தேவையான பொருட்கள்
1. நீராவியில் அவித்து அரித்த கோதுமை மா/ ஆட்டா மா 250 கிராம்
2. கீரை 250- 350 கிராம் - கீரை (spinach) கிடைக்காட்டி, மீகுளிரூட்டின கீரை (frozen spinach)
3. வெங்காயம் - பெரிய வெங்காயம் பாதி/ சிறிய சிவப்பு வெங்காயம் 4
4. பச்சை மிளகாய் - 1, காரம் சாப்பிட கூடிய ஆக்கள் 2 போடலாம்
5. உடன் திருவிய தேங்காய் பூ/ காய்ஞ்ச தேங்காய் பூ
6. அளவுக்கு உப்பு
7. நீர்
செய்முறை
1. கீரையை பொடி பொடியா வெட்டி கொள்ளவும். மீகுளிரூட்டின கீரை எண்டால் அதை எடுத்து குளிர் நீங்க சிறிது நெரம் வைக்கவும். பொதுவா மீகுளிரூட்டின கீரை வெட்டியபடி இருக்கும்.
2. வெங்காயம், மிளாகாய் என்பவற்றை சிறிது சிறிதாக அரிந்து கொள்ளவும்.
3. வாய் அகன்ற பாத்திரத்தில் வெட்டிய கீரை, வெங்காயம் என்பவற்றை போட்டு அளவுக்கு உப்பையும் தூவி கோள்ளவும்
4. கோதுமை மாவை சிறிது சிறிதாக தூவி கலக்கவும், பொதுவாக கீரை, வெங்காயம் என்பவற்றில் இருக்கும் நீர் தன்மை மா புட்டு பததுக்கு வர போதும், மா நங்கு கீரையுடன் சேரவில்லை எனில் சிறிது நீர் தூவி கலக்கலாம். ஆனால் மிகையாக நீர் தூவ கூடாது. இதை மற்ற புட்டுகள் கொத்தி பெரிய மா கட்டிகளை சிறிதாக்குவது போல செய்ய முடியாது. அதானால் கவனமாக சிறிய சிறிய கட்டிகளாக வருமாறு குழைத்து எடுக்க வேண்டும்.
5. நீத்து பெட்டி/ புட்டு குழாயில் போட்டு அவித்து எடுக்கவும்.
6. இறக்கிடயதும் சுடச்சுட உடன் துருவிய தேங்காய் பூவை கலந்து சாப்பிடவும்.
காய்ந்த தேங்காய் பூ தான் கிடைக்கும் என்றால் புட்டு அவிக்க முதல் குழைத்த மாவுடன் கலந்து அவிக்கலாம். அல்லது காய்ந்த தேங்காய் பூவுக்கு சிறிது நீர் கலந்து 10/15 செக்கன் மைக்கிரோ வெவில் சூடக்கி எடுத்து அவித்த புட்டில் கலந்து சாப்பிடலாம்.
நான் அவித்த புட்டுக்கு கீரை போதுமான் அளவில் கலக்கவில்லை. குளுருட்டிலை போதுமான அளவு இருக்கும் எண்டு நினைச்சு போனா கொஞம் தான் இருந்திச்சு :(
9 comments:
எல்லாம் சரி இந்தத் தேங்காய்ப்பூ கூடப்போட்டிட்டிங்க போல கிடக்கு.நல்ல ரேஸ்றா இருக்கு...என்ன மீன்குழம்பும் இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்:-)
முதல் முதலா இப்ப தான் இப்படியான பதார்த்தத்தைக் கேள்விப்படுகிறன். பெயரிலி அண்ணைக்குப் போட்டியா படம் காட்டினியள், இப்ப தூயாவின் சமையல்கட்டுக்குப் போட்டியா?
கானா பிரபா எனக்கும் சின்னனிலை தெரியாது.
சினேகிதிக்கும் தெரிஞ்சிருக்கிற படியா வடமராட்சி பக்கமும் இந்த புட்டு இருக்க வேணும்...
இலவசகொத்தனார் உங்க கருத்தை புதிர் போஸ்டிலை பொஸ்ட் பண்ணி இருக்கிறன்.
என்னது பிரபாண்ணாக்குக் கீரைப்புட்டுத் தெரியாதா?? நான் முந்தி "கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை" என்று படம் காட்டி ஆக்களை கவிதை எழுத வச்சனான் அந்தநேரம் கறுப்பியின்ர கீரைப்புட்டும் மீன்குழம்பும்தான் வெற்றிபெற்ற கவிஞருக்குப் பரிசு.
1.http://sayanthan.blogspot.com/2007/05/blog-post_18.html
2.http://manaosai.blogspot.com/2005/05/blog-post_111684180488922478.html
3.http://kumaraess.blogspot.com/2005/05/blog-post_13.html
எங்கடை அம்ம அடிகடி கீரைப்புட்டு அவிக்கிறவா சின்னனில இருந்து எனக்கு புட்டுல நிறையக் காதல் இருந்தாலும் கீரைப் புட்டக் கண்ட எனக்கு அலர்Jஇதான். கீரைப் புட்டில் உள்ள சத்தைப் பற்றி அம்மா குடுகிற அருமையான விளக்கங்களும் மகிமையும் நினைவுக்கு வருது. புட்டும் புரட்ச்சித் தமிழனும் எண்டு ஒரு புத்தகம் போடுவமா வி.ஜே
//கீரைப் புட்டக் கண்ட எனக்கு அலர்Jஇதான்//
சோமி கீரை புட்டு எண்டா அலர்ஜி( ஒவ்வாமையோ) ?
புத்தகம் தானே , அதுகென்ன போட்டா போச்சு :)
//சின்னனில இருந்து எனக்கு புட்டுல நிறையக் காதல் இருந்தாலும்//
பிட்டிலையென்று அங்கை சொன்ன மாதிரி இருந்திச்சு
Post a Comment