Sunday, 4 February 2007

புதிசாய் ஒரு பதிவு

வணக்கம்,
என்னை பற்றி சொல்லிறதெண்டா ஈழத்திலை இருந்து அண்மைய காலத்தில் புலம்பெயர்ந்த மிக மிக சாதாரணமான ஒருத்தன். ஈழப்போர் ஆரம்பித்த காலத்தில் பிறந்து, போருக்குள்ளேயே வளர்ந்தவன்.

வலைப்பதிவுகள் அறிமுகமான நாளிலை இருந்து எனக்கும் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்க வேணும், எழுத வேணும் எண்டு ஆசை. ஆனா என்னத்தை எழுதுறது?
கதையா, கவிதையா இல்லை அரசியலா? இதுகளிலை எதுகும் தலைகிழா நிண்டாலும் வராதெண்டது தெரியும்.

ஆனாலும் எதாவது எழுதி பாப்பம் எண்டு வந்திருக்கிறன்.

15 comments:

said...

ஏன்? அழகான புளக் ஒன்று வடிவமைத்துள்ளீர்களே! அவற்றைப் பற்றி எழுதுங்கள்!உங்கள் அனுபவத்தை
எழுதுங்கள். யானைக்குத்தான் கால் இருக்கா? எறும்புக்கும் தான் இருக்கு!!6 கால்கள்
எழுதுங்க
யோகன் பாரிஸ்

said...

ஏன்? அழகான புளக் ஒன்று வடிவமைத்துள்ளீர்களே! அவற்றைப் பற்றி எழுதுங்கள்!உங்கள் அனுபவத்தை
எழுதுங்கள். யானைக்குத்தான் கால் இருக்கா? எறும்புக்கும் தான் இருக்கு!!6 கால்கள்
எழுதுங்க
யோகன் பாரிஸ்

said...

வாங்கோ யோகன் -பரிஸ், உங்கள் வருகைக்கு நன்றி...
எழுதணும் எண்டு தான் வெளிக்கிட்டு இருக்கிறன், பாப்பம்.

said...

வாருங்கோ சந்திரன்,

எங்கள் ஜோதியில் ஐக்கியமாகுங்கோ. நிறைய எதிர்பார்க்கின்றேன்.

அன்புடன்
பிரபா

said...

கானபிரபா வாங்கோ, உங்கள் வரவேற்புக்கு நன்றி. நிறைய எதிர்பாக்கிறியள் எண்டா கஸ்டம் தான் ....

said...

\\வலைப்பதிவுகள் அறிமுகமான நாளிலை இருந்து எனக்கும் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்க வேணும், எழுத வேணும் எண்டு ஆசை. ஆனா என்னத்தை எழுதுறது?\\

:-)

muthal muraya valaipathivuku vaareengal enna :-) vango vango VJ.

said...

வாங்கோ சினேகிதி, என்ன சொல்லுறியள் எண்டு விளங்கயில்லை. ;)
தமிழ்மணதின் கருவிபட்டையை நிறுவின்னான், ஆனா ஒண்டும் தெரியுதில்லை, என்ன செய்யலாம்??:(

said...

நல்வரவு சந்திரன்,

நிறைய வாசிக்க எழுத்து தன்னாலை வரும். கனக்க யோசிக்காதையுங்கோ... போர் பற்றிய உங்களது பார்வையிலிருந்து தொடங்குங்கோ... உண்மைதான் எழுத்துக்கு உயிரைக் கொடுப்பது. கற்பனையை விட கைகொடுப்பது. பார்த்ததை கேட்டதை எழுதுங்கோ.. பிறகு பழகிவிடும்.

said...

தமிழ் நதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. ஆனா உங்கள மாதிரி எல்லாம் எழுத வராது...

said...

ரொரண்டோவிலிருந்து வினிபெக் பக்கம் சுற்றுலாவுக்கு வர ஒருத்தர் இருக்கிறார் போல :-). எழுதத்தானே நிறைய விடயங்கள் இருக்கின்றன. எழுத அலுப்பாய் இருக்கின்ற நேரத்தில் என்னைப்போல அஸின் பாவனா படங்களையாவது போடுங்கோ :-).

said...

வாங்கோ டி ஜே, நன்றி

//ரொரண்டோவிலிருந்து வினிபெக் பக்கம் சுற்றுலாவுக்கு வர ஒருத்தர் இருக்கிறார் போல :-). //

தாராளமா, எனக்கும் இன்னும் இடங்கள் பிடிபடேல்லை, வந்தியள் எண்டா சேந்து பாக்கலாம் :-)

said...

\\எழுதத்தானே நிறைய விடயங்கள் இருக்கின்றன. எழுத அலுப்பாய் இருக்கின்ற நேரத்தில் என்னைப்போல அஸின் பாவனா படங்களையாவது போடுங்கோ :-). \\

நல்ல பழக்கம் டிஜே. நீர் படம் காட்டுறுது காணாதெண்டு மற்ற ஆக்களுக்கும் சொல்லிக்குடுக்கிறீர் என்ன.

said...

\\தமிழ்மணதின் கருவிபட்டையை நிறுவின்னான், ஆனா ஒண்டும் தெரியுதில்லை, என்ன செய்யலாம்??:(\\

தெரியேல்ல விஜே. என்னுடைய பழைய ரெம்ளேற்றில் நன்றாக வேலை செய்தது.தற்போதுள்ள ரெம்ளேற்றில் வேலை செய்யவில்லை.கானாபிரபாண்ணாவிடம் உதவி கேட்டிருந்தேன்.அவருக்கும் தெரியவில்லை.பொறுத்திருப்போம்:-)

said...
This comment has been removed by the author.
said...

//தெரியேல்ல விஜே. என்னுடைய பழைய ரெம்ளேற்றில் நன்றாக வேலை செய்தது.தற்போதுள்ள ரெம்ளேற்றில் வேலை செய்யவில்லை.கானாபிரபாண்ணாவிடம் உதவி கேட்டிருந்தேன்.அவருக்கும் தெரியவில்லை.பொறுத்திருப்போம்//


நன்றி சினேகிதி. இப்ப என்னோட கருவி பட்டை வேலைசெய்யுது.