அதன் பிற்பாடு ஒரு சந்தர்பத்தில் இப்பாடலின் முதல் வரிகள் ஞாபகம் வந்து நான் உச்சரித்த போது என்னுடன் இருந்த நண்பன் அப்பாடலின் மேலும் சில வரிகளை பாடி காட்டினான்
அந்த வரிகளில்
" நான் அழுத கண்ணீரும் என் குஞ்சழுத கண்ணீரும் வாய்க்கால் வழியோடி வழிபோக்கர் கால் நனைக்க"
எனும் வசனமும் சேர்ந்து வந்தது.
அண்மையில் புலரும் வேளை இறுவட்டில் இப்பாடலை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்த போது அதில் நான் மேலே சொன்ன வரிகளை காணவில்லை.
http://www.esnips.com/displayimage.php?pid=33979630 |
பாடியவர்கள்: ஞான ஆனந்தன் (சங்கீத் வர்மன், பிரகீத் வர்மன், டிலீப்குமார்)
சரி கூகுல் தேடலில் தட்டுபடுகிறதா என தேடிய போது
இப்பாடலை இயற்றியவர் சண்முகம் சிவலிங்கம் எனும் ஈழத்து கவிஞர் என்றும் அவர் மட்டகளப்பை சேர்ந்தவர் எனும் தகவலோடு
சசி??
சந்திரவதனா
இரா முருகன்
ஆகியோருடைய பதிவுகளில் பாடலில் வரிவடிவத்தை பெற முடிந்தது. ஆனால் அந்த மூன்று வரிவடிவத்திலும் நான் கேட்ட வசனம் இல்லை.
சண்முகம் சிவலிங்கம் அவர்கள் எந்த வருடத்தில், எச்சூழ்நிலையில் இப்பாடலை இயற்றினார் என தெரியவில்லை. ஆனால் ஈழத்தின் போர்க்கால வாழ்நிலையை இப்பாடலுன் பொருத்தி பார்க்க முடியும்.
அப்பால் தமிழில் ஒரு கட்டுரையில் இப்பாடல் மட்டகளப்பில் வழங்கும் நாட்டார் பாடல் என்றும் அதை அடியொற்றியே சண்முகம் சிவலிங்கம் அவர்கள் இக்கவிதையை எழுதியதாகவும் ஒரு குறிப்பு கிடைத்தது.
சரி என இணையத்தில் சந்தித்த நண்பர்களிடம் விசாரித்த போது, ஒரு நண்பர் தமிழக கவிஞார் அறிவுமதி எழுதி, சின்னபொண்ணு என்பவர் பாடியதாக அன்னை தமிழ் இறுவட்டில் இடம்பெற்ற ஆக்காண்டி என தொடங்கும் வேறொரு வடிவத்தை எனக்கு தந்திருந்தார். அப்பாடலை கீழே இணைத்துள்ளேன்.
இவை இரண்டையும் விட தமிழ்.நெட் இணையத்தின் முன்றாவது ஒரு வடிவமும் கிடைத்தது. அதன் வரிவடிவை கீழே இணைத்துள்ளேன்.
ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைச்சாய்?
ஆறு போன இடமெல்லாம்
புற் படுக்கை முட்டை வைச்சேன்.
முட்டையெல்லாம் குஞ்சானா,
முழு வுலகும் குருவிச்சத்தம்.
குருவிச்சத்தம் கேக்கத்தானே
குழி பறிச்சு முட்டை வைச்சேன்.
சத்தம் மட்டும் போட்டு விட்டா,
உன் பிறப்பு முற்றா குமா?
சத்தம் போடத் தெரியா விட்டால்
பின்னே என்ன கருங் குருகு?
கூட்டை வேடன் கலைக்குறானா?
குருவி பிடிச்சுத் தின்னுறானா?
ஐயோ ஐயோ என்ன செய்வேன்!!
ஆகாதய்யா இவ் வேடர் கூட்டம்!!
வாயைக் கொஞ்சம் பொத்திக்கொண்டு
பாழ் வயிற்றைக் குருவி பார்க்கலாமே?
ஓஹோ! நீரும் (கொல்) வேடர்தாமோ?
எம் அலறல் கேட்டும் தின்போர்தாமோ?
ஐயோ குருவி! (முழுப்)பொய்யோ சொல்வாய்?
வையம் காணும் கவிமெய்யை அறிவாய்.
இல்லை இல்லை! கொல் வேடர் நீரே.
என் குஞ்சு இரண்டு கொன்றோன் நீயே.
கொஞ்ச வந்தேன்; கொல்வோன் என்றாய்
(கொல்)நஞ்சும் (நல்)நெஞ்சும் கிஞ்சித்து மறியாய்.
நீயே வேடன்! நின் நினைவோ கொல்லல்.
நாயே போடா! குறுநரி நினைவோனே!
ஓஹோ அறிவேன் உன் குலத்தழிவு
ஓரோர் நினைவும் உலகொவ்வா நிலையுலவு.
போ போ மூடா! உயிர்கொல் வேடா!
குருகும் புள்ளுமே உலகினி லுயர்வு
புவியே சுழல்வது புட்கட்குத் தாமே!
துயர்பட்டாலும் குருகே உயர்ந்தோன்.
முறையோ குருவி முறைதலை மறத்தல்
குருகும் அருகும் அர்த்தமில் கருத்தில்
பெருகிட வேண்டில் (வாழ்) வழிதனிற் கூர்க்க.
வரும் வளமும் பலமும் குருவிகள் வசமே.
