Saturday, 19 May 2007

ஒரு புதிர்.....

இது ஒரு சினிமா புதிர். எமது பள்ளிகூடத்தில் நடந்த ஒரு வினாடி வினா போட்டியில் இப்படியான ஒரு புதிரை கேட்டிருந்தார்கள்.
என்ன வென்றால் படம் இயக்கும் போது/ திரை பட காட்சிகள் எடுக்கும் போது காட்சிகளில் சிறிய தவறுகள், பொதுவான பார்வைக்கு தெரியாத ஆனால் நுண்ணிய தவறுகள் இடம் பெறும். அவ்வாறன காட்சி ஒன்றை காண்பித்து அந்த காட்சியை எடுக்கும் போது என்ன தவறு நடந்தது என சொல்ல வேண்டும்.

இப்போ மொழி படத்தின் குறிப்பிட்ட காட்சியின் ஒரு பகுதி கீழே உள்ளது. அங்கு இடம்பெற்ற அந்த நுண்ணிய தவறு என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

13 comments:

வி. ஜெ. சந்திரன் said...

At May 19, 2007 5:30 AM, இலவசக்கொத்தனார் said…

உங்க புது போஸ்டில் எங்க பின்னூட்டம் போடணும்? சரியாத் தெரியலையே.

அந்த மாதிரி பிழைகளுக்கு Continuity Errors எனப் பெயர். உதவி இயக்குனர் பார்த்து இருக்கணும், இல்லைன்னா எடிட்டராவது பார்த்து இருக்கணும்.

வி. ஜெ. சந்திரன் said...

பின்னூட்டம் இடுவது தவறுதலாக தடை செய்யப்பட்டு இருந்திருக்கிறது இலவசகொத்தனார். தவறுக்கு வருந்துகிறேன்.
ஆனா நான் அதை செய்த மாதிரி ஞாபகம் இல்லை :(. நித்திரை தூக்கத்திலை ஏதும் மாறி தட்டி போட்டனோ தெரியா :(

James said...

"Continuity Errors "
அப்படின்னா என்ன சார்...கொஞ்சம் புரியிரது மாதிரி சொல்லுங்க ப்ளீஸ்...

James said...

"Continuity Errors" அப்படின்னா என்ன சார்...கொஞ்சம் புரியிரது மாதிரி சொல்லுங்க ப்ளீஸ்...

Anonymous said...

kaikuttai iruntha kaiyil roja mulaithathu?

Anonymous said...

clip மட்டும் பார்த்தால் continuity error ஒன்றும் இல்லை. factual error மட்டுமே.
headphone உடன் பேச்சு கேட்பதும் பதில் சொல்வதும்

வி. ஜெ. சந்திரன் said...

"Continuity Errors"
இப்படியான தவறு இல்லை என்று தான் நினைக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

என்ன சொல்லறீங்க எல்லாரும்? பேசிக்கிட்டே இருக்கும் போது ஹெட் போன்ஸ் காணாம போயிட்டு வருதே!! அது உங்க கண்ணில் படலையா?

மத்தபடி நான் கூட பாட்டு கேட்கும்போது யாராவது பேசினால் சத்தத்தைக் கம்மி பண்ணிட்டு அப்படியேதான் கேட்பேன். அது ஒண்ணும் தப்பாத் தெரியலை.

ஜேம்ஸ், நம்ம திரையில் பார்க்கும் ஒரு காட்சியை பல பகுதிகளாகப் படம் பிடிப்பார்கள். அதில் தொடர்ச்சியாக ஆடை, பொருட்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதான் Continuity.

வி. ஜெ. சந்திரன் said...

இலவசகொத்தனார், ஜேம்ஸ், மற்றும் அனனிகளே உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

நான் கருதியவை
1. ஹெட்போனுடன் உரையாடுவது.
2. ஒரு கட்டத்தில் காதில் இல்லாத ஹெட்போன் மறு கட்டத்தில் வருகிறது.

இரண்டையும் சேர்த்து தான் கருதினேன்.
மற்றும்படி எந்த வகையான வழு எனக்கு கூற தெரியாது.

சினேகிதி said...

அது ஹெட்போனா?? iPodஅ இருக்கும். pause பண்ணிட்டு கதையைக் கேட்டிருப்பாரு.இடையில காணாமல் போகுதா???? பிரகாஸ்ராஜ் ஒரு பக்க காதானை மட்டும் கழட்டி விட்டிருக்காரு பவடிவாப்பாருங்கோ.

கொழுவி said...

தவறேதும் இல்லை. சினேகிதி சொன்னது போல ஒரு பக்க போன் கழட்டி விடப்பட்டிருக்கிறது. அடுத்த பக்கம் காதில் தான் உள்ளது.

ஆகவே புதிரை தள்ளுபடி செய்கிறேன்.

Haran said...

கெட் போன் எண்டு சொல்லத் தான் நானும் நினைச்சன்... ஆனால் அவர் பாட்டை நிப்பாட்டிப் போட்டு பேச்சுக் கேட்கச் சந்தர்ப்பம் இருக்குத் தானே..

காதில் இல்லாததனை வி.ஜெ நீங்கள் சொல்லும் வரை நான் கவனிக்கவில்லை... ஆயினும்... ஒரு கணத்தினுள் அது காதிலிருந்து விலக்கப் பட்டு இருக்கலாம் தானே??? :P

வி. ஜெ. சந்திரன் said...

சினேகிதி, கொழுவி, கெட் போன் முதல் உரையாடல் முழுமையும் 2 காதிலும் இருக்கு, இடையில் ஒரு கட்டத்தில் ஒரு காதில் தான் இருக்கு.
அவர் சத்ததை குறைச்சார் எண்டு கற்பனை தான் பண்ண வேணும்.
எனக்கெண்டா இடையிலை ஒரு காதிலை இருந்து எடுத்த மாதிரி முதல் எடுத்திருக்க வேணும்? இல்லாட்டி முழுக்க 2 காதிலையும் தொடர்ந்து இருந்திருக்க வேணும்.

போட்டிக்கு கேள்வி கேட்டவர்களின் தீர்ப்பே இறுதியானது :))))))

கரன் ,
ம்....