இந்த வார நட்சத்திரம் கூத்தாடியின் கறுப்பு சிவப்பு எனும் பதிவு எனது பழைய ஞாபகங்களை கிளறி விட்டது. எங்கட ஆக்களிட்டை இருக்கும் வெள்ளை? , வெளிறிய/ சிவப்பு நிறம் மீது இருக்கும் ஈர்ப்பும் அதை பற்றி அடிக்கடி கதைக்கும் பழக்கமும், பலருக்கு சிறுவயதில் இருந்தே ஆழ்மனதில் பதிவு செய்யப்பட்டு விடுகிறது. அது எங்களுக்கு தெரியாமலே பல சந்தர்ப்பங்களில் எட்டி பார்க்கவும் செய்யும்.
சின்ன வயதிலேயே, இவன் வெள்ளை பொடியன், அந்த பொடியன் நிறம் குறைந்த/ கறுப்பு பொடியன் எண்டு சொல்லி கேட்டு கேட்டு மனதில் நான் வெள்ளை எண்டதும், வெள்ளை எண்டால் ஏதோ பெரியாக்கள் எண்டும் மனதில பதிவு செய்யப்பட்டு இருந்தது. எது சரி பிழை எண்டு பிரித்துணர முடியாத வயது அது. ஆனால் உயர்தர வகுப்பு படிக்கும் போது கூட அந்த மன நிலையிலை பெரிசா ஏதும் மாற்றம் இருக்கேல்லை எண்டது தான் உண்மை. பல்கலைகழகத்தில் பயிலும்போது தான் அந்த உணர்வு சிறிது சிறிதாக குறைய தொடங்கியது.
சிறுவயதில் என் மனதில் ஊட்டப்பட்ட எண்ணம் எப்படி வெளிப்பட்டது எண்டதுக்கு ஒரு சின்னா உதாரணம் இது.
பாலர் வகுப்புக்கு பள்ளிகூடம் போன போது நடந்த சம்பவம். அப்ப அம்மாவும் அங்க தான் படிப்பிச்சு கொண்டிருந்தவ. அப்ப எங்கட பள்ளிகூடத்திலை ஏ, பி எண்டு இரண்டு பிரிவுகள். என்னை ஏ வகுப்பு எண்ட பிரிவுக்க விட்டாச்சு. வகுப்புக்க கொண்டு போய் அம்மா எனது வகுப்பு ரீச்சரிடம் சொல்லி போட்டு விட்டிட்டு போட்ட. ஆனா எனக்கு ரீச்சரை பாத்த உடனம் அந்த வகுப்புக்க இருக்கவே பிடிக்கேல்லை. எனேண்டா ரீச்சர் கறுப்பா இருந்தா. பக்கது பி வகுப்பு ரீச்சார் நிறமான ரீச்சர். அவவை கண்டிட்டு நான் பக்கத்து வகுப்புக்கை போய் இருந்திட்டன், என்ரை வகுப்புக்குரிய ரீச்சர் எவ்வளவு கூப்பிட்டும் போகேல்லை.
பள்ளிகூடம் முடிஞ்சு வீட்ட போன பிறகு அம்மாட்டை கறுப்பு ரீச்சரின் வகுப்பிலை இருக்க மாட்டன் எண்டு சொல்ல்லி அடம் பிடிச்சன். ஆனா அம்மா என்ன செய்ய முடியும். என்னை ரீச்சர் வகுப்பிலை வச்சிருக்க கண்டு பிடிச்ச வழி என்னெண்டா, எனக்கு அ, ஆ, மற்றும் பெயர்கள், படங்களை இணைக்கும் அட்டைகள், சிறுவர்களுக்கான பாட்டு பாட பயன் படுத்தும் கிலிகட்டி?? எல்லாம் தந்து, வீட்ட கொண்டு போய் விளையாட ஒரு மாதமா விட்டது தான். உண்மையில் நானும் ஒரு ரீச்சரின் பிள்ளையாக இருந்தது தான் இவ்வளவு தன்மையாக விளையாட்டு பொருட்காளை தந்து என்னை வகுப்புக்குள் வைத்திருக்க முயன்றதன் காரணமாக இருக்குமோ எண்டு யோசிசிருக்கிறன். இதையே வேறயாரும் போடியள் செய்திருந்தா அந்த ரீச்சர் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார் எண்டாதை சொல்ல முடியவில்லை.
