தலைப்பை பார்க்க என்ன தோன்றுகிறது?
" மேற்கிந்திய தீவுகளை முழுக்க முழுக்க இந்தியர்களை கொண்ட சிறிலங்காவின் அணி நன்றாக விளையாடி வென்றது. மேற்கிந்திய தீவு அணியில் 2 அல்லது 3 இந்தியர்களும், மிகுதி கறுப்பர்களாகவும் இருந்தமையால் குறிப்பாக கறுப்பர்களின் திறமையற்ற ஆட்டத்தால் தோற்றது"
இப்படி யராவது சொன்னால்??
கிரிக்கெட் விளையாட்டின் இரசிகனோ, அல்லது விளையாட்டு பற்றி அதிக ஆர்வமோ இல்லாத எனக்கே இந்த கூற்றை தாங்கவோ ஜீரணித்து கொள்ளவோ முடியாவில்லை. இதையே சிறிலங்கா அணியை சேர்ந்த யாரும், அல்லது சிறிலங்கா ரசிகர்கள் அல்லது சிறிலங்காவின் மக்கள் கேட்டிருந்தால் ??
கறுப்பர்கள் பற்றி அவர் வைத்திருக்கும் மதிப்பீடு பற்றி நான் குறிப்பிட விரும்பவில்லை. ஏன் எனில் எம்மவர்கள் பலரும் கறுப்பின மக்களை மதிக்கும் மன பக்குவததை கொண்டிருக்கவில்லை என்பது நன்கு தெரிந்த விடயம்.
நேற்று ஒரு விருந்துபசாரத்தில் கயான நாட்டை சேர்ந்த ஒருவரை சந்தித்தேன். பரஸ்பர விசாரணைகளின் போது எனது நாட்டை பற்றி அவருக்கு கூறிய போது நான் கிரிக்கெட் ரசிகரா என கேட்டதன் பிற்பாடு அவரால் கூறப்பட்ட கூற்று தான் மேலே சொன்னது. அவருடைய பெயர் "ரிஷி" தென அமெரிக்காவின் சில நாடுகளில் காலனிய காலத்தில் குடியெற்றம் செய்யப்பட்ட இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். அவரது கூற்று ஆரம்பத்தில் எனக்கு அசௌகரியமாக இருந்தாலும், அதை தொடர்ந்து அவர் கேட்ட கேள்விகள் என்னை மேலும் ஆச்சரியபட வைத்தாலும், இலங்கை கிரிகெட் அணி பற்றிய அவர் கூற்றுக்கான காரணத்தை புரிந்து கொள்ளகூடியதாக இருந்தது.
அவர் கேட்ட அடுத்த கேள்வி
"உங்கள் நாட்டில் எவ்வளவு விகிததினர் கறுப்பர்கள், வேள்ளையர்கள், இந்தியர்கள்; கயானாவில் 60% க்கு மேல் கறுப்பர்கள், மிகுதி இந்தியர்களும், ஏனையவர்களும் என்றார். ஏன் ஒரு கறுப்பர்களும் உங்கள் நாட்டு அணியில் இல்லை? ".
இது என்னை மேலும் ஆச்சரியப்பட வைத்தது. அப்போது தான் புரிந்து கொண்டேன் அவரது சிந்தனை மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான கயானாவில் காலனிய காலத்தில் இந்தியர்களும், கறுப்பினத்தவர்களும் குடியேற்றப்பட்டது போல, இலங்கையிலும், அவ்வாறான குடியேற்றம் நிகழ்ந்திருக்கும் என்பதாகவே அவரது கற்பனை இருக்கிறது.
தெற்காசிய மக்களில் பெரும் பகுதியினர், அறிமுகமற்ற மக்களுக்கு ஒரே மாதிரியான தோற்றத்தையே தருவர், என்பது புலம் பெயர்ந்து வந்த பின் நான் அறிந்து கொண்டது. பல சந்தர்பங்களில், என்னையே பலர் தவறாக அடையாளம் கண்டு தங்கள் நாட்டு மொழிகளில் வணக்கம் சொல்லி, பதிலுக்கு நான் உங்கள் நாட்டவன் அல்ல என விளக்கமும் சொல்லி ஆங்கிலத்தில் பதில் வணக்கம் அனுபவ பட்டதால் அவரது பொது அறிவில் உள்ள போதமையை புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால் அவர் சொன்ன வாக்கியம் ஒரு பக்கம் சிரிப்பை தந்தாலும், மறுபக்கம் அதை இப்போது வரை ஜீரணித்து கொள்ள கடினமாகவே இருக்கிறது.
Thursday, 5 April 2007
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஆரம்ப காலத்தில் நமது கலரை பார்த்தவர்கள் பொதுவாக இந்தியார்கள் என்று தான் குறிப்பிடுவார்கள். இப்போது தான் சிறிலாங்கன் இந்தியன் என்றா வித்தியாசம் மற்ற இனத்தவர்களுக்கு தெரிகின்றது என்று நினைக்கின்றேன்.
//ஆரம்ப காலத்தில் நமது கலரை பார்த்தவர்கள் பொதுவாக இந்தியார்கள் என்று தான் குறிப்பிடுவார்கள். இப்போது தான் சிறிலாங்கன் இந்தியன் என்றா வித்தியாசம் மற்ற இனத்தவர்களுக்கு தெரிகின்றது என்று நினைக்கின்றேன்.//
கனடாவில் அதிக அளவில் எம்மவர்கள் இருப்பதால் வித்தியாசப்படுத்த முடியலாம். ஆனால் அதிகமாக எம்மவர்கள் இல்லாத இடங்களில் இன்னும் இருக்க தான் செய்கிறது.
நான் ஒரு இந்திய தமிழன். லண்டனில் ஒரு கறுப்பன் நாங்கள் நண்பர்கள் மூன்று பேர் சாலையில் செல்லும்போது ஸ்ரீலங்கா என்று கத்திவிட்டுப் போனான். ஐரோப்பாவில் தமிழர்களைப் போல தோற்றம் உடையவர்களையெல்லாம் ஈழத்தவர் என்று நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
Post a Comment