மஹாகவியின் சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் எனும் பாடல் ஒலி வடிவம், மற்றும் வரி வடிவங்களை இணைத்திருந்தேன். இன்று அந்த பாடல் இடம் பெற்ற புலரும் வேளையில் இசை தட்டில் உள்ள அனைத்து பாடல்களையும் கேட்ட போது அந்த பாடலிற்கு இன்னுமொரு இசைவடிவம் இருப்பதை அறிந்து கொண்டேன். இப்பாடல் மண்சுமந்த மேனியரில் பயன் படுத்தப்பட்டதாகவும், அதற்கு இசைவாணர் கண்ணன் இசை அமைத்திருக்க வேண்டும் எனவும் வசந்தன், கானாபிரபா, மலை நாடான் ஆகியோரின் பின்னூட்டங்களில் இருந்து அறிய முடிந்தாலும், இந்த இசைத்தட்டில் உள்ள இரு பாடல்களுக்கும் இசை அமைத்தவர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை.
முதல் பாடல் ஆண்,பெண் இருவரால் பாடப்பட்டது. (ஏற்கனவே முன்னைய பதிவில் இணைத்திருந்தேன்.
பாடியவர்கள்: வீ.திவ்வியராஜன், சங்கீதா திவ்வியராஜன்
இரண்டாவது பாடல் ஆண்குரல் மட்டும் கொண்டது.பாடியவர் : மோகன் திருச்செல்வம்
6 comments:
இரண்டாவது பாடலில் கண்ணன் இசையமைத்த வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் பாடலின் சாயல் உள்ளது. ஏற்கனவே வசந்தன் இதைப் பற்றி ஏதாவது சொன்னார் போல..
இரண்டாவது பாடல் நல்லாயிருக்கு. முந்தியதை விடக் கொஞ்சம் தெளிவாக இருக்கு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சயந்தன், மற்றும் செல்லி.
வசந்தன் சொன்னவர் தான் பாட்டை பற்றி. ஆனா என்ன பாடு எண்டு சொல்ல இல்லை பொல.
அண்ணைமாரே,
ரெண்டு பாட்டுக்கும் இசையமைப்பில என்ன வித்தியாசமெண்டு சொல்லுங்கோ.
எனக்கெண்டா ரெண்டுமே ஒரேமாதிரித்தான் கேக்குது. ரெண்டாவது பாட்டு சோக உணர்வைத் தரத்தக்கதாக மாற்றிப்பாடப்படுகிறது. அதேமெட்டுத்தான், ஆனால் வேகம் குறைவாகவும் குரலிலும் பின்னணி இசையிலும் சற்று மாற்றத்துடன் இரண்டாவது பாடல் ஒலிக்கிறது.
இவை இரண்டையும் ஒருவரே இசையமைத்திருப்பார். ஒரேநாடத்தில் இருபாடல்களும் இடம்பெற்றிருக்கலாம்.
பல தமிழ்த்திரைப்படங்களில் இப்படியாக பாடல்கள் வந்துள்ளன. ஒரேபாடல் சோகமாகவும் ஒலிக்கும் சந்தோசமாகவும் ஒலிக்கும்.
முதலாவது பாடலில் வரும் 'ஏலஏலோ' தொகையறாதான் திருமலைச்சந்திரனால் நெய்தல் இசைநாடாவில் பாடப்பட்டது, இரண்டாவது பாடலுடையதன்று.
//அண்ணைமாரே,
ரெண்டு பாட்டுக்கும் இசையமைப்பில என்ன வித்தியாசமெண்டு சொல்லுங்கோ.
எனக்கெண்டா ரெண்டுமே ஒரேமாதிரித்தான் கேக்குது. //
நீங்க சொல்லுறது சரியாகவே இருக்கலாம்.
எனக்கு பாட்டை கேட்கும் போது இரண்டும் பாடப்படும் முறையில் வித்தியாசம் இருப்பதாக பட்டது.
தலைப்பு பொருத்தமில்லாமல் இருக்கலாம்.
இசையை ரசிக்க /கேட்க மட்டும் தான் தெரியும். அதுக்கும் இதுக்கும் ஏதும் வேறுபாடு இருக்கோ எண்டு கேட்டா அந்த விசயத்தில் என் அறிவு சுழியம் தான் :))
புலரும் வேளையில் இசைத்தட்டில் இடம்பெற்ற இப்பாடல்களில்
இருவர் இணைந்த பாடலுக்கு, குரல் கொடுத்தவர்கள் வி.திவ்யராயனும் சங்கீதா திவ்யராயனும்.
இவ் இசைத்தட்டில்
இடம் பெற்ற எல்லாப் பாடல்களுக்குமே
மெட்டு அமைத்தது வி.திவ்யராயன்.
இசையமைத்தது வர்மன்
Post a Comment