இதே மன நிலை வளந்தா பிறகும் அடி மனதிலை இருக்கும். வெள்ளையா வரோணும் எண்டதுக்காகவே fair and lovely பூசிய பல நண்பர்கள் இருக்கிறார்கள். இது தான் எங்கட நாட்டிலை நடக்கிற நிகழ்வெண்டா, எங்கட ஆக்கள் புலம்பெயர்ந்து வந்தா பிறகும் அதை மறக்காம கவிவச்சிருக்கிறதை நேரையே கண்டனுபவித்திருக்கிறேன். நான் புலம் பெயர்ந்தது மிக அண்மையில் தான். என்னை சின்ன பொடியனா ஊரிலை கண்டிட்டு இஞ்சை வந்து கன காலமா என்னை காணத ஆக்கள் எல்லாம் என்னை கண்டோடனம் சொல்லுற சொல்லு என்ன ஊரிலை நல்ல வெள்ளை பொடியனா இருதாய் இங்க வந்து கறுத்து போனாய் எண்டுறது தான்.
எங்கட ஆக்கள் ஊரிலை இருந்து கனக்க விசயத்தை காவி வந்தது போல, உந்த வெள்ளை, கறுப்பு எண்டதையும் காவி வந்து இன்னும் அதை கைவிடாம தான் வச்சிருக்கினம்.
Saturday, 3 March 2007
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
உங்கட அம்மாவும் ரீச்சரே? எங்கட அம்மாவும் தான்.
விச்யம் தெரியுமே, நான் இன்னும் Fair & Lovely தான் பாவிக்கிறனான், உண்மையாத் தான் ;-)
உங்களுக்கும் உது நடந்ததோ?
ஆனா உண்மையில வெளிநாடு வந்தபிறகு கொஞ்சம் கறுத்துத்தான் போனன். இது வேறயும் சிலருக்கு நடந்திருக்கு. நீங்களும் வெளியில வந்து கொஞ்சம் கறுத்திட்டியள் போலதான் கிடக்கு.
நான் கறுக்கிறதுக்குக் காரணமிருக்கு. எங்கட பக்கம் சரியான வெக்கைதான். ஆனா உங்களுக்கு அப்பிடியில்லைத்தானே?
ஊரில சில இளந்தாரியள், நிறமா வாறதுக்கு பாலுக்குள்ள குங்குமம் கலந்து குடிக்கிறதைப் பாத்திருக்கிறன். ஏதாவது சினிமாப்படங்களில வந்திருக்குமெண்டு நினைக்கிறன்.
//உங்கட அம்மாவும் ரீச்சரே? எங்கட அம்மாவும் தான்.
விச்யம் தெரியுமே, நான் இன்னும் Fair & Lovely தான் பாவிக்கிறனான், உண்மையாத் தான் ;-)//
ரீச்சர் மாரின் பிள்ளைகள் கனக்க குழப்படி விடேலாதே, சனம் உடன சொல்லும் பார் 'இந்த' வாத்தி/ ரீச்சரின் பொடியான் இப்பிடி செய்துபோட்டன், அப்பா அம்மாட மானத்தை வாங்குது பொடி எண்டு :(
சிவப்பழகின் ரகசியம் அது தானா :)))
வருகைக்கு நன்றி...
//ஊரில சில இளந்தாரியள், நிறமா வாறதுக்கு பாலுக்குள்ள குங்குமம் கலந்து குடிக்கிறதைப் பாத்திருக்கிறன். ஏதாவது சினிமாப்படங்களில வந்திருக்குமெண்டு நினைக்கிறன்.//
வசந்தன் இது எனக்கு தெரியாத சங்கதி...
இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் சண் ரி வி ல, சூர்யாவின் ஆண்களுக்கான சிவப்பழகு கிறீம் க்கு விளம்பரம் பார்த்தேன்.
இங்கு
எதாவது ஒரு கிறீம்/ லோசன் பூசியே ஆக வேண்டும். இல்லையென்றால் குளிர், குறைந்த சூழல் ஈரப்பதன் ஆகியவையால் ஏற்படும் நீரிழப்பால் தோல் வரண்டு, பட்டை பட்டையாக தெரிவதுடன், சுருங்கியும் போய்விடும்.
