Sunday 6 May 2007

விடை பெறும் நேரம்...

வணக்கம்

ஒரு வாரமாக எனது நட்சத்திர வார பதிவுகளை வாசித்து கருத்துக்களை பகிர்ந்த, பகிராத அனைவருக்கும் நன்றி. ஒரு வாரகாலம் நட்சத்திர பதிவராக தெரிவு செய்து ஊக்கப்படுத்திய தமிழ்மண நிர்வாகத்துக்கு நன்றி.

ஒரு வாரமாக எழுதிய பதிவுகள் எவ்வளவுக்கு அனைவரையும் கவர்ந்தது என தெரியவில்லை. எழுதியவற்றில் ஏதாவது ஒரு பதிவாவது உங்களுக்கு பிரயொசனமான தகவலை கொடுத்ததாகவோ அல்லது சுவாரசியமாகவோ இருந்திருக்குமாக இருந்திருக்குமானால் எனக்கு மகிழ்ச்சியே.


விடை பெற முன்னர் சில பாடல்கள். இந்த பாடல்கள் எந்த நோக்கமும் அற்று எழுமாற்றாக தெரிவு செய்யப்பட்டவை.

Powered by eSnips.com



இது நட்சத்திர வாரத்தில் இருந்து விடைபெறும் நேரம்.




மீண்டும் என்னை தெரிவு செய்தமைக்கு தமிழ்மணத்துக்கும், ஊக்கம் தந்த வலைப்பதிவர்களுக்கும் நன்றி கூறி வரும் வார நட்சத்திரத்தை வரவேற்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

11 comments:

said...

உங்கள் பதிவுகள் பயனுள்ளதக இருந்தன. குறிப்பாக உணவு மூலம் பரவும் நோய்கள். வருடா வருடம் இங்கே பொதுநலத்துறையில் food borne pathogens பற்றிய வகுப்பில் (இலவச) பயின்ரு உணவகம் நடத்துபவர்கள் அங்கே பணி புரிகிறவர்கள் நற்சான்றிதழ் பெற வேண்டும். அடிக்கடி குளிர்ருட்டப்பட்ட பெட்டியில் இருந்து பால் முதலானவற்றை எடுப்பது, அடிக்கடி உறைய செய்து சூடாக்குவது போன்றவை எப்படி உயிருக்கே கெடுதல் தரும் எண்று விரித்து எழுதி இருக்கலாம்.

அதேபோல வெங்காயம், தண்ணீர் கூடிய உணவு பொருள் பலன்கள் விரித்து எழுதுங்கள்.
நான் விரும்பி படித்த இன்னொரு பதிவு எல்லா காலங்களுக்கும் எப்படி உணவு பொருள் உறைய வைத்து பயன்படுத்தப்படுகிறது என்ற ஒன்ரு.
இன்னும் விரிவாக நிறைய எழுதுங்கள். என்னைப்போல ஆர்வம் உள்ளவர்கள் தேடிப்படிப்போம்.

said...

சந்திரன்,
உங்களின் எல்லா நட்சத்திரப் பதிவுகளையும் வாசிக்க முடியவில்லையெனினும் , வாசித்த பதிவுகள் மிகவும் பயனுள்ள பதிவுகளாக இருந்தன என்பது மட்டுமல்ல, அவற்றின் மூலம் பல விடயங்களையும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. மிக்க நன்றி.

நட்சத்திர வாரம் முடிந்தாலும், நீங்கள் இன்னும் பல நல்ல பதிவுகளைத் தரவேணும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

said...

மாப்ள

பின்னீட்டிங்க போங்க

said...

வி.ஜே!

மிகநன்றாக அமைந்திருந்த உங்கள் நட்சத்திரவாரப்பதிவுகள். பத்மா சொன்னதுபோல், இதே தலைப்புக்களை இன்னும் விரிவாக நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். அதன் அவசியம் கருதுவோர் கண்டிப்பாகப் படிப்பார்கள்.

நன்றி

Anonymous said...

VJC, enga kudumpa perumaiyai kappaththittinga..hehehe

nalla irunthuthu. innum garlic post mattum padikkalai. exam time...seekiram padichiduwen..

said...

விஐ உங்கள் நட்சத்திர வார பதிவுகள் அத்தனையுமே சூப்பர். உண்மையில் உங்கள் பதிவுகளை எல்லாம் பார்த்தபின் தான் நானும் வலைப்பூங்காவில் உலா வர முடிவு எடுத்தேன்.
ஆகவே தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க காத்திருக்கின்றோம்.

said...

பத்மா அரவிந் அவர்களே உங்க கருத்துக்கும் உற்சாகத்துக்கும் நன்றி.

நீங்க சொன்ன விடயங்களை பற்றியும் எழுதுகிறேன்.

வெற்றி
தொடர்ந்தும் எழுதுவேன்.

கானா பிரபா நன்றி

மலைநாடான் நேரம் வரும் போது எழுதுவேன்

தூயா நன்றி

நந்தியா நன்றி

said...

விஜேய்!விடைபெறும்போது ஒரு கவலை வந்திருக்க வேண்டுமே... எனக்கு அப்பிடி இருந்தது. பயனுள்ள விபரங்கள் பெற்றுக்கொண்டோம். 'கடவுள் தந்த அழகிய வாழ்வு'எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது. எப்போதாவது துயரம் என்னை மூழ்கடிக்கும்போது இத்தகைய பாடல்களைக் கேட்பதுண்டு. நன்றி.

said...

விஜே,
உள்ளி, வெங்காயம், கடுகு, பள்ளிக்கூட குறும்புகள் என்று சுவையான வாரமாக இருந்தது எங்களுக்கு :) பத்மா சொல்வது போல் தொடர்ச்சியாக இது போன்ற உங்கள் துறைசார்ந்த பதிவுகளை நிறைய எழுதுங்கள்..

said...

//விடைபெறும்போது ஒரு கவலை வந்திருக்க வேண்டுமே... எனக்கு அப்பிடி இருந்தது. //

வாரம் முடிவடைவதில் கவலை அப்படி எல்லாம் இல்லை. ஆனால் நட்சத்திரமா இருந்த போதாவது ஏதாவது உருப்படியா எழுதினேனா எண்டது தான் கவலை. பிரயோசமா இருந்திச்சு எண்டு நீங்க எல்லாரும் சொல்லும் போது ஒரு சின்ன சந்தோசம்.

said...

பொன்ஸ்~~Poorna
நன்றி, தொடர்ந்தும் அவ்வப்போது துறைசார் பதிவுகளும் எழுதுவேன்