
உணவு சுவையூட்டி, அழகு சாதன பயன்பாடு என்பவற்றுக்கு அப்பால் அதன் உடல் நலன் சார் பங்களிப்பை பற்றி பார்த்தோமானால்.
1. புற்று நொய் எதிர்ப்பு (Anti-cancer)
2. நுண்ணுயிர் கொல்லி (Anti-microbial)
3. அழற்சியை எதிர்த்தல் (Anti-inflamatory)
4. ஒட்சியேற்ற எதிரி (Anti-oxidant)
மஞ்சளில் இருக்கும் முக்கிய இரசயான சேர்வைகள்
1. Turmerin
2. Essential oils
3. Curcumanoids
a. Phenolic compounds
c. Curcumin- (diferuloylmethane)
இந்த இரசாயன சேர்வைகளில், Curcumin- (diferuloylmethane) புற்று நோய் எதிர்ப்பில் முக்கிய பங்களிப்பை செய்கிறது.
Curcumin- (diferuloylmethane) இன் புற்று நோய் எதிர்ப்பு செயன்முறை
1. புற்று நோய் கலங்கள் பெருக்கமடைவதை தடுத்தல்
2. புற்று நோய் விருத்தியின் படி I, II, ஆகியவற்றின் நொதிய (Enzyme) செயற்பாட்டை கட்டுபடுத்தல்
3. புற்று நோய்கலங்கள் ஏனைய இடங்களில் சென்று இணைவதை தடுத்தல்
4. ஒட்சியேற்ற எதிரியாக செயற்படல்
சமிபாட்டு தொகுதியில் புற்று நோய் ஏற்படுவதில் COX-2 எனும் நொதியம் செயற்படுவதாக அறியப்பட்டுள்ளது. Curcumin- (diferuloylmethane) இதன் செயற்பாட்டை தடுப்பதாக அறியப்பட்டுள்ளது.
எலிகளில் செய்யப்பட்ட ஆய்வில்
மரபணுக்களுக்கு நச்சுதன்மையான காரணிகளை நிரோதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
மனிதரில் புற்று நோய்க்கு எதிராக 1.6 கிராம் Curcumin- (diferuloylmethane) ஒரு நாளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என சொல்லப்பட்டாலும் மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். ஏன் எனில் அண்மையில் செய்யப்பட்ட சில ஆய்வுகளில் Curcumin-(diferuloylmethane) புற்று நோய்க்கு வழங்கப்படும் ஏனைய மருந்துகளின் செயற்பாட்டை பாதிப்பது அறியப்பட்டுள்ளது.
புற்று நோய் எதிர்ப்புக்கு மேலதிகமாக இதய நோய்களில் இருந்து காப்பதிலும், கொலஸ்திரோலின் பாதகமான விளைவுகளை குறைப்பதிலும் பங்காற்றுவதாகவும் அறியப்பட்டுள்ளது.முக்கியமாக ஓட்சியேற்ற எதிரியாக செயற்படும் இதன் இயல்பு LDL கொலஸ்திரோல் ஒட்சியேற்றத்தை தடுப்பதன் மூலமே கொலஸ்திரோலின் பதிப்பை தடுப்பதாக சொல்லப்படுகிறது.
7 comments:
நல்ல பதிவு.
பகிர்ந்தமைக்கு நன்றி.
மஞ்சளுக்கு அமெரிக்கா காப்புரிமையா? இதப்பற்றி கொஞ்சம் விளக்கமாக எழுதுங்களேன்.
curcumin is a COX gene inhibitor, and works as a tumor suppressor. curcumin also has effect on immune system, as well as inflammation.
சந்திரன்,
நல்ல பதிவு. தெரிந்திராத பல விபரங்களை அறியக் கூடியதாக இருந்தது. மிக்க நன்றி.
Excellent info. Thank you for posting.
Rumya
மாசிலா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மஞ்சள், வேம்பு, ஆகியவற்றின் மருத்துவ குணத்துக்கு அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை எடுத்ததாகவும், அவை பின்னர் இந்தியாவில் இருந்து எதிர்ப்பு/ வழக்கு? என்பன நடைபெற்றதாக ஈழத்தில் இருந்த காலத்தில் பத்திரிகைகளில் வாசித்திருக்கிறேன். எந்த வருடம் என்பது சரியாக ஞாபகத்தில் இல்லை.
பத்மா அரவிந் உங்க கருத்துக்கு நன்றி. inflammation ஐ தடுக்க்கும் என்பதை குறித்துள்ளேன்.
வெற்றி, ரம்யா இருவரது கருத்துக்கும் நன்றி.
பயனுள்ள தகவல்கள் - பதிவு!
நன்றி, சந்திரன்!
நன்றி தென்றல்.
Post a Comment