கவி உட்பொருள்தனை உணர்க;
வெறும் கறைப்புலம்பலை ஒழிக்க.
வருவேன்குருவி, வணக்கமும் வாழ்த்தும்.
ஆனால் இப்போதும் விடை கிடைக்காத கேள்வி என்னிடம் இருப்பது நான் கேட்ட வரிவடிவத்துடனு இப்படியான பாடல் ஒன்று உண்டா என்பதே?
8 comments:
நானும் அந்த வரிகளை எங்கோ வாசித்தோ அல்லது கேட்டோ இருக்கிறேன்.
எங்கே என்பது ஞாபகம் வந்தால் சொல்கிறேன்.
வாழ்த்துக்கள் சந்திரன் நட்சத்திர வாரத்திற்கு.மிக அருமையான பதிவுகள் அனைத்துமே.
சந்திரன்,
/* ஆனால் இப்போதும் விடை கிடைக்காத கேள்வி என்னிடம் இருப்பது நான் கேட்ட வரிவடிவத்துடனு இப்படியான பாடல் ஒன்று உண்டா என்பதே? */
ஈழத்து நாட்டார் பாடல்களைத் தொகுத்து பல ஆய்வுகள் செய்த யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் இப்போது ரொன்ரோவில் தான் வசிக்கிறார். அவரைத் தொடர்பு கொண்டீர்கள் என்றால் இக் கேள்விக்கு விடை கிடைக்கும் என நன்புகிறேன்.
சண்முகம் சிவலிங்கத்தின் வரிகள் சரியாக எனக்குத் தெரியாது. ஆனால் ஈழத்துப்பாடலாக முதன்முறையாக அவரது ஆக்கத்தினை தேசியக்கலை இலக்கியப்பேரவையின் நிகழ்வு ஒன்றில் கேட்டேன்.
அண்மையில் தவமாய்த் தவமிருந்து படம் பார்த்தபோது, அந்தப்படத்திலும் இந்த பாடல் மிக அழகாக சேர்க்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். படத்தில் சேர்க்கப்பட்ட பாடல் நான் கேட்ட ஈழத்துப்பாடலிலும்பார்க்க மிகவும் வித்தியாசம்.
கட்டாயம் அப்படப்பாடலை பெற்றுக் கேட்டுப்பாருங்கள். கேட்பதை விட பார்ப்பது சிறப்பு. படத்தில் அப்பாடல் தெருக்கூத்து வடிவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நக்சலைட் சாயல் வீசும் வடிவில் அப்படத்தில் அப்பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அழுத கதை எல்லாம் விட்டுவிட்டு, ஏ ஏழைக்குருவியே நீ ஏங்கியழக்கூடாது... என்றவாறு பாடல் போகும், ஒரு கட்டத்தில் "வலை என்ன பெருங்கனமா, அதை அறுக்க வழிங்களும் இருக்குதம்மா" என்று வரும்.
சந்திரவதனா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தெரிந்தால் சொல்லுங்கள்.
கண்மணி முதன் முதல் வந்திருக்கிறீர்கள். நன்றி
வெற்றி தகவலுக்கு நன்றி.
மயூரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//வலை என்ன பெருங்கனமா, அதை அறுக்க வழிங்களும் இருக்குதம்மா" //
தவமாய் தவமிருந்து படத்தை மீண்டும் பார்க்கிறேன்.
நான் இணைத்திருந்த 2 ஆவது பாடலிலும் இதே வரிகள் வருகிறன.
நான் அழுத கண்ணீரும் என் குஞ்சழுத கண்ணீரும் வாய்க்கால் வழியோடி வழிபோக்கர் கால் நனைக்க"
....
மிகவும் அழமான வரிகள். ஆனால் இப்பாடல்கள் எதுவுமே நான் கேட்கவில்லை. அறிந்தவர்களிடம் அறிந்து சொல்கின்றேன்.
நந்தியா அந்த வரிகளும் இந்த ஆட்காண்டி என தொடங்கும் ஒரு பாடல் வடிவத்தில் இருக்க வேண்டும் ஆனால் அது கிடைக்கவில்லை.
கரிக்குருவி கரிக்குருவி எங்கெங்கே போறாய்?
கருங்கல்லைப்பிளந்து
கடலருகே முட்டை இட போகிறேன்
இட்டது நான்கு முட்டை
பெரித்தது மூன்று குஞ்சு;
மூத்த குஞ்சுக்கிரை தேடி
மூனு மலை சுற்றி வந்தேன்;
நடுல குஞ்சுக்கு இறை தேடி
நாலு மலை சுற்றி வந்தேன்,
இளைய குஞ்சுக்கிரை தேடி
ஏழு மலை சுற்றி வந்தேன்;
மாயக் குறவன்
வழிமறித்துக் கண்ணி வச்சான்
காலிரண்டும் பட்டுச்
சிறகிரண்டும் மாரடிக்க;
நான் அழுத கண்ணீரும்
என் குஞ்சழுத கண்ணீரும்;குட்டம் பெருகி குதிரையை குளிப்பாட்டி,
மந்தை பெருகி மாடு குளிப்பாட்டி,
ஓடை பெருகி ஒட்டகம் குளிப்பாட்டி,
ஏறி பெருகி எருமையை குளிப்பாட்டி,
வாய்க்கால் நிரம்பி
வழிப்போக்கர் கால்கழுவ;
இஞ்சிக்குப் பாய்ஞ்சி
இலாமிச்சை வேரூன்ற;
நஞ்சைக்கு தண்ணி பாஞ்சி நார்த்தங்காய் அத்து ஓடுதடி...
Post a Comment