தமிழ்மணத்தில் இருந்து ஏப்பிரல் 30 ஆம் திகதி தொடங்கும் நட்சத்திர வாரத்தில் நட்சத்திர பதிவராக இருபதற்கு எதிர்பாரா நேரத்தில் ஒரு மடல் கிடைத்திருந்தது.
என்னை நட்சத்திர பதிவராக இருப்பதற்கு தெரிவு செய்தமைக்கு முதலில் தமிழ் மணத்திற்கு நன்றிகள்.
கதைகள், கவிதைகள் போன்றவற்றை வாசிப்பதில் இருந்த, இருக்கின்ற ஆர்வம் எழுத வேண்டும் என்பதில் இருப்பதில்லை. கவிதை கதை எழுதும் விசப்பரீட்சையிலும் இறங்கியதில்லை, இறங்கும் எண்ணமும் இல்லை.
வலைப்பதிவு, தமிழ் மணம் ஆகியவற்றின் அறிமுகம் கிடைத்த போது குறிப்பிட்ட ஒரு சிறிது காலம் வாசகர் ஆக மட்டுமே இருந்து வந்தேன். அதன் பின் நானும் ஏதாவது எழுதினால் என்ன என்ற நப்பாசை காரணமாக வலைபதிவு ஒன்றை ஆரம்பித்து எழுத தொடங்கினேன். அதன் பயனாய் இப்போது நட்சத்திரமாக இருக்க சொல்லி தண்டிக்கப்பட்டிருக்கிறேன் :(.
நட்சத்திர வாரத்தை பொறுத்த வரை எனது நிலை
"எல்லாருடைய கண்டும் ஓடுதெண்டு முதலியாரோட பட்டிலை நிண்ட பேத்தை கண்டும் ஓடிச்சுதாம்" என்பதாக தான் இருக்கும்.
என் எழுத்துக்கள் அழகிய வார்த்தைகளின் தொகுப்பாகவோ, அல்லது சலசலத்து ஓடும் அருவி போல ஒரு தொடர்ச்சியாகவோ இருக்காதென்பதும்,
சந்தம் தரும் எந்த விதமான வார்த்தை கோப்புக்களும் அற்றவையாகவே இருக்கும் என்பதையும் இதுவரை வாசித்து வந்த உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.
ஒரு வாரகாலத்துக்கு கல் வீதியில் வண்டில் போகும் போது ஏற்படும் கட கடா எனும் ஒலியை போன்ற ஒரு சீரற்ற எழுத்து நடையை நீங்கள் அனைவரும் பார்க்க, வாசிக்க வேண்டிய துரதிஸ்டமான சூழலில் இருக்கிறீர்கள் :( ஒரு வாரத்துக்கு உங்கள் மனதை ஆற்ற ஒரு பாடலை கீழே இணைத்துள்ளேன் கேட்டு மகிழுங்கள்.
வி.ஜெ.சந்திரன் - ந... |
என்னால் முடிந்த அளவுக்கு நாளுக்கு ஒரு பதிவை தரலாம் என நினைக்கிறேன். அவை இப்படி தான் இருக்கும் என வரையறுத்து கூறிவைக்க விரும்பவில்லை.
எனது வலைப்பதிவை அடிக்கடி வாசித்து கருத்துக்களை பகிர்ந்த/பகிர இருக்கிற மற்றும் கருத்துக்கள் எதையும் பகிராது வாசித்து விட்டு மௌனமாகவே திரும்பிய/ திரும்ப போகிற அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
நட்புடன்
வி.ஜெ. சந்திரன்
28 comments:
:))))))))))))))
வாழ்த்துக்கள் சந்திரன்.
உங்க பாட்டு நல்ல இருக்கு. அப்படி சொல்லும் விதமாக இந்த வாரம் அமையாதுன்னு நம்புகிறேன்.
;-)
சோதனை மேல் சோதனை என்று பாட்டுப்போடுறதெல்லாம் ரொம்ப ஓவர்.தமிழ்மணத்தில என்ன தன்னடக்கப்போட்டியா நடக்குது:-)))
\\எல்லாருடைய கண்டும் ஓடுதெண்டு முதலியாரோட பட்டிலை நிண்ட பேத்தை கண்டும் ஓடிச்சுதாம்"\\
அப்பிடியெண்டால் என்ன?
\\என் எழுத்துக்கள் அழகிய வார்த்தைகளின் தொகுப்பாகவோ, அல்லது சலசலத்து ஓடும் அருவி போல ஒரு தொடர்ச்சியாகவோ இருக்காதென்பதும்,
சந்தம் தரும் எந்த விதமான வார்த்தை கோப்புக்களும்\\
இது நல்லா இருக்கே...கவிதையா இருக்கு :-)
அப்புறம் வாழ்த்துச்சொல்லணும் என்ன :-)))
நட்சத்திரத்திடம் சிக்கிய நிலவுக்கு வாழத்துக்கள்
நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்
நட்சதிர வாழ்த்துக்க்ள் !!!.
// கல் வீதியில் வண்டில் போகும் போது ஏற்படும் கட கடா எனும் ஒலியை //
அதுல பொகிறதே தனிச் சுகம்.
இருந்து பொகேலாது :) நிண்டு தான் போகோணும்.
உங்கட ஊரைப்பற்றியும் பதிவு போடுங்க.
இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்!
