"கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது" இது பழமொழி. அதுவே அறிவியல் ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய புது மொழியானாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எமது சமையலில் கடுகுக்கு முக்கிய இடம் இருக்கும் அதன் வாசனைக்காக. ஆனால் அறிவியலில் அதன் பயன் உணவு பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.
முன்னைய ஒரு பதிவில் சுட்டியது போல வட அமெரிக்கா குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகிய வற்றில் இறைச்சியை மாசுபடுத்த (contamination)கூடிய மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கியாக Escherichia coli O157: H7 விளங்குகிறது. எவ்வாறு இறைச்சி, மற்றும் பதனிடப்பட்ட இறைச்சி உணவுகள் (Processed meat products : sausage) போன்ற வற்றில் இந்த நுண்ணங்கியை வளராது கட்டுப்படுத்துவது என்பது சம்பந்தமாக பல ஆராய்சிகள் நடைபெற்று வருகிறன. சில ஆய்வுகளில் கடுகு மா/ பொடியை மாட்டிறைச்சியின் மீது தூவி இந்த நுண்ணங்கியை கட்டுப்படுத்த செய்யப்பட்ட ஆய்வுகள் சாதகமான பலனை கொடுத்துள்ளன.
கடுகில் காணப்படும் நுண்ணங்கி எதிர்ப்பு இயல்புக்கும் அதன் வாசனைக்கும் allyl isothiocyanate (AIT) எனும் இலகுவில் ஆவியாக கூடிய ஒரு இரசாயன பதார்த்தமே முக்கிய காரணம் என அறியப்பட்டுள்ளது. பின்னர் கடுகில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட allyl isothiocyanate (AIT) இரசாயனத்தை இறைச்சி, sausage ஆகியவற்றில் பிரயோகித்து செய்யப்பட்ட ஆய்வுகளிலும்; allyl isothiocyanate ஆனது Escherichia coli O157: H7 நுண்ணங்கியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதுடன், அதை கொல்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், கடுகை அல்லது பிரித்தெடுக்கப்பட்ட allyl isothiocyanate உணவு/ இறைச்சியில் பாவிப்பதில் உள்ள ஒரு பிரச்சனை அதன் கார இயல்பும், கடுமையான மணமுமாகும். பொதுவாக இவற்றுக்கு பழக்கப்படாத ஐரோப்பியர்கள், மற்றும் அமெரிக்கர்களால் இது அதிகம் விரும்பப் படுவதில்லை.
கடுகில் இருக்கும் இந்த allyl isothiocyanate நுண்ணுயிர் கொல்லியாக (antimicrobial) மட்டும் அல்லாது மனிதரில் புற்று நோய் எதிர்ப்பிலும் (anticarcinogens) பயன் பட கூடியது என அறியப்படுள்ளது.
கடுகு மட்டுமல்லாமல் மற்றைய வாசனை பொருட்களான கராம்பு (Clove) இருக்கும் eugenol , கறுவா/ பட்டை (Cinnamon) இல் இருக்கும் CINNAMALDEHYD ஆகிய இரசாயன பதார்த்தஙளும் பல்வேறு உணவு மூலம் பரவி நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கிகளை கொல்லும் திறன் வாய்ந்தவை என அறியப்பட்டுள்ளது.
என்ன " கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது" எனும் பழ மொழி அறிவியலிலும் உண்மை தானே.
Friday, 4 May 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நல்லதோர் இடுகை.
சுவாரசியமாகவும் இருக்கிறது.
தொடரவும்.
கடுகு சிறுத்தாலும் காரம் பெரியது தான் விஐ. எப்படி இப்படி வித்தியாசமான கட்டுரைகளை வரைகின்றீர்கள்?
பாராட்டுக்கள்.
வசந்தன் வருகைக்கு நன்றி.
நந்தியா உங்க பாராட்டுக்கு நன்றி. என்னோட பாட சம்பந்தமான விடயத்தை எழுதுவதில் அதிக சிரமம் இருக்காதில்லையா
நல்ல செய்திதான். கடுகுக்கு இவ்வளவு சக்திகளா? ஆச்சரியமாகவே இருக்கிறது.
பகிர்ந்தமைக்கு நன்றி வி. ஜெ. சந்திரன் .
படிக்கவும், சொல்லித்தரவும், உங்களுக்குத் தெரிகிறது. மகிழ்ச்சியும் பாராட்டுக்களும்.
ஒரு சந்தேகம். கடுகினை சுடு எண்ணையில் போட்டு வெடிக்க வைத்தாலே உணவுக்கு நன்று. வெடிக்காத கடுகுகினால் பக்கவிழைவுகள் உண்டென ஒரு கருத்து இருக்கிறதே உண்மையா?
மசிலா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மலைநாடான் நன்றி.
//ஒரு சந்தேகம். கடுகினை சுடு எண்ணையில் போட்டு வெடிக்க வைத்தாலே உணவுக்கு நன்று. வெடிக்காத கடுகுகினால் பக்கவிழைவுகள் உண்டென ஒரு கருத்து இருக்கிறதே உண்மையா?//
இதற்கு விஞ்ஞான ரீதியில் முழுமையாக சரியாக விளக்க முடியுமா எனக்கு தெரியவில்லை. எனக்கு தெரிந்த தகவலை வைத்து இப்படி இருக்க கூடும் என சொல்லல்லாம். ஆனால் அது முடிந்த முடிவல்ல.
கடுகில் இயற்கையில் allyl isothiocyanate எனும் வடிவத்தில் காணப்படுவதில்லை. குளுக்கோசினோலெற் (சிக்கலான சேர்வை என வையுங்கள்) எனும் இரசாயன வடிவத்திலேயே காணப்படும்.
கடுகு சேதமடையாது முழுமையாக இருக்கும் போது குளுக்கோசினோலேற் ஆக வே இருக்கும். கடுகை அதன் அமைப்பில் இருந்து சிதைத்து மாவாக்கும் போது வெறு விதங்களில் கடுகு சிதைக்கப்படும் போது கடுகில் இருக்கும் குளுக்கோசினோலேற் allyl isothiocyanate எனும் வடிவத்துக்கு மாறுகிற்றது.
எனவே கொதித்த எண்ணேயில் போடும் போது கடுகு வெடிப்பதால், மற்றும் வெப்பத்தால் குளுக்கோசினோலேற் allyl isothiocyanate ஆகா மாற முடியும். மற்றையது allyl isothiocyanate எண்ணேயில் கரைய கூடியது, அதெ நேரம் வெப்பத்தில் இலகுவில் ஆவியாக கூடியது. எண்ணேய் கொதிக்கும் வெப்பத்தில் allyl isothiocyanate ஆவியாகி வெளியில் போய் விடும் சாத்தியமும் உண்டு.
மற்றும் படி உடல் நலன் சம்பந்தமான விளக்கம் ? சரியாக சொல்ல முடியவில்லை.
Post a Comment