ஆகா பிரபாண்ணா சொல்லவே இல்லை...வெள்ளையா வந்திட்டிங்கிளா? பளபள என்று இருக்கிறீங்கிளோ இப்ப :-)
கறுப்பை பற்றி "கருவாப்iபாய " "கருப்பான கையாலே என்னைப் புடிச்சான்" என்றெல்லாம் நிறைய புதுப்பாட்டுக்கள் வருது இன்னும் கொஞ்சக்காலத்தில வெள்ளை மோகம் போயிடும் என்று நினைக்கிறன்.
//விச்யம் தெரியுமே, நான் இன்னும் Fair & Lovely தான் பாவிக்கிறனான், உண்மையாத் தான் ;//
கானா பிரபா உங்களுக்கு மீசையில்லாத இரகசியத்தை உடைச்சிட்டியளே.. என்னெண்டு தெரியும் எண்டு கேட்க வேண்டாம். அனுபவம் தானே நிறையப் பாடங்களைத் தருகிறது.
http://sayanthan.blogspot.com/2005/07/1.html
வெள்ளைச்சனம் பிறவுண் கலராகிறதுக்கு எவ்வளவு கஸ்ட படுதுகள்...நீங்கள் வெள்ளையும் கறுப்பு என்று நிக்கிறியள்...லைட் கட்டாய் போச்சு எண்டால் எல்லாம் ஒன்று தான்;-))
//At March 4, 2007 12:08 PM, சினேகிதி said…
ஆகா பிரபாண்ணா சொல்லவே இல்லை...வெள்ளையா வந்திட்டிங்கிளா? பளபள என்று இருக்கிறீங்கிளோ இப்ப :-) //
அதை நான் சொல்லமாட்டன் ;-)
//சயந்தன் said...
கானா பிரபா உங்களுக்கு மீசையில்லாத இரகசியத்தை உடைச்சிட்டியளே.. //
மீசை இல்லாதாதற்கு வேறு காரணம் ( என்றும் இளமையா இருப்பதற்கு, ஒருத்தரிட்டயும் சொல்லாதேங்கோ)
யாரிண்ட அனுபவம்?
//வெள்ளைச்சனம் பிறவுண் கலராகிறதுக்கு எவ்வளவு கஸ்ட படுதுகள்...நீங்கள் வெள்ளையும் கறுப்பு என்று நிக்கிறியள்...லைட் கட்டாய் போச்சு எண்டால் எல்லாம் ஒன்று தான்;-)) //
அக்கரைக்கு இக்கரை பச்சை தானே சின்ன குட்டியர்
வருகைக்கும், உங்கள் பழைய பதிவை இணைச்சதுக்கும் நன்றி சயந்தன். நல்லா எழுதுறீங்கள்
வெள்ளை வடிவெண்டா சொல்லுறியள்... எனக்கெண்டால் எங்கடை ஆக்களின்ரை பிறவுண் கலர்தான் பிடிக்கும். அதுதான் மண்ணிறம். (ஆரிட்டையாவது குடுத்து சென்ரிமென்ற் காட்சியிலை சேர்த்துக்கொள்ளச் சொல்லுங்கோ)
//வெள்ளை வடிவெண்டா சொல்லுறியள்... எனக்கெண்டால் எங்கடை ஆக்களின்ரை பிறவுண் கலர்தான் பிடிக்கும். அதுதான் மண்ணிறம். (ஆரிட்டையாவது குடுத்து சென்ரிமென்ற் காட்சியிலை சேர்த்துக்கொள்ளச் சொல்லுங்கோ//
நான் அப்பிடி சொல்லேல்லை. ஆனால் அப்பிடி ஒரு எண்ணம் ஊரில் நிலவுவதும், அதையொட்டிய உரையாடல்களால் ஏற்படும் மன பதிவையும் தான் சொல்ல முற்பட்டேன். அதை சரியா எழுதேல்லை போல
உண்மேல அரிவரி/ பாலர் வகுப்புக்கு பள்ளிகூடம் போன போது நான் எழுதின மாதிரி செய்திருக்கிறன். அதுக்கக நான் வெள்ளை எண்டு சொல்ல வரேல்லை.
வளர்ந்தவர்களிடம் கூட அந்த எண்ணம் ஆழ பதிந்துள்ளதுக்கு உதாரணமா....
