Thursday, 15 February 2007

சாப்பிடலாம் வாங்கோ

இண்டைக்கு சுடச்சுட செய்த கரட் ரொட்டி எப்பிடி செய்யிறது எண்டத சொல்லப்போறன் :)


தெவையான பொருட்கள்


250 கிராம் கோதுமை மா

2 கரட்

1 வெங்காயம்

2 பச்சை மிளாகாய்

2 மேசைக்கரண்டி மாஜரின்

உப்பு சுவைக்கேற்ப

நீர்


வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை நல்ல குறுணலாக வெட்டிக்கொள்ளவும்.

கரட்டை கரட் சீவும் தட்டால் சீவி கொள்ளவும்.

சுவைக்கேற்ப உப்பு, மாஜரின், வெங்காயம், மா என்பவற்றை ஒன்றாக சேர்த்து இறுக்கமாக பிசைந்து கொள்ளவும்.


பிசைந்த மாவை 3 அல்லது 4 பிரிவுகளாக பிரிக்கவும்


அடுப்பில் தோசைக்கல்லை சூடக்கி எண்ணேய் பூசி மாவை வட்ட வடிவில் தட்டி வேக விடவும். சிறிது நேரத்தில் மறுபக்கம் பிரட்டி சுட்டு எடுக்கவும்.


















சம்பலும் இந்த ரொட்டியும் ஒரு பால் தேத்தண்ணியும் குடியுங்கோ.



10 comments:

said...

\\பிசைந்த மாவை 3 அல்லது 4 பிரிவுகளாக பிரிக்கவும்
\\

நீங்கள் மூன்று இல்லாட்ட நாலு ரொட்டிதான் சாப்பிடுவீங்கள் அதுக்காக எல்லாரயும் பிரிக்கச் சொல்லேலுமா??

\\ஒரு பால் தேத்தண்ணியும் குடியுங்கோ.\\

ஆமா பால் தேத்தண்ணி எப்பிடிச் சமைக்கிறதெண்டு சொல்லேல?

said...

ம்.....
அற்புதன் வித்தியாசமா, அறிவியல்பூர்வமா எழுதச்சொன்னார் எண்டதுக்காக இப்படியா?....
சமையல் பற்றி எழுதிற நீர், தூயா, செல்லி எல்லாருமாச் சேந்து கூட்டுவலைப்பதிவொண்டு தொடங்கினால் என்ன?

said...

//நீங்கள் மூன்று இல்லாட்ட நாலு ரொட்டிதான் சாப்பிடுவீங்கள் அதுக்காக எல்லாரயும் பிரிக்கச் சொல்லேலுமா??//

இது தான் சமைக்க தெரியாத ஆக்களின் கேள்வி எண்டுறது.
250 கிராம் மாவிலை 4 ஐ விட கூட பங்க பிரிச்சா அதிலை ஒரு மலிபன் பிஸ்கட் சைசிலை தான் ரொட்டி வருமாக்கும் ;)
//ஆமா பால் தேத்தண்ணி எப்பிடிச் சமைக்கிறதெண்டு சொல்லேல?//

உங்களுக்கு விசேச வகுப்பு வைக்கிறன் சரியோ

said...

//ம்.....
அற்புதன் வித்தியாசமா, அறிவியல்பூர்வமா எழுதச்சொன்னார் எண்டதுக்காக இப்படியா?....
சமையல் பற்றி எழுதிற நீர், தூயா, செல்லி எல்லாருமாச் சேந்து கூட்டுவலைப்பதிவொண்டு தொடங்கினால் என்ன? //

என்ன வசந்தன் சும்மா இருக்கிற அந்தாளை இதுக்க இழுக்கிறீர்

என் இந்த ரொட்டியும் அறிவியல் பூர்வமான விசயம் தானே


நல்ல ஐடியா தான் :-) செல்லி, தூயா இரண்டு பேரும் சமையல் கிங் ஆக்கும், அவையோட என்னை ஒப்பிடாதையும்

said...

விஜே,

உதுக்குப்போய் மாக் குழச்சு,மரக்கறி வெட்டிக் கஸ்ட்டப் பட வேணுமே,உங்கட ஊரில உந்த மலேசியன் பரோட்டா இல்லையோ? பிரீசரில இருந்து எடுத்துச் சூட்டாக்கினா சாப்பாடு சில மணித்துளிகளில் ரெடி. சினேகிதி மாதிரிச் சின்னப்பிள்ளையள் கூட இலகுவாச் சமைக்கலாம்.;-)

வசந்த்தன் நீர் உதுக்கு பதிலா ஒரு கொத்து ரொட்டிப் பதிவு ஒண்டு போடலாம்.அன்சிலாம்புச் சந்தியில இருந்த 'பிளவிஸ்' நானா கடையில நான் அந்தக் காலத்தில சாப்பிட்ட முட்டைக் கொத்துரொட்டி எண்டு ஒரு நினைவுப் பதிவு போடலாம். ;-)

said...

அற்புதன் வணக்கம் :) உங்களை கண்டதிலை ரொம்ப சந்தோசம்;)
சாப்பாடு எண்டிறது உயிர்வாழ மட்டும் தான் எண்டால் நீங்க சொல்லிறது சரி கடையிலை பிரிசர் வழியை நிறம்ப கிடக்கு.
ஆனா எமக்கு ஏத்த சுவை, சப்பாட்டிலை ஏதும் வித்தியாசமா செய்து பாத்து அது சுவையா இருந்தா அதிலை கிடைக்கிற திருப்தி, அலுப்படிக்கிற நேரத்திலை பொழுது போக்கு என இப்படி பலதும், நீங்கள் சொல்லிற அவசர/ ரெடிமேட்டிலை கிடைக்காது. ரெடிமேட் சாப்பாடு தான் பல நாட்களில் உதவுகிறது என்பது தவிர்க்க ஏலாத உண்மை. சொல்லுறது நல்ல இலகு, 4 நாளைக்கு பிரிசர் சப்பாட்டை சுடாக்கி திண்டா 5 ஆம் நாள் நாக்கு வேற எதுக்கும் அலையிறது தெரியும். ஆனா உங்களுக்கு அந்த அனுபவம் கிடைச்சிருக்கதெண்டு நினைக்கிறன் ;)

வசந்தன் நீங்க சொல்லாட்டிலும் எழுதுவார் கவலைப்படாதங்கோ ;-)

said...

நீர் எப்ப பிய்ஞ்சு போன ஜிலேபியாகக் கிடக்கிற எழுத்துக்களைச் சரி செய்யப் போகிறீர்.. FireFox இல்..
பின்னூட்டங்களை மட்டும் தான் வாசிக்கிறன். IE க்கு போக பஞ்சி

said...

//சயந்தன் said...
நீர் எப்ப பிய்ஞ்சு போன ஜிலேபியாகக் கிடக்கிற எழுத்துக்களைச் சரி செய்யப் போகிறீர்.. FireFox இல்..
பின்னூட்டங்களை மட்டும் தான் வாசிக்கிறன். IE க்கு போக பஞ்சி//
வார்ப்புருவில் திருத்தியுள்ளேன். எப்பிடி இருக்கெண்டு சொன்னா தான் வெற எதும் செய்யலாம், ஆனா திருத்ததை நீர் தான் சொல்லணும்.

said...

250 கிராம் கோதுமை மா

2 கரட்

1 வெங்காயம்

24 கரட் தானே நல்ல தரமாயிருக்கும்.

said...

//24 கரட் தானே நல்ல தரமாயிருக்கும்.//

1 வெங்காயம்