ஆ நீங்களே, வாங்கோ வாங்கோ, வாழ்த்துக்கள், நட்சத்திர வாரம் இல்லாத நாட்களிலிலேயெ நாளைக்கு ஒரு பதிவு போடுறனீங்கள், இன்னும் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு.
vj உமது பதிவுகளை தொடர்ந்து படித்து வாறான்... இது மாதிரி என்று சொல்லேலாம புதுமாதிரி ஒரு மார்க்கமா தான் இருக்கு.... ஓகே.... வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் சந்திரன் ஸார்.. உங்கட மொழியிலேயே எதையும் எழுதுங்க.. நாங்க படிச்சுக்குறோம்..
இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்.
சந்திரன்,
வாழ்த்துக்கள்.
நட்சத்திர வாழ்த்துக்கள். விஜே... இந்த வாரம் உங்களோடு தான்... கலக்குங்க
நட்சத்திர வாரத்தில் நீங்கள் கூட வெளிச்சம் காட்டபடுகிறீர்கள் நல்ல மகிழ்ச்சியான விசயம்
பிளீஸ் குறை நினைக்காமால் உந்த பாட்டை எடுத்து விடுங்கோ..
வாழ்த்துக்கள் விஜெ. அலுவலகத்தில் திரட்டிகள் வேலை செய்யாது. கூகிள் வாசிப்பகத்தில் இன்று தான் உங்க பதிவைச் சேர்த்துவிட்டு வந்து பார்த்தால், வானத்தில் ஜொலிக்கிறீர்கள் :)
நல்வாழ்த்துக்கள்.. நல்ல வாரமாக இருக்கும் :) [பாட்டு கேட்க முடியவில்லை, என்றாலும் சினேகிதி சொல்வது போல், சோதனை மேல் சோதனை என்று போடுவதெல்லாம் ரொம்ப ஓவர் ;)]
வாழ்த்துக்கள் சந்திரன்..
:)
இவ்வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள். // உங்கட மொழியிலேயே எதையும் எழுதுங்க.. நாங்க படிச்சுக்குறோம்..//
அதே:)
நட்சத்திரத்திடம் சிக்கிய நிலவே!
வாழ்த்துக்கள். இந்த நிலவுச்சிக்கலே கவிதை போல இருக்கு, நமக்கு அது புரியவே நேரமாச்சு. கதை அப்பிடியிருக்க பேத்தை கண்டு உவமானமெல்லாம் ரொம் ஓவர் சார்.
சீக்கிரமே நிலவிடமும் சிக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்து.
யெஸ். பாலபாரதி, சினேகிதி, சிவபாலன், திலகன்,சேதுக்கரசி,கானாபிரபா, அருண்மொழி, உண்மைத் தமிழன், ஜெஸிலா, வெற்றி, சின்னக்குட்டி, அய்யனார், கனக்ஸ், மலைநாடான், வசந்தன் அனைவரது வருகை, வாழ்த்துக்கு நன்றிகள்.
வாழ்த்து சந்திரன்.
பொன்ஸ்~~Poorna நன்றி; முதலில் உங்கள் பெயர் தவறி விட்டது. வருந்துகிறேன்.
DJ நன்றி
நட்சத்திர நிலவே!
வாழ்த்துக்கள் முதலில்.
உங்கள் நட்சத்திர ஸ்பொசல்களை தொடர்ந்து வாசிக்க ஆவலாய் இருக்கின்றேன்.
//தமிழ்மணத்தில என்ன தன்னடக்கப்போட்டியா நடக்குது....?//
அதானே....
வாழ்த்துக்கள் சந்திரன்.
வாழ்த்துக்கள் விஜே,
இரட்டிப்பு மகிழ்ச்சி இன்று, ஒரு அரக்கன் வீழ்ந்த நாளும், நீங்கள் நட்சத்திரமான நாளும்.
எல்லா நாட்களும் இந்த நாளைப் போல் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்;-)
//\எல்லாருடைய கண்டும் ஓடுதெண்டு முதலியாரோட பட்டிலை நிண்ட பேத்தை கண்டும் ஓடிச்சுதாம்"\\
அப்பிடியெண்டால் என்ன?//
அப்பிடி எண்டால்?
பசு கன்று = கண்டு
பேத்தை கண்டு = பலமில்லாத/ நோஞ்சான்
கானமயிலாட கண்டிருந்த வான் கோழி எண்ட பழ மொழியோட கருத்து வரும்.
நந்தியா, ஆழியூரான், அற்புதன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
vazththukkal!!!
Vaalthukkal Santhiran...
மயூரேசன், கரன்
நன்றி
விஜேய்! நீங்கள்தான் இந்த வார நட்சத்திரம் எண்டு தெரியாமப் போச்சுது. தற்செயலாகப் போய்ப் பார்க்க... அட...! நீங்கள்! வாழ்த்துக்கள். எனக்கெண்டால் நீங்கள் 'பேத்தை'க் கண்டு மாதிரித் தெரியேல்லை. எல்லாரும் சொல்லுற மாதிரி தன்னடக்கப் போட்டிதான் நடக்குது போலை. கதை, கவிதை இப்படி நிறைய எதிர்பார்க்கிறோம்.
//விஜேய்! நீங்கள்தான் இந்த வார நட்சத்திரம் எண்டு தெரியாமப் போச்சுது. தற்செயலாகப் போய்ப் பார்க்க... அட...! நீங்கள்! வாழ்த்துக்கள். எனக்கெண்டால் நீங்கள் 'பேத்தை'க் கண்டு மாதிரித் தெரியேல்லை. எல்லாரும் சொல்லுற மாதிரி தன்னடக்கப் போட்டிதான் நடக்குது போலை. கதை, கவிதை இப்படி நிறைய எதிர்பார்க்கிறோம்.//
கவிதை , கதை .... :)))))
அப்பிடி ஒரு துன்பம் உங்களுக்கு தேவையா?
Post a Comment