பள்ளிகூடம் மூலம் சுற்றுலா போய் ஊருக்கு திரும்பி வந்த நேரம்,இடைத்தங்கல் தங்கிய இடத்திலை காலமை முகங்கழுவி கொஞ்சம் புத்துணர்வா வருவம் எண்டு நினைச்சு நான் முகங்கழுவிபோட்டு வந்தால் எங்கட வாத்தியார் என்ன அதுகுள்ள பூச்சு பூசி வெளிகிட்டியோ எண்டார், நான் சொன்னன் இல்லை முகங்கழுவின்னான், ஒரு பூச்சும் நான் பூசுறதில்லை எண்டு (உண்மைக்கும் தான் சின்ன பொடியனா இருக்கேக்க பவுடர் பூசினனான். ஒரளவுக்கு வளந்தா பிறகு பூசுறேல்லை). உடன வாத்தியார் சொன்ன சொல்லு நீ பூசாட்டிலும் பூசின மாதிர் தான் இருக்குமெண்டு. இப்பிடி பலரும் சொல்ல கேட்டு கேட்டு மனங்களில் எம்மை அறியாமலே ஒரு மனப்பதிவு ஏற்பட்டு விடுகிறது. அது சில நேரம் எம்மை அறியாமலே வெளிபட்டு விடும்.
எங்கட ஆக்கள் வெள்ளை எண்டு சொல்லுறது நாங்கள் இங்க சொல்லுற வெள்ளையை இல்லை தானே. தமிழ் நதி அது உங்களுக்கு தெரியும் எண்டு நினைக்கிறன்.
எட , உங்க கனகாலத்துக்குப் பிறகு ரமா வந்திருக்கிறா, எப்பிடி சுகம்?
பெடியளும் fair & lovely பாவிச்சதை இப்பதான் கேள்விப்படுறன்.
உங்களுகெல்லாம் உதென்னத்துக்கு?
கலியாணம் பேசேக்கை "பெடிச்சின்ர நிறம் எப்பிடி?" எண்டெல்லோ பொடிப் பிள்ளையளின்ர தாய்தேப்பன் முதல்ல கேக்கிணம். ஆனா அவையின்ர பொடியன்ர நிறமெண்டாலோ "அட்டைக் கரி". இந்த லட்சணத்தில அவைக்கு வெள்ளைப் பொம்பிளை கேக்குது.கறுபெண்டாலும் அவன் ஆம்பிளைப் பெடியனல்லே, எண்டு தங்களுக்கொரு நியாயம் சொல்லுவினம்.
இப்பிடி நடக்கிற சோடிப் பொருத்ததை "பாலும் கோப்பியும்" எண்டெல்லோ கிண்டலடிக்கிறவை.
ராசா, நீ ஆம்பிளைப் பிள்ளையடா. உனக்கேன் " மேக்கப்" கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு என்கிறவையும் கடைசில விரும்புறது வெள்ளையைத்தான்.
மற்றுமொரு விசயம்,வாயும் வயிறுமா இருக்கேக்கை மூண்டு மாதம் வரை பாலுக்கை குங்குமப் பூப் போட்டுக் குடிப்பினம். பிறக்கிற பிள்ளை வெள்ளையாப் பிறக்க வேணுமெண்டு.
பிறக்கப் போற பிள்ளையின்ர நிறம் gene ஐப் பொறுத்து வருகுதே தவிர
குங்குமப் பூவால இல்லை.உண்மையில குங்குமப் பூ சாப்பிட்டவைக்கு நல்ல கறுப்பான பிள்ளையள் பிறந்திருக்கு.
இப்பகூட எங்கட ஆக்கள் உந்த நிறப்பைத்தியமாய்த் தான் இருக்கினம் எண்டதை நினைச்சா கவலையாக் கிடக்கு.
//பெடியளும் fair & lovely பாவிச்சதை இப்பதான் கேள்விப்படுறன்.
உங்களுகெல்லாம் உதென்னத்துக்கு?//
சிவப்பா வர தான். என்ன உப்பிடி கேட்டு போட்டியள்...
சூர்யா ஆண்களுக்கன சிவப்பழகு கிறீமுக்கு விளம்பரம் செய்யுறார் பாக்கேல்லையோ :))
செல்லி கனக்க சொல்லி இருக்க்கிறியள் உதெல்லத்தையும் வயதுக்கு வந்த அண்ண மார் கானா பிரபா, வசந்தன் ஆக்கள் கவனத்திலை எடுப்பினம் எண்டு நினைக்கிறன்.....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment