Sunday, 8 April 2007

Hamburger - பிரியர்களுக்கு

Hamburger பிரியர்கள் எல்லோரும் வீட்டிலோ அல்லது உணவகங்களிலோ சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பெரும்பாலான உணவு தரப்படுத்தும் அரச நிறுவனங்களால் அறிவுறுத்தப்படுகிறது. ஏன் இவ்வாறான அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது என நினைக்கிறீர்கள்.
முக்கிய காரணம் Escherichia coli O157: H7 (E. coli O157:H7) எனும் உணவு மூலம் பரவும் நோயாக்கி பக்ரீரியா பிரதானமாக மாட்டிறைச்சியுடன் பரவுவதே காரணமாகும். E. coli O157:H7 சாதாரணமாக மாடு, ஆடு, செம்மறி ஆடு, மான் என்பவற்றின் குடல் பகுதியில் அந்த விலங்குகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் வாழும் ஒரு பக்ரீரியா ஆகும். ஆனால் இது உணவு மூலம் மனிதனின் குடல்/ சமிபாட்டு தொகுதியை அடையும் போது மனிதரில் நோயை ஏற்படுத்துகிறது.ஒளிப்படம் பெறப்பட்டது: http://anthropik.com/wp-uploads/e-coli.jpgஇந்த பக்ரீரியா ஏற்படுத்தும் நோய்களாக

இதன் தாக்கத்தால் வருடாந்தம் 73 000 பேர் ஐக்கியா அமெரிக்க நாடுகளில் மட்டும் பாதிக்கப்படுகிறனர். அவர்களில் 61 இறப்பை சந்திக்கிறனர்.

1. குருதியுடன் கூடிய வயிற்று போக்கு.

E. coli O157:H7 உணவுடன் சென்றடைந்து 3- 4 நாட்களில் நோய் ஏற்படுகிறது. குருதியுடானான வயிற்று போக்கு, வயிற்று குழப்பம் என்பவற்றை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் குருதி போக்கற்ற வயிற்று போக்கோ அல்லது எந்த அறிகுறிகளுமோ தோன்றாமல் இருக்க கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. சிறிதளவு காய்ச்சல் ஏற்படலாம். நொய் ஏற்பட்டு 5- 10 நாட்களில் பொதுவாக குணமாகிவிடும்.

2. Hemolytic uremic syndrome (HUS)

சில வளர்ந்தவர்கள், மற்றும் 5 வயதுக்கு குறைந்த சிறுவர்கள், முதியவர்கள் ஆகியோரில் குருதி கலங்கள் சிதைவு, சிறு நீரகங்கள் செயலிழப்பு என்பன ஏற்படுகிறது. பொதுவாக வயிற்று போக்கு ஏற்படுபவர்களில் 8% ஆனோர் இப்படியான தீவிர நோய் தாக்கதுக்கு உள்ளாகிறார்கள்.

3. நீண்ட கால தாக்கங்கள்


E. coli O157:H7 நோய் தாக்கம் ஏற்பட்ட ஒரு சிலரில் நீண்ட கால பக்க விளைவுகளாக அவயவங்கள் செயல் இழப்பு (paralysis), சிறு நீரக செயல் இழப்பு (persistent kidney failure), உயர் குருதி அழுத்தம் என்பவை சொல்லப்படுகிறன.
எவ்வாறு E. coli O157:H7 பரவலடைகிறது

இது பொதுவாக மாட்டின் குடல் பகுதியில் காணப்படுவதால்
முறையாக சமைக்கப்படாத hamburger, அரைத்த இறைச்சி என்பவற்றுடன் பரவ முடியும்.

அடுத்து, முளை அரும்புகள் (sprouts), லெற்றியுஸ் (lettuce), கீரை (spinach), சலாமி (salami), பாஸ்ரராக்கம் செய்யப்படாத பால் (unpasteurized milk), பழச் சாறு (juice)
மற்றும் மல கழிவுகள் தொற்றுதலடைந்த குடி நீர்/ நீச்சல் குளம்.

இவற்றுக்கு மேலதிகமாக தோற்று ஏற்பட்ட மனிதர்களில் இருந்து சரியான சுகாதார பழக்கவழக்கம் இன்மையால் இலகுவில் பரவலடைய முடியும்.
எவ்வாறு தொற்று ஏற்படாமல் தவிர்ப்பது


1. வீடுகளில் hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சியையோ சமைக்கும் போது இறைச்சி முழுமையக நன்கு சமைக்கப்பட்டிருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் விவசாய துறை (FDA) அரைத்த இறைச்சி, hamburger என்பவற்றை சமைக்கும் போது அவற்றின் வெப்ப நிலை 71.1 பாகை டிகிரி செல்சியஸ் (160 டிகிரி பரனைட்) வெப்ப நிலையை அடையும் வரை நன்கு சமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது.
மேலும் சமைக்கப்பட்ட இறைச்சி, hamburger என்பவற்றை 40 - 140 பாகை பரனைட் வெப்ப நிலையில் 3- 4 மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்க கூடாது எனவும் அறிவுறுதுகிறது.

