Sunday, 4 February 2007

வின்னிபெக்- Winterpeg

நான் இப்ப இருக்கிறது வின்னிபெக் (Winnipeg), கனடாவிலை. இங்க வாறதுக்கு முதல் ஒரு பஸ் பயணத்திலை கனடாலை இருந்து சுற்றுலாக்கு வந்த ஒராளை சந்திச்சன். அவா வங்கூவரிலை இருந்து வந்த எண்டா. அப்ப நான் சொன்னன் குறுகின காலத்திலை நான் வினிபெக்குக்கு தற்காலிகமா குடிபெயர போறன் எண்டு. அப்ப அவ ஒரு புன் சிரிப்போட சொன்னா என்னோட கனடா வாழ்க்கைக்கு நல்வாழ்த்துக்கள் எண்டு. பிறகு சொன்னா ஒரு விசயம், வின்னிபெக் ஐ தாங்கள் Winterpeg எண்டு தானாம் சொல்லுறது, சரியான குளிரான இடம் எண்டும் சொன்னா. அப்ப எனக்கும் தெரியும் கனடா குளிர் எண்டு தான் சொல்லுறவை எண்டு வலு துணிவா சொல்லிபோட்டன். இங்க வந்த பிறகு தான் விளங்கிச்சுது அவ சொன்னதின்ரை தாற்பரியம்.
இண்டைக்கு காலமை -34 டிகிரி செல்சியஸ், ஆனா காத்தோட -43 டிகிரி செல்சியஸ் ஆ தெரியும் எண்டு இருந்திச்சு. நான் இருக்கிற வீட்டு காரன் சொன்னார் இண்டைக்கு இரவு காத்தோட -52 டிகிரி செல்சியசா உணரலாம் எண்டு.



சரி நான் இருக்கிற இடத்தை பற்றி சொல்லுவம்...
இது

கனடாவின் மேற்கு பகத்திலை இருக்கிற ஒரு மனிரோபாமானிலம். மற்றைய மேற்கு மானிலங்களான சஸ்கடர்சுவான், அல்பேட்டா, பிரிட்டிஸ் கொலம்பிய போன்றவற்றையும், கிழக்கு மானிலங்களான ஒன்ரரியோ, கியுபெக் என்பவற்றையும் இணைக்கும் இடமாக இருக்கிறது.



தலை நகரம் வின்னிபெக்.



நகரமக்கள் : தொகை 619,544


சிவப்பு ஆறு (Red river), Assiniboine River எண்டு இரண்டு ஆறுகள் பாயுது.



1738 இல் முதல் விற்பனை மையம் திறக்கப்பட்டது.
1870 இல் மனிரோபா கனடாவின் கொன்பெடரேசனாக இணைந்து கொண்டது

இந்த மானிலத்தின் பாரளுமன்ற கட்டிடம் (Manitoba Legislative Building) 1920 இல் கட்டப்பட்டது.
இந்த கட்டிடத்தின் உச்சிலை "தங்க பையன்" (Golden boy) எண்டு ஒரு சிலை வச்சிருக்கு.








அந்த கட்டிடத்திலை இருந்து மேலும் சில படங்கள்




















இது தான் பைசன் (bison) எனும் மாடு?? இங்கு வெள்ளையர்கள் குடியேறிய காலத்திலை வேட்டையாடி பெருமளவு அழிந்துவிட்டது. இப்ப அது தான் இந்த மானிலத்தின் சின்னம்.










மேலும் இந்த இடத்தை பற்றி வாசிக்க http://en.wikipedia.org/wiki/Winnipeg,_Manitoba க்கு போங்கோ.

ஒருக்கா யோசிச்சு பாத்தன் இத மாதிரி சிறிலங்கா பாரளுமன்றத்துக்கை போய் படம் எடுக்க முடியுமோ எண்டு?







2 comments:

said...

சந்திரன்,

வாங்க. வாங்க!

பக்கத்து மாகாணத்திலயிருந்து வந்திருக்கிறீங்க. கியூபெக்கிலிருந்து வரவேற்பம் எண்டு வந்திட்டன்.

எதைப்பற்றி எழுதுறது எண்டு சொல்லியண்டே விசயங்களைச் சொல்லுறீங்க போல.

தொடர்ந்து இடுகைகளை எழுதுங்க.

வலைப்பதிவின் வடிவமைப்பு அழகாக இருக்கிறது. அந்த நெல்மணிகள் மிகமிக அழகாக கவனத்தைக் கவரும்வகையில் இருக்கிறது. மகாகவியின் வரிகளும் அருமையான தேர்வு.

வரவேற்புடன்,
மதி

said...

உங்கடை வரவேற்புக்கும், பாரட்டுக்கும் மெத்த நன்றி. நல்ல சந்தோசமா இருக்கு. எழுத முயற்சிக்கிறன்