இத தனே சொல்லுறது இல்லையோ ?)
3.கறுத்த கொழும்பான்
4. கொடி மா எண்டு எங்கட ஊரிலை சொல்லுறது. புதிய மா இனம். கொப்புகள் கொடிபோல வளைந்து வளருறதாலை அப்பிடி பெயர். உண்மையான பெயர் யாருக்கும் தெரியா. நல்ல இனிப்பு மாம்பழம் , வித்தியாசமான சுவை.

5. சேலம்-
6. பலா மரம் பலாக்காய்

அனனி நண்பர் 2. சேலம் மாங்காய மல்கோவா எண்டு சொல்லியிருக்கிறியள். சின்னனிலை மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் எண்ட பாட்டு படிக்கிற நேரம் அது எந்த மா எண்டு கேக்க அப்பா சேலம் மாவை தான் சொன்ன நினைவு.

ஆனா இந்தியாவிலை அதே பெயரிலை ஒரு மாம்பழம் இருக்கு தானே. அதுகும் எக்கட சேலமும் ஒண்டோ எண்டத ஆரும் சொன்னா தான் எனக்கு தெரியும்.


மற்றும் படி மோட்டசைக்கிளை அடையளம் சொன்ன வசந்தனுக்கு எனது பாராட்டுக்கள்.

இதிலை என்ன பாஸ் பெயில் போட இருகு நீங்க 6 இலை 3 ஐ சொல்லி போட்டு பாஸ் பெயில் கேட்ட என்ன கணக்கு ஆ :))

பச்சதண்ணி/ தின்னி படத்திலை இல்லை.
எங்கட வீடு/ காணியளுக்க பெரும்பாலும் எல்லா மா இனமும் நிக்குது.

பாண்டி, சில புளி மாக்களை இப்ப தறிச்சு போட்ட எண்டு சொல்லுபட்டுது வீட்டுகாரர். :(

said...

கானா பிரபா உங்கட பெயர தவற விட்டிட்டன் :( வருகைக்கு நன்றி

said...

\\கானா பிரபா உங்கட பெயர தவற விட்டிட்டன் :(\\

prabanna i think VJ did that on purpose ean endu kellungo kellungo:-)

said...

சினேகிதி சொன்ன மாதிரி உது திட்டமிட்ட சதி, புளக்கர், தமிழ்மணம் வரிசையில இப்ப நீங்கள்

said...

உங்கள் கருத்தும் இன்னுமொரு அனனி நண்பரின் கருத்தையும் தவறுதலாக அழித்துவிட்டேன். மன்னிக்கவும்

நளாயினி தாமரை செல்வன்,, அனனி நண்பர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

said...

நளாயினி தாமரை செல்வன்,, அனனி நண்பர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
உங்கள் இருவரது கருத்தையும் தவறுதலாக அழித்துவிட்டேன். மன்னிக்கவும்

Anonymous said...

நான் சினேகிதி சொல்லாத படங்களுக்குத்தான் பதில் சொன்னனான்...ஆகவே ரொரண்டோக்காரர்கள்தான் first. எங்களுக்குப் பரிசு என்ன?

said...

டிசே பரிசா அனுப்பிட்டா போச்சு ஆனா அத உங்களுக்கனுப்பிறதா சினேகிதிக்கனுப்பிறதா ?

said...

\\டிசே பரிசா அனுப்பிட்டா போச்சு ஆனா அத உங்களுக்கனுப்பிறதா சினேகிதிக்கனுப்பிறதா ?\\

athu anupura parisai porthathu :-)
sapaadu item enda enaku..books endal DJ ku.

said...

//வி. ஜெ. சந்திரன் said... மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்//
எது போக்கிரிப் பாட்டோ?? :)

எனக்கு மாம்பழம் சாப்பிடத்தான் தெரியும்.. கண்டு பிடிக்கத்தெரியாது.. ஆனா விளாட்டையும் மற்றதுகளையும் ஓரளவு வேறுபடுத்த தெரியும்..
போட்டிக்கு நான் வரேல்ல..

பச்சைத்தின்னி எண்டுதான் கேள்விப்பட்டிருக்கிறன்..
பச்சைத்தண்ணி எண்டும் சொல்லிறதோ?
அதை பச்சையாவே தின்ன நல்ல ருசி எண்ட அர்த்தத்தில தான் அப்பிடி பெயர் எண்டு சின்னனில சொல்லித்தந்தவை..

said...

//பச்சைத்தின்னி எண்டுதான் கேள்விப்பட்டிருக்கிறன்..
பச்சைத்தண்ணி எண்டும் சொல்லிறதோ? //
அப்பிடி தான் நினைக்கிறன்