2. உணவகங்களில் சரியாக சமைக்கப்படாத hamburger அல்லது அரைத்த மாட்டிறைச்சி வழங்கப்பட்டால் அவற்றை சரியான முறையில் சமைத்து தருமாறு கேட்பதுடன், புதிதாக பண், சாப்பாடு பாத்திரம் என்பவற்றை கேட்பது முக்கியமானது.

3. சமைத்த உணவுகளை சமைக்காத இறைச்சி, hamburger என்பவற்றுடன் கலந்து வைப்பது, அல்லது இரண்டு வகை உணவுகளையும் ஒரே பாத்திரங்களில் சரியாக சுத்தம் செய்யாத பாத்திரங்களில் வைப்பது, கைகளை சரியாக சுத்தம் செய்யமை என்பன தவிர்க்கப்பட வேண்டும்

4. பால், பழச்சாறு, அப்பிள் சிடர் என்பவை பாஸ்ரராக்கம் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.

5. குளோரின் பரிகரிப்பு அல்லது வேறு வகை தொற்று நீக்கம் செய்யப்பட்ட நீரை மட்டும் அருந்த வேண்டும்.

6. சமைக்காது உண்ணும் மரக்கறி, இலை வகை, பழ வகைகளை ஓடும் நீரில் நன்கு கழுவிய பின் உண்ணுதல்.

7. நீச்சல் குளத்து நீரை அருந்துவதை தவிர்த்தல்.


8. நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டவர்கள் கைகளை சவர்காரம் கொண்டு சரியாக சுத்தம் செய்தல், நோய் ஏற்பட்டவர்கள் பொதுவான நீச்சல் தடாகங்களில் நீந்துவதை தவிர்த்தல்.என்ன நண்பர்களே இனி கவனமாக இருப்பீர்களா?

6 comments:

said...

ayo ayo ini avasaruthuku enatha sapiduratham...

said...

ஒண்டையும் நிம்மதியா வாயில வைக்கேலாது போல.

உங்களின் இந்தப் பதிவைக் கில்லியில் பரிந்துரைத்திருக்கிறேன்.

said...

சந்திரன்,
நல்ல உபயோகமான பதிவு. நான் மாமிசம்[புலால்] உண்பதில்லை. அதனால் இதைப் பற்றி நான் அவ்வளவாக கவலைப்படத் தேவையில்லை என நினைக்கிறேன்.:))

said...

//ayo ayo ini avasaruthuku enatha sapi//
//ஒண்டையும் நிம்மதியா வாயில வைக்கேலாது போலduratham... //

சாப்பிட முதல் வடிவா சமைச்சிருக்கோ எண்டு பாத்திடு சாப்பிடுங்கோ :)

எனக்கு உந்த பிரச்சனை இல்லை :))

//உங்களின் இந்தப் பதிவைக் கில்லியில் பரிந்துரைத்திருக்கிறேன்//

நன்றி கானா பிரபா. இன்று தான் கில்லி அப்பிடி ஒரு திரட்டி இருப்பதே தெரியும்.

வெற்றி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்களும் என் கூட்டு தானா??

said...

@வெற்றி
நீங்கள் மாமிசம் உண்ணாவிட்டாலும், நீங்கள் உணவகத்தில் மாமிச உணவுகள் சமைக்கப்பட்டால் ...
மேலும், பழச்சாறில் இருந்தெல்லாம் வருகிறதாமே...

said...

சாரங்கன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பழச்சாறில் குறிப்பாக அப்பிள் சாறு பிரச்சனைக்குரியதாக கருதப்படுகிறது. பிரதானமாக அமில தன்மையுடைய பழச்சாறுகள். ஆனால் அவை வெப்ப பரிகரிப்புக்கு உட்படுத்தி இருந்தால் பெரிய பிரச்சனை இல்லை.

இறைச்சியை ஒழுங்காக சமைத்தால் பிரச்சனை இல்லை தானே சாரங்கன். அத்துடன் சமைத்த உணவை சமைக்காத உணவுடன் தொடுகையுற வைப்பதும், இரண்டு வகை உணவிலும் மாறி மாறி அழைவதுதையும் தவிர்த்தாலே போதுமானது.