தேவையான பொருட்கள்
இடியப்பம்
பெரிய வெங்காயம் 1
செத்தல் மிளகாய் (காய்ந்த சிவப்பு மிளாகாய்) 2
மீகுளிரூட்டிய மரக்கறி கலவை (frozen vegetable mix)
கடுகு
சீரகம்
உப்பு
சமையல் எண்ணேய்
இடியப்பம் தேவையான அளவுக்கு அவித்து எடுத்து கொள்ளவும்
இடியப்பம் நன்கு ஆறியதும் அதை சிறிய பகுதிகளாக உருத்தி/ பிய்த்து கொள்ளவும்
வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
பெரிய சமையல் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சூடக்கவும்
அதில் அளவுக்கு எண்ணேய் விட்டு கடுகு சீரகம் போட்டு கடுகு வெடித்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
வெங்காயம் பாதி வதங்கியதும் மரக்கறி கலவையை கொட்டி உப்பு தூவி 5-10 நிமிடம் மென்சூட்டில் மூடி வதக்கவும்
மரக்கறி நங்கு வதங்கி அவிந்து வந்ததும் உருத்தி வைத்த இடியப்பத்தை போட்டு கிளறி இறக்கவும்.
8 comments:
சந்திரன்,
உங்களுக்கு வாறவ நல்லாய்க் குடுத்து வச்சவ... :P
ஐய்யோ பசிக்குது....
அப்போ கன நாளைக்கு பிறகு அடுப்படி பக்கம் நுழைந்து இருக்கின்றீர்கள். சமையல் குறிப்புக்கு நன்றிகள்.
நாங்கள் எல்லாம் இடியாப்பம் அவித்து நேரத்தை வீணடிப்பது இல்லை. 25 இடியப்பம் 3டொலர்ஸ் தானே. சினேகிதி இருக்கின்ற பக்கம் இன்னும் மலிவாம் என்று கேள்வி. உண்மையோ சினேகிதி?
புட்டு, சொறு, கிரைண்டரில் தூளாக்கிய பாண்கலவை இவைகளையும்
இப்படி தாளித்து பிரட்ட டேஸ்டாக இருக்கும்.
lol Nanthiya..naangal Scarborough ku vanthal than idiyapam vangirathe!
//Haran said...
சந்திரன்,
உங்களுக்கு வாறவ நல்லாய்க் குடுத்து வச்சவ... :P //
ஆகா என்ன கரிசனை
ஆழ்ந்த அனுதாபங்கள் சந்திரன்
ஹரன், நந்தியா, அனனி, சினேகிதி, கானா பிரபா அனைவரது கருத்துக்கும் நன்றி.
//lol Nanthiya..naangal Scarborough ku vanthal than idiyapam vangirathe!//
வசந்தன் உம்மடை வாய்க்கு :(
////Haran said...
சந்திரன்,
உங்களுக்கு வாறவ நல்லாய்க் குடுத்து வச்சவ... :P //
ஆகா என்ன கரிசனை
ஆழ்ந்த அனுதாபங்கள் சந்திரன் //
இதுக்கு எதுக்கு அனுதாபம் ;-)
வாறவைக்கு பணி செய்யிறதிலை என்ன குறை ;-)
நம் கடன் பணிசெய்து ....... :)))
//
இதுக்கு எதுக்கு அனுதாபம் ;-)
வாறவைக்கு பணி செய்யிறதிலை என்ன குறை ;-)
நம் கடன் பணிசெய்து ....... :)))
//
:))))))))
==)))))))
வாறவையும் பணி செய்ய விடுங்கோ !!!!
(உருசிய சாப்பிடோணுமெண்ட நாம தான் களத்தில இறங்கோணும் ;) )
Post a Comment